Thursday, October 29, 2009

அந்த பயங்கர நாள் - சுனாமி 2

நான் இந்த பதிவு எழுதும் முன் சதுங்கப்பட்டினம் என்ற அந்த ஊரைப் பற்றிக்கூற வேண்டும். இந்த ஊரை நீங்கள் அனைவரும் கேள்விப் பட்டுருக்கமாட்டீர்கள். ஆனால் அனைவரும் ஒரு வரி உங்களின் ஏழாம் அல்லது எட்டாம் வகுப்பில் படித்துருப்பீர்கள்.
ஆம் முதன் முதலில் நம் நாட்டிற்கு கடல் வழி கண்டுபிடித்து வந்த போர்த்துக்கீசியர்கள், நம் நாட்டில் மூன்று இடங்களில் தங்களது கோட்டை மற்றும் பண்டகசாலைகளை கட்டினார்கள். தரங்கம்பாடி, கோழிக்கோடு மற்றும் சதுங்கப்பட்டினம் என்று படித்துருப்பீர்கள். அந்த சதுங்கப்பட்டினம் தான் இந்த ஊர். இங்கு அவர்களின் கோட்டை ஒன்றும் உள்ளது. பின்னாளில் இதை ஜான் டூப்ளே பிரஞ்சு கைப்பற்றி அவர்களின் கோட்டையாக்கினார். இங்கிருந்து பக்கிங்க்காம் கால்வாய் வழியாக அவர் அடையாறு ஆறு சென்று பின் சென்னைக் கோட்டையும் கைப்பற்றினார். சிலுவைப் போர்களின் பிரான்ஸின் தேல்வியை அடுத்து சென்னை மற்றும் இந்த கோட்டைகள் ஆங்கிலேயர் வசமாயிற்று. இன்று தொல்பொருள் இலாகாவிடம் உள்ளது. இது ஓர் ஊர் என்றும் கிராமம் என்றும் கூற முடியாத அளவில் உள்ளது. ஒரு பெரிய முக்கிய சாலை அதன் வலப்புறம் முழுதும் மீனவர் குப்பமும், கடலும் உள்ளது. இடப்பூறம் ஊரும் மார்கொட் முதலியவை உள்ளது. இந்த சாலை கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் ஆரம்பித்து புதுப்பட்டினம் வரை செல்லும். இந்த சாலைதான் முக்கிய தொடர்பு வழி. இதன் முக்கால் பகுதி கடலின் அருகில் அரை பர்லாங் தூரத்தில் இருக்கும். கல்பாக்கத்தின் ஒருபுறம் புதுப்பட்டினமும்(கேட்) மறுபுறம் சதுங்கப்பட்டினமும் இருக்கும். எங்கள் வீடு சதுங்கப்பட்டினம் அருகில் உள்ள கேட் பக்க்ததில் உள்ளது. எங்களுக்கு மார்கெட் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் சதுரை கேட் பக்கத்தில்தான். இங்கு ஒரு பொருமாள்(கிரி வரதர்) கோவிலும் ஒரு சிவன்(திருவட்டீஸ்வரர்) கோவிலும் உள்ளது. மற்றபடி நகரியத்தின் உள் பல கோவில்கள் தற்காலத்தில் கட்டப்பட்டது.

ஆனால் இங்கு மீனவர்கள் அவர்கள் குடியிருப்பு பக்கத்தில் பல அம்மன் கோவில்கள் கடலைப் பார்த்தவாறு இருக்கும். இந்த கோவிலுக்கும் கடலுக்கும் நடுவில் யாரும் வீடு கட்டமாட்டார்கள். அம்மன் கடலைப் பார்த்து அமர்ந்து, கடலில் செல்லும் தங்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். (நான் இதை சொல்லுவதற்கும் ஒரு காரணம் உள்ளது, அது இந்த தொடரின் தனிப்பதிவாக வரும்)அதில் முக்கியமான ஒரு கோவில் தேவி கருமாரியம்மன் கோவில் ஒன்று(தனிப்பதிவு).

