Monday, January 25, 2010

ஊர் சுற்றி

நான் ஊருக்கு போய் திரும்பி வந்துவிட்டேன். ஊரில் இருக்கும் அனைவரும் என்னிடம் மாட்டாமல் பத்திரமாக தப்பித்து விட்டனர். அமராவதி ஆறு நிறைய தண்ணீர் ஓடுவதைப் பார்த்து நிறைய சந்தோசம், ஆனால் போய்க் குளிக்க நேரம் கிடைக்காததால் ஆற்றில் குளிக்கவில்லை(என்னது முழுகாம இருக்கனா,இதுதான வேணாம்). ஊர் சுற்றவும், நண்பர்களுடன் நிறைய நேரம் செலவழிக்கவும் முடியவில்லை. அக்கா மகளின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தேன்(சாப்பிடும் வேலைதான்). மூன்று நாட்களும் ஓடியது தெரியவில்லை. எனது உயிர் நண்பன் ஆசிப்பின் மூலம் நான் பதிவு எழுதும் விசயம் நண்பர்களில் பலருக்கும் தெரிந்து விட்டது. அட நம்ம ஊர்க்காரன் கூட நல்லா எழுதறான்பா என்று பாராட்டுக்களும், எனது பதிவின் பின்னூட்டங்களைப் படித்துக் காதில் புகையும் விட்டார்கள்.

ஆனாலும் மிகுந்த வேலைகளுக்கு இடையிலும் நான் மட்டும் போய்க் மசாலா காரப்பொறியும், மசலா முறுக்கும் பார்க் ரோட்டில் ஜயப்பன் அவர்களின் கடையில் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.
எங்களின் மொத்த குடும்பம், உறவினர்கள் என்று அனைவரையும் ஒரு சேரப் பார்த்ததில் அளவு கடந்த ஆனந்தம். மூன்று அக்கா,நாலு அண்ணன் அவர்களின் அனைவரின் குழந்தைகள் என குடும்பம் களைகட்டியது. நல்ல இனிமையாக கழிந்தது. மொத்தம் பதினைந்து லட்ச ரூபாய் செலவு ஆகியது. எனது அக்கா வீட்டுகாரர்(அத்திம்பேர்) ஒரே மகளின் திருமணத்தை ஜமாய்த்து விட்டார்.

முக்கியமாக ஆச்சரியப் பட்ட விசயம், மணமகனின் வீடு, அனைவரும் தங்கமான மனிதர்கள். நிறைய அமைதி. ஒரே குடும்பம் போல எங்களுடன் பழகிய விதம். மூன்று நாள் திருமணத்தில் ஒரு குறைகூட கூறாமல், கலகலப்பாக கலந்துரையாடி, அவர்கள் மணமகன் வீட்டாரா என யோசிக்க வைத்தனர். மணமகனின் மொத்த குடும்பமும் மிகவும் நல்லவர்கள். அக்கா மகள் ஒரு நல்ல இடத்தில் வாக்கப் பட்டுப் போகின்றாள் என்ற மனனிறைவுடன் திருமணம் முடிந்தது.

திரும்பி வரும் போது டைகர் ஏர்வேஸ் விமானம் இரவு 11.45க்கு கிளம்ப வேண்டியது,சில டெக்னிக்கல் பிரச்சனைகளால், விமானம் மாற்றி இரவு 1.00 மணிக்கு எடுத்தார்கள். இரவு தூக்கம் சரியில்லாதால் கன்னிமைகள் இன்னும் வலிப்பதால் இன்று பதிவு இடமுடியவில்லை.நாளை முதல் பதிவுகள் ஆரம்பிக்க வேண்டும். ஆ ஒரு விசயம், நான் சபரி மலைக்குப் போய் வந்த போது வாங்கிய புது செருப்பை யாரே மண்டபத்தில் மாற்றிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ஆதலால் புதுசு வாங்கி வந்தேன். இம்முறை ஆரம்பத்திலேயே கடைக்காரரின் அறிவுரைப்படி தண்ணீரில் முக்கி அணிந்ததால் காலைக் கடிக்கவில்லை.

இந்த முறை ஒரே ஒரு குறைதான், நான் தினமும் வணங்கும் எங்கள் ஊர் ஸ்ரீகாடு அனுமந்தராய சுவாமி கோவிலுக்குப் போகமுடியவில்லை. அதாலால் என்ன அவர்தான் எப்போதும் எனது வழிகாட்டியாக என்னுடன் இருக்கின்றார் அல்லவா? என்று, மானசீகமாக கும்பிட்டு வந்து விட்டேன்.

நன்றி.

