Tuesday, November 10, 2009

எனக்கு புடிச்சா என்ன? புடிக்காட்டி என்ன

எனக்கு இந்தத் தொடர் விளையாட்டுக்கள் பிடிக்காது. ஏன் என்றால் இதனால் சற்றுப் பொழுது போவதைத் தவிரச் சொல்லவே, பகிரவோ எதுவும் இல்லை,என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். பதிவர்கள் இந்தத் தொடரில் என்ன எதிர் பார்க்கின்றார்கள் என்பதும் புரியவில்லை.
பதிவர்கள் இத்தொடரில் ஒருவரைப் பிடிக்காது என்பதால், அவருக்குப் பிடிக்காதவர் உணர்ந்து மாறிவிடுவாரா? அல்லது இவருக்கு பிடிக்கும் என்பதால்தான் தொடர்ந்து அப்படியே சேவை செய்யப் போகின்றாரா எதுவும் இல்லை, பின் எதுக்கு? சரி பிடிக்கும், பிடிக்காது என்பதை வைத்து ஒரு பதிவரின் குணாதியசத்தைக் கணக்கிடலாமா, என்றால் அதுவும் முடியாது. மனிதர்களில் பலரும் கடவுள் பாதி, மிருகம் பாதி வகைதான். வாய்ப்புக் கிடைத்தால் தவறு செய்யும் சராசரிகள்தான். ஆனாலும் பலரும் படிக்கும் பதிவில் தங்களின் கடவுள் குணத்தைத் தான் காட்ட முற்படுவார்கள். இதில் நாம் அவரைக் கணிக்க முடியாது. எதே பொழுது போகுது என்பதுதான் இத்தொடர்கள். எங்க மச்சானும் சந்தைக்குப் போனார் என்பது போல நானும் தொடர் போட்டேன் என சந்தோசப் படலாம், என்பதைத் தவிர வேற எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனக்கு சிலுக்கு ஸ்மிதா புடிக்கும் என்று எழுதினால் நான் கெட்டவனும் ஆகவும் மாட்டேன், கே ஆர் விஜயாவின் அம்மன் வேடம் புடிக்கும் என்றால் நான் நல்லவனும் இல்லை. பின் எப்படி கணிப்பது. நம் இதர பதிவுகள், கருத்துக்கள், பொதுவான எண்ணங்களில் யதார்த்தங்கள் ஆகியனவும், நம் நல்ல நடத்தையும் தான் நம்மை கணிப்பவை. நமது புறத் தோற்றங்கள் மற்றும் நமது வெளிப் பாடுகள் அல்ல. எனது இந்த கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

ஆனாலும் என்னை இத் தொடருக்கு அழைத்தது என் அன்புத்தங்கை சுசி, ஆதலால் நானும் இத்தொடரில் கில்லியடிக்கின்றேன். அப்புறம் அவர் போயும் போய் இந்தப் பைத்தியத்தைப் (பித்தன்)போய்க் கூப்பிட்டேன் பாரு என்று நினைக்கக் கூடாது அல்லவா. ஒளிவு மறைவு இன்றி மனம் திறக்கின்றேன்.

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்கள் :-காமராஜ், கக்கன்,தோழர் ஜீவானந்தம், இரா.செழியன்,நல்ல கண்ணு மற்றும் வை கோ ( மோடி எனக்கு பிடித்த தலைவர், அடால்ப் ஹிட்லரையும் மிகவும் புடிக்கும்)
பிடிக்காதவர்கள் :- ஊழலில் வயிறு வளர்க்கும், எந்த பிணம் திண்ணும் நாய்களையும் எனக்குப் பிடிக்காது.
2. எழுத்தாளர்
பிடித்தவர்கள் :- கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன்,சுஜாதா, பீ வி ஆர். சோ மற்றும் மாத்ரு பூதம் (புதிரா புனிதமா)
பிடிக்காதவர்கள் :- இளைஞர்களைக் கெடுக்கும் ஆபாச எழுத்தாளர்கள்.
(ஒரு வரியில் ஒன்பது தப்பு செய்யும் பித்தனின் வாக்கு சுதாகர்--எழுதுவதில் இன்னமும் திருப்தி வரவில்லை)
3. கவிஞர்:
பிடித்தவர்கள் :- கண்ணதாசன், வைரமுத்து, எழுத்தோசை தமிழரசி, கவிதாயினி ஹேமா, கலகலப் பிரியா மற்றும் கயல்விழி நடனம்.
பிடிக்காதவர்கள்:- ஆபாசப் பாடல்(இரட்டை அர்த்தம்) எழுதும் அனைவரும்.
4. இயக்குனர்:
பிடித்தவர்கள் :- நாகராஜ ராவ் (திருவிளையாடல் ) பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர். கர்ணன்(சிறிது ஆபாசம் இருக்கும்), மணிரத்தினம் அண்ட் மணிவண்ணன்.
பிடிக்காதவர்கள்:- ஜோஸி, கோபால கிருஷ்னன். (மக்கா ஒரு பிட்டுப் போட ஒருமணி நேரம் அறுப்பாங்க).
5. நடிகர்:
பிடித்தவர்கள் :- என்றும் சிவாஜி. அண்ணன் ரஜினி காந்த், விக்ரம், மம்முட்டி , கமல் (நடிப்பு மட்டும்)
பிடிக்காதவர்கள்: - சரியா சொல்லத் தெரியலை. நம்ம அருண் பாண்டியன்,ராஜ் கிரண் மாதிரி எல்லாத்துக்கும் ஒரே ஆக்சன் பண்ணுவபர்கள்.
6. நடிகை:
பிடித்தவர்கள் :- ஜெயந்தி, தேவிகா,வென்னிற ஆடை நிர்மலா, ஜெயப்பிரதா, பானுப் பிரியா, கனகா, சோபனா,மீனா மற்றும் கண்கள் அழகாய் உள்ள அனைத்துப் பெண் நடிகைகள்(பெண்களும்) பிடிக்கும். ஜெயபாரதி ரொம்ப புடிக்கும். சில்க் ஸ்மிதாவின் வசிகரமான கண்கள்.
பிடிக்காதவர்கள் :- இதுவும் கண்ணுதான், அதுல எப்பவும் கண்ணீர் கொட்டுற அழுகாய்ச்சி நடிகைகள் புடிக்காது உதாரணம் கண்ணாம்பா ஆனால் இவர் மிகவும் திறமையான நடிகை. கோலங்கள் அபி. சுஜாதா, வரலட்சுமி.
7.இசையமைப்பாளர்:
எல்லா மெலோடி இசையமப்பாளர்களையும் பிடிக்கும்.
சாவு மேளம், டப்பாங்குத்து இசைக்கும் இசையமைப்பாளர்களைப் புடிக்காது.
8. பாடகர்:

