Monday, February 8, 2010

கடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 5

மனிதன் மெல்ல மெல்ல பாதுகாப்பு உணர்வு பெற்றான். இப்போது புறகாரணிகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தான். சூரிய,சந்திரர்கள், கோள்கள், பூமி, தட்ப, வெப்பம். விவசாயம், கால் நடை வளர்த்தல் போன்றவை அவனது கவனத்தை ஈர்த்த விசயங்கள். இவை எல்லாம் அவனது சக்திக்கு மீறிய விடயங்கள். ஆதலால் அவன் இதை எல்லாம் கடவுளின் பொறுப்பு ஆக்கினான். பின்னர் இதை தனித்தனியாகத் தன்னைப் போலவே இயல்புடைய மனிதனின் உருவத்தைக் கொடுத்தான். மனிதன் சிலை ரூபமாய்க் கடவுளை உருவாக்கினான் எனபதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதுக்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம் யேசு ஒரு மிகப் பெரிய சித்த புருஷர்,மகான். அவரின் உருவம் இதுதான் என்று எவராலும் சொல்லப் படவில்லை. முதலில் யேசு பழைய ஏற்பாடு அல்லது விவிலியத்தில், ஒரு யூதனைப் போல இடுங்கிய கன்னம் மற்றும் ஒடுங்கிய தேகத்துடன் இருப்பார். இதே யேசு பின்னாளில் இந்தியா வந்த போது வெள்ளைக்காரனைப் போல அல்லது ஜரோப்பியனைப் போல இருப்பார்(இது பிரிட்டிஷார் கொணர்ந்தால்).ஆப்பிரிக்காவில் கறுப்பர்களைப் போல சித்தரிக்கப் படுகின்றார். அவரின் சக்தி ஒன்றுதான் ஆனால் வடிவங்கள், அவரை வணங்கும் மக்களின் குணாதிசயங்களைப் போல மாறுபடுகின்றன. நாட்டுக்கு நாடு பள்ளிவாசல்களின் மற்றும் மசூதிகளின் அமைப்பும் இஸ்ஸாலாமிய சட்டதிட்டங்களும் வேறுபடும் ஆனால் கிழக்கு திசை தொழுகையும், அல்லா என்ற சக்தி மூலமும் ஒன்றுதான். இது போலவே இந்து மதத்தில் எண்ணற்ற கடவுள்கள் இருந்தாலும் அவைகளின் சக்தி மூலம் ஒன்றுதான். கீதையில் கண்ணன் கூறியது போல நான் உருவம்,அருவம் இரண்டும் அப்பாற்ப்பட்ட சக்தி, எல்லாத் தேவதைகளும் நானே. நீங்கள் எப்படி வணங்குகின்றீர்களே நான் அப்படி பலனளிக்கின்றேன். இது அவரின் சக்தி மூல கோட்ப்பாட்டின் காரணியாக உள்ளது.

முதலில் மனிதன் தன்னைக் காக்கவும், தனது சொத்தான பசுக்கூட்டங்களைக் காக்கவும் படைத்த கடவுள் பசுபதி நாதர் ஆவார். இவர் வடிவில் சிவன் அல்லது ருத்திரன் போலத் தோன்றுகின்றார். இவரின் காலடியில் பசுவும், ஆட்டுக்கிடாயும் இருக்கும். இன்றும் பசுபதி நாதரின் கோவில் நேபாலில் காட்மாண்டுவில் உள்ளது.இவர் அந்த மக்களின் பேரிடர் வேளைகளில் தன் அனுபவம் மூலம் காத்து, அதனால் கடவுள் ஆக்கப் பட்டு இருக்கலாம். அல்லது மனிதனின் சூப்பர் பவர் நம்பிக்கையில் கடவுளாக உருவகம் பெற்று இருக்கலாம். அந்நாளில் வரும் கடவுள்கள் பசுக்கள், ஆடுகள் மற்றும் இயற்கை அழிவுகள் ஏற்படுத்தும் சக்திகளை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார்கள். பின்னாளில் வந்த கடவுள்கள் பொற்காசுகள், தங்க ஆபரணங்கள் மற்றும் செல்வச் செழிப்புடன் வடிமைக்கப் பட்டன. இது மனிதனின் ஆசையின் பிரதிபலிப்புதானே தவிர கடவுளின் வடிவம் இல்லை.தினமும் தூங்கும் போது கூட மகாவிஷ்னு பத்து கிலோ நகை அணிந்தால் அது அவருக்கு சுமையாக இருக்குமே தவிர அழகாக இருக்காது. இதுவும் மனிதனின் வடிவம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. எனவேதான் சொல்கின்றேன். கடவுள் என்பது ஒரு சக்தி,அந்த சக்தியினை மனிதன் வடிமைத்த விதம் அவனுக்கு ஏற்றவாறு,சூழ் நிலைக்கு ஏற்றவாறு அமைந்தது என்பது எனது கருத்து.

