Wednesday, November 3, 2010

ஹார்டுவேர் ஆறுமுகம்
ஓல்டு மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு கால் செண்டரில் ஹார்டுவேர் எஞ்சினியருக்கான ஒரு இண்டர்வியு நடக்குது அதுல்ல நம்ம ஆளு பூவை ஆறுமுகத்திடம் கேட்ட கேள்விகளும் பதிலும்தான் இந்த பதிவு. இது சிரிக்க மட்டும்தான், சிந்திக்க அல்ல.

பாஸ்: வெல்கம், பிளிஸ் பி சீட்டட்.

ஆறுமுகம்: இல்லிங்க சார், பரவாயில்லை, என்று தயங்கி நிற்க.

பாஸ்: நோ பிராபளம்,சிட் டவுன்,

ஆறுமுகம் தயங்கிய படி சீட்டின் நுனியில் அமர்கின்றார்.

பாஸ்: உங்களுக்கு கம்புயுட்டர் பத்தி தெரியுமா?

ஆறுமுகம்: ஒரளவுக்கு தெரியும் சார்,

பாஸ்: ஓகே, நோ பிராபளம், இந்த வார்ம் 32 வைரஸ் பத்தி சொல்லுங்க, எனி சொலுன்சன்ஸ் பார் இட்?

ஆறுமுகம்: அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க, நம்ம மாட்டாஸ்ப்பத்திரி டாக்டர் கிட்ட போனா பெரிய ஊசிய்யா போடுவாரு,

பாஸ்: வாட்? வாட் டு உ மீன்?

ஆறுமுகம்(பயந்து போய்): சார், இஞ்சக்ஸ்சன், பிக் அண்ட் குட் பார் இட்

பாஸ்: அப்படி ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர், ஜ நாட் ஹியர்டு, ஓகே. டு யு நோ அபௌட் புராசஸ் அண்ட் சிப்ஸ்.

ஆறுமுகம்: எனக்கு சிப்ஸ் திங்க தெரியும் ஆனா புராசஸ் எல்லாம் தெரியாது.

பாஸ்: யூ சில்லி, ஓகே, பண்டமெண்டல் நாலேஜ் இருக்கான்னு பார்க்கலாம். வாட் டு யூ டு ஃபார் பிரேக் தி பயர் வால்?

ஆறுமுகம்: பூ இது என்ன பிரமாதம், ஒரு பக்கெட் தண்ணிய ஊத்தினா சுளுவா பிரேக் பண்ணீரலாம்.

பாஸ்: (அதிர்ச்சியாய்) வாட்ட்ட்?

ஆறுமுகம்: கொஞ்சம் பயந்து, அவருக்கு புரியவில்லை என்று நினைத்து, சார் இட் மீன் வாட்டர் புல்லிங்க் ஆன் ப்யர்.
ஆறுமுகம் பயத்துடன் சொன்னது அவருக்கு வார்த்தர் புல்லிங்க என்று கேட்க.

பாஸ்: வார்த்தர் புல்லிங், இட்ஸ் நியூ கான்செப்ட், பட் ஜ யாம் நாட் ஹீயர்டு.ஓகே டு யு நோ அபௌட் ராம், ஹை மெமரிக்கு ஹௌ மெனி சிலாட்ஸ் யூ நீட்? இரண்டா இல்லை மூணா?

ஆறுமுகம்: இந்த இராம் சொன்னாலே, பிரச்சனைதான் சார், ரெண்டா போடு, மூணா போடுன்னு கலாட்டா பண்ணுவாங்க, பேசாம லஷ்மண்னு எதுன்னா புதுசா போடலாம், அதுல்லாதான் பிரச்சனை வராது.

பாஸ்: வாட்? லஷ்மண் சிலாட்டா? ஒகே யு லுக்கிங் இன்னவேட்டிவ், பட் யுவர் நொலொட்ஜ் இஸ் வெரி புவர்.வாட் அபௌட் டிரபுள் சூட்டிங்க.

(கொஞ்சம் பயத்துத்துடன் இருக்கும் ஆறுமுகத்துக்கு அது டபுள் சூட்டிங்க் என்று கேக்கிறது. உடனே சுறுப்பாய் பதில் சொல்றார்.)

ஆறுமுகம்: டபுள் சூட்டிங்க என்னா சார், நம்ம விஜய்ய விட்டா டிரிபிள் சூட்டிங் ஃபைவ் சூட்டிங்க் எல்லா பண்ணுவார், குருவி படத்துல்ல ஆறு குண்டு இருக்க பிஸ்டலை வைச்சு, பதினைந்து பேரை சுடுவார். அதுலையும் நம்ம சூப்பர் ஸடார் இருக்காரே, அவரு ஆள்காட்டி விரல்லையே நூறு பேரை சுட்டுப் போடுவார்.

