Tuesday, November 17, 2009

அய்யப்பனின் அற்புதங்கள்


இன்று இனிய நாள், என் மனதுக்கு மிகுந்த சந்தோசம் தரும் நாள். ஆம், தமிழ் மாதம் கார்த்திகை ஒன்றாம் நாள் தான், எங்களின் பிறந்த நாளை வீட சந்தோசம் தரும் நாள். ஆம் நாங்கள் அந்த கலியுக வரதன், கண் கண்ட தெய்வம், எங்கள் அய்யப்பனைக் காண சபரிமலை யாத்திரைக்காய் மாலையிடும் அருமையான நாள். இன்று முதல் நான் சுகங்களைத் துறந்து, தரையில் படுத்துறங்கி, காலை சிற்றுண்டி தவிர்த்து ஒரு முனிவரைப் போல, சாதுவைப் போல, சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளும் விரத ஆரம்ப நாள். இந்த வருடம் நான் எனது பதினேராம் மலையாத்திரை மேற்கொள்ள உள்ளேன். அந்த கன்னிமூல மகா கணபதியும், காந்தமலை பகவானும் எந்த விக்கினமும் இன்றி எங்களின் யாத்திரையை நிறைவேற்றித் தருமாறு பிரார்த்திக்கின்றேன்.

என் வாழ்க்கையில் தாராபுரத்தில் உள்ள காடு ஹனுமந்தராய சுவாமியும்(எனது முதல் பதிவு), அய்யப்பனும் என் கண் கண்ட தெய்வங்கள். என் வாழ்வில் வரும் இன்பம்,துன்பம் ஆகிய எல்லாவற்றிக்கும் இவர்கள் தான் பொறுப்பு. பல முறை என் வாழ்வில் பல அற்ப்புதங்களை இவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள். அதிலும் அய்யப்பன் என் தோழனாக, கடவுளாக, குருவாக, வழிகாட்டியாக இருந்து வழினடத்துபவர். அவர் நான் ஒவ்வெரு முறை மலையாத்திரை முடிந்தவுடன், என் வாழ்க்கையை உயர்த்தியும், மாற்றியும் உள்ளார். அவரின் மலையாத்திரை பயணத்தையும், அவரின் அற்புதங்களையும் தொடராக எழுத உள்ளேன். தங்களின் ஆதரவும் கிடைக்கும் என கண்டிப்பாக நம்புகின்றேன். வாருங்கள் நாம் நமது யாத்திரையைத் தொடங்கும் முன்னர் என்னைப் பற்றியும் எனது நம்பிக்கை பற்றியும் ஒரு சிறு அறிமுகம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

என் சிறு வயதில் என் வீட்டின் பின்புறம் ஒரு முருகன் கோவில் உள்ளது. அங்கு அய்யப்பன் பஜனை, இருமுடிக்கட்டு முதலிய பூஜைகள் நடக்கும். நான் இந்த பூஜைகளில் சென்று கலந்து கொள்வேன். அப்போது இருந்து எனக்கு அய்யப்பன் மீது ஒரு தீராத பக்தி இருந்தது. அந்த பூஜைகளும், பாடல்களும் எனக்கு மிகுந்த சிலிர்ப்பைக் கொடுத்தன. நான் பள்ளியில் நாலாவது படிக்கும் சமயம் எனக்கு பிரேமானந்தன் என்ற நண்பன் அறிமுகம் ஆனான். அவன் தாத்தா அய்யப்பமலைக்குப் பக்தர்களை அழைத்துச் செல்லும் குருசாமி. அவர் தலைமையிலும் இந்த முருகன் கோவிலில் பூஜைகளும்,அன்னதானமும்(ரொம்ப முக்கியம்) நடக்கும். நான் இந்த பூஜைகளில் ஆர்வமுடன் கலர்ந்து கொண்டேன். அந்த வருடம் நானும் போக மிக ஆசைப் பட்டேன். ஆனால் எங்கள் வீட்டில் தகுந்த துணை இல்லாமல், அடுத்தவர்களை நம்பிப் போகக் கூடாது என்று கூறிவிட்டனர். அதனால் என் ஆசை மனதளவில் மட்டும் இருந்தது. அனாலும் எல்லா வருடமும் அய்யப்ப பூஜைகள் நடந்தால், அது யார் செய்யும் பூஜையாக இருந்தாலும் நானும் போய் அமர்ந்து கொள்வேன். இப்படி போகும் காலத்தில் தான் அந்த அய்யப்பன் எங்கள் வீட்டில் ஒரு அற்புதத்தை நடத்தினான். அது