என்றும் யேசுதாஸ், வீரமணி, பாலமுரளி கிருஷ்னா, சீர்காழி கோவிந்தராஜன், டி எம் எஸ்,சிதம்பரம் ஜெயராமன், பிபி ஸ்ரீனிவாஸ். ஏ.எம்.இராஜா, அந்த குடுமி பாடகர் பெயர் என்ன அவரின் படல்கள் ரொம்ப புடிக்கும் (வென்னிலவே வென்னிலவே - மின்சாரக் கனவு)(கலோனிகல் கஸின்ஸ்)
பிடிச்ச லிஸ்ட் அதிகம் ஆனா பிடிக்காதவர்கள்- குத்து பாடும் பாடகர்கள்.
9. பாடகி:
பிடித்தவர்கள் :- பானுமதி, ஜமுனா, ஜானகி, சித்ரா, சாருலதா, அவரின் தங்கை(பெயர் தெரியவில்லை) , எல் ஆர் ஈஸ்வரி. எவர் கீரீன் பாடகி பி. சுசிலாம்மா, மகானதி சோபனா மற்றும் நித்தியஸ்ரீ.
பிடிக்காதவர்கள் :- நல்ல திறமை இருந்தும் காசுக்காக கத்தும் மாலதி (மன்மத ராசா). இன்னும் குத்துப் பாட்டில் முக்கி முனகும் பாடகிகள்.
10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்கள் :- ஸ்ரீகாந்த், யஸ்பால் ராணா, தெண்டுல்கர். ரெய்னா, அனில் கும்ளே, வெங்சங்கார், குண்டப்பா விஸ்வனாத். செக்ஸ் (சாரி) செஸ் ஆனந்த். நம்ம அண்ணாத்தே கபிலு. சின்ன அண்ணார் அஸாருத்தின்.
பிடிக்காதவர்கள் :- ஹாராத்து ஹர்பஜன் சிங், தலைக்கனம் சுனில் காவஸ்கர்,யுவராஜ் மற்றும் இரவி சாஸ்த்திரி.

அப்பாடி ஒரு வழியா முடிஞ்சது. எதோ நான் மூனு பேர டீல்ல விடனுமாம்மில்ல யாரை மாட்டலாம் ஆங்க்க்க்க்க்க்
மூனு பேரு வேண்டாம் நம்ம நாலு பேருக்கு நல்லது பண்ணமுன்னு பேரு வரனுமில்லை, அதுதானய்யா முக்கியம்

அந்த நாலு நல்லவிங்க யாருன்னா

நம்ம இளமுருகு தம்பி, (அப்பாவியை மாட்டி விடனும் இல்லையா)
நம்ம சுரு ஸ்ரீ சுவையான சுவை அக்கா,
நம்மளை அன்பாய் மிரட்டும் திருமதி.துளசி டீச்சர்.
அப்புறம் ஒரு நல்ல பையன் மாதவிப் பந்தல் கே ஆர் எஸ்.

நாலு படிச்சா ஒரு பதிவு இலவசம்,இலவசம்

எங்க ஊரு அம்மிணி, கொங்கு மண்ணின் சிங்கம், தாரையின் தங்கம், என் சமையலறையில் பதிவர், திருமதி தெய்வ சுகந்தி அவர்கள்.

ஹையா எதோ என்னால முடிஞ்ச ஜந்து பேரை மாட்டி விட்டுட்டேன்.

பின் குறிப்பு : எனது கருத்துக்களின் காரணமாக அல்லது நான் மாட்டிவிட்ட பதிவர்கள் யாராயிருந்தாலும் எனக்கு ஆட்டோ அனுப்பும் போது மருத்துவச் செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புமாறு அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்(கொல்கின்றேன்) - உங்களுக்காக இன்று இரண்டு பதிவுகள், அவன் தான் மனிதன் பாகம் 4 படிக்கவும் நன்றி.

48 comments:

  1. //( மோடி எனக்கு பிடித்த தலைவர், அடால்ப் ஹிட்லரையும் மிகவும் புடிக்கும்)//

    பொதுவாக அய்யங்கார்களுக்கு யூதர்களை தானே ரொம்ப பிடிக்கும்!

    ReplyDelete
  2. //பிடிக்காதவர்கள் :- இளைஞர்களைக் கெடுக்கும் ஆபாச எழுத்தாளர்கள்.//

    எது ஆபாசம்னு அவுங்கவுங்க வரைமுறைக்கு உட்பட்டது!
    மத வெறியை தூண்டுவது தான் ஆபாசம், அசிங்கம், மொள்ளமாறித்தனம், முடிச்சவுக்கிதனம்!

    ReplyDelete
  3. //பிடிக்காதவர்கள்:- ஆபாசப் பாடல்(இரட்டை அர்த்தம்) எழுதும் அனைவரும். //

    கண்ணதாசன் இரட்டை அர்த்தத்தில் பாடல் எழுதவேயில்லையாக்கும்!

    கடைசியா பட்டைய போட்டு அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவுடன் நல்லவராயிட்டாரோ!