இந்த சாலையில் தான் ஸ்டேர்ஸ்,பெட்ரோல் பங்கு, மற்றும் பல கடைகள் அமைந்துள்ளன. அன்று காலை எங்க அண்ணாவிற்கு காலைப் பணி ஆதலால் அவர் காலை 5.30க்கு சென்று மதியம் 2.30க்கு திரும்புவார். ஆதலால் நாங்கள் காலை 4.30க்கு எழுந்து குளித்து 5.30க்கு பூஜை முடித்தேம். காலை தோனீர் அருந்தும்போது எங்க அண்ணா சொன்னார், மளிகையுடன் பூஜைப் பொருட்களையும் சேர்த்து செட்டியார் கடையில் வாங்கிவிடு, அதுக்கு ஒருதரம் இதுக்கு ஒருதரம் போகவேண்டாம் என்றார். நான் இல்லையண்ணா இருபது ரூபாய் மிச்சம் ஆகும் என்றேன். அண்ணா கடவுளுக்கு இவ்வளவு பண்றேம், அந்த இருபது ரூபாயில் என்ன பண்ணப்போறேம். இங்கேயே வாங்கிவிடு என்றார். நானும் மறுவார்த்தைப் பேசி பழக்கம் இல்லாததால் சரி என்றேன்.
அவர் சொன்னார் எனக்கு என்னமே ஸ்டேர்ஸ் போவது சரியாகப் படவில்லை என்றார்.அண்ணா சொன்னார் காலை செட்டியார் கடையில் திறந்தவுடன் பொருட்களை வாங்கிவிட்டு,சாமிகளுக்கு கொடுக்க ஒரு மூனு அல்லது நாலு லிட்டர் பாலும் வாங்கி வைத்துக்கொள் என்றார், நீ வாழைத் தோப்புக்குப் போய் ஸ்வாமி சப்பரத்தேர் கட்ட வாழைமரம், வாழையிலை, வாழைப்பழம் ஆகியவற்றை வாங்கி வா. சாமிகள் வந்துவிடுவார்கள். கேசவன் வீட்டில் அவர்களுக்கு துணையாக இருக்கட்டும் என்று கூறிவிட்டு, எங்கள் மன்னியிடம் இன்னைக்கி காலை எத்தனை பேர் சாப்பிட வருவாங்கன்னு தெரியாது நீ எதுக்கும் பத்துப் பேருக்கு சமைத்துவிடு. சுதா வாழைத்தோப்புக்கு போய் வந்து உனக்கு சமையலில் உதவுவான் என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். காலை ஆறுரை மணிக்கொல்லாம் கடைக்குப் போய் மளிகை வாங்கி வந்து, பின் 7.30க்கு இரு சாமிகள் வந்தனர். அவர்களுக்கு காபி கொடுத்து, ஒருவரை என்னுடன் அழைத்துக் கொண்டு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் போது ஏழு அம்பது. அந்த சாலை முழுதும் பயணம் செய்து நான் சதுங்கப்பட்டினம் செல்லும்போது எட்டு. பின் வாழைத்தோப்பை அடைந்து அங்கு வீட்டு முதலாளியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சுவாமி சப்பரம் என்றால் பூத்துக் காய்த்த பட்ட மரத்தைதான் வெட்டவேண்டும். புது மரத்தை வெட்டி செய்தால் பாவம். வாங்க தோப்பினுள் சென்று பட்ட மரம் எங்க இருக்குனு பார்க்க சென்றேம். நாங்கள் ஒரு பத்து அடிகூட நடந்து இருக்கமாட்டேம். திபுதிபு என மக்கள் ஓடி வந்து கொண்டுருந்தனர்.

