வணக்கம். நான் இன்று முற்றிலும் வித்தியாசமான ஒரு மாலை நேர நெறுக்குத் தீனி பற்றிய பதிவு இது. கண்டிப்பாக செய்யவும். செய்வதும் வெகு சுலபம். அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வெள்ளிரிக்காய்யில் நாட்டுவெள்ளரி, மலை வெள்ளரி என இரண்டு வகை உண்டு. நாட்டு வெள்ளரி இளம் பச்சை நிறத்தில் மிகவும் மென்மையாக நீளமாக இருக்கும்( லேடிஸ் பிங்கர்ஸ் போல). மலை வெள்ளரி குண்டாக தடிப்பாக கரும் பச்சை மற்றும் வெள்ளை வரிகள் இருக்கும்(குண்டான லேடிஸ் பிங்கர்). பச்சடி செய்யப் பயன்படும். நாட்டு வெள்ளரி மிகவும் மென்மையாக நிறைய நீர் பற்றுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது. மிளகாய் பொடியுடன் தொட்டு சாப்பிடலாம். இந்த நாட்டு வெள்ளரிதான் நம் வெள்ளரிப் பிஞ்சு மசாலாவுக்கு ஏற்றது. சாப்பிட மென்மையாக இருக்கும், கிடைக்காதவர்கள் மலை வெள்ளரியில் செய்யலாம், ஆனால் சாப்பிட கொஞ்சம் தடிப்பாக இருக்கும். நல்ல பிரஷ்னான ஆறு நாட்டு வெள்ளரிகளை வாங்கவும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1. நாட்டு வெள்ளரிப் பிஞ்சு 6,
2. பொட்டுக் கடலை 100கிராம்
3. மிளகு 15
4.உப்பு தேவையான அளவு.
5.புளி மிகவும் சிறிதளவு.
தாளிக்க :
1.கடுகு
2.எண்ணெய்
3.கறிவேப்பிலை.
4.பெருங்காயத்தூள் அரைப் ஸ்பூன்.
5.வெள்ளுத்தம் பருப்பு.
முதலில் வெள்ளரிப் பிஞ்சுகளை நன்றாக அலம்பி, நீர் உலர்ந்தவுடன் அதனை நீள வாக்கில் இரண்டாக வெட்டிப், பின் குறுக்கு வாக்கில் சிறு சிறு துண்டுகளாக அரைவட்ட வடிவில் நறுக்கவும். மலை வெள்ளரி அல்லது அரைவட்டவடிவம் பெரியதாக இருந்தால் அதனை இரண்டாக முக்கோண வடிவில் நறுக்கவும். முக்கியமாக ஒவ்வெறு வெள்ளரிக்காய் நறுக்கும்போதும் அதில் சிறு துண்டை கசக்கிறதா எனப் பரிசேதிக்கவும். ஒரு வெள்ளரிக்காய் கசந்தாலும் மொத்தமும் வீணாகிவிடும். நறுக்கிய வெள்ளரிக் காய்களை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போடவும். இனி பொட்டுக்கடலை, மிளகு தேவையான அளவு,புளி, உப்புப் போட்டு மிக்ஸியில் தூளக அரைக்கவும். மைய பவுடராக அரைக்காமல் ஒரு தொன்னூறு சதவிதம் உதிரியாக அரைக்கவும். உப்பு சப்பிட்டுப் பார்த்து கலக்கும்போது கூட போட்டுக்கலாம். ஆதலால் கொஞ்சமாக போடவும். அரைத்த பொடியை வைத்துக் கொண்டு, பொடியில் புளி தனியாக இருந்தால் வெளியில் எடுத்து போட்டுவிடுங்கள். இனி தாளிக்க ஆரம்பிக்கவும்.
மூன்று ஸ்பூன் எண்ணெயில் கடுகு, கொஞ்சம் வெள்ளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் மற்றும் கறுவேப்பிலை போட்டு தாளித்து வெள்ளரியில் கொட்டிக் கலக்கவும். பின் அரைத்த பொடியைப் போட்டு கலக்கவும். பொடியை சிறிது சிறிதாக போட்டு நல்லா சமனிலையாக கலக்கவும். கலந்தவுடன், ஒரு கப்பில் போட்டு ஸ்புனுடன் சாப்பிடக் கொடுக்கவும். கலந்த சில நிமிடங்களில் வெள்ளரிக்காய் தண்ணீர் விட்டு விடும். ஆதலால் ரொம்ப நேரம் கலக்காமல் உடன் கொடுக்கவும். அப்படியும் சாப்பிட்டு முடிக்கும் போது தண்ணீர் விடும். ஆனால் அதுவும் சுவையாக இருக்கும். நான் அந்த தண்ணிரைக் கூட வழித்து சாப்பிடுவேன். கலந்தவுடன் சப்பிட்டால் அதன் சுவை அருமை.
கவனிக்கவும்: உப்பு அளவு பார்த்துப் போடவும். அதுபோல மிளகு காரமும் பார்த்துப் போடவும். ஒருமுறை செய்தால், இரண்டாம் முறை உங்களுக்கு அளவு பழகிவிடும். புளி போடவில்லை என்றால் கொஞ்சம் எழுமிச்சை சாற்றை நேரடியாக வெள்ளரித் துண்டுகளில் கலக்கவும். இது சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும், ஒருமுறை நீங்கள் செய்து கொடுத்தால் மறுமுறை காய்கறி அங்காடியில் இந்த நாட்டு வெள்ளரியைப் பார்த்தால் அவரே வாங்கி வந்துவிடுவார். செய்து பார்த்து மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.நன்றி.