இந்த சக்தினைப் பின்னர் உணரத் தலைப்பட்டான்.அப்போது மனிதனுக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. அதாவது ஒரு பெண்ணின் தாய்மையும், அவள் பிள்ளை பெறும் விதத்தையும்.கூடலில் விளையும் என்று அறிந்தாலும், அவள் பிள்ளை பெறும் விதம், அவள் தாய்மை பொங்கும் உணர்வுகளை மதிக்கத் தொடங்கினான். ஆதலால் தன்னை சுற்றியுள்ள நதி மற்றும் சக்திகளை பெண்ணின் வடிவமாகப் பார்க்கத் தொடங்கினார். அதாலால் அவைகளுக்கு பெண்களின் பெயரும் இட்டான். பல நதிகளுக்கு பெண்களின் பெயர் அமைய காரணமும் இதுவாகத்தான் இருக்க முடியும். அதுபோலவே ஆதிசக்தியை பெண்ணாக படைத்தான். இது அனைத்து நாகரீங்களிலும் ஆதிசக்தி அல்லது மூல சக்தி பெண்தான். ஏன் என்றால் அவள்தான் படைக்கின்றாள்.(பெண்கள் தங்களை பலவீனர்களாக உணருகின்றார்கள், ஆனால் அவர்கள் தான் சக்தி, அவர்கள் நினைத்தால் ஒரு குடும்பத்தை ஆக்கவும் முடியும், அவர்கள் தடுமாறினால் குடும்பத்தை நிர்மூலம் ஆக்கவும் முடியும். ஒரு ஆண் ஒரு குடும்பத்தை மட்டும் காக்கின்றான் அல்லது உருவாக்குகின்றான், ஆனால் ஒரு பெண் ஒரு நல்ல தலைமுறையே உருவாக்குகின்றாள்.ஆசை அல்லது பேராசை,காமம் போன்ற விடயங்களில் தடுமாறும் பெண்கள், தாங்கள் தடுமாறினால் ஒரு தலைமுறையே தடுமாறும் என்று உணர்தல் அவசியம்.) ஆகவே அந்த சக்தியைப் பெண்ணாக்கி மகாசக்தி என்றான். திராவிட,ஆரிய,எகிப்து சுமேரிய சித்தாதங்களில் பெண்தான் கடவுளின் உருவங்கள். அதன் பின்னர் தோன்றிய கடவுள்கள் பலரும் ஆணாக இருந்தனர்.அறிவு(கல்வி) செல்வம்,சக்தி ஆகியவற்றுக்கு ஏன் பெண் தெய்வங்களைப் படைத்தான்,அவளின் பொங்கும் தாய்மை(கருனை) உணர்வுகள் போல, அதுவும் பொங்கும் அல்லது பெருகும் என்பதற்கத்தாகத்தான்.அது வெறும் ஈஸ்வரி,லஷ்மி சரஸ்வதி வடிவங்கள் அல்ல.


