Tuesday, November 24, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 6

அதிகாலை நாலு மணிக்கு குளித்து, தர்மசாஸ்தா கோவிலிலும், வாபர் பள்ளிவாசலிலும் வணங்கிப் பின்னர், ஒரு கடையில் டீ அருந்திப் பெரு வழி யாத்திரை(56 கிலோமீட்டர் மலைப் பாதை) தொடங்கினனேம். எரிமேலியில் தரிசனம் முடித்து, எங்க குருசாமி, டீக்கடையில் பெருவழியில் செய்யவேண்டிய கடமைகள், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பற்றிக் கூறி, உடன் வரும் சாமிகளுடன் இணைந்து, இருவர் அல்லது மூவர் கூட்டாகச் செல்லும் படி அறிவுறுத்தினார். காளை கட்டி சென்று அவருக்காகக் காத்து இருக்கும்படி கூறிவிட்டு, எங்களின் தலையில் பள்ளிக்கட்டை ஏற்றிவிட்டார்.இது வரை உடல் முடியாத எனக்கு உடம்பில் யாத்திரை தொடங்கியது முதல் அசைக்க முடியாத பலம் வந்தது. உடல் வலி, காய்ச்சல், குளிர் எதுவும் தெரியவில்லை, என் கால்கள் என்னையும் அறியாமல் வேகமாக நடக்கத் தொடங்கின. காலை ஜந்தரை மணி அளவில் பேருர் தோட்டை அடைந்து அங்கு மீனுக்குப் பொரிப் போட்டு அய்யனை வணங்கிப் பின்னர் காளை கட்டி நோக்கி நடந்தோம்.

காளை கட்டி என்பது ஈசன் மற்றும் அம்மன் கோவில் ஆகும். இங்கு அதிர் வேட்டு வழிபாடு மற்றும் பாடல், மைக் சவுண்ட் ஸ்ர்வீஸ் இடைவிடாமல் ஒலிக்கும். காளை கட்டி இடம், அழுதா, கரிமலை, முக்குழித்தாவளம் போன்ற இடங்களின் ட்ரையாங்கிளில் அமைந்து இருக்கும் இடம். இங்கு வேட்டு வைத்தால் அது இந்த மூன்று இடங்களில் எதிரோலிக்கும். ஆகவே பாதையில் மிருகங்கள் வராமலிருக்க, டிசம்பர் 23 தொடங்கி, ஜனவரி 14 வரை வேட்டும், பாட்டும் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டு இருக்கும். அழுதா நதிக்கரையிலும், அழுதை மலையின் மீதும் அய்யப்பன் மகிஷியுடன் போரிடும் சமயம், சிவனும், பார்வதியும் தங்களின் காளை வாகனதை இங்கு கட்டி விட்டு,சண்டையைப் சண்டையைப் பார்த்தாக ஜதீகம். எனவே இந்த இடம் காளை கட்டி என அழைக்கப் படும். இந்த இடத்திற்க்கு நானும் எனக்கு இணையாக நடந்த ஒரு சென்னை எலட்க்டிரீசியன் சாமி ஒருவரும் மற்றவர்களைக் காட்டிலும் ஒன்றரை மணி நேரம் முன்னாடி வந்தோம் என்றால் நான் நடந்த வேகம் மற்றும் எனது பலம் பற்றி கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கு குருசாமி வந்ததும் ஈசனை வழிபட்டுப் பின் அழுதா நோக்கி நடந்தோம். இது வரை கொஞ்சம் சுமாரான சாலை வசதி இருந்தது இனி மலைப்பாதை. குத்துக் குத்தாக கற்கள் இருந்தன.(இப்ப அழுதா வரைக்கும் ரோடு போட்டு விட்டார்கள்). அப்படி செல்லும் போது என்னுடன் வந்த சாமி, திடிர் என்று அய்யப்பா என்று நின்றார். பின் நானும் நிற்க அவர். சாமி இது வரைக்கும் உங்களுக்கு சேதனை, இனி எனக்கு என்று காண்பித்தார். தன்னுடையக் காலைக் காண்பித்தார்.அதில் நடுவிரல் கல்லில் அடிபட்டு சிறிது தோல் கிழிந்து இருந்தது. அவர் சொன்னார், "பாருங்க சாமி இனி இதே இடத்தில் மறுபடியும் அடிபடும், வேண்டுமானால் பாருங்கள்" என்றார். ஆனாலும் எனக்கு இணையாக நடந்து வந்தார். மீண்டும் ஒரு அரைமணி நேரப் பிரயானத்தில் அவர் தயங்கி நின்றார், இம்முறை அவரின் அதோ இடத்தில் மீண்டும் அடிபட்டுக் கொஞ்சம் தோல் நன்றாக பிய்ந்து இரத்தம் வந்தது. இரத்தம் வந்த இடத்தில் விபூதியை எடுத்து அப்பிவிட்டுச் சொன்னார் "சாமி இனி என்னால் உங்களின் வேகத்திற்க்கு இணையாக வரமுடியாது" என்றார். நான் என் வேகத்தைக் கஷ்டப்பட்டு மட்டுப் படுத்தி அவருக்கு முன்னால் செல்வது, பின் நிற்பது, அவர் வந்தவுடன் மீண்டும் அதுபோல செல்வது என்று அவருடன் அழுதை வந்து அடைந்தேன்.

