Monday, January 18, 2010

பதிவர்கள் வீட்டு சமையலறையில் பாகம் - 2

மேனகா சத்தியா : கோழிக்குழம்பு பண்ணனும், போய்க் கோழி வாங்கி வாங்கன்னு சொன்னா ஏன் யோசிக்கிறீங்க?.

கணவர்: இல்லை நாளைக்கு புலி(ளி)க்குழம்பு பண்ணலாம்ன்னு சொன்னியே,அதான் புலி(ளி)க்கு எங்க போறதுன்னு யோசிச்சேன்.

(சாலமன் மச்சான் சிப்பிக்குள் முத்து கமல் மாதிரி கையைக் காலை இழுத்து டான்ஸ் ஆடுகின்றார்.)

சித்ராவின் தோழி : என்னம்மா உன் கனவர் டான்ஸ் கத்துக்கிறாரா?

சித்ரா : அது எல்லாம் ஒன்னும் இல்லை. நான் பண்ணிய நெல்லை அல்வா சாப்பிட்டு வாய் ஒட்டிக்கிச்சு. அதான் திறக்க டிரை பண்றார். (தோழி பயந்து அல்வா கொடுப்பதுக்குள் எஸ் ஆகிறார்.)

வித்யா(விதூஷ்) : என்னங்க நான் பண்ணிய திருவாதிரைக் கழி அலுவலகத்திற்கு வேணுமா அவ்வளோ நல்லா இருக்கா?

கணவர்: அது எல்லாம் ஒன்னும் இல்லை. அங்க கோந்து தீர்ந்து போச்சு.


ஸாதிகாவின் கணவர்: இன்னிக்கி எங்க மானேஜர் லஞ்சு அவரில் ரொம்ப கோபமா என்னிடம் வந்தார்.

ஸாதிகா: அய்யே ரொம்ப திட்டிவிட்டாரா?

கணவர் : அதுக்கு முன்னாடி உன் சாப்பாட்டைக் கொஞ்சம் கொடுத்தேன்,உப்புச்சப்பு இல்லாம மனுசன் ஆப் ஆகிப் போயிட்டார்.

ஃபைஸியாகாதர் : என்னங்க நான் இரமாலன் கஞ்சி காய்ச்சிக் கொடுத்தால் எதுக்கு பக்கெட்டில் கொட்டறிங்க?

கணவர் : என்னுடைய காட்டன் சட்டைக்கு ரொம்ப நாளாக கஞ்சி போடவில்லை அதான்.

திவ்யாஹரி(ரொம்ப ஆசையாக): ஏங்க எதுக்கு இன்னிக்கு திடீர்னு ஓட்டலுக்கு போலாம்ன்னு சொல்றீங்க. ஏதும் விசேசமா?

கணவர் : அது எல்லாம் ஒன்னும் இல்லை, உன்னைக் கல்யாணம் பண்ணியதுக்கு அப்புறம் இன்னிக்கு ஒரு நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம்ன்னுதான்.

சந்தன முல்லை: பாட்டி வடை சுட்டப்ப, காக்கா வந்து வடை எடுத்துப் போயி,மரத்து மேல உக்காந்து தின்னுச்சா.

பப்பு : நல்லவேளை அம்மா, நீங்க சுட்ட வடை எடுத்துப் போயிருந்தா!! காக்கா பாவம்.

சந்தன முல்லை : !!!!!!!.(எனக்கு முதல் விருது கொடுத்ததால 2 ஸ்பெசல்)

பத்மா (பத்மா கிச்சன்ஸ்) : என்னங்க சொல்றீங்க, உங்க ஆபிஸிக்கு நான் அவசரமா ஆயிரம் மைசூர்பாகு பண்ணித் தரனுமா? அவ்வளே நல்லா இருக்கா?

பத்மாவின் கணவர் : அது எல்லாம் இல்லை. ஆபிஸ் கட்ட செங்கல் தீர்ந்து போச்சு அவ்வளவுதான்.

ரம்யா (வில் டு லிவ்) : என்ன! உங்க ஆபிஸில எல்லாரும் என் சமையல் பத்திதான் பேசினாங்களா. அதுக்கு உங்களைப் பாராட்டினாங்களா ?

ரம்யாவின் கணவர் : இந்த சாப்பாட்டையே தினமும் சாப்பிடுறீங்களே. நீங்க ரொம்பா நல்லவருன்னு சொன்னாங்க.

தமிழரசி(தங்கச்சி,இப்ப சரிங்களா) : ஏங்க காலையில நான் முதல்ல என்ன பண்ணட்டும். சமையல் பண்ணவா? இல்லை கவிதை எழுதவா?.