" எல்லாரும் ஓடுங்க ஓடுங்க கடல் கொந்தளித்து அலைகள் ஊருக்குள் வருகின்றது. மிகவேகமாக வருகின்றது எல்லாரும் ஓடுங்கள் " என கத்திக் கொண்டு ஓடி வந்தனர். நான் திகைத்து நிற்க முதலில் நான் ஜூன், ஜீலை காலங்களில் கடல் அலைகள் சிறிது ஊருக்குள் அல்லது மீனவர் குடியிருப்பில் வருவது வழக்கம். அதுபோல என்று இருந்தேன். ஆனால் ஓடிவரும் மக்கள் எண்ணிக்கையைப் பார்த்து அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் சொன்னார்கள் கடல் கொந்தளித்துவிட்டது அலைகள் ஒரு பனைமர உயரத்திற்கு எழும்பி ஊருக்குள் வருகின்றது என்று. நான் உடனே பைக்கை எடுத்துக் கொண்டு வீடு செல்லமுயன்றேன், ஆனால் அவர் இப்ப போகவேண்டாம். எங்கள் வீடு இரண்டு மாடி, அவ்வளவு உயரம் கடல் வராது வா அனைவரும் மொட்டை மாடிக்கு செல்வேம் என்றார். அவர்கள் வீட்டில் அனைவரும் மேல் செல்ல நானும் அவரும் அவர்கள் வீட்டின் வாசல் கதவை திறந்து வைத்து ஓடி வரும் அனைவரையும் அவரின் வீட்டின் மொட்டைமாடிக்கு செல்லச் சொன்னேம். பலரும் பெண்கள் குழந்தைகள் பலரும் ஏறிக்கொண்டார்கள். நாங்கள் அனைவரும் அலைகளுக்காக காத்துருந்தேம். வந்தால் மாடிக்கு ஓடிவிடலாம், இல்லையேல் எவ்வளவு பேரை மாடிக்கு அனுப்ப முடியுமே, அனுப்பலாம் என்று. அலைகள் சத்ததுடன் அவர் வீட்டின் முன்னால் இருபதடி வரை வந்து ஓய்ந்ததை கண்ணால் கண்டேம். அது அலைகள் அல்ல ஒரு கோர இராட்சனின் கைகாளாக தோன்றியது. பின் சகலமும் ஓய்ந்தது. அதன்பின் நடந்த நிகழ்வுகள் கண்ணீர் விட வைப்பதாக இருந்தது.

பல பெண்கள் கண்ணீருடன் விரிந்த தலையுடனும் கத்திக், கதறி தங்களின் சொந்தங்கள் குழந்தைகளை தோடிக்கொண்டுருந்தார்கள்.
நான் வீட்டின் முன் நின்று அவர்கள் கூறும் பெயர்கள் மாடியில் இருக்கின்றார்களா இல்லையா எனக் கேட்டு கூறிக்கொண்டு இருந்தேன். பலரும் பல பெயர்களை கூறி இருந்தால், அடுத்தவர்களை தோடத் தொடங்கினார்கள். இல்லை என்றால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினார்கள். அங்கு நடந்தைவைகள் எனக்கு முழுதும் வயிற்றைப் பிசையத் தொடங்கியது. இயற்கையில் இரக்க சுபாவம் உடைய எனக்கு கண்களில் நீரும், மயக்கம் வரும் நிலை. என் கை கால்கள் நடுங்கின. அந்த வீட்டின் ஓனர் தெய்வம், அவரும் அவரின் அழகிய பெண்ணும்(குணத்தில் மாகலஷ்மியை சொல்லாம்) அங்கு எல்லாருக்கும் சக்திக்காக லெமன் ஜீஸ் கொடுக்க்த் தொடங்கினார். அப்போது ஒருவரிடன் நான் என்ன ஆயிற்று என்று வினாவ அவர் கடல் அலைகள் ஊருக்குள் வந்தையும் இன்னமும் அலைகள் வேகமாக பக்கிங்க்காம் கால்வாயில் உள்புகின்றது என்று சொன்னார். அவர் சொன்ன மறுவினாடி என் சர்வ அங்கமும் ஒடுங்கியது. ஏன் என்றால் பங்கிங்க்காம் கால்வாய் பேக்வாட்டர்ஸ் அருகில் உள்ள சீனியர் ஹாஸ்டல் பக்க்த்தில்தான் என் வீடும். என் வீடு முதல் மாடி என்பதால் அவ்வளவு உயரம் போய் இருக்காது என்றாலும் ஓபன் கால்வாயில் கடல் அலைக்கள் சீற்றத்துடன் சென்றால் உயர வாய்ப்புள்ளது ஆகையால் நான் உடனே கிளம்ப ஆரம்பித்தேன். என்னுடன் வந்த சாமியும் நான் எங்க வீட்டில் போய் பார்த்து வருகின்றேன் என்று சொல்லிப் போனார்.நானும் கிளம்ப அவர் விடவில்லை, அவரின் வீட்டு தொலைபேசியும் அவுட் ஆப் அர்டர் ஆகி இருந்தது, நான் புரியாது விழிக்க அவர் இருங்கள் முதலில் ரோடுவரை போய்ப் பார்ப்போம். பின் அனுப்பிகின்றேன். நானும் அவரும் ரோடுவரை சென்றேம். வழிபூராவும் கடல் தண்ணீர் முழங்கால் வரை இருந்தது. மக்கள் அவர்களின் வீடுகளின் இடிபாடுகளை சரி செய்தவண்ணம் இருந்தனர். அவர் சொன்னார் இதில் வண்டி ஓட்டிப் போனால் கடல் தண்ணீர் வண்டி கொட்டுவிடும் என்று. நான் பரவாயில்லை நான் முதலில் வீட்டுக்குப் போக வேண்டும் என்றேன்.பின் அவரும் சரி நிகழந்த பாதிப்புகளைப் பார்க்கும்போது இன்று பூஜை நடக்கும் என்று தோனவில்லை. மாலையில் வேண்டுமானால் வாருங்கள் மரம் தருகின்றேன் என்றார். நானும் சரி என்று என் பைக்கை வேகமாக ஓட்டத் தொடங்கினேன்.முழங்கால் தண்ணீரில் கொஞ்ச தூரத்தில் பைக் ஆப் ஆகிவிட்டது. இறங்கி அதில் தள்ளிக் கொண்டு வந்தேன். கல்லும்,வீட்டின் ஜன்னல் உடைந்த கண்ணாடித் துண்டுகளும், முட்களும் இருந்தாலும் வீட்டின் நினைவில் செருப்பில்லாத காலில் தள்ளிக் கொண்டு வந்தேன். வழி பூராவும் இடிந்த வீடுகள் சிதைந்த பாதைகள் என காட்சிகள் அலங்க்கோலமாக இருந்தது, கண்ணில் கன்னீர் முட்ட தள்ளி வந்தேன். சரியாக எங்கள் வீட்டின் பத்தடி முன்னால் அலைகள் ஓய்ந்துபோய் இருந்தது. ஆனால் அடுத்து பூகம்பமே அல்லது சுனாமி வரக்கூடும் என்ற காரணத்தினால் அங்கு அனைவரும் வீட்டை விட்டு காலி செய்துகொண்டு இருந்தனர்.
எங்கு பார்த்தாலும் கண்ணீர்ருடன் கவலை தேய்ந்த முகங்கள். பயத்தின் ரேகைகள்.

