இன்று நான் சந்தோசமாக உணருகின்றேன். வலையுலகில் திரு குடுகுடுப்பையாரின் கல்லூரி அனுபவங்களைப் படித்த நான், பிடுங்க ஆணி இல்லாததால் நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து, எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரி வடிவேலு சொன்ன மாதிரி நடக்கலாம் என்று ஆரம்பித்தேன். பின்னால் வலையுலகில் பல நண்பர்கள் ஆதரவு கிடைக்க ஊக்கமும் பெற்றேன். முகம் தெரியா சகோதரிகளின் ஆதரவு இன்னமும் ஒரு கூடுதல் ஊக்கமாக அமைய எழுத ஆரம்பித்தேன். எதிலும் வித்தியாசமாக செய்யவேண்டும் என்ற நினைப்பில் உள்ள நான் அதுபோல எழுதவும் ஆரம்பித்தேன்.
முதலில் சுசி என்னை அண்ணா என்று அழைத்து ஆனந்தப் படுத்தினார். மேனகா சத்தியா என் சமையல் பதிவுகளை ஊக்கப் படுத்தினார். பின் சந்தன முல்லை சகோதரி எனக்கு விருது அளித்து எனது மகிழ்வை ஆரம்பித்து வைத்தார். அடுத்த சில தினங்களில் குடுகுடுப்பை என்னை எதோ எழுதுகின்றேன் என்று ஒத்துக் கொண்டு அறிமுகம் செய்தார். நானும் யாரைப் பார்த்து எழுத ஆரம்பித்தனோ அவரின் அறிமுகம் கிடைத்ததில், வசிட்டன் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைத்தாற் போன்று மகிழ்வு அடைந்தேன். கடந்த 16.10.09 அன்று எனது கவிதையான இவளும் ஒரு கற்புக்கரசியை தமிழிஷ் வலையுலகம் தன் முதன்மைப் பக்கத்தில் வெளியிட்டு என்னை சிறப்பித்தது. மிக்க மகிழ்வடைந்தேன்.
இந்த தருனத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மிக்க நன்றிகளை தெரியப் படுத்திக் கொள்கின்றேன்(கொல்கிறேன்). நன்றி................நன்றி.
பின் குறிப்பு: எனது எல்லா பதிவுகளையும்(கொடுமைகளையும்) பெறுமையாக படித்து பின்னூட்டமும் இட்ட வால்பையனுக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன். அவரின் வலி நீங்க ஒரு ஸ்பெசல் நன்றி. வலை அமைத்த முருகுவிற்கு ஒரு வடை பிளஸ் நன்றி.
சும்மா கடமை பட்டுள்ளேன்னா என்னாங்க அர்த்தம்!
ReplyDeleteஊருக்கு வந்து கடலை மசால் வாங்கி கொடுங்க!
இதுபோல் சின்ன சின்ன ஊக்கங்கள்தான் ஒரு படைப்பாளியை வழி நடத்துகிறது.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகண்டிப்பா தலைவா ஊருக்கு வரும்போது நான் உங்களை சந்திக்கின்றேன். அடுத்த முறை தாராபுரம் வரும்போது கண்டிப்பாக நான் அங்கு வருகின்றேன். நன்றி.
ReplyDeleteநன்றி பித்தன் அவர்களே.
ReplyDeleteஎங்கள் எண்ணங்களைக் கிறுக்க ஊக்கம் தந்தவர்களை உண்மையில் மறக்கமுடியாது.
ReplyDeleteஉங்கள் சந்தோஷத்தோடு நானும்.
மன்னிக்கவும் ஹேமா என் நன்றிப் பட்டியலில் தங்களின் பெயர் விடுபட்டு விட்டது என்பதை தாமதமாக உணர்ந்தேன். தாங்களும் நான் கவிதை எழுத ஒரு காரணம். உங்களுக்கு இந்த பின்னூட்டத்தின் வாயிலாக நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
ReplyDeleteஅண்ணா.... அவ்வ்வ்வ்வ்.... இது ஆனந்த கண்ணீர்....
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா.
நீங்க பின் தொடரும் லிஸ்ட்ல என் பதிவு பேர காணோம். அவ்வ்வ்வ்..... இது ஆ. க கிடையாது.... :)))
ReplyDelete/ஊருக்கு வந்து கடலை மசால் வாங்கி கொடுங்க!/
ReplyDeleteவெறும் கடலை மசால் மட்டும் போதுமா?
சொன்னது மெய் தானா? அது எங்க வால் தானா?
வாழ்த்துக்கள் ப்ரதர்!!நிறைய விஷயங்கள் எழுதி பகிர்ந்துக் கொள்ளுங்கள் எங்களுடன்....
ReplyDeleteவணக்கம், திரு பித்தன்,
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவுகள் வெகு அருமை. நான் கற்றுக்கொள்ள உங்களிடம் இன்னமும் நிறைய இருக்கிறது. எனது வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து ஊக்கம் தருகிறீர்கள். அதற்கு என் நன்றி என்றென்றும் உரித்தாகும். வாழ்க, வளர்க.
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com
நன்றி சுசி, நான் உங்களின் யாவரும் நலம் வலைப்பதிவை பின் தொடருகின்றேன். இது இல்லாமல் வெறு வலைப்பதிவு உள்ளதா? இருந்தால் தெரியப்படுத்தவும்.
ReplyDeleteஇது அந்த கடலைமசாலாவின் சிறப்பு சார். ஒருமுறை அந்த கடையில் சாப்பிட்டால், ஈரொடு போகும்போது எல்லாம் சாப்பிட தோன்றும். நான் சமையல் பதிவில் எப்படி செய்வது என்று போட்டுள்ளேன். செய்து சாப்பிட்டுப் பாருங்கள். நன்றி தங்கள் வருகைக்கும் தோழமைக்கும்.
ReplyDeleteநன்றி சகோதரி. நான் இன்று வெள்ளரிப் பிஞ்சு மசாலா பற்றிப் போடவுள்ளேன். படித்து செய்து பாருங்கள் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
ReplyDeleteவணக்கம், திரு. அஸ்வின் ஜி. நான் ஒர் வலைக்க்ழுவில் மூன்று மாத குழந்தைதான். ஆனாலும் என் மனதிற்கு படுவதை எழுதி வருகின்றேன். தங்களின் வருகைக்கும் தோழமைக்கும் நன்றி.
ReplyDelete///ஊருக்கு வந்து கடலை மசால் வாங்கி கொடுங்க!/
ReplyDeleteவெறும் கடலை மசால் மட்டும் போதுமா?
சொன்னது மெய் தானா? அது எங்க வால் தானா? //
சரக்கு என் செலவுல வாங்கிகிவேன் சார்!
அதுகெல்லாம் நண்பர்களை தொந்தரவு செய்யக்கூடாது!