Saturday, November 27, 2010
முற்றாக் காமம் !!
கண்ணாளா !!
நின்மேல் முற்றாக் காமத்தில்
முன்னிரவில் நிலை கொள்ளா
தவிப்பில் வாயில் சலம் ஒழுக
வாடிக் கிடந்தேன்.
கண்ணாளா !!
அங்கம் கொதிக்க மோன நிலையில்
விழிபிதுங்க நின்னை எதிர்பாத்து
கண்கள் சொருக முழு இரவும்
நிலை கொள்ளாமற்க் காத்துக் கிடந்தேன்.
கண்ணாளா !!
கொதிக்கும் உடம்பில
மார்கழி குளிரும் தெரியா
வண்ணம் ஆடையது குழயக்
உள்ளம் கல்லாக
அதிகாலைக் கிடந்தேன்
கண்ணாளா !!
என் சித்தம் குளிர
கட்டியணைத்து சத்தத்தில்
கலவி புரிந்து உச்சத்தின்
மோன நிலையில் நித்தமும் இட்டு
கிடத்த வாராயோ!.
கண்ணாளா !!
கட்டியது கட்டியபடி கிடக்க
பிடித்த பிடி பிடிமாறாமல் இருக்க
என்னை விட்டு அகலா இருந்து
பாம்பாக பின்னியிருந்து
உச்சத்தின் உச்சத்தில்
முற்றாக் காமத்தில் ஆழ்த்தாயோ!.
கண்ணாளா !!
நின் அமுதம் வாயமுதம் உண்டு
மாங்காய் பாலும், தேங்காய் பாலும்
புளித்ததடா! தெவிட்டாத என்
பாலில் என்னை களிப்பாயோ!,
கண்ணாளா !!
என்னை விட்டு அகலா
நித்திய மோகத்தில் ஆழ்த்தி
முற்றா என் காமத்தை
கரையேற்ற வாராயோ!.
டிஸ்கி : சும்மா எப்ப பார்த்தாலும் இந்த ஹேமுவும், தமிழரசியும் காதலும் சோகமும் கலர்ந்து கவிதை எழுதி டார்ச்சர் தர்ராங்க.
நம்மளும் எத்தனை நாளைக்கித்தான் பொறுத்துக் கொள்வது, வடிவேலு ஸ்டைலில் நாங்களும் கவுஜ எழுதுவேம், எங்களுக்கும் எழுத தெரியும்ன்னு கூவி
எல்லாரும் நல்லா பார்த்துக்குங்கே நானும் ஒரு கவுஜ போட்டிருக்க்கேன்.
எல்லாரும் காதல், நட்பு, சோகம் என்று தொடுவார்கள், ஆனால் காமத்தைத் தொட்டால் இமேஜ் குறித்து பயப்படுவார்கள், ஆனால் நாந்தான் வித்தியாசமான பைத்தியம் ஆயிற்றே, கொஞ்சம் அதிகமாக காமத்தைத் தொட்டுள்ளேன். படித்து விட்டு புரிந்ததால் விளக்கவும், கோபப்பட்டால் திட்டவும், அடிக்கவும், ஏன் காறித்துப்பக் கூட உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் உங்களின் கருத்தை மட்டும் சொல்லாமல் போகாதீர்கள்.
சொல்ல விருப்பம் இல்லாவிட்டல் வந்ததுக்கு அடையாளமாக ஸ்மைலி போடவும், கோபம் என்றால் திட்டுவதின் அடையாளமாக -- போடவும்.
இந்தக் கவுஜையின் விரிவு அடுத்த வாரம் அடுத்த பதிவில்.
அய்யா சிங்கக்குட்டி அவர்களே நான் எத்தனை வருடம் மலைக்குப் போனாலும் கன்னிச்சாமிதாங்க. குருசாமி அளவுக்கு பக்குவம் இல்லை.உங்களின் வாழ்த்துக்கு நன்றி.
சென்ற பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி, கோபமோ அல்லது வருத்தமோ இல்லை பாராட்டோ! எனக்கு வேண்டியது உங்களின் பின்னூட்டங்கள் தான்.
பின்னூட்டங்கள் மூலம் உங்கள் கருத்துக்கள்தான் என்னை செதுக்கும் உளி.
நன்றி நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
காதலைப் பற்றி மட்டுமா கவிதை வரும்.இப்படியும் எழுதலாம் தப்பே இல்லை சுதாகர்.....என்ன சாமிதான் கோவிச்சுக்கும்.
ReplyDeleteநானும் ஒண்ணு எழுதிட்டு பயத்திலேயே பதிவிடாம வச்சிருக்கேன்.முந்தி ஒரு கவிதைக்கு "இப்பிடி எழுதி உங்க இமேஜைக் குறைச்சுக்காதீங்க"ன்னு சொல்லியிருக்காங்க.அளவோட எழுதினா தப்பில்லங்கிறது என் கருத்து.
கவிதை நல்லாயிருக்கு.ஆனா என்னையும்,
தமிழையும் சண்டைக்கு இழுக்காம கவிதை வந்திருக்கலாம் !
\\ கவிதை நல்லாயிருக்கு.ஆனா என்னையும்,
ReplyDeleteதமிழையும் சண்டைக்கு இழுக்காம கவிதை வந்திருக்கலாம் ! //
அட இது சண்டை இல்லைமா, இது வஞ்ச புகழ்ச்சி அணி. உங்கள் இருவரின் கவிதைகளும் படிப்பவர் மனதை ஆக்கரமிக்கின்றன என்பதைதான் அப்படி சொல்கின்றேன்.
