சென்ற சமையல் பதிவில் நான் புளியம்பூ தொக்கு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த பதிவில் பூவுக்கு அப்புறம் காய் பற்றிப் பார்ப்போம். ஆமாங்க வித்தியாசமான புளியங்காய் சட்டினி எப்படி பண்ணறதுன்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. பத்து அல்லது இருபது முற்றிய புளியங்காய்கள்.
2. இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்.
3. உப்பு
தாளிக்க :
1.கடுகு, வெள்ளுத்தம் பருப்பு,பெருங்காயம் தேவைப் பட்டால் கறிவேப்பிலை.
செய்முறை:
முதலில் புளியங்காய்களை அலம்பி, பின் காய்களை இரண்டாக ஒடித்து அல்லது நறுக்கி அதன் மேல் தோல் அல்லது கடினமான பக்குகளை நீக்கி பின் கொட்டையின் மேல் உள்ள சதைப்பற்றான பாகத்தை மட்டும் கத்தியின் உதவியால் எடுக்க வேண்டும். இந்த சதைப் பற்றான பாகத்தை(கொட்டை நீக்கிய) இரண்டு அல்லது மூன்று(காரம் தேவைக்கு ஏற்ப) பச்சை மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைக்கலாம். கொஞ்சம் மைய அரைக்காமல் விழுதாய் அரைத்தல் நலம். இந்த விழுதில் நாம் திருப்புமாறி (தாளித்து) கொட்டவேண்டும். பெருங்காயத்தூள் வாசனைக்காக தாளிக்கும் போது சேர்க்கவும். ஒரு சிலர் கடாயில் தாளித்து காடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதில் விழுதை போட்டு இளம் சூடு செய்வதும் உண்டு. பச்சையாகவும் சாப்பிடலாம்.
இது கலந்த சாதம் மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் இட்டு பிசைத்து உண்ணலாம்.
பின் குறிப்பு : இது கடுமையான சூடு என்பதால் குளிர் காலத்தில் செய்யவும். சூடு என்பதால் ஒன்று இரண்டு தடவை வயிற்றுப் போக்கு ஏற்ப் பட வாய்ப்புள்ளது. பிபி உள்ளவர்கள் தவறாமல் மாத்திரை போட்டுக் கொள்ளவும்.
பூ, காய் முடிந்தது அடுத்த பதிவில் வித்தியாசமான புளிக்குழம்பு பற்றிப் பார்க்கலாம். நன்றி.
ரைட்டு.. அப்படியே டப்பா கஞ்சி காய்ச்சுவது எப்படி, பேட்டரி தண்ணிக்கு தேவையான பொருட்கள்ன்னு பதிவு போட்டா நாங்களும் சந்தோஷப்படுவோம் :)))
ReplyDelete// ரைட்டு.. அப்படியே டப்பா கஞ்சி காய்ச்சுவது எப்படி, பேட்டரி தண்ணிக்கு தேவையான பொருட்கள்ன்னு பதிவு போட்டா நாங்களும் சந்தோஷப்படுவோம் :))) //
ReplyDeleteஅண்ணா அது எனக்கு பண்ணத் தெரியாது. சொல்லிக் கொடுத்திங்கனா பதிவா போட்டு சமுக சேவை செய்யலாம்.
ரொம்ப நன்றி தல!
ReplyDeleteசொன்னதுக்காக உருப்படியா ஒரு பதிவு போட்டு என் நாக்கில் எச்சில் ஊற வைத்ததற்கு!
அச்சோ.....புளிக்குது.நல்லாயிருக்குமா?
ReplyDeleteஇங்க சீனர்களின் கடைகளில் புளியங்காய்கள் வாங்கலாம்.செய்து பார்க்கிறேன்.
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.......... இப்போவே கண்ண கட்டுதே........
ReplyDeleteகொஞ்சம் புளிக்குமோ? இங்க கிடைக்காது. ஆனா ரொம்ப விளக்கமா எழுதி இருக்கீங்க.
ReplyDelete// கொஞ்சம் புளிக்குமோ? இங்க கிடைக்காது. ஆனா ரொம்ப விளக்கமா எழுதி இருக்கீங்க. //
ReplyDeleteபுளிக்கும் ஆனா உப்பு காரம் வேண்டிய அளவு சேர்த்தால் புளிப்பு குறையும்.
புளிப்பும் கசப்பும் கூட சுவைகள்தனே.
// அச்சோ.....புளிக்குது.நல்லாயிருக்குமா?
ReplyDeleteஇங்க சீனர்களின் கடைகளில் புளியங்காய்கள் வாங்கலாம்.செய்து பார்க்கிறேன். //
சரி செய்து பார்த்துட்டு சொல்லுங்க. சாப்பிட நல்லா இருக்கும். நன்றி.
// ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.......... இப்போவே கண்ண கட்டுதே..//
ReplyDeleteஆகா கண்ணை கட்டுதா!!!! சப்பிட்டுப் பாருங்க வயித்த கலக்கும். நன்றி.
// ரொம்ப நன்றி தல!
ReplyDeleteசொன்னதுக்காக உருப்படியா ஒரு பதிவு போட்டு என் நாக்கில் எச்சில் ஊற வைத்ததற்கு! //
இன்னும் வித்தியாசமான சமையல் எல்லாம் இருக்கு. படிங்க.
நீங்க என் குரு, நீங்க சொல்லி போடாம இருப்பனா.