நான் என் வீட்டில் வந்து அண்ணா வந்துவிட்டார என வினவ எங்கள் அண்ணி, மூன்றாவது அண்ணா, நான் அனைவரும் நலம். ஆனால் கடலின் மிக அருகில் உள்ள அனுமின் நிலையத்தில் புகுந்து இருந்தால், அந்த அண்ணா எப்படி உள்ளார் என தெரியாமல் அண்ணி அழுதுகொண்டு இண்டர்காமில் முயற்சி செய்ய அதுவும் பழுது ஆகி இருந்தது.பின் அடுத்த ஜந்து நிமிடத்தில் எங்களுக்கு ஒருவர் வந்து தகவல் சொன்னார் எங்கள் அண்ணா கட்டுப்பாட்டு அறையில் இருந்தால் பத்திரமாக உள்ளார் எனவும் தன் செல்போனுக்கு போன் செய்தார் எனவும் சொன்னார். பின் நாங்கள் அனைவரும் ரோட்டில் வரும் பெண்கள் குழந்தைகள் அனைவருக்கும் உதவிகள் செய்யத் தொடங்கினேம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரும் எங்கள் வீட்டில் மாடியில், படியில் அமர்ந்துருந்தனர். அவர்களுக்கு பெண்களுக்கு காலில் கண்ணாடியும் முள்ளும் கிழித்தவர்களுக்கு எங்க அண்ணி ஆயின்மெண்ட் பிளஸ் கட்டுப் போட்டுவிட்டார். அதில் நனைந்த உடையுடன் வந்த இளம் பெண்களுக்கு அவரின் சுடிதாரும், புடைவையும் கொடுத்தார். பின் அவர்கள் அனைவரும் காலை எட்டு ஜந்துக்கு அலை அடித்ததால் ஒருவரும் சாப்பிடவில்லை என்று அறிந்து அனைவருக்கும் சாப்பாடு கொடுத்தார். அதில் ஒரு பெரியவர் நாங்க பசி தாங்குவேம். வீடு வாசல் இழந்து சாப்பிட மனமில்லை ஆதலால் குழந்தைகள் மற்றும் சிறு வயது உடையவர்களுக்கு கொடுங்கள் என்றார். அப்போது நகரிய போருந்துகள் வரிசையாக வந்து மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்றது. பல பஸ்களில் மக்கள் கூட்டங் கூட்டமாய் காலி செய்து போய்க் கொண்டு இருந்தனர். நானும், என் மூன்றாவது அண்ணாவும் பஸ்சிக்கு காத்துருந்தவர்களிடம் சென்று, குழந்தைகள்,சிறுவர்களுக்கு உணவு உள்ளது சாப்பிட வாருங்கள் என்று அழைக்கத் தொடங்கிகினேம். பலரும் தங்களின் குழந்தைகளுக்கு உணவும் பாலும் வாங்கிச் சென்றனர். அதில் பல பெண்கள் எங்க அண்ணிக்கு மகப்பேறு கிடைக்க வாழ்த்திச் சென்றனர். இப்படி நாங்கள் அழைக்கும் போது ஒருவர் வந்து மிகத் தயங்கி கூச்சத்துடன் குழந்தைகளுக்கு உணவு உள்ளதா எனக் கேட்டார். நானும் இருக்கு அழைத்து வாருங்கள் என கூற, அவர் வருத்ததுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவர் உள்ளனர். அவர்கள் பஸ்ஸிக்காக நிறுத்ததில் உள்ளனர். அழைத்து வர இயலாது என்றார். அப்போது நான் கற்றபாடம் ஒன்று. பதிவு நீளமாகிவிட்டபடியால் மீதி அடுத்த பதிவில். (சேகங்கள் தொடரும்).