    ReplyDelete
  4. //பிடிக்காதவர்கள் :- நல்ல திறமை இருந்தும் காசுக்காக கத்தும் மாலதி (மன்மத ராசா). இன்னும் குத்துப் பாட்டில் முக்கி முனகும் பாடகிகள்.
    10. விளையாட்டு வீரர்: //

    இலந்தபழம் பாட்டு பாடியவர் உங்கள் பிடித்த லிஸ்டில் இருக்கிறார்! அவர் காசுக்காக பாடினாரா!?
    இல்ல கலைச்சேவையா!?

    ReplyDelete
  5. கண்ணதாசன் மற்றும் வாலியின் பாடல்களில் இரட்டை அர்த்தம் இலைமறை காயாகவும், அர்த்ததுடனும் இருக்கும். விளையாட போலாமா பின்லேடா, முத்தம் கொடுக்க எந்த இடம்முன்னு இருக்காது.

    முதல் உலகப் போரில் யூரேப்பிய நாடுகள் ஜெர்மனியை கூறு போட்டு பங்கு போட்டதை அறிந்தால் ஹிட்லரின் கோபம் உங்களுக்குப் புரியும். அப்போது யூதர்களை காப்பாத்திய இஸ்ரேல்தான் இன்று அவர்களை கொல்கின்றது. ஹிட்லரை பற்றிய மேலை நாடுகளின் அவதூறுகளை மட்டும் நம்பாதீர்கள். அவரின் தனிப் பட்ட முறையில் தன் இனத்தின் மீதும் நாட்டின் மீதும் எவ்வளவு பாசம் வைத்துருந்தார் என்பது புரியும்.

    மாலதியின் முதல் இரசிகன் நான். அவர் லஷ்மன் சுருதி இன்னிசைக் குழுவில் முதலில் பாட வந்தபோது கரகேசம் செய்து ஆடி வாழ்த்தியவர்களில் நானும் என் நண்பர்களும். மாலதிக்கு இரசிகர் மன்றம் கூட வைக்கலாம் என்று இருந்தேன். அவரிடம் இந்த மாற்றம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. நான் அவரை உதாரணமாக கூறி அவரைப் போல உள்ள அனைவரும் என்றேன். அதில் நீங்கள் கூறும் எலந்த பழமும் அடங்கும் மாம்பழமாம் பாட்டும் அடங்கும்.

    நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  6. //கண்ணதாசன் மற்றும் வாலியின் பாடல்களில் இரட்டை அர்த்தம் இலைமறை காயாகவும், அர்த்ததுடனும் இருக்கும். விளையாட போலாமா பின்லேடா, முத்தம் கொடுக்க எந்த இடம்முன்னு இருக்காது.//

    மலை வாழை தொடை!
    அதில் நடுவே மச்சம்னு யார் சாமி எழுதியது!?

    ReplyDelete
  7. //முதல் உலகப் போரில் யூரேப்பிய நாடுகள் ஜெர்மனியை கூறு போட்டு பங்கு போட்டதை அறிந்தால் ஹிட்லரின் கோபம் உங்களுக்குப் புரியும்./

    நான் தான் மேலைநாடுகள் சொல்ரதை நம்புறேன்!
    நீங்க ஹிட்லருக்கு பக்கத்து ரூம்லயா தங்கியிருந்திங்க!

    லச்சகணக்கான யூதர்களை ஹிட்லர் கொல்லவில்லை, அவர்கள் நோய்வாய் பட்டு இறந்தார்கள் அப்படித்தானே!

    ReplyDelete
  8. //அப்போது யூதர்களை காப்பாத்திய இஸ்ரேல்தான் இன்று அவர்களை கொல்கின்றது//

    இஸ்ரேல் என்று ஒரே நாடே கிடையாது! அது முழுக்க முழுக்க யூதர்களால் உருவாக்கப்படது!

    அதுவே அவுங்களை கொல்லுதாக்கும்!
    தூங்கிகிட்டு இருக்கிங்களா, முழிச்சிகோங்க, கனவு தப்பு தப்பா வருது!

    ReplyDelete
  9. //மாலதிக்கு இரசிகர் மன்றம் கூட வைக்கலாம் என்று இருந்தேன்.//

    :)

    நிஜமாவே சிரிப்பு வந்துருச்சு!
    உங்க அப்பாவிதனத்தை பார்த்து!

    ReplyDelete
  10. மாலதி அவ்வளவு நல்லாப் பாடுவார். அவரின் நாடேடிப் பாடல்கள், தமிழ் பாடல்கள் அருமையாக இருக்கும். விஜயலஷ்மி நவனீதனின் இலக்கிய கிராமப் புற பாடல்களை மாலதி திறமையாக கச்சேரிகளில் பாடுவார். அண்ணாமலை அரங்கம், வாணி சீதை அரங்கம், அண்ணா சீரணி அரங்கம் என்று 1990 முதல் 1993 வரை அவரின் கச்சேரிகளை நாங்கள் போய்க் கேட்போம். நல்ல பாடகி, கல்லூரி மாணவி.

    ReplyDelete
  11. அப்போதைய யூதர்களின் செயல்களையும் படியுங்கள் நண்பரே. தமிழ் நாட்டில் மலையாளின் டீக்கடை போன்று ஜெர்மனியில் எல்லாம் யூதர்கள் மயம். சொந்த நாட்டில் ஜெர்மானியர்கள் யூதருக்கு அடிமையாக இருந்தார்கள். அரசு கூட யூதர்களின் பிடியில்தான் இருந்தது. ஆதலால் தான் யூதர்களுக்கு இடையிலான கொடுமைகளுக்கு ஜெர்மனியில் ஹிட்லருக்கு ஆதரவு இருந்தது. நான் ஹிட்லர் யூதர்களை கொடுமைப் படுத்தியதை நியாயப் படுத்தவில்லை, அதோ சமயம் அவன் சிறு வயதில் ஜெர்மனி இப்படித்தான் இருக்கவேண்டும் என வறுமையில் சித்திரங்கள் வரைந்து அதன் படி நாட்டை வல்லரசுகளுடன் போரிடும் வண்ணம் கொணர்ந்தான் என்பதுதான் என் கருத்து. நன்றி வால்ஸ். இப்போது இந்தியாவிற்கு தேவை ஹிட்லர் போல ஒரு தலைவன் தான். நன்றி.