புண்ணிய நதி அழுதை, அழுதா நதியே சரணம் அய்யப்பா என்று வணங்கிய அழுதை வரும்போது போது நண்பகல் இரண்டு, எங்கள் ஆட்கள் வரும் போது மூன்று. குருசாமி அழுதையில் மூழ்கி கல் எடுத்து வாருங்கள் என்றார். நானும் குளிக்கும் முன்னர் அழுதையில் பல் விளக்க பிரஷ் எடுத்துக் கொண்டு பல்லைத் தேய்த்தேன். குருசாமியும், மற்ற சீனியர் சாமிகளும் என்னை, "சாமி என்ன பண்ணறிங்க" என்றார்கள், நான் "பல்லுத் தேய்க்க வேண்டும் என்று சொல்ல, தேய்ங்க, தேய்ங்க" என்று ஒரு மாதிரி நக்கலாக சிரித்து சொன்னார்கள், நான் புரியாமல் முழித்து, பின் ஆற்றில் இரு கைகளிலும் நீர் எடுத்து வாய் கொப்பளிக்க எடுத்தவன். ஒரு கணம் திகைத்துப் பின் தண்ணீரை அப்படியே ஆற்றில் விட்டேன். நான் முழிப்பதைப் பார்த்துச் சிரித்த கரையில் நின்ற சாமிகள். "என்ன சாமி பல் விளக்க வில்லையா" என்று சிரித்தார்கள். ஆம் அந்த தண்ணீர் முழுதும் மனித மல வாடை வீசியது. நான் ஆற்றில் இருந்து கரைக்கு ஓடி வந்து விட்டேன். வறண்ட காலம் ஆதலால் முழங்கால் அளவு ஓடிய தண்ணீரில் பல லட்சம் பக்தர்கள் கால் கழுவி, ஆற்றின் கரைகளில் அசுத்தம் செய்வதால், தண்ணீர் பூராவும் மல வாடை அடித்தது. நான் பாட்டிலில் உள்ள குடினீர் எடுத்து வாய் கொப்பளித்து, பின்னர் தான் கேட்டேன் அந்த அறிவிப்பை, அய்யப்ப சேவா சங்கமும், தேவஸ்தானமும் மைக்கில் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள், "தண்ணீர் மாசுபட்டு விட்டதால் யாரும் குடிக்கவே அல்லது வாய் கொப்பளிக்கவே வேண்டாம் என்றும், பக்தர்கள் குடிக்க தண்ணீர் அவர்களிடம் வாங்கிக் கொள்ளவும்" என்று. நான் கிளம்ப ஆயத்தம் ஆக, குருசாமி, "என்ன சாமி மூட்டை கட்டுகின்றீர்கள், போய் ஆற்றில் மூழ்கி கல் எடுத்து வாருங்கள்" என்றார். நான் "சாமி இந்த தண்ணியிலயா" என்றேன். அவர் "ஆமாம் சாமி போய் தண்ணீரில் மூழ்கி, கல்லிடும் குன்றில் கல் போட, கல் எடுத்து வாருங்கள்" என்றார். நானும் நாலு கன்னி சாமிகளும் வேறு வழியில்லாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு முங்கிக் கல் எடுத்து வந்தோம். அது வேற மூனு தடவை முங்கனும்(சாஸ்த்திரம் கண்டுபுடிச்சவனை உதைக்கனும்) என்று படுத்தி எடுத்துவிட்டார்கள். நான் பின் கரைக்கு வந்து என் பாட்டிலில் இருந்த நீரைத் துண்டில் நனைத்து உடல் பூராவும் துடைத்தேன். அப்பவும் வாடை அடிக்கற மாதிரி ஒரு கலக்கம். அடுத்த ஒரு கிலோமீட்டர் மலை ஏறும் வரைக்கும் நான் மேந்து மேந்து பார்த்துக் கொண்டு