Tuesday, October 13, 2009

கடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்

ஞாயிற்றுக் கிழமை மாலைவேளைகளில் வீட்டில் இருந்து டீ வீ பார்த்து, திண்பண்டங்கள் கொறித்து வெளிய சுத்துற பணத்தை மிச்சப் படுத்தலாம். குடும்பத்தினருடன் சந்தோசமா இருக்கலாம். விருந்தினர்கள் வந்தாலும் இந்த கடலை மசாலாவை செய்து கொடுத்து மகிழ்விக்கலாம். ஈரோட்டில் இரண்டு கடைகளில் மட்டும் இந்த கடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர் விற்க்கும். அதில் ஒரு கடை என் பெரிய அக்கா வீட்டின் அருகில் இருந்தது. என் அக்கா பெண் மற்றும் என் நாலாவது அண்ணிதான் இந்த ஜட்டத்தை அவர்களிடம் கேட்டு வீட்டில் செய்ய ஆரம்பித்தார். அந்த சுவையான ஜட்டத்தின் விளக்கம் இது.

தேவையான பெருட்கள் :
1. பொட்டுக் கடலை 100கிராம்.
2.தேங்காய் அரைமூடி.
3.காராபூந்தி 1/4 கிலோ,
4.காரக்கடலை 100கிராம்,
5. ஓமப்பொடி 100கிராம்,
6.பெரிய வெங்காயம் 6,
7.பச்சை மிளகாய் 3,
8.தட்டுவடை 10.(கொட்டியாக இல்லாமல் சன்னமாக இருக்கவேண்டும்)
9. அச்சுமுறுக்கு 10.(காரமுறுக்கு கிடைத்தால் நன்று)
10. கெட்டித்தயிர் 4 கப்.(தயிர் மிக்ஸருக்கு).(தயிர் புதுசாகவும், ரொம்ப புளிப்பு இல்லாமல்)
11.கொத்தமல்லி கொஞ்சம்.

பலகார வகைகளை கடையில் சிறு பாக்கொட்டுகள் வாங்கலாம்.

செய்முறை:
முதலில் கடலை மசாலாவைப் பார்ப்போம். முதலில் பெரிய வெங்காயத்தை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக (பைன் சோப்பிங்க்)நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் தேங்காயை கீறி அதனை துறுவல்கள் ஆக்கி அதனுடன் பச்சைமிளகாய், பொட்டுக்கடலை சிறிது தேவையான அளவு உப்பு,
பெருங்காயம், சிறிது(குறைவாக புளி) ஆகியவற்றை சேர்த்து விழுதுபோல(பேட்டர்) அரைக்க வேண்டும். இந்த விழுது இட்லிக்கு பண்ணும் சட்டினி போல் அல்லாமல் தேங்காய் அதிகமாகவும் கடலை கம்மியாகவும் இருக்கவேண்டும். பின் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். கொத்தமல்லியை நல்லா சிறிதாக நறுக்கவும். இப்ப கடலை மசாலா பண்ண ஆரம்பிக்கலாம்.

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் முதலில் ஒரு பிடி நறுக்கிய சிறு வெங்காயத்தை இட்டு, அதில் ஒரு பிடி பூந்தி, பத்து காரக்கடலையும் போட்டு, இரண்டு தட்டுவடை இரண்டு அச்சு முறுக்கு ஆகியவற்றை கையால் சிறு துண்டுளாக பொடித்துப் போடவும். நல்லா ஒரு கலக்கு கலக்கிவிட்டு பின் அரைத்த விழுது இரண்டு ஸ்பூன் போட்டு நல்லா கலக்கி ஒரு சிறு தட்டில் கொட்டி அதன் மீது ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியை தூவிக்கொடுக்கவும். பச்சை மிளகாயைக் கம்மியாக போட்டு பெப்பர் சால்ட் போட்டும் சாப்பிடலாம். மொத்தமாக கலக்குவதை வீட ஒவ்வெறுத்தருக்கும் தனியாக கலக்கினால் சுவையாக இருக்கும். மொத்தமாக கலக்கினால் சரியா ஒட்டாது. அதுவும் இல்லாமல் ரொம்ப ஊறி விடும். இதை கலந்த ஒரு சில நிமிடங்களில் சாப்பிடுவது நல்லது. அல்லது விழுதையும் வெங்காயத்தையும் கலக்கி ஜந்து நிமிடம் கழித்தும் மற்ற ஜட்டங்களை கலக்கி சாப்பிடலாம்.

தயிர் மிக்ஸர் : பண்டிகையின் போது நிறைய மிக்ஸர் மீதி இருந்தால் அதனுடன் ஒரு பிடி பூந்தியும் சேர்த்து, மேலே சொன்ன மாதிரி வெங்காயத்தூள், (அச்சு முறுக்கு,தட்டுவடை,தேவைப் பட்டால்) கொஞ்சம் விழுது சேர்த்து கலக்கி அதனுடன் ஒரு கரண்டி தயிரும் சேர்த்து கலக்கவும். தயிர் ரொம்ப கொட்டியாக இல்லாமலும், ரொம்ப தண்ணியாக இல்லாமலும், தயிர் வடை தயிர் போல இருந்தால் நன்று. ஓமப்பொடி,கொத்தமல்லி, கொஞ்சம் உறைக்கும் அளவிற்கு பெப்பர் சால்ட் போட்டு சாப்பிடவும்.
இதுதான் சுவையான கடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர் ஆகும். நாளை வித்தியாசமான மசாலா பொரி பண்ணுவதைப் பார்ப்போம். அப்படியே நான் இன்று கொடுத்திருக்கும் கல்யாண நகைச்சுவை பதிவையும் படிக்கவும். நன்றி.

