Monday, November 30, 2009

விருதுகள் அளிப்பு தொடர்ச்சி

அனைவருக்கும் வணக்கம். நான் விருது பதிவு போட்டு முடித்தவுடன், அலுவலக நேரம் முடிந்து வீட்டுக்குப் போனதும், நம்ம நிர்வாக இயக்குனர் கிட்ட இருந்து அழைப்பு(தொல்லைப் பேசி) வந்தது. தம்பி நீ இந்த கம்பெனியில் இயக்குனர் ஞாபகம் இருக்கா? , "ஓ இருக்கு சார்(நான்).
அதுக்காகத்தான் சார் நான் இராத்தியும், பகலுமா விடாம ஈ ஓட்டிக்கிட்டு இருக்கேன்" அப்படின்னு சொன்னன். அவர் சொன்னார் "அப்படின்னா நாளைக்கு நடக்கிற கூட்டங்களுக்கு வந்துடுன்னார்".
என்ன கூட்டம்ன்னு கேட்டா பொறுப்பு இல்லைன்னு திட்டுவார். ஆதலால் நானும் பதிவர் கூட்டம் மாதிரி வடை கிடைக்கும் அப்படின்னு நம்பி போய் உக்காந்தேன். அப்புறம்தான் தெரிஞ்ச்சுது அது மில்லியன் கணக்கில் டாலர் சாமாச்சாரக் கூட்டமாம். சரி டாலர் வேணுமின்னா நம்ம கிட்ட சொன்னா ஏற்பாடு பண்ண மாட்டமா? இது எதுக்கு கூட்டம் எல்லாம் அப்படின்னு யோசிச்சு நான் மெதுவா "என்ன டாலர் சார் ? முருகன் டாலரா?(பழனி) இல்லை பெருமாள் டாலரான்னு?(திருப்பதி)" கேக்க வாய் திறக்கப் போனனேன். அதுக்குள்ள அது யு எஸ் டாலர் அப்படின்னு சொல்லிட்டாங்க. அதை நான் கண்ணுல கூட பார்த்ததில்லையேன்னு வாயை மூடிக்கிட்டு வேடிக்கைப் பார்த்தேன். நிர்வாக இயக்குனர் கூட்டம்(போர்டு மீட்டிங்), வங்கிக் கூட்டம், தணிக்கையாளர் கூட்டம்(ஆடிட் மீட்டிங்) ஒரே கூட்டம் கூட்டமா போட்டு, வியாழன், வெள்ளி இரண்டு நாளும் தாளிச்சுட்டங்க. வழக்கமா இது மாதிரி கூட்டத்தில் நான் செய்யுற உருப்படியான வேலை பீர் அடிப்பது, அதுவும் மாலை போட்டதுன்னால செய்ய முடியாம எப்படா விடுவாங்கன்னு யோசிக்க வேண்டியதா போச்சு.
சனி, ஞாயிறு இரண்டு நாளும், செங்காங், யூசுன் அய்யப்பன் கோவில் பூஜை, அபிஸேகம், ஆராதனைன்னு போயி நல்லா அன்னதானம்(போனது இதுக்குத்தான்) நாலு வேளை சாப்பிட்டு வந்தேன்.

அதுனால என்னால நாலு நாளா பொட்டி தட்ட முடியவில்லை, குறிப்பா நான் விருது கொடுத்தவர்களை அழைத்துச் சொல்லும், பண்பாட்டைக் கூட நிறைவேற்ற இயலவில்லை.
என்னை உங்களில் ஒருவனாக ஏற்று நான் பதிவு இட்டவுடன் ஆதரவும், பின்னூட்டம் இட்ட, மற்றும் எனது விருதினை ஏற்ற சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான், யார், யார் வாங்கிக் கொள்ளவில்லையே, அவர்களை இன்று அழைத்து விட்டேன். தவறுதலாக நான் யாரையாது அழைக்காமல் இருந்தால் அவர்களும் தயவு செய்து எனது இந்த விருதினை ஏற்று என்னை சிறப்பிக்க வேண்டுகின்றேன். அடுத்த வரும் மூன்று தினங்களும் அளவில்லா ஆணிகள் பிடுங்க வேண்டி இருப்பதால், நான் இனி பத்து தினங்களுக்கு பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இடுவது கடினம். டிசம்பர் பதினைந்துக்குப் பின்னர் ஒட்டு மொத்தமாக படிக்கின்றேன். நன்றி. என்னுடைய எழுத்துப் பிழைகளைப் பற்றி அனைவரும் அறிவுறுத்தியுள்ளனர். இனி வரும் இடுகைகளில் நான் சரி செய்ய முற்படுகின்றேன்.(மறுபடியும் தமிழ் படிக்கனும்)

நான் அய்யப்பன் பதிவுகளை வரும் வெள்ளிக்கிழமைக்குள்(04.12.09) முடிக்க வேண்டியுள்ளதால் அதில் கவனம் செலுத்த உள்ளேன். 04.12.09 முதல் 13.12.09 நான் இந்தியாவிற்க்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஆம்மா வீடு கூட கோவில்தான, ஆதலால் அதுவும் ஆன்மீகப் பயணம் தான?. நான் செல்வதற்க்குள் பதிவுகள் மற்றும் அலுவலகப் பணிகள் பார்க்க வேண்டியுள்ளதால் கொஞ்சம் பரபரப்பாக உள்ளேன். இதுக்கு நடுவில் அண்டு இறுதிக் கணக்கு வேறு(எனக்கு ஒன்னும் தெரியாது, ஆனாலும் ஆக்டிங் பண்ணியாகனும்). ஆதலால் பதிவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளாமல் ஆதரவு அளிக்குமாறு வேண்டுகின்றேன். நன்றி.

