Wednesday, January 6, 2010

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - நிறைவுப் பாகம்

இந்த பதிவு பதிவர்கள் அனைவரும் படிக்க அல்லது பார்க்க வேண்டிய பதிவு ஆகும். வெள்ளியங்கிரி மலையில் நடைபெறும் ஒரு அற்புதத் தரிசனம் காண, ஏழு மலைகள் ஏறிப் படங்கள் பிடித்து, அவற்றைப் படங்களாக பதிவு இட்டுள்ளேன் பார்த்து மகிழுங்கள் அல்லது வணங்குங்கள்.


அந்த அதிகாலையில் ஆண்டி சுனையில் இருந்து புறப்பட்டு ஆறு மணியளவில் மலையுச்சியை அடைந்து, அங்கு உள்ள ஈசனுக்கு புது வஸ்த்திரம் சாத்தி, மாலைகள் அணிவித்து, பிரசாதமாக உலர் பழங்கள், மற்றும் முந்திரி,கற்கண்டு வைத்துவிட்டு, சூரியபகவானின் வருகைக்காகக் காத்து இருந்தோம். இந்த மலை உச்சியில் நாங்கள் சூரியனின் வருகைக்காக விழிகள் விரிய காத்து இருந்தோம். சூரியனும் மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.


மெல்ல மேகக்கூட்டங்களின் இடையில் சூரியன் வரும் காட்சி.முக்கால் பாகம் உதயம் ஆகிவிட்டார்.


இதோ சூரிய உதயம் ஆகிவிட்டது.

இதுதான் இந்த மலையின் அற்புதம். உதயம் ஆகும் சூரியனின் அந்த முதல் ஒளி நேராக ஈசனின் மீது விழுகும். அந்த அரிய காட்சி. அங்கு அந்த குகையில் உள்ளே உள்ள சிவலிங்கத்தின் மீது அந்த முதல் சூரியக் கதிர்கள் விழும் அற்புதம்.


இப்படிச் சூரியனின் முதல் ஒளி ஈசனின் விழும் போது, தீபாராதனை காட்டப்படுகின்றது.
இது போல சில நிமிடங்கள் மட்டும் தான் சூரிய ஒளி ஈசனின் திருவுருவம் மீது படும். பின்னர் சூரிய ஒளி மெல்ல மேலே சென்று விடும். இந்த அரிய தரிசனம் காணத்தான் இந்த நெடும் பயணம். நான் படம் எடுப்பதை பூஜை செய்பவர் பார்த்து விட்டார். சைகையால் படம் எடுக்காதே என்று தலையாட்டினார். நானும் படம் எடுப்பதை நிறுத்தி விட்டேன்.
பின்னர் நாங்கள் கிழே இறங்க ஆரம்பித்தோம். மதியம் பதினோரு மணிக்குள் கீழே சென்று விட்டால் வெய்யில் மலை இறங்கி சிரமப் படவேண்டியதில்லை என்பதால், பூஜைகள் முடித்து, பிரசாதம் உண்டு மலை இறங்க ஆரம்பித்தோம். இறங்கும் பாதை மழை ஈரத்திலும் பனியிலும் சத சதவென இருந்ததால் வேகமாக இறங்க முடியவில்லை. நான் ஒருமுறை கீழே விழுந்து எழுந்தேன்.