எங்க பெரிய அண்ணா சாலை ஆய்வாளராக, நெடுஞ்சாலைத் துறையில் இணைந்தவுடன் அவருக்கு சேலம் கல்வராயன் மலைப்பகுதியில் வாய்ப்புக் கிடைத்தது. அவரும் ஒரு வருட காலம் அங்கு பணியாற்றினார். அப்போது காட்டுக்கொசுக்கடியினாலும், சரியான வசதியின்மையாலும் மலோரியாக் காய்ச்சல் கண்டது. இந்தக் காய்ச்சலும் அவருக்கு விட்டு விட்டு வந்தது. அண்ணா ஈரோட்டுக்குப் பணி மாற்றம் செய்துப் பின்னர் தாராபுரத்திற்க்கும் பணி மாற்றி வந்துவிட்டார். ஆனாலும் மலோரியா மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்தது.முறையான மருத்துவத்தாலும் மாத்திரைகளாலும் ஒரு வழியாக காய்ச்சலில் இருந்து விடுபட்டார். ஒரு நாள் அலுவகம் சென்ற அவர் மதியத்தின் போது தலையில் கட்டுடன், இருவருடன் கைத்தாங்கலாக வீடு வந்து சேர்ந்தார். என்ன என்று கேட்ட போது வேலையின் போது திடீர்னு ஒரு சத்தத்துடன் மயங்கி விழுந்து, தலையில் அடிபட்டது எனவும் கூறினார்கள். பின்னர் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட், ஸ்கேன் என்று எல்லாம் செய்ததில் டாக்டர் அவர் மலோரியாவிற்காக, அதிகமாக சாப்பிட்ட குளேரோகுயின் மாத்திரைகள் அவருக்கு நரம்புத்தளர்ச்சியை உண்டு பண்ணி, அதன் காரணமாய் வலிப்பு வந்ததாக கூறினார். பின்னர் அவருக்கு அதற்க்கு சிகிச்சை தரப்பட்டது.

அனால் இந்த வலிப்பு அவருக்கு எப்பவும் வராது, சரியாக டிசம்பர் மாதம், முதல் வாரத்தில், ஆறு அல்லது ஏழு தேதிகளில் தான் ஒரு முறை மட்டும் வரும். இப்படி போகையில் ஒரு நாள் எங்கள் வீட்டின் அருகில் உள்ள குருசாமி ஒருவர் அவரை சபரிமலை சென்று வருமாறு கூறினார். அதுவும் எப்படித் தெரியுமா?அந்த வருடம் இந்த வலிப்பு வந்த மறுனாள் இவர் கவலையுடன் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கையில் எதிரில் மிதிவண்டியில் வந்த குருசாமி(தெரிந்தவர் என்றாலும் மிகுந்த பழக்கம் இல்லை) ஆவேசம் வந்தவர் போல சைக்கிளை நிறுத்தி எங்க அண்ணன் சட்டையைப் பிடித்து அடிப்பவர் போல" நீ மலைக்கு போ, போ என்று கத்தியுள்ளார், பின் வண்டியை எடுத்து சென்று விட்டார். எங்க அண்ணாவும் இதை வீட்டில் கூற சரி அடுத்த வருடம் மலைக்குச் செல்லாம் என கூறி, அடுத்த வருடம் எங்க அண்ணா அவரின் நண்பர்களுடன், லாரி ஓனர் சேகர் மற்றும் இலைக்கடை குணாவுடன் சேர்ந்து மாலையிட ஆற்றுக்குச் சென்றார்கள். அங்கு இவரை மாலையிட வந்த குருசாமியும் அவர்தான். அண்ணா அவரிடம் கூற அவர் எனக்கு அன்னைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. வீட்டிற்க்கு வந்து யோசித்துக் கூட எனக்குப் புரியவில்லை, நானும் அதன்பின்னர் மறந்து விட்டேன் என்றார். மாலையிட்ட அந்த வருடமும் அவர் குளியறையில் மயங்கி விழுந்தார். அதற்கு அடுத்த வருடமும் பூஜை செய்யும் போது மயங்கி விழுந்தார். மூன்றாம் வருடம் அவருக்கு மயக்கம் வருவது போல தோன்றவே அவர் படுத்துக் கொண்டார். ஒரு மூன்று மணி நேரம் படுத்திருந்த அவர் பின் கண்விழித்தார். அந்த வருடம் மலைக்குச் சென்ற அவர் என் மூன்றாவது அக்காவின் திருமணத்திற்க்காக வேண்டி மாளிகைப்புறத்தம்மன் மஞ்சமாதா கோவிலில் பூஜை முடித்து சாமி கும்பிடும் சமயம் ஒரு சிறு விபத்து ஒன்று நடந்தது அது....... தொடரும்.