நடந்தேன். வாடை அடிக்கவில்லை என்றாலும் அந்த அசூசை அடங்க நேரம் ஆனது. குருசாமி என்னிடம் "என்ன சாமி புது தெம்பு வந்துருச்சு போல, இனி எல்லாருடன் சேர்ந்து வாருங்கள்" என்றார். நானும், அழுதை ஏறினால் ஏறினால் முட்டி பிதுங்கி விடும் என்றும், அழுதை ஏறக் கண்ணில் நீர் வரும் என்றும் சொல்லும், செங்குத்தான செம்மண் அழுதை மலைப் பாதையில் வேகமாக ஏறத் தொடங்கினேன். இந்த அழுதை மலைப் பாதை என்பது மழைக்காலங்களில் தண்ணீர் வடியும் பாதை ஆதலால் ஒழுங்கற்றும் பல இடங்களில் முழங்கால் முழங்கால் அளவு அரித்தும், உயரமாகவும்,பாதை அரித்தும் இருக்கும். ஏறுவது மிகக் கடினம். செம்மண்பாதை வறண்டு மண்துகளுடன் கண்ணாடி போல வழுக்கும். கொஞ்சம் கவனம் இல்லாவிட்டால் முழங்கால் சில்லி பெயர்ந்து விடும். இந்த பாதையில் அந்த அய்யனின் அற்புதத்தால் நான் சிட்டாக பறந்து ஏறிக் கொண்டு இருந்தேன். எந்த முரளி அண்ணாவிடம் என்னை நின்று நிதானமாக என்னைக் கூட்டி செல்லும்படி பலரும் கூறினார்களே, அவர் என்னிடம் அங்கு கெஞ்சிக் கொண்டு இருந்தார், சாமி வேகமா போகாதிங்க, எங்களால் வரமுடியவில்லை என்று. குருசாமியும் என்னிடம் சாமி நின்று போங்கள் என்று கூற ஆரம்பித்து விட்டார். ஆனாலும் எதோ ஒரு சக்தி, தேடுதல் என்னை அவனிடம் காற்றாய் இழுத்தது. நான் எல்லாரையும் வீட முன்னால் சென்று ஒரு பாறையில் அமருவேன், இவர்கள் அருகில் வந்தால், அல்லது இவர்கள் தலை தெரிந்தால் மீண்டும் நடந்து எல்லாருக்கும் முன்னால் சென்றேன். சென்னையில் இந்த சாமி எப்படி மலை ஏறும் என்றும், என்னை, என் விரதத்தைப், பக்தியைத் தவறாக பேசியவர்கள் எல்லாம் அங்க என்னிடம், எனக்கு ஒரு பட்டமும் கொடுத்து கெஞ்சினார்கள், "மலோரியா சாமி, வேகமாப் போகாதீங்க, போகதீங் எங்களால் வரமுடியவில்லை என்றார்கள். என் கண்கள் அந்த அய்யனின் அற்புதத்தை நினைத்துக் கண்னீருடன்(ஆனந்தக் கண்ணீர்) ஆனந்தமாக அய்யப்பா அய்யப்பா என்று கூறியபடி பித்தனைப் போல ஏறினேன். எந்தக் கஷ்டமும் இல்லாமல், மிகப் பரசவமாக ஆனந்த மனோலயத்தில் மலை ஏறினேன். கல்லிடும் குன்றில் கல்லைப் போட்டுப் பின்னர் அழுதா உச்சி, அழுதா இறக்கம், முக்குழித்தாவளம் வந்து, அங்கு முருகன், பிள்ளையார், சிவன் மற்றும் விஷ்னு கோவிலில் சாமி கும்பிட்டு கரிவழந்தோட்டை அடைந்தோம். இந்த கரிவழந்தோட்டில் தான் அய்யன் அடுத்த அற்புதத்தை நிகழ்த்தினான். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்..... தொடரும். நன்றி.

