Friday, October 23, 2009

நாங்களும் கிரிகெட் அடுவமில்லை

என்னங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா, இன்னைக்கு நம்ப நர்சிம் ஒரு கிரிக்கெட் மறுபதிவு போட்டு நம்மள கொஞ்சம் டென்சன் ஆக்கிட்டார். எனக்குள்ள இருக்கற பூனை முழிச்சுக்கிச்சு. அதுனால இன்னைக்கி நான் கில்லி சீய் கிரிக்கெட் விளையாடின சுவாரஸ்யமான விசயங்கள் தான் இந்த பதிவு. சும்மா சொல்லக்கூடாதுங்க நான் கிரிக்கெட் ரொம்ப நல்லா ஆடுவன். நான் ஒரு ஆல் ரவுண்டர் ஆக்கும். எங்க டீமின் ஒபெனிங் மட்டையாளர் மற்றும் பார்ட் டைம் பவுலர் நான். பரிசு கிடைக்குதே இல்லையே நமக்கு முழங்கால் முழங்கை, கால்ல கைல அடி நல்லா வாங்குவேன். பேட்டிங்க் பார்த்திங்கனா எங்க டீமில் நாந்தான் ஒபினிங் பாட்ஸ்மென். அப்பிடினு எனக்கு ரொம்ப பெருமை. அப்புறம்தான் தெரிஞ்சுது மக்கா என்னை இறக்கி பாஸ்ட் பவுலிங் எல்லாம் முடிஞ்சவுடன அவனுங்க வந்து அடிப்பாய்ங்க. நம்மல பலிகாடா ஆக்குனங்கா. பாட்டிங் நல்லா பண்ணுவன். நான் ஒபனிங் இறங்கப் போகும்போது, கேப்டன் சிவக்குமாரும், கார்த்தியும் வந்து என் கிட்ட கெஞ்சுவாங்க, சுதா தயவு செய்ஞ்சு கிராஸ் பேட் ஆடாத. ஸ்ரெய்ட் பேட் ஆடுன்னு. ஆமாங்க நான் ஸ்ரெய்ட் பேட் ஆடுன்னா டிராவிட் மாதிரி, என் விக்கெட்டை எவனாலும் எடுக்க முடியாது. அவ்வளவு மட்டை(டெக்) வைப்பன். என்னேட ஸ்ரெய்ட் பேட் டாப் ஸ்கேர் என்னன்னு சொன்னா உங்களுக்கு புரியும் 13 ஒவர் விளையாடி எட்டு ரன் எடுத்தேன். அதுவே கிராஸ் பேட் ஆடுன்னா நான் ஸ்ரீகாந்து மாதிரி பால் எல்லாம் பாக்கமாட்டேன் சும்மா காட்டுஅடிதான். கவர் டிரைவ், ஸ்கொயர் கட். ஒவெர் த ஹெட், ஹூக் சாட்னு சும்மா அடி மாத்துவன். மார்புல, கீல கால்ல நமக்கு விழுகிற அடியும் கணக்கு இல்லைங்க. கிராஸ் பேட் டாப் ஸ்கேர் 142 ரன் 79 பால்ல எடுத்துருக்கன். அதிக பட்சமா பசங்க எங்கிட்ட முதல் 10 ஒவெர் நிக்கனும், ஒரு 30 ரன் எடுத்தா போதும்னு சொல்லுவாங்க. என்னேட டார்கெட் 25 ரன் வரைக்கும் பொறுமையா ஆடுவேன், அதுக்கு அப்புறம் கிராஸ் பேட் இறங்கி ஒரு 10 15 ரன் எடுத்து அவுட் ஆகிடுவன். இதுதாங்க என் பேட்டிங்க் ஸ்டைல். எங்க ஊருல எங்க எம் ல் ஏ பையன் முருகேசன் ஒருத்தன் பயங்கர வேகப்பந்து வீச்சாளர். அவன் பந்துன்னா எல்லாரும் தொடை நடுங்குவாங்க, மக்கா என்னை ஒபனிங் சொல்லி இறக்கி விட்டாங்க, எனக்கும் நடுக்கம்தான் சும்மா ஒரு துனிச்சல்ல நின்னேன். ஒவெர் போடுறதுக்கு முன்னாடி எங்கிட்ட வந்து சுதாகரு நீயா பேசாம ஓடிப்போய்டுன்னான். முதல் ஒவெர் முதல் பால் போட்டான். பந்து சாட் பிச்சுல பவுன்சர்,எனக்கு தலைக்கு குறி வைத்து, அப்ப ஹெல்மட் எல்லாம் கிடையாது. நானும் கண்ணை மூடிக் கொண்டு ஒரு ஹீக் சாட் சுத்தினேன், என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியாது. எங்க டீம் பசங்க எல்லாரும் கைதட்டி ஒரே சத்தம் என்னனு பார்த்த பந்து பேட்ல பட்டு கீப்பர் தலைக்கு மேல பறந்து சிக்ஸருங்க. இதுதான் நான் அடித்த முதல் சிக்ஸர்.
அவன் வந்து என்னை முறைத்துப் பார்த்து போய் மறுபடியும் மிடில் அண்ட் லெக்ல ஒரு பாஸ்ட் பால். நான் இம்முறையும் பல்லை கடித்துக்கொண்டு ஒரு லெக் டிரைவ் செய்ய பந்து பவுண்ட்ரிக்கு பறந்து விட்டது. அவன் கடுப்பாகி விட்டான். அடுத்த பால் ஸ்ரெட் யார்க்கர், நான் லாங் மிட் ஆப்பில் டிரைவ் செய்ய பால் மிஸ் ஆகி என் மிடில் ஸ்டெம்பை காலி செய்தது. முருகேசன் வந்து பரவாயில்லை சுதா ஒல்லிப்பிச்சான் மாதிரி இருந்துகொண்டு என் முதல் பால் சிக்ஸ் அண்ட் ஃபேர் அடித்தது நீதான் என்றான் சிரித்துக் கொண்டு. இதுதாங்க நம்ம பேட்டிங் ஸ்டைல்.

