Monday, January 4, 2010

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 8

நல்ல உறக்கத்தில் இருந்த நான் சிறிது சத்தம் கேட்டு கண் விழித்தேன். அதிகாலை நாலு மணி, அனைவரும் சுவாமி மலை யாத்திரைக்காக கிளம்ப ஆயத்தம் ஆகிக் கொண்டுருந்தனர். என் பக்கத்தில் படுத்திருந்த அண்ணாவைக் காணவில்லை. அவர் பக்கத்தில் இருந்த டீக்கடைக்குச் சென்றுவிட்டார். நான் எழுந்து பல் விளக்கி, டீ குடிக்கச் சென்றேன். வெளியில் நல்ல உறைபனி,ஆனாலும் இரவு அடித்த கூதக் காற்று இல்லாததால், நடுக்கம் இல்லை. டீக்கடையில் அடுப்பின் இதத்தில் பக்கத்தில் உக்காந்து கொண்டுருந்த அண்ணாவின் பக்கத்தில் நானும் ஒண்டிக் கொண்டேன். "நல்லா தூங்கினியா?.இரவு தூங்காதால் தூங்கட்டும்,இன்னும் ஒரு அரைமணியில் எழுப்பலாம்", என்று விட்டு விட்டேன் என்றார். நானும் அவருடன் அங்கு விற்ற தேனீர் அருந்தினேன். சும்மாச் சொல்லக்கூடாது பால் இல்லாமல் வெறும் தெள்ளிய டீ வடினீர்,அதில் சுக்கு கலர்ந்த கறும்புச் சக்கரை(நாட்டுச்சக்கரை)யும், ஒரு அலாதியான சுவையைத் தந்ததன. கொதிக்க கொதிக்க தந்த டீ குளிருக்கு இதமாக இருந்தாலும், பாதிக் குடிப்பதற்க்கு உள்ளாக சூடு ஆறிப் போனது. டீக்கடையில் அந்த அதிகாலையிலும் அன்று வரும் பக்தர்களுக்காக சூடாக முறுக்கு போட்டுக் கொண்டு இருந்தார். வெறும் அரிசி மாவு, மிளகு, உப்பு, கொஞ்சம் மிளகாய்ப் பொடி ஆகியவற்றைக் கொண்ட சிவப்புக் கலர் முறுக்கு வாசனை என்னைத் தூண்டியது. என் வயிற்றைக் கருதியும், நேரங் கெட்ட நேரத்தில் சாப்பிட்டால் அண்ணா திட்டுவாரென்னும் பயத்திலும் சாப்பிடவில்லை. பின்னும் உயரமான செங்குத்தான சுவாமி மலை அடுத்து ஏறவேண்டும் என்பதால் அந்த ஆசையைக் கை விட்டேன்.