உங்களின் இருவரின் கவிதைகளையும் நான் தவறாமல் படிக்கின்றேன். உங்களின் கவிதைகளைப் படிக்கும் போதே மனதுக்குள் அட் இப்படி ஒர் கவிதை இது மாதிரி மாத்தி எழுதலாம் என்று தோன்றும், அப்புறம் அதை விட்டு விடுவேன். இதைத்தான் நான் மறைமுகமாக சொல்லியிருக்க்கேன். கருத்துக்கு நன்றி ஹேமா.
தமிழ் தங்கையிடமும், உன்னிடம் எப்படி சண்டை இழுப்பது, அப்புறம் அடி வாங்குவது யாரு?
அண்ணன் இன்னும் மாலை போடலியா? கவுஜ தூள் பறக்குதே!
ReplyDelete:)))))
ReplyDeleteஅதுசரி இந்த கடை மீண்டும் எப்போ திறந்தீங்க சொல்லவேயில்லை.
ReplyDeleteசொல்லியிருந்தா ரெண்டு கொழுக்கட்டையாவது கொண்டுவந்திருப்பேன் ..
அதுகிடக்கு நீங்கநலமா வீட்டில் அனைவரும் நலமா?
இனி
அடிச்சு துப்புங்க அச்சோ தூள்கிளப்புங்க..
எங்கே காணோம் என் கருத்தை காக்கா துக்கிச்சா
ReplyDeleteவார்த்தை அலங்காரம் கவிதையில் அசத்தல் . அருமை . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ஹேமு,
ReplyDeleteநன்றி சித்ரா, மாலை போட்டாச்சு,
நன்றி வெங்கட் நாகராஜ்.
வாங்க மலிக்கா, நம்ம கடை திறந்து ரெண்டு வாரம் ஆச்சு, அய்யே அந்த காக்கா எடுத்த கொழுக்கட்டையா? பயமுறுத்தாதிங்க.
இங்கு நைவரும் இறையருளால் நலம். அங்கு நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
வாங்க பனித்துளி சார், இது அலங்ககார வார்த்தைகள் அல்ல உண்மையான வார்த்தைகள், இது என் விளக்கங்களை விளக்கப்படும்.
எல்லாருக்கும் நன்றி. உண்மையில் இது காமத்திற்க்கான கவிதை இல்லை, காமத்தையும் தாண்டி போரின்ப நிலைக்கான கவிதை.
கண்ணாளா -- கண்ணா என் ஆள்பவனே என்று கண்ணனை காதலனாக கொண்டு , குண்டலினி யோகம் என்னும் தவத்தில் இருப்பவனின் நிலையைத்தான் நான் கவிதையாக வடித்துள்ளேன். குண்டலினி யோகத்தை கடைப்பிடிக்கும் ஒருவனின் கடைசி மூன்று நிலைகளைத்தான் இந்த கவிதையில் சொல்லி இருக்கின்றேன்.
முற்றாக் காமத்துக்கு அருமையான விளக்கம் . நன்று.
ReplyDeleteஅடுக்குமா... இது...!
ReplyDeleteமாலப் போட்ட சாமி எழுதுற கவிதயா இது...!
பார்த்து சாமி...!
சாரி... சாமி...!
ReplyDeleteயோகம்... தியானம்... குண்டலினி... அப்படீன்னு டீப்பா சிந்திக்க நான் ஒன்றும் சித்தனில்லை.... யோகியுமில்ல... சாமியுமில்லை!
ஓர் சராசரிதன்... அதாவது.. சராசரி மனிதன்...!
காலைல எழுந்தோமா... நம்புற சாமிய சில நிமிடம் கும்டோமா.... வேலைக்கு போனோமா... உழைச்சோமா... நேரமிருந்தால் பொண்டாட்டி..புள்ளகுட்டியோட வெளிய போய்வந்தோமா... சாப்டோமா... திருப்பி தூங்கினோமா...! குடும்பம்தான் கோயில்... அவங்களா சந்தோசமா வைத்திருந்தாலே போதும்... அதுவே கடவுள்... இறைவன்... அதுவே பேரருள்... கீதையில் சொன்னமாதிரி "கடமையை ஒழுங்காய் செய்தலே" பரமாத்மா.... அப்படீன்னு நினைக்கிற சாதாரண மனிதன்...
இதுதான் நமக்கு தெரிந்த "பரப்பிரம்மம், பரமாத்மா..."
இந்த குண்டலி சக்தி மாதிரி... கண்ணுக்குதெரியாத சக்திய நான் அறிந்ததும் இல்ல... அறிய விரும்பியதும் இல்ல... அதுங்ககிட்ட நான் போனதே இல்ல...!
சாரி பிரதர்...!
நீங்க பதிவுல எழுதுனத படிச்சு புரிஞ்சுக்கற அளவுக்கு... நமக்கு நாலேட்ஜ் கடையாது பிரதர்...!
ஒரு சராசரி மனிதனின் இயல்பான நடைமுறை வாழ்க்கையை, அதன் உள் அர்த்தத்தை மிக அழககாக சொல்லிவிட்டீர்கள், என்ன நான் எல்லாம் கொஞ்சம் முத்துன கேஸ். அவ்வளவுதான். (நான் வயசை சொன்னேன்)
ReplyDeleteநன்றி காஞ்சி முரளி அய்யா,
நன்றி சிவகுமாரன்.
என் மனம் கவர்ந்த கவிதை வரிகளுக்கு வாழ்த்துக்கள் ...........
ReplyDelete