பவுலிங் பார்த்திங்கன நான் மிதவேகம் மற்றும் ஸ்பின் ரெண்டும் போடுவங்க, நான் போடுற பால் ரொம்ப வேகம் இருக்காது, பாக்க சும்மா அல்வா கணக்கா சுலேவா வரும், ஆனா டுவிஸ்ட் அதிகமா இருக்கும். பால் லட்டு மாதிரி இருக்குன்னு பேட்டா தூக்கினா போதும் ஒன்னு ஸ்டெம்ப் இருக்காது இல்லை காட்ச் ஆகிடும். நமக்கு ரைட் ஆர்ம் பவிலிங் வித் ஸ்விங் தான் முக்கியம். ஆப் கட்டர், லெக் கட்டர் பால் தான் என் போவரைட். என் பால் நான் உயரம் கம்மியா இருப்பதால் முழங்காலுக்கு மேல எழும்பாது. ஆதாலால் என் பாலை சாட் செய்வது ரொம்ப கடினம். நான் பவுலிங் போடும் போது பேட்ஸ்மென்னை நல்லா ஏமாத்துவேன். முதல் பால் லொ ஸ்ரெய்ட் டெலிவரியா இருக்கும். இரண்டாவது பால் அவுட் சைடில் ஒரு ஷாட் பால் போடுவேன், அவனும் சும்மா ஒரு பேர் அல்லது இரண்டு ரன் எடுப்பான். மூன்றாது பாலும் நேராக போடுவேன். நாலாது பால் தான் என் பேவரைட் பால். இரண்டாது பால் போலவே அவுட் ஆப் ஸ்டெம்ப் பால் வித் ரிவர்ஸ் ஸ்விங் இன் கட்டர் ஆக இருக்கும். என் இரண்டாவது பால் நினைப்பில் அவனும் சுற்றுவான் ஆனா பால் இன் கட் ஆகி ஆப் அல்லது மிட்டில் ஸ்டெம்ப் தூக்கிடும். அல்லது பேட்ல பட்டு பால் நேராக மேலே எழும்பி காட்ச் ஆகும். ஸ்பின் பவுலிங் பார்த்திங்கனா பால் சும்மா லட்டு கணக்கா மெதுவா வரும் ஆனா ஸ்விங்க் ரொம்பா அதிகமா இருக்கும். கொஞ்சம் அஜாக்கிரதையா அடினா பால் சுத்திக்கிட்டு காட்ச் போகும். என் ஒவெர்னா உசார் ஆகிடுவாங்க டேய் பால் சுத்தும்டா பார்த்து ஆடுன்னு சொல்லறது எனக்கு கேக்கும். வாலிபால் கூட நான் சர்வீஸ் ஸ்விங் பண்ணிதான் போடுவேன். செர்வீஸ் எடுப்பது ரொம்ப சிரமம். கையின் நடுவில்(பேர் ஆர்ம்) தான் சர்விஸ் எடுக்கனும் இல்லைனா பால் அவுட்லைனில் போய்விடும்.
இதுதாங்க நம்ம பவுலிங்க ஸ்டைலு.