    ReplyDelete
  12. //சொந்த நாட்டில் ஜெர்மானியர்கள் யூதருக்கு அடிமையாக இருந்தார்கள். //


    இதே மாதிரி தான் இந்தியர்கள் பிரிட்டிஷ்காரனுக்கு அடிமையாக இருந்தார்கள், அதற்கு முன் பாப்பான்கள் இந்து மதம் என்ற பெயரில் சாதிய முறையை ஏற்ப்படுத்தி மக்களிஅ அடிமையாக வைத்திருந்தார்கள், இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் அடிமை படுத்தி வைத்திருக்கீறார்கள்

    எல்லாத்தையும் ரூம்குள்ள விட்டு விஷவாயு அனுப்பி கொன்னுறலாமா!?

    ReplyDelete
  13. //யூதர்களுக்கு இடையிலான கொடுமைகளுக்கு ஜெர்மனியில் ஹிட்லருக்கு ஆதரவு இருந்தது. //

    அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை!
    பார்பனர்கள் உயர்சாதியினர் என்று பணம் கொழுத்த சீமான்களை கயில் போட்டு கொண்டு வறியவர்களை ஏய்க்கும் போது சீமான்கள் பார்ப்பான்களுக்கு ஒத்து ஓதினர், அதே போல் டெல்லியில் ஹிந்திக்கு ஆதரவு இங்கு வரை வந்து விட்டது, இதெல்லாம் கோயபல்ஸ் போன்றவர்களின் பொய்யான பொழிப்புரை,

    என்ன இருந்தாலும் ஹிட்லரும் கோயப்ல்ஸும் உங்களை போல ஆரியன் தானே, உங்களுக்கு அவர்களது வண்டவாளங்களை ஆதாரத்துடன் நிறுபித்தாலும் உங்களுக்கு நம்பமுடியாது!

    ReplyDelete
  14. //இப்போது இந்தியாவிற்கு தேவை ஹிட்லர் போல ஒரு தலைவன் தான். நன்றி. //

    உங்களை போல் பாப்பான்களை கக்கத்தில் வைத்து கொண்டு மற்றவர்களை விஷவாயு கொடுத்து கொள்வதற்கா!?

    ReplyDelete
  15. பிடிக்காதவர்கள் :- ஊழலில் வயிறு வளர்க்கும், எந்த பிணம் திண்ணும் நாய்களையும் எனக்குப் பிடிக்காது.////////////

    நச்

    பிடித்தவர்கள் :- என்றும் சிவாஜி. அண்ணன் ரஜினி காந்த், //////////


    அண்ணா நாமல்லாம் ஒரே குரூப்

    ReplyDelete
  16. பிடிக்காத பிடித்த பத்து ஒரு பெரிய லிஸ்ட் உண்டு போல‌

    எல்லாம் அருமையா போட்டு இருக்கீங்க.

    வாங்க வந்து என் பிளாக்கில் உங்கள் அவார்டை பெற்று கொள்ளுங்கள்

    ReplyDelete
  17. உங்களது பதிகளை பின்னூட்டத்திலேயே சொல்லவும், மெயிலுக்கு அனுப்ப வேண்டாம்!

    உரையாடல்களை இங்கே தொடருவது தான் சிறந்தது!

    ReplyDelete
  18. கிருத்திகா நீங்கள் ரஜினிகாந்தானந்தா என்று போட்டுள்ளதைப் பார்த்துத் தான் நான் பாலோயர் போட்டு வந்தேன். சொன்னாலும் சொல்லாட்டியும் நாம ஒரு ஜாதிதான் பதிவர் ஜாதி. நன்றி கிருத்திகா.

    ReplyDelete
  19. பிடித்தவர் பிடிக்காதவர்ன்னு உங்க ஆதங்கம் ஆத்திரம் எல்லாம் போட்டுக் கொட்டிட்டீங்க போல.வாலும் இங்க கலக்கிட்டு இருக்கார் உங்க கையோட.தலையங்கம் அசத்தல்.ம்ம்ம்....!

    ReplyDelete
  20. இங்கே வாதம் செய்தால் பதிவு நீளமாகி விடும். பின் டவுன்லோடு டயம் ஆகும் நண்பரே. நமது விவாதங்கள் முற்று பொறும் ஒன்று அல்ல. நீர் விடாக் கண்டன் நான் கொடாக் கண்டன். ஆகவே விவாதங்கள் முடியாது. அதற்கு பிளாக் இடமும் பத்தாது. சாட் தான் சரி.

    ReplyDelete
  21. நாம ரெண்டு பேர் மட்டும் உரையாட இந்த சப்ஜெக்ட் தேவையில்லை!

    பொதுவில் வைப்பதனால் நான் ரெடி!

    சாட்டில் வேறு கதை மட்டுமே!

    ReplyDelete
  22. உங்க பதில்கள்... கொளுத்துது!!

    வாலு உங்கள உட மாட்டாரு போலையே...ம்?

    ReplyDelete
  23. :)) விரிவான பதில்கள்!
    மாலதி பாடுவது - ஆர்கெஸ்ட்ராவில் பாடுவது எனக்கும் பிடிக்கும்!

    ReplyDelete
  24. நன்றி ஹேமா, மற்றும் சாருஸ்ரீராஜ். ஜலிலா விருது கொடுத்தமைக்கு நன்றி. பொற்றுக் கொள்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  25. நமது இந்த விவாதம் முடிவானது அல்ல வால்ஸ். நமது விவாதம் மட்டும் பல பதிவுகளாக வரும். அதனாலதான் யேசிக்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  26. நன்றி கலையரசன் மற்றும் சந்தன முல்லை சகோதரி.

    ReplyDelete
  27. அப்படியானால் அனுகுண்டு போட்ட மேலைனாடுகளின் படை தங்களை நியாயப் படுத்த கூறும் தகவல்களை நீங்கள் உண்மை என்று நம்புகின்றீர்களா.