கணவர் : இதுக்குப் பேசாம, நான் என்ன பண்ணட்டும் கொலையா? படுகொலையான்னு கேக்கலாம்.

தோழி கிருத்திகா : என்னங்க இன்னிக்கி நான் உங்களுக்கு இட்லி பண்ணட்டா? இல்லை தோசை பண்ணட்டா?

கணவர் : எது வேணா பண்ணு, ஆனா இன்னிக்காவது கொஞ்சம் சாப்பிடற மாதிரிப் பண்ணுமா பிளீஸ்.

சரி இந்த காமடி பதிவை நீங்க இரசிச்சீங்களே இல்லையே, உங்க ரங்கஸ் எல்லாரும் ரொம்ப இரசிச்சுருப்பாங்க. நம்ம சுசி தங்காய்ல ஆரம்பிச்சோம்,அவங்களை வைத்துக் காமெடியை முடிச்சுருவேம். இந்த காமெடி உங்க எல்லாருக்கும் பொருந்தும். அதுனால நீங்க எல்லாரும் சொல்ற மாதிரி எடுத்துக்குங்க.

சுசி (கோபமாக): இந்த பித்தனின் வாக்கு சுதாகருக்கு என்ன கொழுப்பு பார்த்தீங்களா? நீங்க கூட என் சமையலைக் குறை சொன்னது இல்லை. இவர் பாருங்க இப்படிக் காலை வாரிவிட்டார்.

குணாளன் மச்சான் (கூலாக): சரி சரி விடு. எங்களால சொல்ல முடியவில்லை. அவன் எதோ தைரியமாச் சொல்லிட்டான்.

சுசி பசங்க: அதானே!!!!!இந்த லிஸ்ட்ல எனக்குத் தெரியாம யாராவது விட்டுப் போயிருந்தா, சந்தோசப்படாதீங்க அதுக்குன்னு இன்னெரு தனிப்பதிவா போட்டுருவம்.

அனைவரும் இந்த அன்பு அண்ணனின் நகைச்சுவைகளை இரசித்து ஆதரவளித்தமைக்கு நன்றி. இது போல சின்னச் சின்ன சந்தோசங்களுடன் நிறைவான வாழ்க்கை இந்தப் புத்தாண்டில் வாழ எனது அய்யன் அய்யப்பனை வேண்டிக் கொள்கின்றேன். நன்றி.

டும், டும், உங்கள் அனைவருக்கும் நான் சொல்வது என்ன என்றால், "வரும் திங்கள் வரைக்கும் உங்கள் அனைவருக்கும் எனது பதிவுகளில் இருந்து விடுதலை. விடுதலை. மீண்டும் திங்களன்று சந்திப்போம்". நன்றி.

25 comments:

 1. //சந்தன முல்லை : !!!!!!!.(எனக்கு முதல் விருது கொடுத்ததால 2 ஸ்பெசல்) //

  இன்னும் ரெண்டு வருஷத்துல முல்லைக்கு இது மாதிரி நிறைய பல்ப் கிடைக்கும் :)

  ReplyDelete
 2. :)) திருவாதிரை களி பதிவு இன்னும் இட வில்லை என்று சொல்கிறீர்களா? :)) அதை கோந்தாக்கியதுக்கு நன்றி

  ReplyDelete
 3. அதுக்குள்ளே அடுத்ததா ?

  //அனைவரும் இந்த அன்பு அண்ணனின் நகைச்சுவைகளை இரசித்து ஆதரவளித்தமைக்கு நன்றி. இது போல சின்னச் சின்ன சந்தோசங்களுடன் நிறைவான வாழ்க்கை இந்தப் புத்தாண்டில் வாழ எனது அய்யன் அய்யப்பனை வேண்டிக் கொள்கின்றேன். நன்றி.

  டும், டும், உங்கள் அனைவருக்கும் நான் சொல்வது என்ன என்றால்,//

  அப்ப டும் டும் உங்களுக்கு இல்லையா ? சீக்கிரம் பண்ணுங்கோ சாமியோவ்

  ReplyDelete
 4. ஹ்ஹஹாஹா.....ஏன் ஏன் இந்த கொலைவெறி..யப்பா சிரிச்சி சிரிச்சி கண்ணில தண்ணி....முடியலை...போதும் விட்டுருங்க என்னை.....ஹ்ஹாஹ்ஹஹ்ஹஹா....என்னை மட்டும் ரெண்டாவது நாளும் வருத்தது ஹ்ஹஹஹ்ஹஹா ய்ப்பா....ரொம்ப நாள் கோவம் போல......ரொம்ப சிரிக்க வச்சீங்க பித்தன் நன்றி...

