Tuesday, November 17, 2009

மென்மையான ஆப்பம்

சுவையான மென்மையான ஆப்பம் வித்தியாசமான செய்முறையில் கூறுவதாக சொல்லியிருந்தேன் அல்லவா. அது எப்படினு பார்க்கலாமா? அட ஒன்னும் கஷ்டம் இல்லிங்க நீங்க வழக்கமா அரைக்கறது கூட ஒரு சின்ன வேலை செய்தா போதும். சரி மாவு அரைப்பது எப்படி என்று பார்க்கலாமா?

தேவையான பொருட்கள் :
1. புழுங்கல் அரிசி 3 டம்ளர்.
2. வெந்தயம் அரைப்பிடி(கைப்பிடியளவு)
3.உளுந்து ஒரு பிடி.
4. இளனீர் ஒன்று.

அரிசியை உளுந்து வெந்தயம் கலர்ந்து ஒரு நாலு அல்லது ஜந்து மணி நேரம் ஊறவைத்து இளனீர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இளனீர் தேங்காய் இளம் வழுக்கையாக இருந்தால் மாவில் போட்டும் அரைக்கலாம். இல்லை என்றால் வெறும் இளனீர் விட்டு அரைக்கவும். இது மாவு அரைப்பதற்க்கான செய்முறை. மாவை பாத்திரத்தில் எடுக்கவும். இனி தான் நம்ம டெக்னிக் பண்ண வேண்டும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு கரண்டி மாவு எடுத்து ஊற்றி, அந்த மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து நல்ல கூழ் காய்ச்சுவது போல அடுப்பில் வைத்து காய்ச்சவும். இராகி கூழ் காய்ச்சுவது போல காய்ச்ச வேண்டும். இந்த கூழ் சிறிது சூடு தணிந்தது அரைத்த மாவில் போட்டுக் கலர்ந்து வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.மாவு சிறிது புளித்தவுடன் ஆப்பம் ஊற்றினால் சுவையான ஆப்பம் ரெடீ. கூழ் காய்ச்சி செய்து பாருங்கள். மறக்காமல் பின்னூட்டம் இடவும்.

இந்த ஆப்பத்திற்க்கு தேங்காய்ப் பால் மற்றும் குருமா உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி.
ஆப்பம் தேங்காய் பால் செய்வர்கள் எனக்கும் அனுப்பி வைக்கவும். நன்றி.

19 comments:

  1. சார்....ஒரு நிமிஷம்...எங்கெருந்து சார் இதெல்லாம் ...யரு சொல்லிதருவாங்க????

    ReplyDelete
  2. ithil choda maavu poda vendaamaa?

    ReplyDelete
  3. //ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு கரண்டி மாவு எடுத்து ஊற்றி, அந்த மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து நல்ல கூழ் காய்ச்சுவது போல அடுப்பில் வைத்து காய்ச்சவும்.//எதற்க்காக அப்ப்டி செய்யனும் மாவு புளிப்பதற்காகவா?

    நானே ஆப்பம் சாப்பிட்டு 3 வருஷமாகுது காய்ஞ்சு போய் இருக்கேன்.இதுல வேற நீங்க அழகா பதிவு போட்டிருக்கிங்க.சாப்பிட ஆசை வந்துடுச்சு...ம்ம்ம் ஆப்பம்+தே.பால் ஒரு பிடி பிடிப்பேன்ன்ன்..

    ReplyDelete
  4. ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு கரண்டி மாவு எடுத்து ஊற்றி, அந்த மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து நல்ல கூழ் காய்ச்சுவது போல அடுப்பில் வைத்து காய்ச்சவும். இராகி கூழ் காய்ச்சுவது போல காய்ச்ச வேண்டும். இந்த கூழ் சிறிது சூடு தணிந்தது அரைத்த மாவில் போட்டுக் கலர்ந்து வைக்கவும். மாவு சிறிது புளித்தவுடன் ஆப்பம் ஊற்றினால் சுவையான ஆப்பம் ரெடீ. கூழ் காய்ச்சி செய்து பாருங்கள்.

    viththiyaasamaa irukke try panna vendiyathuthaan!!

    ReplyDelete
  5. நன்றி சுவையான சுவை, நல்லா இருக்கும் செய்து பாருங்கள்.

    என் மன்னி(அண்ணி) சொல்லித்தரும் டிப்ஸ் இவை. நன்றி. கிருத்திகா.

    நன்றி மலர் சமையல் ஸோடா உப்பு போடவேண்டாம்.

    நன்றி, மேனகா சத்தியா, மூனு வருசமாவா, ஏங்க செய்வது சுலபம்தான செய்து சாப்பிடுங்கள்.