பின்னர் அனைவரும் பக்தி பரவசம் பொங்க கடவுளை வழிபட்டு கீழே வந்து அடைந்தோம். வரும் வழியில் இடையில் கோவனம் மட்டும் கட்டிய இளம் வயது சாமியார் ஒருவரைப் பார்த்தோம். இறங்கும் வழியில் ஒரு கடையின் அருகில் மலைப் பாதையில் அமர்ந்து இருந்தார். அவர் நீண்ட நாட்களாக யாரிடமும் எதுவும் பேசமாட்டார். சாப்பிட எதாவது கொடுத்தால், பிரியம் இருந்தால் வாங்கிக் கொள்வார். அல்லது சிரித்து விட்டு அமைதியாக செல்வார் என்று அருகில் இருந்த கடைக்காரர் சொன்னார். எனக்கு இதில் எல்லாம்(சாமியார்கள்) நாட்டம் இல்லை. நான் போகும் போது பார்த்துச் சென்ற முறுக்கு, நெல்லிக்காய்(மிளகாய்ப் பொடியில் ஊறியது), மாங்காய், நிலக்கடலை,பனங்கிழங்கு, லெமன்ஸோடா என சகலத்தையும் ஒரு பிடி பிடித்துக் கொண்டு வந்தேன்.இறங்கும் வழிபூராவும் நெறுக்குத்தீனிதான். எங்கள் குழுவினர் அவரிடம் உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரிகளைக் கொடுத்தார்கள். அவர் புன்சிரிப்புடன் அதை வாங்கியவர், ஒரு நிமிடம் தன் உள்ளங்கையில் வைத்து கண்மூடித் தியானித்து விட்டுப் பின்னர் அந்தப் பொட்டலங்களைப் பிரித்து எங்களை அழைத்துப்(சைகையில்) பிரசாதமாக கொடுத்தார். பின்னர் மீதம் இருந்ததை அங்கு இருந்த குரங்குகளிடம் கொடுத்தார். அவரைச் சுற்றி ஒரு ஜம்பது குரங்குகளுக்கு மேலே வந்து வாங்கியதை என் கண்களால் பார்த்தேன். இந்த அரிய காட்சி புகைப்படமாகவும் எடுத்தோம். ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்தால் சுற்றி இருந்த குரங்குகளைக் காணவில்லை. உங்களின் கண்களுக்குத் தெரிகின்றதா என்று பாருங்கள். நன்றி.

இத் தொடரை நீங்கள் அனைவரும் இயற்கை அழகுடன் இரசித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இனியும் நல்ல விசயங்களை உங்கள் ஆதரவுடன் மீண்டும் சந்திக்கின்றேன். நன்றிகளுடன் பித்தனின் வாக்கு - தி.சுதாகர்.

51 comments:

 1. உண்மையிலேயே நீங்கள் படம் எடுக்கும்போது குரங்கு இருந்தாதா?...

  ReplyDelete
 2. ஆமாம் புதியவன், நிறைய இருந்தது. இது எனக்கு கூட ஆச்சரியம்தான். அவைகள் அவர் கைகளில் இருந்து வாங்கிச் சென்றன.

  ReplyDelete
 3. நம்ப முடியவில்லை, ஏதோ மேஜிக் வேலையா இருக்கும் போல இருக்கே

  ReplyDelete
 4. //இந்த பதிவு பதிவர்கள் அனைவரும் படிக்க அல்லது பார்க்க வேண்டிய பதிவு ஆகும். //

  சுற்றுலா என்பது தவிர்த்து, பயணம் உங்களுக்கு ஏற்படுத்திய படிப்பினையும், அதன் பிறகு நீங்கள் கொண்ட உறுதியும், உங்கள் வாழ்க்கையின் மாற்றமும் என்ன ?

  ReplyDelete
 5. //இந்த அரிய காட்சி புகைப்படமாகவும் எடுத்தோம். ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்தால் சுற்றி இருந்த குரங்குகளைக் காணவில்லை. உங்களின் கண்களுக்குத் தெரிகின்றதா என்று பாருங்கள்.//

  என் கண்ணுக்கு குரங்குகள் தெரிகின்றன. நல்லவங்க கண்ணுக்குத்தான் தெரியுமோ !
  :)

  ReplyDelete
 6. Ellaam maayam!! athisayamaaKa. Irukku eluthungka

  ReplyDelete
 7. கோவியாரே நான் மேல இருக்கின்ற எங்க குருப் போட்டே பார்க்கச் சொல்லவில்லை. சாமியார் படத்தில் பார்த்துச் சொல்லுங்கள். உங்களுக்த் தெரிகின்றதா?

  ReplyDelete
 8. ந‌ல்ல‌ வித்தியாச‌மான‌ ப‌திவு. ந‌ம்ப‌வே முடிய‌ல‌. ஏதோ மேஜிக் மாறீ தான் இருக்கு.

  ReplyDelete
 9. sorry

  muthalla nan potta comment display agala athanala than test pannen.