  ReplyDelete
 5. சாலமன் ssss ஆகி விட, சிங்கபூருக்கு அல்வா பார்சல் செய்ய படுகிறது........ சிங்கப்பூரில் அந்த தைய்யா தைய்யா நடனம் பற்றி ஊரெங்கும் ஒரே பேச்சு. நம்ம சுதாகர் அண்ணாச்சி, அல்வா நடன குருவாக மாறி பிரபலம் ஆகிறார்.
  ha, ha,ha......

  ReplyDelete
 6. // ஆகி விட, சிங்கபூருக்கு அல்வா பார்சல் செய்ய படுகிறது........ சிங்கப்பூரில் அந்த தைய்யா தைய்யா நடனம் பற்றி ஊரெங்கும் ஒரே பேச்சு. நம்ம சுதாகர் அண்ணாச்சி, அல்வா நடன குருவாக மாறி பிரபலம் ஆகிறார். //

  ஹா ஹா இப்படி பதிவு போட்டுட்டு இங்க இருக்க மாட்டேனே! போன பதிவு பிங்குறிப்பு படியுங்க. நான் இந்தியாவிற்க்கு போகின்றேன். அல்வாக்கு எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மா கண்ணு எஸ். என்ன இருந்தாலும் உங்கன்னா உன்ன வீட சீனியர் ஆச்சே.

  ReplyDelete
 7. நன்றி தமிழரசி, எத்தனை நாள் நாங்க உங்க காதல் கவிதைகளைப் படித்து பொறாமையில் டர்ர்ர் ஆகி இருப்போம். சும்மா சொன்னேன், எனக்கு உங்களின் மற்றும் ஹேமாவின் கவிதைகள் மிகவும் பிடிக்கும் தொடர்ந்து எழுதுங்கள். அப்ப அப்ப புரியலைன்னாக் கூட கலகலப்பிரியாவின் கவிதைகளும் நன்று. நன்றி தமிழரசி. தங்கள் வேண்டுகோளின் படி இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.

  ReplyDelete
 8. எத்தனி நாளா ரூம் போட்டு யோசிச்சீங்க....உங்க வீட்டு அம்மணிகிட்டே போட்டுக்குடுக்கலாம்னா வழியில்லாம்ப்போச்சே......

  ReplyDelete
 9. நன்றி கன்னகி அம்மினி, பண்ணாடி அய்யா நல்லா இருக்காங்களா? என்னுடைய சமையல் பதிவுகள் படித்துப் பாருங்கள். தங்களின் வரவுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 10. ஐயோ யாரையும் விட்டு வைக்கவில்லையா?முதல் பாகத்திற்கு வந்த பின்னூட்டங்கள் தந்த தைரியமா?ம்ம்..நடத்துங்க நடத்துங்க..ஆட்டோ..டிரக் இல்லேங்க ஐயா,நம்மாளுங்க(அதாங்க 'பெண்கள்') ஏவு கனையே அனுப்பிடுவாங்க..பார்த்து.மானேஜர் திட்டுவதென்றால் என் கணவர் அவர் தன்னைத்தானே திட்டிக்கொள்ளவேண்டும்.ஹிஹி..

  ReplyDelete
 11. சுதாகர்,

  நல்ல இடுகை. யார் படித்தாலும் சிரிப்பாங்க, சந்தோசப்படுவாங்க.

  ச்ட்டை கஞ்சி, கொலை படுகொலை, காக்கா பாவம் - ஆத்தி சிரிச்சு மாளலை அவ்ளோதான்.

  ReplyDelete
 12. சிரிச்சி வயிறு வலிக்குது ஹா ஹா. அப்பாடா மலிக்கா தப்பிச்சிட்டேடிமா இன்று. நல்லபடியா போய்விட்டு வாங்க.

  இப்பவிடுபட்டதுபோல் மீண்டும் என்னைமட்டும் விட்டுவிட்டு மற்றதோழிகளை எழுதுங்க, இத்துடன்
  அதற்குண்டான மொய்யும் இணைத்துள்ளேன் ஸ்ஸ்ஸ் யாரிடமும் சொல்லிடவேண்டாம்.

  ReplyDelete
 13. கலக்கல் காமிடி.

  அதிலும் அந்த கடைசி வரி சூப்பர் :-) (சும்மா நக்கலுக்கு)

  ReplyDelete
 14. அச்சச்சோ நானுமா? எல்லா ஜோக்ஸும் சூப்பர் அண்ணா..