    ிறிஸ்த்தவர்களே கிறிஸ்வர்களை தேவாலயத்தில் வைத்து கற்பழித்த சிலுவை போர் நடத்தியவர்கள் தங்களின் உலகப் போர் புளுகுகளை மட்டும் ஏற்ப்புடையதா?

    ொக்கேஸ்லாவியாயை ஒரு நாளில் பிடித்து போலந்தை ஓர் இரவில் பிடித்து, பிரான்ஸை இரு நாள்களில் வீழ்த்தி, பிரிட்டனை ஏறக்குறைய வென்று ரஷ்யா வரை சென்றது ஜெர்மானியர்களின் ஆதரவு இல்லாமல்லா. இதுவரைக்கும் ஹிட்லருக்கு ஒரு தமிழன் துணை செய்து வென்றது நீங்கள் அறியாததா. இதுக்கு அப்புறம் கருத்து வேறுபாட்டில் அந்த தமிழன் பிரிந்த அடுத்த நிமிடம் ஹிட்லர் தோல்விகளை சந்தித்தான் என்பதை சரித்திரம் மறைத்து விட்டது ஆனாலும் உண்மைகள் மறையாது வால்ஸ்.

    ReplyDelete
  28. தவறு நண்பரே பார்ப்பான் அல்ல சத்திரியர்கள் மக்களை அடிமையாக வைத்துருந்தனர். பார்ப்பான் அவனுக்கு துணையாக இருந்தனர். இந்தியா வெள்ளைக்காரகளை அடிமை கொண்ட போதும் அவன் பணம் மற்றும் செல்வம் தான் கொண்டு போனான். நம் நாட்டின் வேலை வாய்ப்புக்களை அவன் மொத்தமாக அபகரித்து நம்மை சுரண்டவில்லை. அவன் கற்றுக் கொடுத்த நிர்வாகம் தான் இன்னமும் நம்ம நாட்டில் நடக்குது. ஆனால் அவன் காலத்தில் சட்டத்திற்கு ஒரு மாட்சிமை இருந்தது. அதும் இப்போது இல்லை.
    இலங்கைத் தமிழர்களைப்(புலிகள்) பற்றி நான் இன்னமும் சரியான முடிவுக்கு வரவில்லை. சரியான இலங்கைத் தமிழரின் நட்பை தோடிக் கொண்டுள்ளேன். ஊடங்கள், பத்திரிக்கை தரும் தகவலை நான் நம்பத் தயாரில்லை.
     

    ReplyDelete
  29. //அப்படியானால் அனுகுண்டு போட்ட மேலைனாடுகளின் படை தங்களை நியாயப் படுத்த கூறும் தகவல்களை நீங்கள் உண்மை என்று நம்புகின்றீர்களா. //

    நேரடியான போர் வேறு, உள்நாட்டு இன அழிப்பு வேறு!, மேலும் வன்முறையை எந்த வடிவத்திலும் நான் ஆதரிக்கவில்லை!


    //ிறிஸ்த்தவர்களே கிறிஸ்வர்களை தேவாலயத்தில் வைத்து கற்பழித்த சிலுவை போர் நடத்தியவர்கள் தங்களின் உலகப் போர் புளுகுகளை மட்டும் ஏற்ப்புடையதா?//

    சிலுவை போர் நடந்தது உண்மை, அப்போது இம்மாதிரியான செயல்களும் நடந்திருக்கலாம், நான் இதை எப்போது ஆதரித்தேன்!, வன்முறை தவறு தான் என்ன காரணமாக இருந்தாலும்!

    //ஹிட்லருக்கு ஒரு தமிழன் துணை செய்து வென்றது நீங்கள் அறியாததா//

    உண்மையில் அறியாதது தான்! யார் அந்த தமிழன்!

    //இதுக்கு அப்புறம் கருத்து வேறுபாட்டில் அந்த தமிழன் பிரிந்த அடுத்த நிமிடம் ஹிட்லர் தோல்விகளை சந்தித்தான் என்பதை சரித்திரம் மறைத்து விட்டது //

    இருக்குற சரித்திர கதையை விட நீங்க சொல்ற சரித்திரம் படா சோக்கா இருக்குது!
    உக்காந்து யோசிப்பிங்களோ!

    ReplyDelete
  30. //சத்திரியர்கள் மக்களை அடிமையாக வைத்துருந்தனர். பார்ப்பான் அவனுக்கு துணையாக இருந்தனர்.//

    சத்திரியர்களுக்கு ஏன் பாப்பான் துணையாக இருக்கணும்!
    அண்டி பிழைக்கும் பழக்கம் இருப்பதால் தானே!

    வெள்ளைகாரனுக்கு நீங்கள் அடிக்கும் ஜால்ரா கூட நல்ல சத்தமா இருக்கே!
    ஏன் அவனும் ஆரியன் என்பதாலா!?


    //இலங்கைத் தமிழர்களைப்(புலிகள்) பற்றி நான் இன்னமும் சரியான முடிவுக்கு வரவில்லை. சரியான இலங்கைத் தமிழரின் நட்பை தோடிக் கொண்டுள்ளேன். ஊடங்கள், பத்திரிக்கை தரும் தகவலை நான் நம்பத் தயாரில்லை.//


    நீங்கள் எடுக்கும் முடிவால் ராஜபக்‌ஷே தனது முடிவை மாற்றி கொள்ளப்போவதில்லை!, முடிந்தால் இம்மாதிரி கட்டுகதைகளை வெளீயே அவுத்து விடாமல் இருந்தால் சரி!

    ReplyDelete
  31. //தமிழ் நாட்டில் மலையாளின் டீக்கடை போன்று ஜெர்மனியில் எல்லாம் யூதர்கள் மயம். //

    ஜெர்மனியர்களுக்கு யூதர்கள் மேல் இருந்த காண்டு, உங்களுக்கு மலையாளிகள் மேல் இருப்பது காட்டுது இந்த வாசகம், உங்களுக்கு அதிகாரம் கொடுத்தால் கேரளா அம்புட்டு தான் போலயே!