டிஸ்கி: இந்த அழாகான படத்தைத் தன் பதிவில் இட்டு, எனது பதிவுக்கும், என் கணினித் திரைக்கும் இட உதவி செய்த அய்யா தமிழ் ஓவியா அவர்களுக்கு நன்றி.

19 comments:

  1. கம்பீரமாக புலி இருக்கும் போது அதன் மீத அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிக்காது...ஐய்யப்பனை ஏன் குத்த வைத்து உட்கார்ந்தது போல் காட்சி அமைத்தார்கள் ? அனைத்தும் அறிந்த தாங்கள் விளக்கவும்.

    ReplyDelete
  2. இது ஒரு ஆசன வகை, இது போல அமர்வது மிகவும் சிரமம். அய்யப்பன் இந்த ஆசனத்தில் தான் தவத்தில் அமர்வதாக பரசு ராமரால் வடிக்கப் பட்ட அமைப்பி இது. குதிகால்கள் இரண்டும் ப்ருஷ்ட்டதின் அடிப்பகுதியில் ஒட்டியும் முழங்கைகள் இரண்டும் இடையை ஒட்டியும். சின் முத்திரை காட்டி அமர்ந்து இருக்கும் கோலம். சத் என்ற மனித உடலும்(கட்டை விரல்) சித் என்ற ஆன்மா (நடுவிரல்) ஆனந்தம் என்னும் பரம்பொருளுடன் இனைவது போல் இனைந்த முத்திரை சின் முத்திரை. நம்மை எதிர் பார்ப்பது போல சற்றே அன்னாந்து குழந்தை முகத்துடன் சிரித்த வண்ணம், அவன் அழகு தனி. நெய் அபிஸேகத்தின் போது நிர்மால்ய தரிசனமாக பார்க்க ஆணந்தம். சார்.

    ReplyDelete
  3. இனிமே புலிப்பால் தான் குடிப்பிங்களோ!,

    அய்யப்பன் எங்க பொறந்தாரு, ஏன் கேரளாவுல போய் உட்கார்ந்துருக்காரு!?

    ReplyDelete
  4. ஸ்வாமி ஸரணம்!

    அருமையாகப் பதிவு தொடர்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சாமி சரணம். எழுதுங்கள், படிக்கிறோம்.

    ReplyDelete
  6. நானும் உங்களைப் போலத்தான்.. என் வாழ்வில் நடந்த முன்னேற்றஙகளுக்கு ஐயனே காரணம் என ஆழமாக நம்புபவன்.

    வால், கோவி, தமிழ் ஓவியா வகையறாக்கள் என்ன சொன்னாலும் கவலை கொள்ளாமல், தொடர்ந்து எழுதுங்கள்..

    கோவி / வால்பையன் : No offense intended, it is our belief and we are not calling for a debate or a discussion on it..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  7. வால்ஸ் உங்களுக்கு நல்லா தெரிஞ்ச கதையைக் கூறி தர்க்கம் பண்ண நான் விரும்ப வில்லை. நன்றி.

    நன்றி, திரு. தங்கமுகுந்தன், நான் தங்களின் பூஜைப் படங்களைப் பார்த்தேன், மிகச் சிறப்பாக இருந்தது.

    நன்றி மேனகா சத்தியா, விஜி மற்றும் அமரபாரதி.

    நன்றி ஸ்ரீராம், வால், கோவி இருவரும் என் ஆத்ம நண்பர்கள், ஆதலால் அவர்கள் இந்த கட்டுரையைப் பொறுத்தவரை என்ன சொன்னாலும் நான் கேக்க மாட்டேன். நன்றி.
    பின்னும் நான் என் அனுபவங்களைத் தான் கூறுகின்றேன். இது எனது நம்பிக்கை மட்டுமே.

    ReplyDelete
  8. //வால், கோவி, தமிழ் ஓவியா வகையறாக்கள் என்ன சொன்னாலும் கவலை கொள்ளாமல், தொடர்ந்து எழுதுங்கள்..//

    சின்ன பசங்க கேக்குற கேள்விக்கு பெரியவங்க பதில் சொல்ல வேண்டியது கடமை!

    இப்படியெல்லாம் ஜகா வாங்க கூடாது!

    ReplyDelete
  9. // சின்ன பசங்க கேக்குற கேள்விக்கு பெரியவங்க பதில் சொல்ல வேண்டியது கடமை! //

    ஆகா தன்னடக்கம் என்பது சிறப்பு, ஆனாலும் இவ்வளவு அடக்கம் கூடாது வால்ஸ்.