பாஸ்: வாட் நான்சென்ஸ், கொஞ்சம் கூட அடிப்படை நாலேஜ் கூட இல்லையே, நான் கம்பூட்டர் பத்திக் கேட்டா நீங்க சினிமா பத்திப் பேசறீங்க, ஹௌ யூ கேம் ஃபார் திஸ் இண்டெர்வியு,

ஆறுமுகம் : (பயந்து போய்) என்னது இண்டெர்வியு வா?

பாஸ்: (கோபாமாய்)வாட் யூ ஆஸ்கிங்க, தென் வை சுட் யூ கம் ஹியர்?.இங்க எதுக்கு வந்தாய்?

ஆறுமுகம்: சார் நான் பூக்கார ஆறுமுகம், அதுன்னாலாதான் என்னை எல்லாரும் பூவை ஆறுமுகம்ன்னு கூப்பிடுவாங்க. இங்க இரண்டு மாசமா பூ கொடுத்த காசு வாங்க வந்தேன், முன்னால இருக்கற செவத்த பொம்பளதான் காரிடாரில் இருக்கும் இந்த ரூமுக்குள்ள போகச் சொன்னாங்க.

பாஸ்: ஓ சிட், சாரி ஜெண்டில்மேன் அது பக்கத்துல்ல இருக்க அக்கவுண்ட்ஸ் ரூம். அங்க போங்க.

ஆறுமுகம்: இதை மொதல்லையே சொல்லியிருந்தா எப்பவே காசு வாங்கிட்டு போயிருப்பேன், பொழப்பு கொட்டுப் போச்சு.
(என்றபடி மனதுக்குள்ள சொன்னான், ஜீன்ஸ் போண்ட்டும், டீசர்ட்டும் போட்டுக்கிட்டு சாப்ட்வேர் கம்பெனிக்குள்ள போனா பிகர் படியும் சொன்னதை கேட்டு இத்த மாட்டிக்கிட்டு வந்தது தப்பாப் போச்சு, ஜடிய்யா கொடுத்த சுதாகரு மட்டும் இப்ப கையில்ல மாட்டுன்னான்னு வையி, மகனே துவைச்சு எடுக்க மாட்டேன் என்று புலம்பியபடி வர்றாறு.)

ஆறுமுகம் வெளியில் போனதும், பாஸ் மனதுக்குள் சொல்லிக் கொண்டார், இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேன்னு தெரியல்லை, காலங்கார்த்தால இப்படியா என்று தலையில் அடித்துக் கொண்டார். ( இந்த பதிவை படித்து விட்டு நீங்கள் அடித்துக் கொள்வதைப் போல)

டிஸ்கி:அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள், எல்லாரும் நல்லா கொண்டாடி மகிழ வாழ்த்துகின்றேன். அடுத்த தடவை பதிவு படிக்க வரும் போது கண்டிப்பா ஸ்வீட் கொண்டு வரவேண்டும், இல்லைன்னா இது மாதிரி இன்னேரு பதிவு போட்டுருவேன். ஞாபகம் வைச்சுக்கேங்க.
அனைவருக்கும் எனது உள்ளங் கனிந்த தீபத் திருனாள் வாழ்த்துக்கள்.

முஸ்கி : அல்லாருக்கும் ஒரு முக்கிய ஆறிவிப்பு: தீபாவளித் திருனாள் ஸ்பெசல்லா நம்ம பதிவர்கள் எல்லாரும் அவங்க வூட்டுக்கு கூப்பிட்டு உள்ளார்கள், அட பண்டிக்கைக்கு இல்லிங்க, அவங்க வீட்டில் பலகாரம் பண்ண உதவ சொல்லி இருக்காங்க, நம்ம பதிவர்கள் வீட்டு சமையல் அறை போல ஒரு பதிவர்கள் வீட்டு பலகாரப் பதிவு அடுத்த வாரத்தில் வரும் என்று, தீவாளி போனாஸா சொல்லிக்கிறேன்.

17 comments:

 1. சுதாண்ணா எப்படி இருக்கிங்க?? இப்போ தான் உங்க முந்தைய பதிவு படித்தேன்,கஷ்டமா இருந்தது..மறுபடியும் வேலை கிடைத்ததில் சந்தோஷம்...இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும்,உங்க குடும்பத்தாருக்கும்...