  ReplyDelete
 10. அருமையான பயண சுற்றுலா ... அடுத்த பதிவுகளும் சிறக்க வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 11. அருமையான பதிவு. சாமியார் விஷயம் மிக மிக அதிசயமாக இருக்கிறது.

  ReplyDelete
 12. அனுபவங்களை அருமையாக சொல்லி இருக்குறீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. //இந்த பதிவு பதிவர்கள் அனைவரும் படிக்க அல்லது பார்க்க வேண்டிய பதிவு ஆகும். //

  அவ்வாறு செய்தால் நான்கு நாட்களில் உங்களுக்கு நல்லது நடக்கும், இந்த லிங்கை பத்து நண்பர்களுக்கு ஃபார்வேர்டு செய்த ஒருவருக்கு போனில் பேட்டரி ரொம்ப நேரம் நின்றது, கள்ளஓட்டு போட்ட ஒருவருக்கு எப்போதும் திரும்பி பார்க்காத பிகர் திரும்பி பார்த்தது, இந்த பதிவை உதாசினபடுத்திய ஒருவரின் ப்ளாக் காணாமல் போனது!, தவறாக பேசிய ஒருவருக்கு பின்னூட்டமே வருவதில்லை!

  நான் உங்களை ஒச்சரிக்கிறேன், ஸாரி எச்சரிக்கிறேன்!, நான் கடவுள்கிட்ட மட்டும் தான் சைலண்டா இருப்பேன், கமெண்ட் பாக்ஸ்ல இல்ல!

  ReplyDelete
 14. அனுபவத்தை அழகாக பகிர்ந்தளித்துள்ளீர்கள்.

  நேரம்கிடைக்கும்போது இதையும் பார்க்கவும்

  http://fmalikka.blogspot.com/

  ReplyDelete
 15. பெண்கள் போகமுடியாதுனு சொல்லி இருக்கீங்க, வெள்ளிமலை பத்தி நிறையக் கேட்டிருக்கேன். ராதாகிருஷ்ணன் என்பவர் எழுதி வெள்ளிமலைங்கற பேரிலே ஒரு தொடர்நாவல் கூட ஆநந்த விகடனில் வந்திருக்கு, படிச்சிருக்கேன், முருகன் கோயில்னு படிச்ச நினைவு, அதுவேறே, இது வேறா?? அந்த வெள்ளிமலையும் கோவைப்பக்கம் தான்.

  ReplyDelete
 16. //அவரைச் சுற்றி ஒரு ஜம்பது குரங்குகளுக்கு மேலே வந்து வாங்கியதை என் கண்களால் பார்த்தேன். இந்த அரிய காட்சி புகைப்படமாகவும் எடுத்தோம். ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்தால் சுற்றி இருந்த குரங்குகளைக் காணவில்லை. உங்களின் கண்களுக்குத் தெரிகின்றதா என்று பாருங்கள்//

  :-))))
  தியரி கத்துக்கொடுக்காத பல விஷயங்களை அனுபவம் கத்துக்கொடுக்கும்.

  ReplyDelete
 17. இது பித்தனின் வாக்கா இல்ல சித்தனின் வாக்கா?

  ReplyDelete
 18. இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் மட்டும்.:):)

  ReplyDelete
 19. போகாவிட்டாலும் அருமையாக் காட்சிப்படுத்திச் சொல்லீட்டீங்க.நம்புறதும் நம்பாமல் விடுறதும் எங்க மனநிலையைப் பொறுத்தது.

  சாமியே எங்களை வரவேணாம்ன்னு ஒதுக்கி வச்சிருக்கா !இங்கதான் இடிக்குது !

  ReplyDelete
 20. புகைப்ப்டங்களனைத்தும் மிகமிக அருமை. நல்ல பகிர்வு

  ReplyDelete
 21. It was a nice experience and good to know the spritual things which is around us.

  B Visweswaran
  chennai

  ReplyDelete
 22. ப‌ய‌ண‌த்தொட‌ர் ந‌ன்றாக‌ இருந்த‌து.

  ReplyDelete
 23. வெள்ளியங்கிரி பயணம் முழுவதும் படித்துவிட்டேன்.