மனிதன் அறிவு வளர வளர தன் கட்டுப்பாடற்ற இயற்கை மூலமாக அவனுள் உருவாகும் சிந்தனை,கோபம்,காமம், ஆற்றல் என்பனவற்றையும் கடவுளாகக் கொள்ள ஆரம்பித்தான். இதில்தான் மரணத்திற்கு ஒரு கடவுள்(யமன்), அறிவிற்க்கு குரு, கோபம் மற்றும் ஆற்றலுக்குச் செவ்வாய், காமத்திற்க்கு மன்மதன் போன்ற கடவுள்கள் உருவகம் ஆகி இருக்க முடியும். கொஞ்சம் சிந்தியுங்கள் இன்று கடவுள் அல்லது தேவர்கள் என்று சொல்லப்படுவர்கள் எல்லாம் மனிதனின் சக்திக்கு அப்பாற்ப்பட்ட குணாதியசங்கள் கொண்ட கடவுள்தான். இதில் இருந்து கடவுள் என்பது மனிதனால் முடியாத சக்தியாகவும்,அவனது எதிர்பார்ப்பில் உருவாக்கப் பட்ட ஒன்று என்று கொள்ளலாம். பின்னர் மனிதன் கடவுளையும் தன்னைப் போலவே நினைத்தான். கடவுளுக்கும் பிள்ளை, குட்டிகள் கொடுத்தான். ஒவ்வெருக்கும் ஒரு சக்திகள் எனப் பிரித்தான். மனிதனால் உயிரைப் படைக்க முடியாது, பிரம்மன் வந்தார். உயிர் எப்போது வரும் அல்லது போகும் என்று தெரியாது ஆகையால் விஷ்னுவிடம் காத்தல் என்று கொடுத்தான்.பஞ்ச பூதங்கள் அழிவு போன்றவை இவன் கையில் இல்லை ஆதலால் சிவனைப் படைத்து அவரைப் பொறுப்பாளியாக்கினார்கள். இன்னமும் அவனது அறிவு வளர வளர நிறைய புராணங்கள் மற்றும் கதைககள் வந்தது. ஒரு மகா சக்தி பிரிந்து பல ரூபங்கள் ஆனது. மனிதனால் படைக்கப்பட்டதா அல்லது ஒவ்வெரு காலத்திற்க்கும் சக்தி தேவைக்கு ஏற்றவாறு அவதாரம் செய்ததா என்பது புரியாத புதிர். இருந்தாலும் நாம் கடவுள் ஒன்றே அது ஒரு மகா சக்தி என்று கொள்வேம். நன்றி தொடரும்.

டிஸ்கி: அடுத்த பதிவில் நாம் பதிவில் சுவாரஸ்யம் கருதி விநாயகருக்கு ஏன் யானை முகம் வந்தது, சனியின் பார்வை ஏன் மந்தமானது மற்றும் கால்கள் ஏன் முடமானது குறித்து ஒரு நல்ல கதையைப் பார்ப்போம். நன்றி.

20 comments:

  1. ///பெண்கள் தங்களை பலவீனர்களாக உணருகின்றார்கள், ஆனால் அவர்கள் தான் சக்தி, அவர்கள் நினைத்தால் ஒரு குடும்பத்தை ஆக்கவும் முடியும், அவர்கள் தடுமாறினால் குடும்பத்தை நிர்மூலம் ஆக்கவும் முடியும். ஒரு ஆண் ஒரு குடும்பத்தை மட்டும் காக்கின்றான் அல்லது உருவாக்குகின்றான், ஆனால் ஒரு பெண் ஒரு நல்ல தலைமுறையே உருவாக்குகின்றாள்.ஆசை அல்லது பேராசை,காமம் போன்ற விடயங்களில் தடுமாறும் பெண்கள், தாங்கள் தடுமாறினால் ஒரு தலைமுறையே தடுமாறும் என்று உணர்தல் அவசியம்.)//
    100% உண்மை..

    ReplyDelete
  2. மனிதன் அறிவு வளர வளர தன் கட்டுப்பாடற்ற இயற்கை மூலமாக அவனுள் உருவாகும் சிந்தனை,கோபம்,காமம், ஆற்றல் என்பனவற்றையும் கடவுளாகக் கொள்ள ஆரம்பித்தான்.


    ..........எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? சூப்பர்.

    ReplyDelete
  3. சகோதரர் பித்தனின் வாக்கு,
    //இஸ்ஸாலாமிய சட்டதிட்டங்களும் வேறுபடும் ஆனால் கிழக்கு திசை தொழுகையும், அல்லா என்ற சக்தி மூலமும் ஒன்றுதான்//

    இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பது தவறு.எல்லா நாடுகளிலும்,புனித நூலான குர் ஆன்,மற்றும் ஹதீஸ் இரண்டினை வைத்து மட்டுமே சட்டதிட்டத்தை இஸ்லாம் அமைத்துள்ளது.

    கிழக்கு திசை தொழுகை..சின்ன திறுத்தம் மேற்கு திசை என்பதே சரி.

    நல்ல இடுகை !பாராட்டுக்கள்.தயவு செய்து 'பத்தி' பிரித்து எழுதவும் படிப்பதற்கு இலகுவாக இருக்கும்.நன்றி!

    ReplyDelete
  4. ஏன் சுதாகர் சார்.மறுபடி பதிவர் வீடுகளுக்கு போகவில்லையா?

    ReplyDelete
  5. மனிதனுக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. அதாவது ஒரு பெண்ணின் தாய்மையும், அவள் பிள்ளை பெறும் விதத்தையும்.//
    இது தெரிஞ்சா அவ்லோதான்......