நான் சென்னைக்கு வந்தவுடன் எங்க அண்ணன் விளையாடும் டீமில் நானும் பந்து பொறுக்கி போட போவேன். அப்ப ஒரு மேட்சில் ஆள் இல்லைனு சொல்லி என்னைக் கூட்டிப் போனாங்க. நானும் ஆசையாக போனேன். ஆனா கிரவுண்ட்ல போனதும், வரமுடியாதுன்னு சொன்ன ஆளுக எல்லாம் வந்ததால என்னை சும்மா உக்கார வைச்சுட்டாங்க. நான் உக்காந்து வேடிக்கை பார்ப்பது இல்லாமல் கீப்பருக்கு பின்னால பந்து பொறுக்கி போட்டு இருந்தேன். அந்த 30 ஒவர் மாட்சில் 15 ஒவெர் முடிந்தவுடன், எங்க டீம் 85க்கு 6 விக்கெட் போய் இருந்தது. அப்ப என்னை போய் லெக் அம்பரிங் பண்ண சொன்னார்கள். நானும் விளையாடத கடுப்பில் போய் நின்னேன். அப்ப சீனு அண்ணாதான் 35 ரன் எடுத்து டீமின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிக் கொண்டுடிருந்தார். அப்ப திடிர்னு விக்கெட் கீப்பர் ஒரு பாலை காட்ச் செய்து ஸ்டேம்பிங்கும் பண்ணி அவர் யாதார்த்தமாக அவுட் கேக்க நான் பதார்த்தமாக அவுட் கொடுத்தேன். சீனு அண்ணா என்னை முறைத்துக் கொண்டு போய்விட்டார். மாட்ச் முடிவில் நாங்க தேத்துப் போய்ட்டேம். சீனு அண்ணா என்னிடம் ஏண்டா அவுட் கொடுத்தாய் எனக் கேக்க நான் ஸ்டெம்பிங்கு கொடுத்தேன் எனக் கூற அவர் தலையில் அடித்துக் கொண்டு "அடப்பாவி அவன் அவுட் கேட்டது காட் பிகேண்ட்டுக்குடா" அப்பிடினு சொன்னார். எல்லாரும் என்மேல கடுப்பாகி டீம் தேத்ததுக்கு காரணத்தை என்மேல போட்டுட்டாங்க. நானும் ஒருத்தருக்குத்தான் அவுட் கொடுத்தேன் மத்த எல்லாம் ஏன் விளையாடுல்லைனு ஆர்கியு பண்ண, அதுக்குள்ள எதிர் அணி கேப்டன் வந்து உங்க எல்லாருக்கும் சாப்பாடு செய்து வச்சுருக்கேம். சாப்பிட்டுப் போங்க என்றான். எங்க எல்லாருக்கும் ஆச்சரியம்,ஏன்னா அவங்க எங்கிட்ட முதல்ல சொல்லவில்லை. எங்க பசங்க வெளியில் சாப்பிட தயங்கினாங்க.அங்க பக்கத்துல்ல வீடு அதனால அவங்க அம்மா வந்து தம்பி உங்க டீமில ஜயமாரு பசங்க இருக்கிறதா சொன்னாங்க அதுனால நாங்களும், பூண்டு மசாலா இல்லாம சுத்தமா குளிச்சு சமையல் பண்ணியிருக்கேம், மறுக்காம சாப்பிடுங்க என்றார். எங்க ஆளுங்க அந்த அம்மாவின் அன்புக்கு கட்டுப்பட்டு நாங்க அனைவரும் சாப்பிடப் போனேம். அங்க சாப்பாடு, கல்யான சாப்பாட்டை தேக்கடிக்கும் விதமாக பிரமாதமாக செய்துருந்தார்கள். எங்க பசங்க கூச்சத்தை விட்டு வெட்டினார்கள். அப்ப அந்த அம்மாவிடம் சாப்பாடு அருமையாக இருக்கு நன்றி எனக் கூற அவர்களும் உங்க டீமில் ஜயரு பசங்க வராங்கனு சொன்னதும், நான் பக்கதுத்து வீட்டு ஜயரம்மாவை வைத்து சமையல் பண்ணிணேன் என்றார். எங்க டீமில் வந்து சாப்பிடும் இந்த 13 பேரும் ஜயருங்கதான். இன்னைக்கி அம்மாவாசை, நீங்க 13 பிராமினர்களுக்கு சாப்பாடு போட்டுருக்கீங்க, உங்களுக்கு ரொம்ப புண்ணியம் கிடைக்கும் என்றார். அதைக் கேட்டது அந்த வீட்டு அய்யா இன்னைக்கு அமாவாசையா, நீங்க எல்லாரும் ஜயருவூட்டு புள்ளையானு ஆச்சரியப்பட்டு சட்டையை மாட்டிக்கிட்டு வெளிய போனார். நாங்களும் சாப்பிட்டு முடிக்க அவரும் கையில வெத்தலை வாங்கி வந்து எங்க எல்லாருக்கும் 11 ரூபாய் தட்சனை, ஒரு தேங்காய், பழம் எனக் கொடுத்தார். எங்க டீமில் எல்லாரும் கூச்சப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அன்பிற்கு கட்டுப்பட்டு எல்லாரும் வாங்கிக் கொண்டேம். எங்க டீம் பசங்க நம்மளும் ஒரு நாள் கூப்பிட்டு எதாது செய்யனும்டா என்று அடுத்த மாதம் மாட்ச் ஆடி ஜயித்து அவர்களுக்கு எங்க சித்தி வீட்டில் விருந்து கொடுத்தேம். நாங்க தச்சனை கொடுக்கவில்லை.