13 comments:

 1. //மிகுந்த வேலைகளுக்கு இடையிலும் நான் மட்டும் போய்க் மசாலா காரப்பொறியும், மசலா முறுக்கும் பார்க் ரோட்டில் ஜயப்பன் அவர்களின் கடையில் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.//

  ரைட்டு!

  ReplyDelete
 2. கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது ரொம்ப சந்தோசம். மணமக்கள் என்றென்றும் சந்தோசம் நிலைத்திருக்க நெடுங்காலம் வாழட்டும்.

  இன்னிக்கு பதிவு போடலேன்னு சொல்லி சந்தோசமான பதிவைப் போட்டதுக்கு சந்தோசம்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் பித்தன் அவர்களே ....

  ReplyDelete
 4. நீங்க மட்டும் கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு வந்தீங்களா ?எங்கே எங்களுக்கு ?

  ReplyDelete
 5. திருமணத்திற்குச் சென்று வந்த மகிழ்ச்சியுடன் பதிவுகளும் குதூகலமாக வருமென எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 6. மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 7. அண்ணா.. இது நியாயமா? தங்கைக்கு கல்யாணத்துக்கு அழைப்பில்லையா??

  கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதில சந்தோஷம்.

  மணமக்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. ப்ரொஃபைல்ல கலக்கலா இருக்கீங்கண்ணா :)))

  ReplyDelete
 9. வாங்க, வாங்க, வாங்க........ !
  குடும்ப நிகழ்ச்சி பற்றி நன்கு எழுதி உள்ளீர்கள்.

  ReplyDelete
 10. நன்றி வால்ஸ், இந்த முறையும் உங்களை சந்திக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
  நன்றி நவாஸுதீன்,அப்ப அப்ப இது மாதிரி சந்தோசம் கிடைக்கும்.
  நன்றி மகா,
  ஆகா ஹேமூ,உங்களுக்கு இல்லாத கல்யாணச் சாப்பாடா?. ஸ்விஸ் ஏர்போர்ட்டில் அனுமதிக்க மாட்டார்கள் என அனுப்பவில்லை. அடுத்த முறை நீங்கள் எங்க வீட்டுக்கு வாருங்கள், தாரளமாக சாப்பிடலாம். நன்றி.
  நன்றி மாதேவி,
  நன்றி ஜெட்லி,
  நன்றி மேனகா சத்தியா, நகைச்சுவைகள் பற்றிய தங்களது கருத்துக்களுக்கும் நன்றி.
  மன்னிச்சுக்கோ சுசி, அடுத்த திருமணத்தின் போது கண்டிப்பாய் அழைக்கின்றேன்.
  // ப்ரொஃபைல்ல கலக்கலா இருக்கீங்கண்ணா :))) //
  ஆகா இந்தப் பெண்ணு அப்பாவிப் புள்ளையா இருக்குப்பா!! அம்மா சுசி அது எல்லாம் ஒரு பில்டப்புமா,அதை நம்பி ஏமாறதே.
  நன்றி சித்ரா.

  // புத்தாண்டு வாழ்த்துக்கள்.பொங்கல் வாழ்த்துக்கள் பித்தன்.நேத்து திட்டேர்னு அக்கா வந்தாங்க எங்க வீட்டுக்கு.quicka என்ன சமைக்க னு தெரியல.சீக்கிரம் செய்வது போல் சிற்றுண்டி தேடிக்கிட்டு இருந்தேன்.அப்புறம் உங்களுடைய அவல் புளி உப்மா நேத்து பண்ணினேன்.அக்காக்கும்,அத்திம்பேர் க்கும் ரொம்ப புடிசுச்சு.amazing taste..நன்றி. //
  மிக்க நன்றி. அம்மு மது, இந்தப் பின்னூட்டம் நான் ஒரு உருப்படியான பதிவு போட்டுள்ளேன் என்ற நிறைவைக் கொடுத்தது. வெள்ளரிப்பிஞ்சு மசாலா, கடலை மசால், காரப் பொரி செய்து பாருங்கள், கண்டிப்பாய் அனைவருக்கும் பிடிக்கும்,பாராட்டுவார்கள். நன்றி.
  தங்களது அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் எனது நன்றிகள்.

  அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 11. அக்கா மகளுக்கு திருமணம் கலந்து கொண்டு திரும்பி வந்ததில் ரொம்ப மகிழ்சியாக இருக்கிறீர்கள், சொந்த பந்தமெல்லாம் பார்த்து வந்த சந்தோஷம் வேறு,

  மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  சந்தடி சாக்குல மாசால கார பொரியும் முறுக்கும் வேறையா?
  ம்ம்

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.