டீ குடித்து முடித்து, என் அண்ணா வா ஆண்டீ சுனையில் குளிக்கலாம் என்றார். நான் இரவு அனுபவத்தால் கொஞ்சம் யோசித்தேன். அண்ணா "பயப்படாமல் தைரியமாக் குளி. ஒன்னும் ஆகாது. சுனைத் தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது, மற்றும் குளித்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாகி விடும்" என்றார். முதலில் குளிக்க போது கொஞ்சம் குளிரும், பின்னர் சரியாகி விடும் என்றும் சொன்னார். நானும் இந்த ஆண்டி சுனையில் குளிக்கப் போனேன். ஆண்டி சுனை என்பது காட்டுக்குள் இருந்து ஓடிவரும் காட்டாறு. இது மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளமாகவும், நாங்கள் போகும் காலங்களில் சிறு வாய்க்கால் போல விளங்கும். இதில் இந்த இடத்தில் அதனுடன் பாறைகளுக்கு அடியிலும் நீர் சுரக்கும். மிகவும் குளிர்ந்த நீர். தண்ணீர் அதிகம் ஓட்டம் இல்லாமல் தடுத்து நிறுத்தி இருப்பதால், மிகவும் குளிர்ந்து, அப்பத்தான் பிரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த தண்ணீர் போல இருக்கும். அதில் இறங்கும் முன்னர் நாம் கொஞ்சம் தண்ணீரைக் கை,கால்களில் நனைத்துக் கொண்டால், உடல் சமனிலை அடைந்தவுடன் குளிக்கலாம். அது இல்லாமல் எடுத்தவுடன் தண்ணீரில் முங்கினால், சில சமயம் விறைத்துக் கூடப்போகலாம். அதிக ஆழம் இல்லாமல் முழங்கால் வரை தேங்கிய தண்ணீர் இருக்கும். குளிப்பவர்கள் இந்த தேங்கிய தண்ணீரிலும், குடிக்க தண்ணீர் எடுப்பவர்கள் இதுக்கு மேல் பக்கத்தில் பாறைக்கு அடியில் சுனையிலும், கை கால் கழுபவர்கள் தண்ணீர் தேங்கி வடியும்(பின்புறம்) இடத்தையும் பயன்படுத்துவார்கள். நல்ல அற்புதமான தண்ணீர், ஆனால் இதன் ஓரங்களில் நிற்கும் போதும்,சுனையில் தண்ணீர் பிடிக்கும் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சுனையில் அட்டைப் பூச்சிகள் அதிகம். கடித்தால் தெரியாது. ஆனால் காயம் ஆறுவது மிகவும் சிரமம்.என் தந்தை செல்லும் காலத்தில் இந்த சுனையில் தண்ணீர் அதிகம் இருக்குமாம். ஆண்டி சுனையைக் கடக்க இரண்டு பனை மரங்களைக் குறுக்காக வெட்டிப் பாலம் போல வைத்து இருப்பார்களாம்,அதில் மிக ஜாக்கிரதையாக நடந்து போகனுமாம். தவறி விழுந்து காட்டாற்றில் அடித்து போனவர்கள் அதிகம். என் தந்தையின் கண் முன்பாக ஒருவர் விழுந்து, காப்பாற்ற நினைப்பதற்க்குள் அடித்துக் கொண்டு போனாராம். ஆனால் இப்ப முழங்கால் அளவு தண்ணீர் கூட இல்லாமல், பாறைகளில் கால் வைத்து தண்ணீயைத் தாண்டலாம் என்றால், நாம் இயற்கையை எவ்வளவு தூரம் மரங்களை வெட்டிக் கெடுத்து வைத்து உள்ளேம் என்பது வெட்ககேடு. குறைந்த பட்சம் வருங்கால சந்ததினருக்காவது நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் படத்தில் நான் குளிக்கும் போது உள்ள மேகக்கூட்டங்களை வைத்து குளிரை அறியலாம்.( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)

நான் இந்த ஆண்டி சுனையில் குளித்து, சுவாமியை வணங்கிப் பின்னர், யாத்திரையின் இறுதிப் பகுதியான சுவாமி மலை நோக்கி நடக்க ஆரம்பித்தேம். இந்த சுவாமி மலை மிக உயரமான, ஒரு புறம் சரிவாகவும், மறுபுறம் மிக ஆழமான பள்ளத்தாக்கும், அடர்ந்த காடும் உடையது. இது செல்லும் வழியில் தான் ஒட்டன் சமாதி என்று ஒருவர் சமாதி உள்ளது. இங்கு ஒட்டன் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு சாமியார் வசித்ததாகவும், அவர் இறந்தவுடன் அங்கு சமாதி வந்ததாகவும் கூறுகின்றனர். அனால் அங்கு வசிக்க இயலாத சூழ்னிலை, ஆதலால், அவர் ஒரு சாமியார் ஆக இருந்து இருக்கலாம், மலையாத்திரை வந்த இடத்தில் முதுமை காரணமாக இறந்தும் இருக்கலாம். அந்தக் காலத்தில் உடலைக் கொண்டு செல்ல வசதி இல்லாததால், அங்கு புதைத்து, அதில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி இருக்கலாம் என்று நினைக்கின்றேன். நாங்கள் புதுத்துண்டு சார்த்தி, கற்பூரம் ஏற்றி வழிபட்டேம். பின்னர் அங்கு அமர்ந்து சிறிது இளைப்பாறி விட்டுப் புறப்பட்டேம். ஒரு வருடம் இங்கு இரவுப் பயணத்தின் போது, நாங்கள் இது போல இளைப்பாறிக் கொண்டு இருந்தோம். அப்போது கோவை நகரில் பவர் கட் ஆகி இருளில் இருந்ததது. திடிரென்று கரண்ட் வர விளக்குகள் மள மளவென எரியத் தொடங்கியது. முதலில் என் அண்ணா கவனித்து சொல்ல, நாங்கள் பார்த்த வினாடியில் மொத்த விளக்குகளும் எரிய ஆரம்பித்து விட்டன. ஒரு சில விநாடிகள்தான் இது நடந்தது என்றாலும், இது ஒரு அற்புதமான காட்சி. இங்கு இருந்துதான் நகரின் இரவுப் படம் எடுக்கப் பட்டது.