13 comments:

  1. நானும் கொஞ்ச நாள் சட்ராஸ் வாசிதான், கோட்டைக்கு எதிரில் உள்ள வீட்டில் குடியிருந்தேன் , ஒரே நாளில் ஒரு திருடன் எல்லாவற்றையும் சுருட்டிவிட்டான். பின்னர் நீங்கள் சொல்லும் மாரியம்மன் கோவில் அருகில் ஒரு வீட்டில் வாசம். இந்திராகாந்தி அனுமின் நிலையத்தில் வேலை பார்த்தேன்

    ReplyDelete
  2. சுனாமி சோகத்தை நேரில் அனுபவித்த அதிர்ச்சியோ என்னவோ, நிகழ்வு சரியாக சொல்லப்படவில்லை. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்து சிறு பதிவுகளாக அளிக்கவும்.

    ReplyDelete
  3. நன்றி, குடுகுடுப்பையாரே. நான் கண்ட காட்சிகளை விவரிக்கும் வேகத்தில் பிழைகள் நிகழ்ந்தன. நீங்கள் தங்கி இருந்த போது குப்பத்தில் வேலை இல்லை. ஆதலால் நிறைய திருட்டு சம்பங்கள் நடந்தன. ஆனால் இப்போ பாவ்னி மற்றும் பி ஆர் பி வேலை காரணமாக திருட்டுக்கள் குறைந்துள்ளன. ஆனால் நீங்கள் குறிப்பிடும் கோட்டைக்கு எதிரில் தமிழக அரசின் மிக பெரிய கொள்ளைகடை உள்ளது(டாஸ்மார்க்) அவர்கள்தான் தொழிளாளர்களின் பெரும் பணத்தை சுரண்டுகின்றனர். தங்களின் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. நம் ஊரில் ஆபத்து என்று வந்தால் அனைவரும்
    ஒன்றாக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன்....
    இல்லனா ஒரே சண்டை சச்சரவு தான்....
    உங்கள் உதவிகளுக்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
  5. தனி மடல். வெளியிட வேண்டாம்.

    தட்டச்சுப் பிழைகளைச் சற்று நீக்கினால் இடுகை இன்னும் அருமையாக அமையும்.