18 comments:

  1. வாரம் ஒரு முறையாவது நானும், என் பாஸ் கார்த்திக்கும் போய் சாப்பிட்டு வருவோம் தல!

    இனி வீட்டிலேயே முயற்சித்து பார்கிறேன்!

    ReplyDelete
  2. // இனி வீட்டிலேயே முயற்சித்து பார்கிறேன்! //
    இங்க எனக்கும் அங்க வந்து சாப்பிட ஆசையாக இருக்கு. நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  3. செய்வதற்க்கு ரொம்ப ஈஸியா இருக்கு.செய்து பார்க்கிறேன் பித்தன்!!

    ReplyDelete
  4. இன்னும் எரிச்சலா இருக்கு அண்ணா... நீங்க சொன்ன எந்த ஐட்டமும் இங்க வாங்க முடியாது :) ஆனா நீங்க எழுதின விதம் சாப்பிடும் ஆவல கூட்டுது.

    ReplyDelete
  5. நல்லாத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.செய்து சாப்பிடவோ வாங்கிச் சாப்பிடவோ சந்த்ர்ப்பமேயில்லை.

    ReplyDelete
  6. நான் ஈரோடு வந்தப்ப எனக்கு வாங்கியே கொடுக்கலியே - வாலும் சரி அவங்க பாஸூம் சரி - வாங்கிக் கொடுக்கலே

    ReplyDelete
  7. அப்படியா வால்ஸ விடாதிங்கா கேளுங்க, அங்க கடலை மசால்,தயிர் மிக்ஸர்,மசாலா முறுக்கு, காளான், பிரட் மசாலா எல்லாம் நல்லா இருக்கும். ஆனா இது எல்லாம் இரவு ஏழு மணிக்கு மேலதான் கிடைக்கும். கையேந்திபவன் கடை. ஆதலால் அவர் அழைத்துசென்றுருக்க மாட்டார்.
    தங்களின் வருகைக்கும் தோழமைக்கும் நன்றி.

    ReplyDelete
  8. சுசி உடம்பை பார்த்துக்கே. தேங்காய் எண்ணெய்யும், பர்னாலும் தடவுங்க. தீவாவளிகு மிக்ஸர் பண்ணா அல்லது இந்தியா வந்தா செய்து பாருங்கள். நல்லா சுவையாக இருக்கும்.

    ReplyDelete
  9. முயற்ச்சி செய்யவும், இந்தியாவில் இருந்து நண்பர்கள் வரும்போது வாங்கச் சொல்லி செய்து பார்க்கவும். நன்றி ஹேமா

    ReplyDelete
  10. கண்டிப்பா செய்யவும் மேனகா, ரொம்ப நல்லா இருக்கும். வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நன்றி மேனகா சத்தியா.

    ReplyDelete
  11. //இது எல்லாம் இரவு ஏழு மணிக்கு மேலதான் கிடைக்கும். கையேந்திபவன் கடை. ஆதலால் அவர் அழைத்துசென்றுருக்க மாட்டார். //

    கையேந்தி பவனாக இருந்தாலும் அழைத்து சென்றிருப்போம்!
    ஆனால் சீனா ஐயாவோ காலில் சுடுதண்ணி ஊத்தாத குறையாக அவசரப்படுகிறார்!, அங்கிருந்து நேரமாக கோவை செல்ல வேண்டுமென்று மதிய உணவுக்கு பின் விடை பெற்றுவிட்டார்!

    இருந்திருந்தால் இன்னும் பல இடங்களுக்கு அழைத்து சென்றிருப்போம்!

    ReplyDelete
  12. என்னுடைய பள்ளி நாட்கள் நினைவிற்கு வருகிறது...... இத்தனை நாட்களுக்கு பிறகும் இவை தொடர்வது ஆச்சரியம் தான். (கிட்டதட்ட25 வருடங்கங்களுக்கு முன்பு சாப்பிட்டிருக்கிறேன்.சமீபத்தில் சென்றிருந்தேன் ஆட்கள் சிலர் மாறி இருக்கிறார்கள்...கடைகளும் இரண்டு மூன்றாகி விட்டது)

    ReplyDelete
  13. சாப்பிட்டதில்லை!! முயற்சி செய்வோம்!!

    ReplyDelete
  14. உங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.

    கடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.

    அது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா?

    ReplyDelete
  15. உங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.

    கடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.

    அது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா?

    ReplyDelete
  16. உங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.

    கடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.

    அது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா?

    ReplyDelete
  17. எங்க அம்மா, அண்ணி அனைவரும் நன்றாக சமைப்பார்கள். கடைகளில் விற்கும் இதுபோன்ற திண்பண்டங்கள் கூட வீட்டில் செய்து சாப்பிடுவேம். தங்களின் வருகைக்கும் தோழமைக்கும் நன்றி.

    ReplyDelete
  18. samayalilum asaththuringka!!!
    http://susricreations.blogspot.com

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.