    ReplyDelete
  6. நல்ல பதிவு சேர்!
    சமுதாயம் கட்டாயம் ஜோசிக்க வேண்டிய பதிவு!
    சேர்... அப்பிடியே என்ட டவுட் ஐயும் கிளியர் பண்ணிடுங்க சேர்...
    http://valaakam.blogspot.com/2010/02/06.html

    ReplyDelete
  7. நல்ல பதிவு!!அடுத்த சுவராஸ்யமான கதை பதிவுக்காக வெயிட்டிங்....

    ReplyDelete
  8. நல்லாயிருக்கு சார்

    ReplyDelete
  9. ரொம்ப நல்லாருக்குண்ணா..

    அடுத்த என் பிள்ளையார் பத்தின பதிவுக்கு வெயிட்டிங்..

    ReplyDelete
  10. மிக்க நன்றி ஜெய்லானி,
    என்ன சித்ரா உங்க அண்ணாத்தே வேற எப்படி யோசிப்பார். இப்படி எதாவது குறுக்கு சிந்தனை ஓடும். நன்றி.
    ஸாதிகா ஒரு குழப்பம், விடை தாருங்கள். தொழுகை மேற்குப் பார்த்து அமர்ந்து செய்கின்றார்கள், ஆனால் அவர்கள் முன்னால் இருக்கும் சுவரும், பள்ளியின் வாயிலும் கிழக்கு திசைதானே. குரான் மற்றும் ஹதிஸ்ல் கூறப்படுவது எல்லாம் ஒன்றுதான். ஆனால் பழக்க வழக்கம் மற்றும் நடைமுறையில் துபையில் உள்ளது போன்றா இந்தியாவிலும், மற்ற மேல் நாடுகளிலும் உள்ளது. தற்ப்போது ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாம் வேகமாக பரவி வருகின்றது. அங்கு காட்டுவாசிகள் மற்றும் பழங்குடினருக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளனர். (ஆதாரம் நேஷனல் ஜியாபிரக் சேனல்). நன்றி. நான் சொல்வது அதுதான் மூலம் ஒன்று ஆனால் மனிதன் சூழ்நிலை மற்றும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப மாற்றம் உள்ளது என்று சொல்கின்றேன். பயனுள்ள தகவலுக்கு நன்றி. எனக்கு தீண் என்றால் என்ன?. கடவுளா அல்லது எதோனும் கொள்கையா? ஒரு சுவற்றில் தீணை அடைவதே நமது மார்க்கம் என்று படித்ததால் இந்த சந்தோகம். நன்றி
    மிக்க நன்றி சதிஷ்குமார்,
    நன்றி வளாகம் சுதர்ஸன்,
    நன்றி மேனகாசத்தியா, சுசி,சுவையான சுவை, தியாவின் பேனா, ஜீவன் செய்வேம்.
    பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  11. //முதலில் மனிதன் தன்னைக் காக்கவும், தனது சொத்தான பசுக்கூட்டங்களைக் காக்கவும் படைத்த கடவுள் பசுபதி நாதர் ஆவார். //

    பசு பதி பாசம் என்கிற சைவ சித்தாந்த விளக்கத்தில் பசு என்றால் மனித ஆன்மா, பதி என்றால் இறைவன், பாசம் என்பது இவர்கள் இருவருக்குமான பிணைப்பு என்பார்கள். நீங்கள் பசு என்பது பால் கொடுக்கும் பசுமாடு என்பதாக விளக்கம் சொல்லுகிறீர்கள். எல்லாம் சொந்த சரக்கா ?

    சிவலிங்கம் அருகில் இருப்பது எருது(நந்தி) பசு அல்ல.

    ReplyDelete
  12. //அதாலால் அவைகளுக்கு பெண்களின் பெயரும் இட்டான். பல நதிகளுக்கு பெண்களின் பெயர் அமைய காரணமும் இதுவாகத்தான் இருக்க முடியும். //

    பிரம்ம புத்திரா, கிருஷ்ணா இவை எல்லாம் ஆண்கள் பெயர்கள் தான்

    ReplyDelete
  13. //அதாலால் அவைகளுக்கு பெண்களின் பெயரும் இட்டான். பல நதிகளுக்கு பெண்களின் பெயர் அமைய காரணமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.//

    இதுல பெண் பெயர்களை வைத்தார்கள் என்று சொல்லும் தகவல் தவறு, பெண்களுக்கு ஆறுகளின் பெயரை வைத்தார்கள் என்று சொல்வது தான் பொருத்தமானது. நிலா என்பது ஆணா பெண்ணா என்கிற பால் சார்ந்தது அல்ல, ஆனாலும் சூரியனைக் காட்டிலும் அது மென்மையாக இருப்பதால் பெண்களுக்கு இடும் பெயர்களில் நிலவின் பெயர், மலரின் பெயர் ஆகிய மென்மையான பெயர்களைச் சூட்டிக் கொள்வார்கள். மற்றபடி நிலா என்பது பெண் பெயர் என்று சொல்லுவது தவறு.