  நல்ல விரிவான தொடர்.

  வித்தியாசமான அழகிய இடங்கள். நன்றி.

  ReplyDelete
 24. அன்புள்ள ஆசிரியர் அவர்களே...
  தங்களின் இந்த ஆன்மீக கட்டுரையை கண்டுகளித்தேன்...மிக்க நன்றி....

  ReplyDelete
 25. நண்பரே தங்களின் பயண கட்டுரை மிகவும் அருமை.அதிலும் படங்கள் ஆகா !!!
  பொதுவாக சித்தர்கள் சில நேரங்களின் சில வடிவங்களில் வருவார்கள் முன் ஜென்ம தொடர்பிருந்தால் மட்டுமே அவர்களின் வருகை நமக்கு தெரியும் ..வத்ரஈருப்பு அருகே சதுரகிரி மலை உள்ளது அங்கேயும் சித்தர்கள் உள்ளனர் சிலர் பார்த்ததாக கூறினாலும் நமக்கு கிட்டவில்லை !! ஆனாலும் அந்த மலை மீது இரவு படுத்து உறங்கிய நேரங்களை இனி கிடைக்குமா ???சுகமான மூலிகை காற்று ஜோதி பச்சி இலை இரவு நேரத்திலும் சிறிய விளக்கு போல் ஒளி தரக்கூடியது 14km ghat road. ஒருமுறை வாருங்கள் .. அம்மாவாசை நாட்கள் விசேடம் .

  ReplyDelete
 26. என் கண்ணுக்கு குரங்குகள் தெரிகின்றன. நல்லவங்க கண்ணுக்குத்தான் தெரியுமோ !
  -:)

  ReplyDelete
 27. enaaku oru குரங்கு mattum thereuthu realy

  ReplyDelete
 28. பயணக்கட்டுரை ரொம்ப நல்லா இருந்தது , அழகாக விளக்கியிருந்திங்க . புகைபடங்கள் அனைத்தும் அருமை ... ஆச்சரியமான சில விசயங்கள் , மேலும் இது போன்ற கட்டுரை உங்களிடம் எதிர்பார்கிறோம்.

  ReplyDelete
 29. Nice photos!
  Wishing you a very Happy New year !!!

  ReplyDelete
 30. //நான் ஒருமுறை கீழே விழுந்து எழுந்தேன்.//
  ஈசனை வணங்கி எழுந்ததா நினைச்சுகிட்டீங்களா?

  //சகலத்தையும் ஒரு பிடி பிடித்துக் கொண்டு வந்தேன்.இறங்கும் வழிபூராவும் நெறுக்குத்தீனிதான்.//
  ஹிஹிஹி.. என் அண்ணன் ஆச்சே..

  எனக்கும் ஒண்ணுமே தெரியல அண்ணா.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு.

  ReplyDelete
 31. ஆஹா அற்புதம் நல்ல தொடர் வாசிக்கும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கு வந்து வாழவேண்டும் என்று தோன்றுகிறது .
  பித்தா நீ எங்களை மன யாத்திரை கூட்டி சென்றதுக்கு நன்றி . இன்றைய காலங்களில் தகப்பனின் அறிவுரையும் தனயனின் அருகான்மையும்
  ஒரு ஆசீர்வாதம் ஆனந்தம் . ஒரு விடயம் கவனித்திர்களா சுவாமியின் கையில் இருந்து ஒரு மானோ ,நரியோ நாயோ தெரியவில்லை வாங்கி
  சாப்பிடுகிறது தெரிகின்றதா ? படத்தை enlarge பண்ணி பார்க்கும் போது தெரிகிறது .நிச்சயம் அது குரங்கு இல்லை .
  ஓம் நமசிவய
  - யோகினி