    இந்த சின்னப் பையனுக்கு வாய்ல நெல்லி எழும்பு வைத்தால் கூட கடிக்கத் தெரியாதுன்னு ஊருல எல்லாரும் பேசிக்கிறாங்க.

    ReplyDelete
  10. //இந்த சின்னப் பையனுக்கு வாய்ல நெல்லி எழும்பு வைத்தால் கூட கடிக்கத் தெரியாதுன்னு ஊருல எல்லாரும் பேசிக்கிறாங்க. //

    ஆமாங்க, நீங்க எடுத்து வைத்தால் எனக்கு கடிக்க தெரியாது!,

    (எங்களுக்கு அப்படியே லெக் பீஸா சாப்பிட்டு தான் பழக்கம், நல்லி எழும்பெல்லாம் கடுகு மாதிரி எங்களுக்கு)

    ReplyDelete
  11. எனக்கு என்ன தெரியும் வால்ஸ், படத்துல்ல வர்ற வசனத்தை ஒரு பிட்டா போட்டேன். நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  12. //கோவி / வால்பையன் : No offense intended, it is our belief and we are not calling for a debate or a discussion on it..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்//

    :) ஆடுகோழியை குலதெய்வங்களுக்கு பலி இட்டு உண்பதும் தான் நம்பிக்கை, அது உங்கள் வைதீக நெறிகளுக்கு இழுக்கா இருக்கு என்று அவர்களை போலிசை விட்டு ஓட ஓட விரட்டி சுடுகாட்டில் சமைக்க வைத்தீர்களே அப்போது இதே போன்ற நம்பிக்கை ஜல்லிகள் எல்லாம் எங்கே முக்காடு போட்டு ஒளிந்திருந்தது.

    பார்பான் பிறரை சூத்திரன் என்று சொல்வதும் தான் ஒரு பார்பானின் நம்பிக்கை, அதைச் சரி என்று இன்றைய தேதியில் உங்களால் மார்தட்டிப் பேச முடியுமா ?

    ReplyDelete
  13. //பித்தனின் வாக்கு said...
    இது ஒரு ஆசன வகை, இது போல அமர்வது மிகவும் சிரமம். அய்யப்பன் இந்த ஆசனத்தில் தான் தவத்தில் அமர்வதாக பரசு ராமரால் வடிக்கப் பட்ட அமைப்பி இது. குதிகால்கள் இரண்டும் ப்ருஷ்ட்டதின் அடிப்பகுதியில் ஒட்டியும் முழங்கைகள் இரண்டும் இடையை ஒட்டியும். சின் முத்திரை காட்டி அமர்ந்து இருக்கும் கோலம். சத் என்ற மனித உடலும்(கட்டை விரல்) சித் என்ற ஆன்மா (நடுவிரல்) ஆனந்தம் என்னும் பரம்பொருளுடன் இனைவது போல் இனைந்த முத்திரை சின் முத்திரை. நம்மை எதிர் பார்ப்பது போல சற்றே அன்னாந்து குழந்தை முகத்துடன் சிரித்த வண்ணம், அவன் அழகு தனி. நெய் அபிஸேகத்தின் போது நிர்மால்ய தரிசனமாக பார்க்க ஆணந்தம். சார்.
    //

    ப்ருஷ்ட்டதின் - அப்படி என்றால் என்ன ?

    உட்காரட்டும் அதுக்குன்னு அப்படியே குந்தி இருக்கும் நிலையிலேயே முழுக்கு (அபிஷேகம்) செய்வது நல்லாவா இருக்கு ?

    ReplyDelete
  14. //இது ஒரு ஆசன வகை, //

    கடவுளுக்கே ஆசன வகையா!?

    அவருக்கு என்ன pile ஸ்சா!?

    புலி கறி நிறையா தின்னுட்டாரோ!?

    அப்படியே கக்கா போனா கால்ல ஒட்டிக்காது!?

    ReplyDelete
  15. //அப்படியே கக்கா போனா கால்ல ஒட்டிக்காது!?//

    ஆஹா ! என்னா ஒரு சந்தேகம்...

    நல்லா கேளுங்க தல !

    ReplyDelete
  16. //உங்களால் மார்தட்டிப் பேச முடியுமா ?//

    வேடிக்கை

    அவமானம்

    வெட்கம் !


    எத வேணாலும் தட்டி பேசலாம் !

    வாங்க
    வாங்க
    உக்காருங்க

    வந்த காலில் நிக்காதீங்க !

    ReplyDelete
  17. ஆஜர் பின்னூட்டம். படிக்கின்றேன்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.