    ஆறு பெண் என்றால் கடல் ஆணா ? கடல் பெயரும் பெண்களுக்கு உண்டு, மொத்ததில் அவை நீர் நிலையின் பெயர்.

    ReplyDelete
  14. //அவரின் உருவம் இதுதான் என்று எவராலும் சொல்லப் படவில்லை. முதலில் யேசு பழைய ஏற்பாடு அல்லது விவிலியத்தில், ஒரு யூதனைப் போல இடுங்கிய கன்னம் மற்றும் ஒடுங்கிய தேகத்துடன் இருப்பார். இதே யேசு பின்னாளில் இந்தியா வந்த போது வெள்ளைக்காரனைப் போல அல்லது ஜரோப்பியனைப் போல இருப்பார்(இது பிரிட்டிஷார் கொணர்ந்தால்)//

    ஏசு ஒரு யூதர் என்பது அனைவருமே அறிந்தது, மற்றபடி அவரைப் பற்றிய உருவங்கள் அந்தந்த இனம் வரைந்து கொள்வது தான். கிருஷ்ணன் கருப்பு என்றால் கும்பிட மனம் வராது என்பதால் நம்மவர்கள் நீல நிறம் கொடுத்து வணங்குகிறார்கள். இவர்களை விடுங்க, கையில் உள்ள ஆயுதங்களையும் அலங்காரங்களையும் எடுத்துவிட்டால் பிள்ளையார் தவிர்த்து எந்த உருவத்தையும் நாம இது தான் என்று சொல்லிவிட முடியாது. முருகனின் அடையாளம் வேலும் மயிலும் தான் அவன் முகம் அல்ல. அது எப்படி இருக்கும்னு யாருக்குமே தெரியாது. ஐ மீன் முருகன் மப்டியில் போனால் பிக்பாக்கெட் (இருந்தால்) அடிச்சிடுவாங்க.

    ReplyDelete
  15. பின்னாளில் இது போல பலவற்றிக்கும் ஆயிரம் விளக்கங்கள் உபனிஷத்துக்களில் அவர்ரர் சிந்தனைகளுக்கு ஏற்ப விளக்கங்கள் கொடுத்ததால்தான் ஒரு ஒருமித்த கருத்துக்கள் இந்து மதத்தில் இல்லை எனபது எனது கருத்து. பசுபதி நாதர் சிலை, மொகஞ்சதாரே,ஹராப்பா பகுதியில் கிடைத்த ஒன்று. இந்த சிலையில் மனித உருவமும், பசுக்களும்,கால் நடைகளும் சித்தரிக்கப் பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள லிங்க வடிவ சிலைக்குத்தான் இந்த விளக்கம் பொருந்தும்.

    ஒன்றிரண்டு பெயர்கள் ஆண்கள் பெயரில் இருந்தால் தவறு இல்லை. ஆனால் பலன் கருதாது தாயுள்ளத்தோடு பலன் தருவதால் தான் நதிகளுக்கு பெண்கள் பெயர்கள் வைக்கப் பட்டுள்ளது.
    இதில் ஆண் பெண் தர்க்கம் இல்லை.பலன் கருதா தாயுள்ளம் படைத்தவள் என்பதாக புனைவு.

    அதையே தான் நானும் சொல்கின்றேன். மக்கள் அவர் அவர்களின் சூழ் நிலைக்கேற்ப்ப கொடுத்ததுதான் உருவம். சக்தி ஒன்றுதான் என்பது எனது கருத்து. நன்றி அண்ணா.

    ReplyDelete
  16. //ஏன் சுதாகர் சார்.மறுபடி பதிவர் வீடுகளுக்கு போகவில்லையா?//

    அதானே.. good one anna.

    ReplyDelete
  17. மிகவும் அருமையாக இருக்கிறது, நல்லதொரு சிந்தனை. இவை இந்தியாவில் வாழ்ந்த மனிதர்களின் செயல்பாடுகள் தானே, உலகில் வாழும் மொத்த மனிதர்களின் செயல்பாடுகளும் அவரவர் நிலைகேற்ப மாறி இருக்கிறது. மேலும் வேதங்கள் எழுதப்பட்ட காலத்திலேயே இறை மறுப்பு கொள்கையும் இருந்து இருக்கிறது.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.