  ReplyDelete
 32. தங்களின் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி புதியவன்.
  நன்றி குடுகுடுப்பை அய்யா, ஆனா அவரைப் பார்க்கும் போது எனக்கு பெரிதாக ஈர்ப்பு எல்லாம் இல்லை.
  நன்றி கோவியாரே, உங்களையும் ஞானப்பித்தனையும் ஊர் உலகம் எல்லாம் நல்லவன்னு சொல்வதை நம்புகின்றேன்.
  நன்றி சுவையான சுவை,
  நன்றி மகா,
  நன்றி வல்லி அம்மா, எனது அழைப்பினை ஏற்று வந்தமைக்கு,
  நன்றி ரோஸ்விக்,
  நன்றி வால்ஸ் உங்களின் பின்னூட்டத்தை மிகவும் இரசித்தேன். நல்லவேளை பதிவைப் படிப்பவர்களுக்கு ஆஸ்த்திரேலியா,அமெரிக்கா பயணம் இலவசமுன்னு சொல்லி மாட்டிவிடாம இருந்திங்க.
  நன்றி மலிக்கா, படித்துவிட்டேன்.
  நன்றி கீதா அம்மா, நான் கோவை பக்கத்தில் மருதமலை,சிவன்மலை,சென்னிமலை,ஊதியூர் மலை, வட்டமலை முதலிய மலைகளுக்குச் சென்றுள்ளேன். ஆனால் வெள்ளிமலை கேள்விப்பட்டது இல்லை. இதுவேறு வெள்ளியங்கிரி மலை. இங்கு பருவம் உடைய பெண்கள் மலை ஏறுவது இல்லை.
  நன்றி திவா, உண்மைதான் நம் வாழ்க்கைதான் நமது முதல் புத்தகம்,
  நன்றி அண்ணாமலையான், இது வெறும் கண்ணாடி வாக்குதான், நான் கண்டவற்றை,அப்படியே பதிவில் பிரதிபலிக்கின்றேன்.
  வாங்க நவாஸ் அண்ணா, நீங்க போடும் கலக்கல் பின்னூட்டம் எல்லாம் படித்து சிரித்து இருக்கின்றேன். எனது பதிவுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. தங்களின் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
  வாம்மா ஹேமு சாமி ஒன்னும் ஒதுக்கி இருக்காது. எப்பவாது பழைய காலத்தில் பெண்கள் அங்கு காட்டில் பாதிக்கப் பட்டு, போக வேண்டாம் பாதுகாப்பு இருக்காதுன்னு முடிவு செய்து இருப்பார்கள். பின்னாளில் அது சாஸ்த்திரம் என்று செய்துருப்பார்கள். சாமி என்ன பண்ணும். இங்கனயும் சரி, சபரி மலையிலும் சரி இது ஆசாமிகள் வேலை.
  வாங்க உழவன், தங்களின் வரவுக்கு நன்றி,
  நன்றி விஸ்வேஸ்வரன், தங்களின் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
  நன்றி வடுவூர் குமார்,
  நன்றி மாதேவி, உண்மையில் அழகான அருமையான இடம் அது.
  நன்றி கஜெந்திரன், தங்களின் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
  வாங்க கணபதி நடராஜன் அய்யா, எனக்கும் சதுர கிரி மலைக்குச் செல்லவேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல், ஆனால் பனிச்சுமையும், காலமும் வாய்க்கவில்லை. இன்னமும் ஒரு வருடத்துக்குள் சதுரகிரி செல்ல ஆவல். அந்த ஈசன் மனது வைக்கவேண்டும். எனக்கு சித்தர்கள் ஆசி இல்லை. ஆனால் சில பைத்தியங்கள்(சாதுக்கள்) என்னை ஆசிர்வதித்ததும், என்னிடம் விளையாடியதும் உண்டு.
  வாங்க ஞானப்பித்தன், இந்த கட்,காப்பி பேஸ்ட் பழக்கம் உங்களை விட்டு போகவில்லையா. கோவியாரின் பின்னூட்டத்தைக் காப்பி அடிக்கின்றீர்கள். இருந்தாலும் மனசு வந்து சுமைலி போட்டீர்களே. ஹா ஹா நன்றி ஞானப்பித்தன்.
  வாங்க சபா.பாண்டியன், நீங்க சொல்வது சாம்பல் நிறத்தில் தெரிவதைத்தான், நான் அதை ஆராய்து விட்டேன். அது பாறை. நான் சொல்வது குட்டியுடன் அவர் கையில் திராட்சை வாங்கும் குரங்கை.
  வாங்க சாருஸ்ரீராஜ், ஊர்ப் பயணம் எல்லாம் எப்படி இருந்தது. நன்றி.
  நன்றி பிரியா, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வெறும் வாழ்த்துக்கள்தான? உங்க ரெசிப்பிஸ்ல நல்ல சுவீட் எல்லாம் கொடுக்க மாட்டீர்களா? நன்றி பிரியா.
  வாம்மா சுசீயீயீயீயீயீ, (வாம்மா மின்னல் மாதிரி படிக்கவும்). இப்படி விழுந்து வணங்கினா அப்புறம் உடம்பு புண்ணாகி விடும். சாப்பாடு கூட இல்லாம இருந்தர்லாம் நெறுக்குஸ் இல்லாம இருக்க முடியாது. நன்றி சுசி.
  வாங்க யோகினி, நான் ஒரு குரங்கு, தன் குட்டியுடன் வந்து ஒரு கையில் குட்டியைப் பிடித்துக் கொண்டு, மறுகையில் திராட்சை வாங்கும் அழகைத்தான் படம் பிடித்தேன். சாமியாரை அல்ல. ஆனால் அந்தக் குரங்கு விழவில்லை. என் தந்தையும், தமையன் களின் வளர்ப்பும் தான் என்னை ஆளாக்கியது. நன்றி.