இந்தப் பாதையில் செல்லும் வழியில் ஜந்து உருண்டைப் பாறைகள் இருக்கும், ஒரு பாறை மிகவும் பெரிய உருண்டையாகவும், இன்னெருப் பாறை அதை வீடச் சின்னதாக ஒழுங்கற்றும் இருக்கும். இதில் பெரிய பாறை பீமன் களியுருண்டை எனவும், சிறிய பாறை அச்சுனன் களியுருண்டை எனவும் அழைக்கப் படுகின்றது. இது அவர்கள் வன வாசத்தின் போது அவர்களின் உணவு என்றும், அது பாறையாக மாறிவிட்டது எனவும் கூறுகின்றார்கள். இது ஒரு வழமைக் கதை என்றுதான் கொள்ள வேண்டும்.ஜந்து உருண்டைகள்தான் இருக்கு, ஒருவேளை திரெளபதி டயட்டில் இருப்பார்கள் போல, அதுனால அவங்களுக்கு இல்லை.ஆனாலும் பீமனின் சாப்பாடு ரொம்ப அதிகம். நமக்கு ஒரு வருசம் வரும் போல இருக்கு. நாங்கள் சென்றபோது மழை இல்லை என்றாலும் அதற்கு முன்னர் ஒருவாரம் விடாமல் மழை பெய்து இருந்ததால் அங்கு பாதை முழுதும் சத சத என வழுக்கலாக இருந்தது. நாங்கள் பாதையை வீட பக்கத்தில் இருந்த புற்களின் மீதுதான் நடந்தேம். தடியை நன்று ஊன்றிக் கவனமாக நடக்க வேண்டி இருந்ததால் மிகவும் மெதுவாகவும், பொறுமையாகவும் ஏறினோம். ஈரமான பாதையில் கொஞ்சம் வழுக்கி விழுந்து உருண்டால் நாம் எங்கு போய் சேருவேம் என படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனாலும் நாங்கள் ஆறு மணிக்கு எல்லாம் சுவாமி மலை உச்சிக்குச் சென்று விட்டேம்.இந்த சுவாமி மலை மிக செங்குத்தாக இருக்கும். ஒரு புறம் ஏறும் வழி சரிவாகவும், மறுபுறம் மிக ஆபாயமான பள்ளத்தாக்கு ஆக, கீழே அடர்ந்த காடு இருக்கும். கூட்டம் அதிகமான காலங்களில் இங்கு பலர் கூட்ட நெரிசிலில் சிக்கி விழுந்து இறந்து உள்ளனர். ஆனால் இப்போது பக்கதர்கள் கொண்டு வரும் வேலில் ஒரு பாதுகாப்பு தடுப்பு அரண் ஒன்றை அமைத்துள்ளனர். ஆதலால் இதில் விழுந்து இறக்கும் ஆபாயம் இல்லை. இந்த உச்சியில் இரு மிகவும் பெரிய பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி சரியாமல் கோபுரம் போல இருக்கும். இதன் அடியில் இடைவெளி இருக்கும். இதை சிலாதோரணம் எனவும், தோரணவாயில் எனவும் அழைப்பார்கள்.மலையைச் சுற்றி ஏறுவபர்கள் இந்த தோரணவாயில் உட்புறமாக நுழைவார்கள். இங்கு செயற்கையாக செய்யப் பட்ட லிங்கங்கள் கோவில் போல வைத்து வணங்குவார்கள். இதில் ஒரு பெரிய பாறையின் அடிப்பகுதியில் தான் ஒரு குகை உள்ளது. இந்த குகையில் ஒரு மொட்டுப் பாறை போன்ற லிங்கத்தின் மேற்ப்பகுதிதான் வெள்ளியங்கிரிஸ்வரர் என அகத்திய மாமுனிவரால் வணங்கப் பட்ட சிவலிங்கம் உள்ளது. இங்கும் செயற்கை லிங்கம் ஒன்றும் பிரஸ்திஸ்டை செய்யப் பட்டுள்ளது. நாம் நாளைய பதிவில் இந்த ஈசனின் திருவுருவும், அங்கு நடக்கும் ஒரு அதியசமும் காணலாம். நாளைய பதிவை அனைவரும் தவறாமல் (படிக்க) காணவும். நன்றி.