    //சொந்த நாட்டில் ஜெர்மானியர்கள் யூதருக்கு அடிமையாக இருந்தார்கள். //

    டீகடை யூதர்களுக்கு ஜெர்மானியர்கள் அடிமைன்னா, அந்த யூதர்கள் அம்புட்டு டேஸ்டாவா டீ போட்டாங்க!

    //அரசு கூட யூதர்களின் பிடியில்தான் இருந்தது. //

    ஹாஹாஹா!
    அது எப்படிங்க பாஸ் பிடியிலிருந்த அரசு திரும்பி அவர்களாஇயே கொன்று குவித்தது!
    ஒரு பழமொழி சொல்வாங்க, கேக்குறவன் கேனயனா இருந்தா.............

    ReplyDelete
  32. நாங்க யோசிப்பது இல்லை, அப்ப அப்ப படிப்பது. என் வலைத்தளத்தின் முகப்பு வரிகளைப் படியுங்கள். நான் கூறுவது உண்மை.

    செண்பக இராமன் பிள்ளை என்னும் தமிழர்தான் அவர். மேல்ஜாதி வர்க்கம் ஆதலால் மறைத்து விட்டார்கள். அவரும் ஹிட்லரும் ஒரு உடன் படிக்கை செய்தார்கள். அதன்படி பொறியாளரான இவர் ஹிட்லர் வெல்ல உதவி புரிவது, ஹிட்லர் பிரிட்டனை வென்று இந்தியாவிற்க்கு சுதந்திரம் அளிப்பது என்பதுதான்.
    அதன் படி எல்லாம் வென்றார்கள். ஹிட்லர் பிரிட்டனை வெற்றி கொள்ளும் நேரம் அவன் ஆனவன் பிரிட்டனை கோழிக்குஞ்சு என்றும் தனது யானைப் பசிக்கு ரஷ்யாதான் சரியான வேட்டை என்று யுத்தத்தின் பாதையை மாற்றினார். அது பிள்ளைக்குப் பிடிக்கவில்லை. ஹிட்லரை எதிர்த்தார். ஹிட்லரும் ரஷ்யா விழுந்தவுடன் பிரிட்டனும் வீழ்ந்து விடும் அதுவரை பிள்ளையை இந்தியாவில் இருக்கச் சொல்லி எம்டன் கப்பலில் அனுப்பினான். தனது கருத்துக்களை யாரும் எதிர்த்து அறியாத ஹிட்லர் தன்னை எதிர்த்துப் பேசிய பிள்ளையை மெல்லக் கொல்லும் ஆர்சானிக் விசம் சாப்பாட்டில் கலந்து கொடுத்து நமது மண்ணில் இறக்கி விட்டார்கள். பின்னாளில் அவர் உடல் நலம் கெட்டு மரணமடைந்தார். எம்டன் இந்தியாவில் குண்டு போடும் சாக்கில் வந்தது பிள்ளையை இறக்கிவிடத்தான். போர் புரியும் நேக்கில் அல்ல. நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  33. உண்மை வால்ஸ் அரசு அறிஞர்கள், அறிவியளார் எல்லாம் யூதர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆளுங்கட்சி யூதர்களின் தயவில் இருந்தது. ஒரு எதிர் கட்சி மாநாட்டில் சம்பந்தம் இல்லாமல் மேடை ஏறி யூதர்களுக்கு எதிராக முழங்கினார் ஹிட்லர். அப்போது பலரும் ஆர்வமுடன் கவனிக்க அந்த கட்சித் தலைவர் இவன் வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை, பீரங்கி குண்டுகள் வருகின்றது என்று கூறி அவரைக் கட்சியில் இணைத்தார். ஒரு சாதரண சிறுவன் ஜெர்மனியின் தலைவன் ஆனது இப்படித்தான்.
    நான் இலங்ங்கைப் பிரச்சனைப் பற்றிக் கூறியது எனது கருத்துக்களை உறுதிப் படுத்ததான், தவிர அது எந்த வகையிலும் மற்றவர்க்கு உதவாது. நான் கினற்றுத் தவளை என்னால் கத்த மட்டும் தான் தெரியும் நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  34. சென்பகராமன் எனக்கு புதிய தகவல்!
    மேலும் பிள்ளை என்பது உயர்சாதி என்று ஒரு பார்பனர் சொல்வது இன்னும் பெரிய தகவல்!

    உயர்சாதி பிள்ளைக்கு தலையில் ரெண்டு கொம்பு இருக்குமோ!

    சரி அதை விடுங்கள்,
    சென்பகராமன் பற்றிய சுட்டி கொடுத்தால் நானும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்வேன்!

    ReplyDelete
  35. //உண்மை வால்ஸ் அரசு அறிஞர்கள், அறிவியளார் எல்லாம் யூதர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. //

    இப்போ இந்தியா பாப்பான்களின் கையில் இருப்பது போலன்னு உதாரணத்துடன் விளக்கினால் சட்டென்று புரியும் இல்லையா!


    //ஒரு சாதரண சிறுவன் ஜெர்மனியின் தலைவன் ஆனது இப்படித்தான். //


    ஹிட்லர் ஒரு ஜெர்மானிய படைவீரன்!
    அரசியல் தலைவன் அல்ல!
    ஹிட்லர் ஆட்சியை பிடிக்கும் போதும் ஜெர்மானியர்களின் ஆட்சி தான் நடந்தது!

    நீங்க கோயபல்ஸுக்கு தம்பியான்னு இங்க ஒருத்தர் கேக்குறாரு!