  ஆகா நன்றி மற்றும் தகவல்கள் ஒரு பதிவு அளவுக்கு வந்ததால் இன்று பதிவு போடவில்லை. நாளை நான் முதன் முதலில் ஒரு கதை எழுதப் போகின்றேன். படித்து ஆதரவு தரவும். நன்றி.

  ReplyDelete
 33. // சுற்றுலா என்பது தவிர்த்து, பயணம் உங்களுக்கு ஏற்படுத்திய படிப்பினையும், அதன் பிறகு நீங்கள் கொண்ட உறுதியும், உங்கள் வாழ்க்கையின் மாற்றமும் என்ன ? //
  இயற்கை அழகும், பக்தியும் மனதிற்க்கு அன்ம பலமும்,தேகபலமும் தந்தன. இயற்கை சர்வ சக்தி வாய்ந்தது எனினும் மாற்றங்களைக் கொண்டது. நம்மாலும் இவ்வளவு கடின யாத்திரைகள் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை. இன்னமும் உடம்பைக் குறைத்து,கட்டுக்கேப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். இவை யாவும் இந்த யாத்திரையின் பலன். வாழ்வில் மாற்றம் எவையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. நன்றி கோ.வி. அண்ணா.

  ReplyDelete
 34. அருமையாக சொல்லி இருக்குறீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. நன்றி டி.வி.இராதாகிருஷ்னன் அவர்களே.

  ReplyDelete
 36. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது...

  ஒருவேளை உங்கள் காமிரா குரங்குகளை மட்டும் எடுக்காதோ??!

  ReplyDelete
 37. நன்றி தெய்வசுகந்தி, பொறுமையா படியுங்க ,
  நன்றி அறிவன், தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. அதான் எனக்கும் ஆச்சரியமும் வருத்தமும். ஒரு குரங்கு இன்னேரு குரங்கைக் கூட படம் எடுக்கமுடியவில்லைனு யாரும் சொல்லக்கூடாது பாருங்க. நன்றி.

  ReplyDelete
 38. வெள்ளியங்கிரி மலை யாத்திரையைப் பற்றி எங்களுக்காக படங்களுடன் எழுதி இட்டதற்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 39. "ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்தால் சுற்றி இருந்த குரங்குகளைக் காணவில்லை. உங்களின் கண்களுக்குத் தெரிகின்றதா என்று பாருங்கள்"