    ReplyDelete
  6. நாம் மாவை கூடு செய்து கலர்ந்து கொள்வதால் ஈஸ்ட் பெர்மென்டேஸன் மற்றும் நிறைய சாப்ட்டாக உதவுகின்றது. நன்றி.

    ReplyDelete
  7. அப்பு கோவத்தைக் கிளறாதேங்கோ.அப்பம் சாப்பிட்டு 20 வருசமாச்சு.அம்மா சுட்டுத் தர விருப்பமா 2-3 சாப்பிடுவன்.நிறையச் சாப்பிட்டா பால் அப்பம் தித்திக்கும்.எல்லாத் தித்திப்பிக்கும் அள்ளி வச்சிட்டான்கள் இந்தச் சிங்களவங்கள்.

    ReplyDelete
  8. நன்றி ஹேமா, என்ன பண்ணுவது காலமும், விதியும் நம் கையில் இல்லை. அங்க சுவிஸ்ஸில் பண்ண முடியாதா?

    ReplyDelete
  9. ஆஹா......

    இங்கேயும் ஒன்னு இருக்கு:-)

    http://thulasidhalam.blogspot.com/2009/08/blog-post_19.html

    ReplyDelete
  10. // ஆஹா......

    இங்கேயும் ஒன்னு இருக்கு:-) //
    ஆமாம் டீச்சர் அதில் பித்தன் என்ற பெயரில் என் பின்னூட்டமும் இருக்கும். நன்றி. டீச்சர். இது மாதிரி கூழ் மாதிரி காய்ச்சி ஊற்றினால் தேங்காய் போட வேண்டியது இல்லை.

    ReplyDelete
  11. ஸ்ஸ்ஸோ எச்சில் ஊறுதுப்பா யோவ் ஊர் பக்கம் ஞாபகத்தை கிளறிவிடாதப்பா...

    ReplyDelete
  12. நன்றி வசந்த் ஆப்பத்தை எந்த ஊரில் கூட சாப்பிடலாம். நன்றி.

    ReplyDelete
  13. இன்னிக்கு என் பதிவில் உங்க ஆப்பக்குறிப்பௌ சில மாற்றங்களுடன் போட்டுள்ளேன்.ஆப்பம் ரொம்ப சூப்பராயிருந்தது.நன்றி உங்களுக்கு!!

    ReplyDelete
  14. சுதாகர் சார் இளநீர் போட்டு அரைப்பது புதியதாக இருக்கு,


    நாங்க தேங்காய் சேர்த்து அரைப்போம்.


    ரொம்ப அருமையான ஆப்பம் குறிப்பு

    ReplyDelete
  15. நன்றி ஜெலில்லா, இளனீர் போட்டு அரைப்பதால் தேங்காய் தேவை இல்லை.

    நன்றி மேனகா சத்தியா, நல்லாயிருந்தது என்று சொல்லி கொடுக்காம சாப்பிட்டு விட்டீர்கள்.

    ReplyDelete
  16. பித்தன் படத்துடன் போட்டால் நன்றாக இருக்குமே..இளநீர் சேர்த்து அரைத்து பின் மாவை அடுப்பில் ஆப்பம் ஊற்றினால் மாவு சுருள் சுருளாக வருதே!நான் என்ன தவறு மாவில் செய்திருப்பேன் என்று யூகிக்க முடியுதா?

    அன்புடன்.
    அம்மு

    ReplyDelete
  17. இளனீர் மட்டும் விட்டு அரைப்பதால் மாவை மிகவும் கொட்டியாக வைத்துருபீர்கள். மாவை தோசை மாவை வீட கொஞ்சம் தண்ணீயாக விட்டுப் பார்க்கவும். நன்றி.

    ReplyDelete
  18. என்னிடம் அப்ப தோசை கல் இல்லை இப்பவே ஒன்று வாங்க போகிறேன்....
    மாவை கூழ் மாதிரி செய்து மாற்ற மாவோடு நன்றாக கலந்து விடணுமா அல்லது.... அப்படியே உள்ளே உற்றி விட வேண்டுமா? கொஞ்சம் விளக்கவும். நன்றி

    ReplyDelete
  19. // மாவை கூழ் மாதிரி செய்து மாற்ற மாவோடு நன்றாக கலந்து விடணுமா அல்லது.... அப்படியே உள்ளே உற்றி விட வேண்டுமா? கொஞ்சம் விளக்கவும். நன்றி //
    மாவைக் கூழ் மாதிரி காய்ச்சி ஆறியதும் மற்ற மாவுடன் கலர்ந்து விடவும். விரைவில் செய்து பாருங்கள் நன்றி.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.