இவர்களுக்கு நான் விரும்பி படித்து விருது அளிக்கின்றேன். +முகவை இராம்- முகவை மைந்தன்- வெண்பா பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும், வெண்பா இயற்றுதலும், தீவிர தமிழ் ஆர்வம் உடையவர். சளைக்காமல் தூய தமிழில் பேசக் கூடியவர்.

மாரனேரி ஜேசப் பால்ராஜ்- மிக அபூர்வமாக பதிவு போடுவார். ஆனாலும் பதிவுகள் வெடி ரகம். பதிவர் கூட்டங்களில் இவரின் பங்கும், பேச்சுக்களும் முக்கியமானவை. இவர் வருசத்திற்க்கு மூன்று பதிவு மட்டும் போட்டு பதிவுலகத்திற்கு ஆற்றும் சேவைக்காக.

சிங்கை செந்தில் நாதன் - இவர் பதிவுலகிற்க்கு ஒரு வரம். தனது முடியாத உடல் நிலையில் கூட பதிவுகளைப் படித்து, பின்னூட்டம் மற்றும் விவாதங்களில் கலர்ந்து கொள்கின்றார். சிங்கைப் பதிவர்களை உற்சாகப் படுத்துவதில் முன்னிலை வகிப்பவர்.

லதானாந்த்- காடுகளையும், இயற்கை வளங்களையும் பற்றிக் கூறுவதற்க்காக (அதுக்காக பாம்பு பத்திப் போட்டு டிரையல் ஆக்கக்கூடாது).

மகா - சும்மா சினிமா, அனுபவம் என்று போடாமல், நமக்குப் புரியாத டெக்னிக்கிகல் டீடெய்யில் எல்லாம் அள்ளி விடுவார். அவருடைய டெக்னிக்கல் சேவைக்காக (விண்டேஸ்- 7).

திசைகாட்டியின் பொது அறிவு பதிவுகளுக்காக இந்த விருதினை நண்பர் ரேஸ்விக் அவர்களுக்கு அளிக்கின்றேன்.(எனக்கு ஒரு விக் கிடைக்குமா?)

நண்பர் ஜெட்லி அவர்களுக்கு இந்த விருதினை அட்டு படத்தைக் கூட விடாமப் பார்த்து நம்ம காசை மிச்சம் பண்ண வைக்கும் காரணத்திற்க்காக(சும்மா சொன்னேன்). முக்கியமா பொது அறிவு கட்டுரைகளுக்காக இந்த விருது வழங்குகின்றேன்.

நண்பர் சிங்கை ஜெகதீசன் அவர்களுக்கும் இந்த விருதினை சமர்பிக்கின்றேன். நன்றி.

தாங்கள் என் அழைப்பில்லாவிட்டாலும் இந்த இடுகையினை அழைப்பாக ஏற்று விருதினை ஏற்றுக் கொள்ளவும். நன்றி. மறக்காமல் இன்றைய பாகம் 8 படிக்கவும். நன்றி.

11 comments:

 1. //அன்னதானம்(போனது இதுக்குத்தான்) //
  மறுபடியும் நல்லவர்...

  //ஆம்மா வீடு கூட கோவில்தான, ஆதலால் அதுவும் ஆன்மீகப் பயணம் தான?. //
  அம்மா வீடா? சூப்பர் கருத்து.

  சந்தோஷமா போய்ட்டு வாங்க அண்ணா. வந்து எல்லாம் சொல்லுங்க.

  உங்க பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

  விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. விருதுக்கு நன்றி தலைவரே

  ReplyDelete
 3. நான் தங்களின் பதிவின் பால் ஈர்க்கப் பட்டு தங்களுக்கு அளித்த விருதுகளை ஏற்று சிறப்பித்தமைக்கு அனைவருக்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete
 4. நன்றி சுசி. ஊருக்குப் போய் வந்ததும். பதிவு இடுகின்றேன். நன்றி.

  ReplyDelete
 5. விருதுக்கு நன்றி , உங்கள் வாழ்த்துகளுடன் தொடரும் எனது பணி

  ReplyDelete
 6. விருதுகள் வழங்கிய தாங்களுக்கும் விருதுகள் பெற்று அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 7. தாங்கள் அளித்த இந்த விருதுக்கு நன்றிகள். அதுவும் நான் நேரில் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி...:-)

  ReplyDelete
 8. //ஆம்மா வீடு கூட கோவில்தான, ஆதலால் அதுவும் ஆன்மீகப் பயணம் தான?. //
  அம்மா வீடா? சூப்பர் கருத்து.

  ஹலோ என்னது இது? நான் சொன்னது எங்க அம்மா வீடு. அவங்க அவங்களுக்கு அவங்க அம்மா வீடு தான கோவில். எனக்கு அந்த அம்மாவையும் பிடிக்கும் ஆனா கோவில் சொல்லற அளவுக்கு எல்லாம் நான் பைத்தியம் இல்லை.

  ReplyDelete
 9. எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஆனாலும் உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் தரும் ஊக்கம் தான் என்னை இடுகையிட வைக்கும் விருதுகள். நன்றி.

  ReplyDelete
 10. உங்களுக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்துகள்.

  விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. சுதாகர் சார் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றீ, சந்தொஷ்ம்.

  விருது வாங்கிய அனைத்து சகோதர சகோதரிகலுக்கு வாழ்த்துக்கள்..

  ஒரு சின்ன திருத்தம் என் பெயரில் ஜெலில்லா ‍ = இல்லை (ஜலீலா) என் பெயர் மாற்றி விடுங்களே.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.