  கட்டுரை மிகவும் அற்புதம். இதை படிக்கும் போதே ஆனந்தமாக இருக்கிறது.
  குரங்குகள் இல்லாதது ஆச்சரியமாக இல்லை. ஆனால் எல்லோரும்
  ஆச்சரியத்துடன் கேள்வி கேட்பதை பார்த்தால் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக‌
  இருக்கிறது. நாம் இருப்பது இந்திய நாடு. நம் நாட்டின் பெருமைகளை அறியாமல்
  நாம் வாழ்ந்துகொண்டிருப்பது தான் ஆச்சரியம்.இது மாதிரியான நிறையவிஷயங்கள்
  எனக்கும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே இதை நிச்சயம் நம்புகிறேன்.
  நிறைய இது போன்ற கட்டுரைகளை எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

  இனியன் பாலாஜி

  ReplyDelete
 40. ஆனால் இப்ப முழங்கால் அளவு தண்ணீர் கூட இல்லாமல், பாறைகளில் கால் வைத்து தண்ணீயைத் தாண்டலாம் என்றால், நாம் இயற்கையை எவ்வளவு தூரம் மரங்களை வெட்டிக் கெடுத்து வைத்து உள்ளேம் என்பது வெட்ககேடு. குறைந்த பட்சம் வருங்கால சந்ததினருக்காவது நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

  ReplyDelete
 41. அய்யய்யோ.. நான் போட்ட பின்னூட்டம் வேறு..

  ReplyDelete
 42. நேற்று எழுதிய பின்னூட்டம் சரியாக பதிவாக வில்லை என்று நம்புகிறேன். மீண்டும் எழுதுகிறேன்.

  ReplyDelete
 43. நானும் என் நண்பர்களுடன் வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றுள்ளேன்.சாக்குப்பை, கம்பளி, தண்ணீர் பாட்டில்,மப்ளர், போர்வை, கட்டுசாதம், சப்பாத்தி எதுவும் கிடையாது. மலையைப் பற்றி பலர் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கவலையும் கிடையாது. எங்கள் கூட வந்தவர்கள் கொஞ்சம் தண்ணீர், மற்றும் துணிகள் கொண்டு வந்திருந்தார்கள். நானும் என் நண்பனும் எதுவும் கொண்டு செல்லவில்லை.போட்டிருந்த, அரை டிராயர்,பனியன் சகிதம் குளிரைப் பொருட்படுத்தாமல், கையில் கழியுடன் ஏறத்துடன்கினோம்.முதலில் கஷ்டமாக இருந்தாலும் பின்னர் கடகடவென ஏற ஆரம்பித்துவிட்டோம்.கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ, அந்த மலையின் வைப்ரஷன் அசாத்தியமானது. சிவ சிவ என்று சொல்லிக்கொண்டே நடக்கும்போது, அந்த வைப்ரஷன், நம்முள் கலப்பதை உணர்வது சத்தியம்.மொத்தம் பன்னிரெண்டே மணி நேரத்தில் ஏறி இறங்கியும் விட்டோம்.வழியில் கிடைத்த அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிட்டோம். வழுக்குப் பாறை போன்ற அமைப்புகள் சாதாரணமானவர்களை மிகவும் பயமுறுத்தும். ஆனால், மனதில் தைரியத்தோடு நடந்தால், மலை உச்சியில் நின்று நீங்களே மலைப்பீர்கள். நீங்கள் சொன்ன சூரிய உதய அதிசயம் பற்றியெல்லாம் அப்போது எங்களுக்குத் தெரியாது. ஐந்து மணியளவில் அங்கு எட்டியதால், பகலில் நடக்கும் விசேஷ பூஜையைப் பார்த்துவிட்டு செல்லலாம் என்று அருகில் உள்ள பாறைக்கு கிழே,இரவு முழுவதும் பணியில் நனைந்திருந்த புல்தரையில் விரிக்க ஒன்றும் இல்லாமல் அப்படியே படுத்தோம். அந்த பாறை தான் எங்கள் நம்பிக்கை. அதைத் தாண்டி மலை நெட்டுக் குத்தாக இறங்குகிறது. கரணம் தப்பினால் சிவபதவி உறுதி.ஏறிய அசதியில் குளிரைப் பொருட்படுத்தாமல் தூங்கி விட்டோம்..(வேறு வழியில்லாதபோது, கிடைத்ததை வைத்து வாழும் பக்குவம் மனிதனிடம் மட்டுமே இருக்கிறது.) ஒரு மணி நேர தூக்கத்தின் பிறகு, கண்விழித்து எழுந்திரிக்க நினைத்தால் முடியவில்லை. உடம்பின் எந்த பகுதியும் என் மூளையின் கட்டளையை வாங்க மறுத்தன.குளிரின் விரிப்பில், கை கால்கள், மடக்க முடியாமல் நீண்டு கொண்டன. கைகளைத் தூக்கி எழுந்திரிக்க, சில நிமிடங்கள் பிடித்தன. ஆனால் கஷ்டம் இல்லை. இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், மலை உச்சியில் சிவனைப் பார்க்கும்வரை அது சிவன் கோவில் என்றே எனக்குத் தெரியாது. அது முருகன் கோவில் என்றே நினைத்திருந்தேன்.திருவண்ணாமலையின் அதே வைப்ரஷன்.உடம்பின் வலி ஏதும் அப்போது தெரியாது ஏனென்றால் நீங்கள் நிற்கும் இடம் அப்படி. ஏறிய வேகத்திலேயே இறங்கியும் விட்டோம்.கையில் தடியை ஊன்றி, கொப்புளமாகிய கால்களோடு, நான் தேங்கித் தேங்கி நடந்துவந்ததை என் நண்பர்கள் செல் போனில் படம் பிடித்து என்னைக் கேலி செய்துள்ளனர். அவ்வளவு வலி. ஆனால் அப்போது இருந்த அந்த மன உணர்வு, வலியை ஆனந்தமாக்கியது.
  நண்பர்களே... பயப்பட ஒன்றுமே இல்லை.எதுவுமே தெரியாமல் கூட இந்த மலையை ஏறலாம். ஆனால் பக்தி இல்லாமல் ஏறுவது வீண்.பக்தி இல்லையென்றால், உங்கள் மனம் கை கால் வழியில் மும்முரம் செலுத்தும். பின்னர், வலி உங்களைப் பிடுங்கி எடுக்கும்.