டிஸ்கி:
1.இதுக்கு அப்புறம் சீனு அண்ணா என்னை கிண்டல் பண்ணுவது இன்னமும் நிற்கவில்லை. நான் எதாது பேசினால் டேய் உன்னைப் பத்தி தெரியுமுடா நீ காட் பிகேண்ட்டு ஸ்டெம்பிங் கொடுத்தவந்தன் தான என்பார்.
2. இந்த டீமில் விளையாடிய மூவர் இப்ப டாக்டர்கள், இருவர் அமெரிக்காவில் பொட்டியும்,இருவர் பொங்களூரில் பொட்டியும் தட்டுகின்றார்கள். என் அண்ணா அனுமின் நிலைய விஞ்ஞானி. ஒருவர் எல்லைப் படையில் எஞ்சினியர். இருவர் மத்திய அரசு அலுவலர். ஒருவர் இஸ்ரேவில் எஞ்சினியராக உள்ளனர்.
3.இந்த பதிவுக்கு என்னை வால்ஸ் கண்டிப்பா திட்டுவார்.
4. நமக்கு கேரளா, கர்னாடகா கொடுக்காத தண்ணி எல்லாம் என் மூக்கில் ஒழுகி ப்புளு வந்துவிட்டதால் இரண்டு நாளாக பதிவு எழதவில்லை. இப்ப பராவயில்லை, டிரை காப் மட்டும் உள்ளது.
நன்றி.