    எடுத்துக்காட்டுக்குச் சில:


    பொருமாள் = பெருமாள்

    தோனீர் = தேனீர்

    போருந்துகள் = பேருந்துகள்


    பஸ்சிக்கு = பஸ்ஸிற்கு


    எழுதியவுடன் ரெண்டு முறையாவது நீங்கள் படித்துப் பார்க்கணும். அப்போது உங்களுக்கே பிழைகள் கண்ணில் படும்.

    வேர்டு பேட் அல்லது நோட்பேடில்தான் எழுதுவீர்கள்.இல்லையா?

    கரெக்ஷன் முடித்துவிட்டு அதை அப்படியே செலக்ட் செய்து காபி எடுத்து பேஸ்ட் செஞ்சுக்குங்க. நேரடியாக தட்டினால் கொஞ்சம் கஷ்டம்தான்.

    என்றும் அன்புடன்,
    டீச்சர்

    ReplyDelete
  6. தாங்கள் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. எனக்கு இன்னமும் கால் போடுவதில் சிக்கல்கள் உள்ளன. நான் தமிழ் மீடியம் படித்தாலும், எனக்கு இந்த பிரச்சனை உள்ளது. சொல்வதற்க்கு கூச்சம்தான். இருந்தாலும் இதுதான் உண்மை. நான் அழகியில் டைப் செய்து இருமுறை படித்துப் பார்த்துதான் போடுகின்றேன். இதுபோன்ற தவறுகள் எனக்குத் தெரியாமல் நடக்கின்றது. இனி நான் கவனமாக பார்த்துப் எழுதுகின்றேன். நன்றி டீச்சர்.

    ReplyDelete
  7. அய்யா தாங்கள் கூறும் கருமாரியம்மன் கோவில் சட்ராஸ் ஊருக்குள் உள்ளது. அருகில் நடுக்கந்தீர்த்த வினாயகர் கோவில் உள்ளது. நான் சொல்லும் கருமாரியம்மன் கோவில், நகரியத்தின் உள் உள்ள ஜூனியர் ஹாஸ்டல்( நகரிய மருத்துவமனை) அருகின் உள்ளது கடலின் வெகு அருகாமையில். இரண்டும் கருமாரியம்மன் கோவில்தான். அதுபோல சதுரையில் ஒரு சிவன் கோவில் என்று நான் குறிப்பிட்டது தவறு இரண்டு சிவன் கோவில் உள்ளது. நன்றி

    ReplyDelete
  8. கொடுமையாக அந்த விசயத்தை நேரில் கண்டீர்களா?

    அதை பார்த்த பின்னும் உங்களுகெல்லாம் கடவுள் நம்ப்பிக்கை இருக்கிறதே! என்னவென்று சொல்வது!

    ReplyDelete
  9. ரொம்ப கொடுமை...மற்றவர்களுக்கு உதவி செய்த உங்களுக்கும்,குடும்பத்தார்க்கும் பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  10. படிக்க அதிர்ச்சியாகவும் இருந்திச்சி, வருத்தமாகவும் இருந்திச்சி.

    நீங்க அதிரிச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்று தெரிகிறது :((

    இது போல் சோகம் இனி எங்கும் நிகழக் கூடாது.

    உதவிய உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கும் பாராட்டுகள்!

    ReplyDelete
  11. நல்ல இடுகை.. கொஞ்சம் பத்தி பிரிச்சு போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. :(

    ReplyDelete
  12. // கொடுமையாக அந்த விசயத்தை நேரில் கண்டீர்களா? //
    வால் நேரில் கண்டு அனுபவித்து இருக்கின்றேன், ஆனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை, பாதித்தவர்களை காண்டு மணம் நெந்து போனேன். அப்படி நான் கேட்டதுதான். கடவுளே நீ இருக்கின்றாயா அல்லது நீயும் செத்துவிட்டாயா? என்று. பாதித்தவர்களின் நிலையய் தொடரில் வரும்.
    இது உதவி என்று சொல்லமுடியாது, அந்த நிலைமையில் யாரும் செய்யும் ஒன்றுதான். பரிதவிக்கும் மனிதனுக்கு செய்வது தெய்வத்திற்க்கு செய்வது போல் அல்லவா?.நன்றி மேனகா சத்தியா.
    தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, கலகலப்பிரியா, ரம்யா. நீங்க சொன்னமாதிரி பிரித்துப் போடுகின்றேன்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.