  அப்புறம் நீங்கள் படம் எடுக்கும்போது, குரங்குகள் அங்கு இருந்து ஓடியிருக்கவும் வாய்ப்புகள் உண்டு.ஆனால் உண்மையான சித்தர்களின் சக்தி நமக்குத் தெரியாது.நம்ம ஊரில் என்ன நடந்தாலும் தான் நாம் நம்ப மாட்டோமே. சித்தர்கள் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்வதுமில்லை.யாருக்கும் எதையும் விளக்க முற்படுவதுமில்லை. உண்மையான சித்தர்களை நீங்கள் குரங்கு ரூபத்தில் தரிசிதிருந்தீர்கள் என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

  சும்மா தைரியமாக சென்று எம் வெள்ளிங்கிரினாதரை தரிசியுங்கள்...

  நன்றி..

  ReplyDelete
 44. HELLO NEGAL MEGAUM ADIRSTHASALI NAN UNGAL KALAI TOTHU KUMBITRAN

  ReplyDelete
 45. நண்பரே வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தி ஒன்றும் தேவை இல்லை இயற்கையை ரசிக்கும் மனம் இருந்தால் போதும். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நான் இரண்டு முறை ஏறி இருக்கிறேன். எந்த வித துன்பமும் இல்லாமல் வெறும் எட்டு மணி நேரத்தில் தனியாக . .

  ReplyDelete
 46. கடவுளே இல்லைன்னு சொல்றேன்.. நீ குரங்கு இருந்ததுன்னு சொல்றே... பைத்தியமா உனக்கு...

  ReplyDelete
 47. kadavulai sidhar vadivil kandavargal undu, kadavul nambikkai attravarghal eyarkai(that itself is god)adhisayathu endha thunbamum illamal sendruvandhullanar. irandum unmayi. kanavil bootham varum yena mirattuvathu sutha humbuk!!! kama veri kolundhuvittu erindhal udambu soodu kamaagni velippadum. ganam sudar vittu erindhal gana agni ahiya koondaleni velippadum irandum illamal manidanai pirandha oruvan karuthu badhil podalyna boodham varum yena pithatrinal avanum pithaneyii

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.