டிஸ்கி: நாலு வருடங்களுக்கு முன் என் இரண்டாவது அண்ணாவைப் பெரு வழியில் அழைத்து சென்ற போது, அழுதா முழுதும் மிகவும் சுத்தமாகவும், தண்ணீர் மிகவும் கண்ணாடி போல அற்புதமாகவும் இருந்தது. இப்போது அங்கு கரைகளில் கழிவறைகள் கட்டிப் மிகத் தூய்மையாக பராமரிக்கின்றார்கள். நானும் அண்ணாவும் அழுதையில் ஆனந்தமாக அரைமணி நேரம் குளித்தோம். நன்றி.

10 comments:

 1. சாமி மலைப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. //இது வரை உடல் முடியாத எனக்கு உடம்பில் யாத்திரை தொடங்கியது முதல் அசைக்க முடியாத பலம் வந்தது. உடல் வலி, காய்ச்சல், குளிர் எதுவும் தெரியவில்லை, என் கால்கள் என்னையும் அறியாமல் வேகமாக நடக்கத் தொடங்கின. //

  இம்புட்டு அற்புதம் செய்த ஐயப்பன் உங்களுக்கு காலா காலத்தில ஒன்று பண்ணி இருக்கலாம்

  ReplyDelete
 3. சாமி தரிசனம் பெற்று வாழ்வு பெற வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 4. நன்றி ரேஸ்விக் மற்றும் தியாவின் பேனா.

  நன்றி கோ.வி. அண்ணா, அவர் அப்ப ஒரு வழி பண்ணீயிருந்தார்ன்னா நான் அத்துக்கிட்டுத் தான் நின்னுருப்பன். என் ஜாதகப்படி எனக்கு 16.12.09 அப்புறம் தான் டையம் வருகின்றது. நன்றி.

  ReplyDelete
 5. //நன்றி கோ.வி. அண்ணா, அவர் அப்ப ஒரு வழி பண்ணீயிருந்தார்ன்னா நான் அத்துக்கிட்டுத் தான் நின்னுருப்பன். என் ஜாதகப்படி எனக்கு 16.12.09 அப்புறம் தான் டையம் வருகின்றது. நன்றி.//

  அப்ப '2' சான்ஸ் மிஸ் ஆகிவிட்டதா ? அவ்வ்வ்வ்வ்வ் ! சதி பண்ணிட்டாங்களே !

  ReplyDelete
 6. உங்க தெம்பு எங்களுக்கும் வந்திடிச்சு...

  தொடருங்க அண்ணா.

  ReplyDelete
 7. சாமி மலைப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!!

  வாங்க வந்து awardai வாங்கிகோங்க!!

  ReplyDelete
 8. ஐயப்பன் உங்களை ரொம்ப சோதித்துவிட்டார்.எனக்கும் இவரை ரொம்ப பிடிக்கும்.இரவு படுக்கும்போது இவர் நாமத்தை உச்சரித்துவிட்டு தான் படுப்பேன்..

  ReplyDelete
 9. நன்றி, சுசி.

  பின்னூட்டங்களுக்கும், அளித்த அற்புதமான விருதுக்கும் நன்றி.

  நன்றி. மேனகா சத்தியா. சோதனை இல்லை, இது அவரின் விளையாட்டு. இன்னமும் தொடரும். படியுங்கள். வணங்குங்கள். நன்றி.

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.