  ReplyDelete
 2. நல்லா இருக்கேன் மேனகா. குட்டிப் பொண்ணு எப்படி இருக்கா?

  ReplyDelete
 3. வாங்க பிரபாகர். இரவு நேரமாகிவிட்டபடியால் தலைப்பு போட மறந்து விட்டேன். சிஸ்டம் ஆப் செய்த பின்னர்தான் ஞாபகம் வந்தது. இப்ப போட்டு விட்டேன். தங்களின் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 4. அண்ணாச்சி எப்படி இருக்கீங்க, இப்பதான் உங்க முன்னைய பதிவையும் படிச்சேன்...ஏ கவலபடாதீக எல்லாம் நல்லதுக்கே ...எல்லா புகழும் இறைவனுக்கே...!

  ஏ...நீங்க ஊருக்கு போனது தெரியாம நான் அங்க வந்தபோது உங்களை பத்தி பார்க்க வேண்டும் என்று நம்ம கிரி கிட்ட கூட சொல்லிக்கிட்டு இருந்தேன்-லா :-)

  இப்போ என்னா, சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா?அங்க வரும் போது பார்ப்போம், மத்த படி இந்த முறை எங்க போனீக? படத்த போட்டு எழுதுனா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்-லா.

  அது எல்லாம் சரி ஹார்டுவேர் இண்டர்வியுக்கு குத்து விளக்கு ஏற்றும் அம்மணி யாரு?

  நன்றி!.

  ReplyDelete
 5. ஜீன்ஸ் போண்ட்டும், டீசர்ட்டும் போட்டுக்கிட்டு சாப்ட்வேர் கம்பெனிக்குள்ள போனா பிகர் படியும் சொன்னதை கேட்டு இத்த மாட்டிக்கிட்டு வந்தது தப்பாப் போச்சு, ஜடிய்யா கொடுத்த சுதாகரு மட்டும் இப்ப கையில்ல மாட்டுன்னான்னு வையி,
  //

  இது எப்ப இருந்து நைனா?.. ஹி.ஹி

  ReplyDelete
 6. நம்ம பதிவர்கள் வீட்டு சமையல் அறை போல ஒரு பதிவர்கள் வீட்டு பலகாரப் பதிவு அடுத்த வாரத்தில் வரும் என்று, தீவாளி போனாஸா சொல்லிக்கிறேன்.

  ..... அண்ணா, நீங்க சில மாதங்கள் முன்னால் இதே மாதிரி ஒரு பதிவை போட்டு என்னை கலாய்த்தது ஞாபகம் வருது.... இந்த முறை, மி த எஸ்கேப்பு!

  ...கலக்கல் பதிவு, அண்ணா... பழைய டச் போகாம எழுதி இருக்கீங்க... அடிக்கடி எழுதுங்க!

  இனியாய் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. கலக்கலான ஆறுமுகம். உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. நல்லா ந்கைசுவையா இருக்குது. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வாஙக எப்படி இருக்கீங்க
  இப்் தான் இந்த பக்்ம் வழி தெரிந்தா?
  ஸ்வீட் ப்லகாரட்துக்கு உதவிபண்ணவா? அட்ங்கப்பா ப்பெ்ிய ஆ்்டர் போல இரு்்கே?

  ReplyDelete
 10. இப்போதான், உங்களின் முந்தைய பதிவை படித்தேன். தங்கள் முயற்சிகள் விரைவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள். உங்களுக்கும்,
  உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்ண்ணா :))

  ReplyDelete
 12. தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. ஆரம்பிச்சுட்டாரையா....!
  பித்தன் வாக்கு(குறி) சொல்ல ஆரம்பிச்சுட்டாரையா....!
  இனி Non Stop தான்...!

  நல்லா இருக்கு...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  ReplyDelete
 14. ////அனைவர்க்கும் ஓர் அறிவிப்பு
  ***************************
  சுதாகரன் (எ) பித்தனின் வாக்கு என்பவரை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக காணவில்லை. கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்/////

  இப்படி ஓர் advt. வந்ததே பார்க்கவில்லையா...! சுதாகர்...!
  எல்லா... நாங்கதானுங்கோ கொடுத்தது....

  ReplyDelete
 15. நல்ல ஜோக்கா இருக்கு ..!! லேட் தீபாவளி வாழ்த்துக்கள் ..!!

  ReplyDelete
 16. அட! என்னய்யா ஆணி குறைஞ்சுருச்சா?

  நலம்தானே?

  மீண்டு(ம்) வந்ததுக்குப் பாராட்டுகள்!

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.