  ReplyDelete
 15. ரம்யாவுக்கு இன்னும் கல்யானம் ஆகலை! அதுகுள்ள இப்படி பயமுறுத்துனா எப்படி!?

  ReplyDelete
 16. எல்லா பதிவர் வீட்டுக்கும் சூப்பரா கூப்பிட்டு போய்ட்டீஙக்.

  இதிலிருந்து எல்லார் வீட்டு சமையலையும் ரொம்ப உண்ணிப்பா கணக்கெடுத்து இருக்கீங்க என்று தெரிய வருது.


  நான் பின்னூட்டத்தில் கடைசி பெஞ்சுன்னு என்னை கொஞ்சமா கலாச்சிரிக்கீங்க... ஹி ஹி


  ஆனா உங்க‌ள் ப‌திவ‌ ப‌டிக்கிற‌ முத‌ல் ஆள் நான் தான்.
  நேர‌மின்மையால் லேட்டா வ‌ந்து க‌ருத்து தெரிவிப்ப‌து.

  ReplyDelete
 17. Ada kalakireenga pola !

  ReplyDelete
 18. நல்லவேளை நான் சமையல் குறிப்புகள் எழுதுவதில்லை (தெரிஞ்சாத்தானே?) :-)

  ReplyDelete
 19. நன்றி டி வி ஆர்,
  நன்றி சின்ன அம்மினி, பப்பு மாதிரி சூட்டிப்பான குழந்தை கிட்ட எத்தனை பல்பு வேணா வாங்கலாம். முல்லை கொடுத்து வைத்தவர்கள்.
  நன்றி விதூஷ், பதிவு போட்டா மட்டும் பத்தாது.எனக்கு பார்சல் அனுப்பவும்.
  நன்றி கோவி அண்ணா,
  நன்றி தமிழரசி,நன்றி சித்ரா.
  நன்றி கன்னகி,
  நன்றி ஸாதிகா,
  நன்றி நாவாஸுதீன்,
  நன்றி மலிக்கா, உங்களுக்கு பொருத்தமான ஜோக் கிடைக்கவில்லை. அதுனால கொஞ்சம் விட்டுப் பிடிக்கின்றேன்.மொய் வாங்கினாலும்,மெய்யாக ஜோக் போடுவேம்(கடமை,கண்ணியம் கட்டுப்பாடுதான் எங்கள் மூச்சு)என்ன கவர் லேசா இருக்கு?
  நன்றி சிங்ககுட்டி,
  நன்றி திவ்யா, உங்களவர்தான் போன் பண்ணி சொன்னார்.ஹாஹாஹா
  நன்றி வால்ஸ், இது வரப்போறவர்க்கு நம்ம சார்பா முன்னெச்சரிக்கை,
  நன்றி ஜலில்லா, உங்கள் சமையல் ரொம்ப நல்லா இருக்கு,அதான் வாறுவதற்க்கு மனசு வரவில்லை. அதுதான் லைட்டா கொடுத்தேம்.
  நன்றி சுவையான சுவை,
  நன்றி ஹுசைனம்மா, நீங்க அதிகமா பதிவு பக்கம் வராததுனால, இதுல சேர்க்கவில்லை. அடுத்த சிரிக்கலாம் வாங்க பதிவில் வரும்.
  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 20. சூப்பர்ர்ர்ர்.எல்லோரையும் நல்லா கலாய்ச்சுட்டீங்க.இப்போ தான் இந்த பதிவை படிக்க முடிந்தது.இன்னும் இதுபோல் எழுதி சிரிக்க வைங்க...

  ReplyDelete
 21. :-))) வாய் விட்டுச் சிரித்தேன்.

  ReplyDelete
 22. ஹைய்யோ ஹைய்யோ..பித்தனின் வாக்கு சார்..நாங்கதான் ப்லாக்லே பிசியா இருப்போம் இல்ல..இதுலே எங்க சமையலறை பக்கம் போக! :-))

  ReplyDelete
 23. (ஜலீலா உங்கள் சமையல் நல்ல இருக்கு அதான் வாறுவதற்க்கு மனசு வரவில்லை) ரொம்ப சந்தோஷ்ம்.

  இது என்ன ஆளாளுக்கு,. பின்னுட்டம் போடனா, கனவுல பூதம் வரும், ஜக்காம்மா பின்னூட்டம் போடாதவர்களை நீயே பாத்துக்கோ, நீங்க பின்னூட்டம் போடலனா இராத்திரியில் கண்ணு தெரியாம போய் விடும்.
  ஒரே சிரிப்புதான்

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.