    ReplyDelete
  36. திருநெல்வெலியிலும் தஞ்சையிலும் இருந்த சைவப் பிள்ளைமார் பார்ப்பனரைக் காட்டிலும் ஆசரம் பார்ப்பவர்கள். நெல்லை சைவப் பிள்ளைமார் பிராமனனைக் கூட மதிக்க மாட்டார்கள். அந்த வர்க்கத்தில் வந்தவர் செண்பகராமன் பிள்ளை.
    இந்திய சுதந்ரத்தின் ஆரம்ப கால கட்டத்தில் படித்தவர்கள் அதிகம் இருந்தது பார்ப்பனரும் பிள்ளைமாரும்தான். அதுபோல அரசாங்க உத்தியோகத்தில் வெள்ளையரிடம் போட்டி போட்டது இவர்கள் தான்.
    அதுபோல தமிழக சுதந்திர போராட்டத்தின் ஆரம்பத்தில் பாடுபட்டது இவர்கள்தான். தமிழகத்தின் முதல் சுதந்திர போராட்ட வீரர் யார் தெரியுமா? ஒரு பார்ப்பான் சுப்பிரமனிய அய்யர் என்பர்.
    சிப்பாய் கலகம் போராட்ட வரிசையில் சேராது. இப்போதுதான் அதை முதல் சுத்ந்திர போராட்டமாக சித்திரிக்கின்றார்கள்.
    1904 காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலர்ந்து கொண்டவர்களை தலைமை தாங்கி அழைத்துச் சென்றவர் இவர். இவரின் மூலமாகத் தான் வா வூ சி சுந்திர தாகம் பொற்றார். 1908 காங்கிரஸ் மாநாட்டில் பிளவு வந்த போது அவர் கோபால கிருஷ்ன கோகலே உடன் மித வாதியானார். இவர் அரவிந்தர், பாரதியார், வாவூசி அனைவரும் திலகரின் தலைமையில் தீவிர போராட்டத்தில் குதித்தனர். அப்போது உங்கள் தலைவர் காசியில் கஞ்சா குடித்து சுற்றிக் கொண்டு இருந்தார். பின்னால் வந்த அவர் காங்கிரஸ் பதவிக்கு வரும் வரை வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக இருந்த ஜஸ்டிஸ் கட்சி என்னும் நீதிக் கட்சியில் சிங்கிள் டீக்கு சிங்கி அடித்தார்.

    1930 வரை போராடிய இவர்கள்தான் இன்று ஓ ஸி பிரிவில் வாழ்க்கைத் தேவைக்கு போராடுகின்றார்கள். நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  37. // ஹிட்லர் ஒரு ஜெர்மானிய படைவீரன்!//
    ஹிட்லர் படைவீரன் அல்ல அவர் இரானுவதில் பணி புரியவும் இல்லை. இரானுவத்தை உற்சாகப் படுத்த மற்றும் ஆட்சியில் ஏறியவுடன் எடுத்த அவதாரம்தான் அது.

    அவர் ஓவியங்கள் வரைந்து அதை விற்றும் பல வேளைகளை புரிந்தும் தந்து தாயைக் காப்பாற்றி வந்தார். பின் ஒரு கட்சியில் இணைந்தார். முதலில் போட்டியிட்ட (கவுன்சிலர் மாதிரி) சிறு தேர்தலில் தோத்தார். பின் ஒரு பெரிய எலக்சனில் வென்றார். படிப்படியாக ஜெர்மனின் சான்சிலர் ஆனார். பின்னர் இரானுவத்தின் மூலம் சர்வாதிகாரி ஆனார். இதுதான் நடந்தது. நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  38. //திருநெல்வெலியிலும் தஞ்சையிலும் இருந்த சைவப் பிள்ளைமார் பார்ப்பனரைக் காட்டிலும் ஆசரம் பார்ப்பவர்கள். //

    ஆச்சாரம் என்ற வார்த்தையை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியதே பார்ப்பனர்கள் தான் தெரியுமோ!

    //நெல்லை சைவப் பிள்ளைமார் பிராமனனைக் கூட மதிக்க மாட்டார்கள். //

    என்ன செய்ய, சிலர் பட்டையைய போட்டுண்டு அழையுறேள், சிலர் நாமத்தை போட்டுண்டு அழையுறேள், உங்க சண்டையில இடையில யாராச்சும் வந்தா தீண்டாதகாதவானு ஒதுக்குறேள்!

    //இந்திய சுதந்ரத்தின் ஆரம்ப கால கட்டத்தில் படித்தவர்கள் அதிகம் இருந்தது பார்ப்பனரும் பிள்ளைமாரும்தான். //

    மத்தவாளை தான் வார்ணாசிரமம் காரணம் சொல்லி படிக்காம பண்ணி புட்டேளே! அந்த சென்பகராமன் குடும்பதார் கொஞ்சம் வசதியா இருந்திருப்பா, நமக்கு தான் சீமான்களுக்கு கூழ கும்பிடு போட்டு தானே பழக்கம், அதான் எதுவும் சொல்லாம விட்டுறுப்பேள்!

    //அரசாங்க உத்தியோகத்தில் வெள்ளையரிடம் போட்டி போட்டது இவர்கள் தான். //

    வெள்ளைகாரன் அதிகாரி பதிவியை யாருக்கும் தரல! அதற்கு அடுத்து இருக்கும் அல்லக்கை பதிவிக்கு தான் இந்தியாவில் ஆள்புடிச்சான், அதுக்கு பாப்பான் தான் சரியான ஆளுன்னு அவனுக்கு மூஞ்சை பார்த்தவுடனே தெரிஞ்சிருக்குமே!

    //தமிழக சுதந்திர போராட்டத்தின் ஆரம்பத்தில் பாடுபட்டது இவர்கள்தான். தமிழகத்தின் முதல் சுதந்திர போராட்ட வீரர் யார் தெரியுமா? ஒரு பார்ப்பான் சுப்பிரமனிய அய்யர் என்பர்.//

    பதவி எதாவ்து கேட்டுப்பா, தரலைன்னவுடனே போராட்டத்தை ஆரம்பிச்சிடாளோ!
    முதல்ல ஏன் ஓய் சாதிய ரீதியாக நாடு பிரிஞ்சி கிடந்தது, அது மட்டும் இல்லைனா எவனாவது உள்ள வந்துருக்க முடியுமா!?