14 comments:

  1. 11 ஐயருங்களுக்கு சோறு போட்டா புண்ணியம் கிடைக்கும்னு எந்த கூமுட்டை சொன்னது!

    பிச்சை எடுக்குறது பதிலா இப்படி ஒரு புது டெக்னிக்கா!?
    உழச்சு சாப்பிடனும் அய்யனுங்களே உழைச்சு!

    ReplyDelete
  2. //நான் போடுற பால் ரொம்ப வேகம் இருக்காது, ஆனா டுவிஸ்ட் அதிகமா இருக்கும் //

    அட நீங்களும் நம்ம வகையா?

    ReplyDelete
  3. இப்போ எப்டி இருக்கு சுதாண்ணா? டாக்டர பாத்தீங்களா?

    பதிவு நல்லா இருக்கு.

    ஹிஹிஹி... எனக்கு கிரிக்கட் பத்தி எதுவும் தெரியாது...

    ReplyDelete
  4. நல்லா இருக்கம்மா. நான் மாத்திரைகளும், இரண்டு நாள் ஓய்வும் எடுத்துக் கொண்டேன். தற்போது நலம். கிரிகெட் பார்க்கத் தெரிந்தால் போதும்.நன்றி.

    ReplyDelete
  5. ஆமாங்க, எனக்கு உயரம் பிளஸ் பாடி பவர் கம்மி. ஆதலால் நான் டெக்னிக்கல் பவுலிங் தான் போடுவேன். நன்றி.

    ReplyDelete
  6. கலக்கல் பதிவு... உங்கள் வயிறு நிறைந்தது போலவே என் நனசும் நிறைந்தது இந்த பதிவைப் படித்து....

    ReplyDelete
  7. நன்றி, திரு. பித்தன் அவர்களே

    ReplyDelete
  8. தலைவா
    நீங்க இப்படி சொல்லுவிங்கனு எனக்கு நல்லாத் தெரியும். அதுனாலதான் பிங்குறிப்புல அவங்க எல்லாரும் நல்லா படிச்சவங்க நல்ல வேலையில் இருகின்றார்கள். என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டேன். பகுத்தறிவு சொறிதலைப் பத்தி எனக்கு தெரியாதா?. நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  9. பிராமனர்கள் என்ற பதம் குறிப்பிட்ட சாதியினருக்கு பொருந்தாது எனில், நீங்கள் பிராமனன் இல்லை, உங்களுக்கு சோறு போடுவதால் யாருக்கும் புண்ணியமும் இல்லை. மற்றபடி நீங்கள் உழைத்து சாப்பிடுபவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

    மற்றபடி நானும் கிரிக்கெட்டர் , விக்கெட் கீப்பர்.

    ReplyDelete
  10. நன்றி அய்யா. இது அவர்கள் செய்த மரியாதை. நாங்கள் மறுக்க முடியாமல் உடன்பட்டேம். அவகள் காட்டிய கனிவும், பேசியவிதமும் எங்களை மறுக்க வைப்பதாக இருந்தது. இந்த கூட்டத்தில் நால்வர் தவிர அனைவரும் இன்றளவும் தினமும் இருமுறை சந்தியாவந்தனம் செய்து வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பவர்கள். நல்லவர்கள் கூட. நான், என் பெரியப்பா மகன், மற்றும் இருவர் மட்டும் போலிகள்.

    ReplyDelete
  11. //தினமும் இருமுறை சந்தியாவந்தனம் செய்து வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பவர்கள். //

    சந்தியா என்றால் ”காதல்” பட கதாநாயகியா?

    ReplyDelete
  12. நம்ம பெளலிங்க பேஸ் பண்ணிருந்தா இப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டீங்க :-)

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.