இது சரக்குக்கு நல்ல சைடிஷ்ஷாக இருக்குமா!?
ReplyDeleteமிளகு காரம் சேர்த்துப் போட்டால் நல்லா இருக்கும் பாஸ். ஆனா நான் முயற்ச்சி செய்த்தது இல்லை. நன்றி.
ReplyDeleteம்ம் புதுமையா பொட்டு கடலை சேர்த்து இருக்கீங்க, சூப்பர் தான் ,
ReplyDeleteசரி சரி மெரினா பீச்சுல பட்டாணி சுண்டல், மாங்காய் போல ஒரு கடய போட்டு விட வேண்டியது தான்.
கண்டிப்பாய் செய்து பாருங்கள். இதன் சுவை உங்களுக்கு புடிக்கும். கடை போடலாம்(கைவசம் தொழில் இருக்கு) ஆனா நான் இருக்கிறது சிங்கபூர்ல ஆச்சே. நன்றி.
ReplyDeleteஇது நல்லா இருக்குண்ணா...
ReplyDeleteவீட்டுக்கு போனதும் உடனையே செஞ்சு பாத்துடுறேன். :))))
மலை வெள்ளரி,நாட்டு வெள்ளரி பத்தி தெரிந்துக்கொண்டேன்.நன்றி உங்களுக்கு!!அவசியம் இந்த குறிப்பை செய்து பார்த்து சொல்றேன்..
ReplyDeleteபடிக்கும் பொது எனக்கும் வால்பையன் கேட்டது போலவே கேட்ட தோன்றியது.
ReplyDeleteஆகவே நான் முயற்ச்சி செய்து பார்த்து விடுகிறேன் இந்த வாரம் :-))
நல்ல பகிர்வுக்கு நன்றி.
படிக்கும் போது எனக்கும் வால்பையன் கேட்டது போலவே கேட்ட தோன்றியது,
ReplyDeleteஆகவே நான் முயற்ச்சி செய்து பார்த்து விடுகிறேன் இந்த வாரம் :-))
நல்ல பகிர்வுக்கு நன்றி.
epdinne.. samayal padhivula ellam kalakkureenga...
ReplyDeleteenaku suduthanni vaikurathe porattam than...
நன்றி கனகு அவர்களே. இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் வண்ணம் உதவினால், தானக பழகிவிடும்.
ReplyDeleteநான் எங்க அண்ணி 5பேருக்கு ஒரு ஆளாக சமைக்கின்றார் என்று காய்கறி நறுக்குதால் பேன்ற சின்ன உதவிகள் செய்ய ஆரம்பித்தேன். பின் அவர் ஒரு வருட காலம் மகப்பேறுக்கு சென்றபோது, எங்க அண்ணாவும் நானும் சமைத்து சாப்பிட்டேன். அவர்களிடமும் மற்றவர்களிடமும் இருந்து கற்றுக் கொண்டதுதான் இந்த பதிவுகள். நன்றி.
மலை வெள்ளரி,நாட்டு வெள்ளரி பத்தி தெரிந்துக்கொண்டேன்.நன்றி உங்களுக்கு!!அவசியம் இந்த குறிப்பை செய்து பார்த்து சொல்றேன்..
ReplyDeleteநன்றி சகோதரி. கண்டிப்பாக செய்துபாருங்கள்.அத்துடன் அதைப் பற்றி பின்னூட்டமும் இடுங்கள். நன்றி.
// இது நல்லா இருக்குண்ணா...
ReplyDeleteவீட்டுக்கு போனதும் உடனையே செஞ்சு பாத்துடுறேன். :)))) //
நன்றி சுசி, கண்டிப்பாக செய்து பாருங்கள், அதனுடன் அதைப் பற்றி பின்னூட்டமும் இடுங்கள். நன்றி.
செய்துபார்த்துடுவோம், குறிப்பும் விளக்கமும் சூப்பர்..
ReplyDeleteநன்றி. சகோதரி மல்லிகா.
ReplyDeleteநல்லாருக்கும்போல இருக்கே.
ReplyDeleteசமைக்கவும் சுலபம்தான்.
அருமை :))
ReplyDeleteகண்டிப்பாக நல்லா இருக்கும் ஹேமா, செய்து சாப்பிட்டுப் பாருங்கள். நன்றி.
ReplyDeleteநன்றி ஸ்ரீமதி. தங்களின் வருகைக்கு.
உங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.
ReplyDeleteகடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.
அது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா?
வாழ்துக்கள் தலைவரே.உங்கள் நட்ற்பணி தொடரட்டும்.
துபாயில் இருந்து உடுமலை அப்துல்.
உங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.
ReplyDeleteகடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.
அது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா?
வாழ்துக்கள் தலைவரே.உங்கள் நட்ற்பணி தொடரட்டும்.
துபாயில் இருந்து உடுமலை அப்துல்.