19 comments:

 1. very interesting!! I've to wait two more days:(

  ReplyDelete
 2. புத்தாண்டு வாழ்த்துக்களுடன், உங்களின் பயண அனுபவம் மிகச் சிறப்பாக இருக்கிறது போலும் அனுபவித்து எழுதுகிறீர்கள்.

  ReplyDelete
 3. பெரியவர் ஒருவர் கோவணம் துவைச்சு பிழிகிறாரே அந்த இடம் ஆறா அல்லது குட்டையா ?

  ReplyDelete
 4. அதுதான் ஆண்டி சுனை என்னும் காட்டாற்றின் சுனைப் பகுதி. இது காட்டுக்குள் இருந்து வரும் தண்ணீர் மற்றும் பாறையின் அடியில் ஊறும் நீர் இரண்டின் கலவை. நன்றி கோ வி ஆர்.

  ReplyDelete
 5. மிகவும் அழகான ஆன்மிக பயண கட்டுரை.

  ReplyDelete
 6. உங்க பயணக் கட்டுரை இவ்வளவு நீண்டதாயும் வாசிக்க சந்தோஷமாவும் இருக்கு.அதான் உங்களுக்கு காய்ச்சல் வந்திருக்கு.

  ReplyDelete
 7. பயணக் கட்டுரை நல்லா இருக்கு ஆனால் பாகம் 6 and 7 இரண்டும் ஒன்றாக இருக்கு போல .

  ReplyDelete
 8. // நீங்க இருக்கும் போது பனி புயல் வேறயா?:) //
  அதான இதை நான் யோசிக்கவேயில்லை. ஹா ஹா. நன்றி சாருஸ்ரீராஜ்.
  பாகம் 6 அந்த இடத்தின் அழகை விளக்குவது, பாகம் 7 அந்த இடத்தின் ஆபத்தையும், நான் பட்ட அவஸ்த்தையும் விளக்குவது. நன்றி.

  நன்றி சுவையான சுவை,தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  நன்றி கேசவன், தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  நன்றி கோவி அண்ணா,
  நன்றி வித்தியா,
  நன்றி பைஸியாகாதர்,
  நன்றி ஹேமா, காய்ச்சல் வரவில்லை, குளிரும், நடுக்கம் மட்டும்தான்.
  அனைவருக்கும் எனது நன்றிகளுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. //ஆனால் இப்ப முழங்கால் அளவு தண்ணீர் கூட இல்லாமல், பாறைகளில் கால் வைத்து தண்ணீயைத் தாண்டலாம் என்றால், நாம் இயற்கையை எவ்வளவு தூரம் மரங்களை வெட்டிக் கெடுத்து வைத்து உள்ளேம் என்பது வெட்ககேடு.//

  நிதர்சனமான உண்மை தான் பித்தன் அவர்களே ...

  ReplyDelete
 10. //( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)//

  அதுக்கு அவ்வளவு தைரியம் இருக்க என்ன ......

  ReplyDelete
 11. அருமை
  நல்ல பதிவு
  வாழ்த்துகள்

  ReplyDelete
 12. நான் பயத்துல உத்து பாக்களை அண்ணா..
  அருமையான பயணம். தொடருங்க..

  ReplyDelete
 13. நன்றி மகா, ஆமா நானே பேய் மாதிரிதான்.
  நன்றி தியாவின் பேனா,
  நன்றி சுசி, என்ன பயம் பேயா, என் படமா, இரண்டில் எதைப் பார்த்தாலும் மந்திரிக்க வேண்டும்.

  ReplyDelete
 14. //.( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)//

  இல்லையே??? என் கண்களுக்குப் பிள்ளையார்தான் துதிக்கையுடனும், நான்கு கைகளுடனும் தெரிகிறார், திரும்பத் திரும்பப் பார்த்துட்டேன். அவர்தான் உங்களை பத்திரமாய்க் கூட்டிப் போயிட்டுத் திரும்பக் கூட்டி வந்திருக்கிறார்.

  ReplyDelete
 15. .( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)//

  எனக்குப் பிள்ளையார் தான் துதிக்கையுடனும், நான்குகைகளுடனும்தெரிந்தார். யாருக்கு என்ன தோணுதோ அப்படித் தெரியும் போல! பிள்ளையார்தான் உங்களை பத்திரமாய்க் கூட்டிப் போய்த் திருமபக் கூடி வந்திருக்கார்.

  ReplyDelete
 16. என்னமோ தெரியலை, கமெண்டே போகலை!:(

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.