Wednesday, December 8, 2010

சபரி மலை யாத்திரை














சாமியே சரணம் அய்யப்பா !!!
நாளை இரவு (புதன்) மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் தாம்பரத்தில் இருந்து கரூர் சென்று, வியாழன் காலை எனது ஊர் தாராபுரம் சென்று, தென் தாரையில் உள்ள சின்னக் காளியம்மன் கோவிலில் இருமுடி கட்டிக் கொண்டு மலைக்கு யாத்திரை கிளம்புகின்றேன். வியாழன் இரவு எரிமேலியில் பேட்டை துள்ளி, வாவர் பள்ளிவாசலுக்கு சென்று விட்டு,


















பின்னர் வெள்ளி அதிகாலை நாலு மணியளவில் பம்பா சென்று சக்தி பூஜை முடித்து ஆறு மணியளவில் சபரி மலை ஏறும் திட்டம் உள்ளது.











சென்ற முறை நான் நாலு மணி நேர கியூ இருந்தது, இந்த முறை எப்படி என்று தெரியவில்லை, எத்தனை மணி நேரம் நின்றாலும் பரவாயில்லை, அய்யனின் தரிசனம் நல்ல முறையில் கிடைத்தால் போதும். மலை இறங்கி திருவனந்தபுரம், சுசீந்திரம், கன்யாகுமரி,திருச்செந்தூர் மற்றும் குற்றாலம் சென்று மதுரை வழியாக தாராபுரம் திரும்பும் எண்ணம் உள்ளது. எத்தனை மணி நேர கியூ மற்றும் செல்லும் இடங்களில் மழை, பாதை எப்படி உள்ளது என்று அறிந்த பின்னர் தான் மேற்க்கொண்டு பயணம் செல்ல வேண்டும். குருசாமி, முதலில் அய்யனை தரிசித்துவிட்டு, கீழே இறங்கி பின்னர் செல்லும் இடங்களைப் பற்றி பேசிக்கொள்வேம் என்று சொல்லிவிட்டார்.

நாளை இரவு கிளம்புவதற்க்கான ஏற்ப்பாடுகள் நடந்து கொண்டு உள்ளது, நான், என் இரண்டாவது அண்ணா மற்றும் மூன்றாவது அண்ணா, ஆக என் வீட்டில் மூவர் செல்லுகின்றேம்.வழக்கம் போல என் நண்பனும் அவனது அண்ணாக்கள் நால்வர்,உறவினர்கள் என வருடா வருடம் செல்லும் பதினைந்து பேர் செல்ல இருக்கின்றேம்.
நல்ல படியாக தரிசனம் கிடைத்து, எங்களின் யாத்திரை நல்ல படியாக முடிய அந்த கன்னிமூல கணபதியை வேண்டிக் கொள்கின்றேன்.

யாத்திரை முடிந்து திங்கள் அன்று சென்னை வந்துவிடுவேன். அடுத்த வாரம் யாத்திரை குறித்து பதிவுகள் போடுகின்றேன்.

சாமியே சரணம் அய்யப்பா!!!

22 comments:

  1. யாத்திரை முடிந்து திங்கள் அன்று சென்னை வந்துவிடுவேன். அடுத்த வாரம் யாத்திரை குறித்து பதிவுகள் போடுகின்றேன்.


    .....பத்திரமாக போயிட்டு வாங்க அண்ணா. மீண்டும் உங்கள் பதிவுகளில் சந்திக்கிறோம்.

    ReplyDelete
  2. உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். எல்லோருக்கும் சேர்த்து சாஸ்தாவிடம் பிரார்த்தித்து வாருங்கள்.

    ReplyDelete
  3. ம்...போய் விட்டு வந்து அதன் அனுபவத்தை போடுங்கள்..:-)

    ReplyDelete
  4. சாமிக்கிட்ட எங்களுக்கும் சேர்த்து என்னாச்சும் கேட்டு வாங்கிட்டு வாங்க.இறைவனின் அருள் நம்பிக்கை என்றும் உங்களைக் காக்கும் !

    ReplyDelete
  5. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  6. தங்கள் "ஆன்மீகப் பயணம்" சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...! நண்பா..!

    ReplyDelete
  7. ஐயப்பன் அருளால் யாத்திரை இனிதே அமைந்திருக்கும்.

    யாத்திரைப் பதிவுகள் படிக்க காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  8. ஸ்வாமி சரணம்! இந்த முறை நான் யாத்திரை செய்ய முடியவில்லை! அனைவருக்காகவும் பிரார்த்தித்து ஸ்ரீ தர்மஸாஸ்தாவைக் கண்டு பரிபூரண அருள் பெற வேண்டுமென கலியுக வரதனை மனதார பிரார்த்திக்கின்றேன்! ஸ்வாமி சரணம்!

    ReplyDelete
  9. படங்களுடன் பகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க :-)

    ReplyDelete
  10. நலமா..? என்ன ஆச்சு ரொம்ப நாளா ஆளையே கானோம் :-))

    ReplyDelete
  11. சித்திரை புதுவருட வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. நான் இப்பதான் முதல் முறையா உங்க பக்கம் வரேன்
    அதான் லேட் கமெண்ட். என் பையனும் 7 வயது பேரனும் கூட வருஷா வருஷம் சபரிமலை போய்
    வராங்க. ஒரு மண்டலம் விரதம் எல்லாம் இருந்து
    வீட்டிலும் சாஸ்த்தா ப்ரீதி பூஜைகளும் செய்வார்கள்.

    ReplyDelete
  13. பதிவைப் படித்து கருத்து போடலைனா
    எங்க கனவுல பூதம் வரும்,,, சரி....

    ரொம்ப நாளா பதிவு எழுதாத உங்களுக்கு நல்லா தூக்கம் வருதா...... சொல்லுங்க.... :))

    ReplyDelete
  14. உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. பக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள
    ஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே

    தூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, எல்லோரும் ஒரே
    மாதிரி உடை, மலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.
    18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். அப்போதுதான் காணமுடியும்.

    அங்கே காண்பது மகர ஜோதியை. எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண
    நம்மை நாம் தயார் படுத்திகொள்வதே சபரிமலை யாத்திரை.

    குருவை பணித்து அவர் வழி காட்டுதலில் இறைவனை காண பயண படவேண்டும்.
    இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.

    குரு சாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். குரு வழி காட்ட
    மலை ஏறி ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்


    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
    இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

    http://sagakalvi.blogspot.com/



    Please follow

    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete
  16. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  18. Thanks wish you the same intha varusam sabarimala poningala

    ReplyDelete
  19. ஹலோ நண்பரே...நலமா....

    ReplyDelete
  20. இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.