    //சிப்பாய் கலகம் போராட்ட வரிசையில் சேராது. இப்போதுதான் அதை முதல் சுத்ந்திர போராட்டமாக சித்திரிக்கின்றார்கள். //

    அப்ப பார்பனர்கள் சண்டைய போவல, போயிருந்தா அப்பவே அது தான் முதல் போராட்டமா இருந்திருக்கும்!


    //உங்கள் தலைவர் காசியில் கஞ்சா குடித்து சுற்றிக் கொண்டு இருந்தார். //

    அது யாருங்க எனக்கு தலைவர்!
    ராமசாமியா!? ராமசாமி எனக்கு தலைவர்னு உங்களுக்கு எந்த கூமுட்டை சொன்னது!
    பாரதி கஞ்சா அடிக்கும் போது நான் இருந்தாலும் வாங்கி அடிச்சிருப்பேன்!
    முதலில் பாரதிக்கு தான் கஞ்சா குடுக்கி பட்டம் கொடுக்கனும்!


    //பின்னால் வந்த அவர் காங்கிரஸ் பதவிக்கு வரும் வரை வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக இருந்த ஜஸ்டிஸ் கட்சி என்னும் நீதிக் கட்சியில் சிங்கிள் டீக்கு சிங்கி அடித்தார்.//

    அதானே பாப்பான இருந்திருந்தா யாருக்காவது ஜால்ரா போட்டு பெரிய பதவியா வாங்கியிருப்பார் இல்லையா!
    என்னயிருந்தாலும் பாப்பானோடய ஏய்ப்பு புத்தி எல்லோரும் வருமா!?
    அது அவர்களூக்கே கைவந்த கலையாச்சே


    //1930 வரை போராடிய இவர்கள்தான் இன்று ஓ ஸி பிரிவில் வாழ்க்கைத் தேவைக்கு போராடுகின்றார்கள்.//

    அப்படி ஒன்னும் தெரியலையே!
    வசதியா இருக்குற பாப்பான் வெளிநாடு போயிடுறான்!, வசதி கம்மியா இருக்குற பாப்பான் லோக்கல் கோவிலில் ஏமாத்தி பிழைக்கிறான்!
    என்ன குறைஞ்சு போச்சு அவர்களுக்கு!

    ReplyDelete
  39. //ஹிட்லர் படைவீரன் அல்ல அவர் இரானுவதில் பணி புரியவும் இல்லை. இரானுவத்தை உற்சாகப் படுத்த மற்றும் ஆட்சியில் ஏறியவுடன் எடுத்த அவதாரம்தான் அது.//

    ராணுவ உடையிலின்றி வேறு உடையில் எந்த புகைப்படத்திலும் நான் பார்த்ததில்லையே!

    //பின்னர் இரானுவத்தின் மூலம் சர்வாதிகாரி ஆனார். இதுதான் நடந்தது.//

    பாகிஸ்தானின் முஸ்ரப் மாதிரி வேறு அரசியல்வாதிகள் ஆட்சியை பிடிக்க முடியாது! அதே போல் தான் அங்கேயும்! இராணுவத்திம் மூலம் தான் ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி தொடங்கியது!

    ReplyDelete
  40. அயராத பணிக்கு இடையிலும் தொடர் பதிவுக்கு அழைத்ததை ஏற்கிறேன்.

    ReplyDelete
  41. அண்ணா... முன்னாடி வந்து பாத்தேன்... ரொம்ப பிசியா இருந்திச்சு கடை... அதான் இப்போ வரேன்.

    நல்லா எழுதி இருக்கீங்க. இதுக்காகத்தான் தொடர் பதிவே எழுதிரதுங்கிறேன். ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  42. Antha kudumi padagar peyar "Hariharan".

    ReplyDelete
  43. விருது வழங்கிய சுதாகர் அண்ணன் அவரளுக்கு நன்றி

    ReplyDelete
  44. நன்றி அப்பாவி முருகு, தங்களின் வருகைக்கும் முதல் பின்னூடத்திற்க்கும் நன்றி காந்தி.

    நன்றி சுவையான சுவை, நன்றி சுசி. நேத்து நம்ம கடையில நல்ல வியாபரம்தான்.

    தகவலுக்கு நன்றி விஜி. தொடர் எழுதும்போது ஞாபகத்திற்க்கு வரவில்லை.

    ReplyDelete
  45. உங்கள் இருவரின் கருத்து பரிமாற்றம் பல தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக இருந்தது...என்னை பிடித்த கவிஞர் என்று சொன்னதில் மகிழ்ச்சி..என்ன பிடித்த பதிவர் என்று போட்டு இருக்கலாம் ஏன்னா அந்த வரியில் கண்ணதாசன் வைரமுத்து என்ற இரு மேதைகள் பக்கத்தில் என் பெயர்..அதான்...உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்கனும் என்பது ஆசை. நன்றி பித்தன்...

    ReplyDelete
  46. நன்றி. தங்களின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆதலால் சொன்னேன். யார் எழுதினாலும் நல்ல கவிதை அங்கிகாரம்தான் முக்கியம். எனது எழுத்துக்களையும் படியுங்கள். உங்களது கருத்துக்கள் எதுவானலும் வரவேற்க்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  47. என்னங்க நான் பாட்டுக்கு சமைச்சமா, அத படம் எடுத்தமா, ஒரு பதிவு போட்டமான்னு இருக்கறேன். பில்டப்பெல்லாம் பயங்கரமா கொடுத்து தொடர்பதிவு வேற எழுதச்சொல்லறீங்க. முயற்சி செய்யறேன்.

    ReplyDelete
  48. எனக்கு கூட தொடர்கள் பிடிக்காது, ஆனால் நம் கருத்துக்கள் அனைவருக்கும் செல்லும் அல்லவா,
    பில்டப் எல்லாம் கிடையாது. என்ன இருந்தாலும் நீங்க எங்க ஊரு, எங்களின் மருமகள் அல்லாவா.
    அதுதான் சிறப்பு. நன்றி தெய்வசுகந்தி.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.