கண்களில் சிரிக்கும் நீ
நிஜமாய் சிரித்த போது
அந்த அழகின் மயக்கத்தில்
நான் மயங்கி நின்றேன்.
அழகாய் பாடும் நீ
உன் வார்த்தைகள் யாவும்
பாடலாய் நினைத்துக் கேட்டு
நான் தயங்கி நின்றேன்.
மானாய் ஆடும் நீ
உன் ஆட்டத்தைக் கண்டு
மயிலா இல்லை மானா
என்று வியந்து நின்றேன்.
கோலம் போடும் நீ
உன் விரல் அழகு கண்டு
இது விரலா இல்லை தூரிகையா
எனக் குழம்பி நின்றேன்.
நடந்து செல்லும் நீ
நடக்கையில் உனைப்
பார்த்து இது தேரா இல்லை அன்னமா
என்று மருங்கி நின்றேன்.
காலமும் கோலமும் மாற
இது நானா இல்லை பித்தனா
ஏன் இப்படி எனக் கேட்டுக் கேட்டுக்
டாஸ்மார்க்கில் கவிழ்ந்து விழுந்தேன்.
ஆஹா..41லயா ? ரைட்டு தல.
ReplyDeleteஅருமை.
அருமை
ReplyDeleteஅருமையான வரிகள்...
ReplyDeleteபித்தன்னு பெயர் வர இதுதான் காரணமா?
இவ்ளோ ஸ்பீடா போகாதீங்க ப்ளீஸ்... சட்டைய புடிச்சுக்கிட்டு பின்னாடி ஓட முடியல.... :))))
// ஆஹா..41லயா ? ரைட்டு தல.//
ReplyDeleteநன்றி நரசிம், இது இப்ப வந்த கவிதை அல்ல, கல்லூரிக் காதலியின் நினைவால் எழுதப்பட்ட ஒன்று. சகோதரி ஹேமாவின் காதல் கவிதைகளைப் படிக்கும்போது அவள் நினைவு வந்து எழுதிய ஒன்று. இன்னமும் கவிதை எழுதியிருகின்றேன் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.தோழமைக்கு நன்றி.
// பித்தன்னு பெயர் வர இதுதான் காரணமா?//
ReplyDelete// இவ்ளோ ஸ்பீடா போகாதீங்க ப்ளீஸ்... சட்டைய புடிச்சுக்கிட்டு பின்னாடி ஓட முடியல.... :)))) //
நன்றி தங்காய். இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம், ஆனால் நான் பித்தன் என்று பெயரிட காரணம், என்னுடைய ஆன்மிக பயணங்களும், கடவுள் என்னிடம் விளையாடியதும் ஒரு காரணம். என் ஆன்மீகப் பயணங்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து எழுவுள்ளேன். நான் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் எழுதுவதால், படிக்கும் பதிவர்கள் டிரையல் ஆகிவிடுவார்கள் என்று திரு வால்பையன் மற்றும் திரு. இளமுருகு ஆகியேர் என்னிடம் கூறினர். இப்ப நீங்களும் சொல்லியிருக்கீங்க ஆதலால் இனி நான் தினமும் ஒரு பதிவு மற்றும் சமையல் குறிப்பு ஒன்றும் எழுதுகின்றேன். படித்து என்னை வழி நடத்துங்கள்.
//ஆஹா..41லயா ? ரைட்டு தல.
ReplyDelete//
நர்சிம்,
41 ம் எத்தனை ஆண்டுகளாக என்று தெரியவில்லை.
:)
//ஆஹா..41லயா ? ரைட்டு தல.
ReplyDelete//
நர்சிம்,
41 ம் எத்தனை ஆண்டுகளாக என்று தெரியவில்லை.
நன்றி கோவியார். நான் திரைத்துறையில் இல்லை, மறைக்கவும் இல்லை. ஆதலால் எனக்கு 41 வயது மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. எனக்கு உன்மையான வயது பதினேட்டுதான் ஆகின்றது. (எனக்கு அல்ல என் மனதுக்கு)