திருக்கோவில் தரிசன முறையில் நாம் இன்று பெருமாள் கோவில் தரிசன முறையப் பார்ப்போம். பெருமாள் கோவில் தரிசன முறை அப்படியே சிவன் கோவிலின் தரிசன முறைக்கு உல்டாதான். இங்கு முதலில் மூலவரையும் பின் தனிச்சன்னதிகளையும் தரிசிக்க வேண்டும்.
சில பெருமாள் கோவில்களில் தும்பிக்கை ஆழ்வார் என்ற பெயரில் நம்ம தலை பிள்ளையார் இருப்பார். அவரை வணங்கி கோவிலுக்குள் சென்றால் முதலில் வருவது கொடிமரம் அங்கு வணங்கி விட்டு உள் சென்றால் கோவில் பெருமாள் இருப்பார். அதாது ஒர் பெருமாள் சன்னதியில் இன்னேரு பெருமாளுக்கு விட்டு ஒதுங்கி இருப்பார். அந்த பெருமாளை சேவித்து (உதாரணமாக திருப்பதி சீனிவாசப் பெருமாள் அவரின் சன்னதி அல்ல அது வராகர் சன்னதி, வராகர் நம்ம சீனுவுக்கு இடம் கொடுத்துவிட்டு குளக்கரையில் சக்கர தீர்த்ததில் இருப்பார். ஆதலால் தான் திருப்பதி செல்பவர்கள் சக்கர தீர்த்ததில் நீராடிப் பின் வராகரை வணங்கி அதற்கு அப்புறம்தான் சீனுவை வழிபடவேண்டும் என்பது ஜதீகம்.).பின் கண்டிப்பாக பெருமாளை முன்னால் உள்ள ஜய விஜயர்களை வணங்கி உத்தரவு பெற்று மூலஸ்தானத்திற்குள் செல்லவேண்டும். (இவர்கள்தான், இரண்யன், இரண்யாஷ்கன், இராவணன், கும்பகர்ணன், சிசுபாலன், தந்த விக்கிரமன் ஆக அவதரித்தவர்கள்.). உள்ளே சென்று மூலவரை வணங்கிப் பின் வெளியே வரும்போது உள்ளே இருக்கும் உற்சவ மூர்த்திகளை வணங்க வேண்டும். பின் வெளியே வரும் போது கருடாழ்வாரை வணங்கலாம்.
பின் பிரகாரம் சுற்றி தாயார் சன்னதியடைந்து தாயாரை வணங்கிவிட்டு, ஆண்டாள் சன்னிதியில் வணங்கி சுற்றி வரலாம். பிரகாரத்தில் உள்ள ஆழ்வார்கள். உடையவரை வணங்கி ஆஞ்சணேயர் தனி சன்னதி இருந்தால் வணங்கலாம். கோவில் விருச்சமும், விஷ்னுதுர்க்கையும் சன்னதி இருந்தால் வணங்கி, கொடிமரம் அல்லது கருடகம்பம் அடையலாம். அங்கு நமஸ்கரித்து சேவிக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் ஒன்பது அவயங்கள் பூமியில் படுமாறு தலைக்கு மேல் கைகளை குவித்து விழுந்து சேவிக்க வேண்டும். பெண்களாக இருந்தால் அவர்கள் மண்டியிட்டு பத்து விரல்களும் தரையத் தொடுமாறும், குதிகால் இரண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து பின்பக்கம் பெருந்துமாறு குனிந்து கைகள்(உள்ளங்கை) இரண்டும் தரையில் பதித்து சேவிக்க வேண்டும். இது ஒரு ஆசன முறை ஆகும். இப்படி சேவித்து வெளிவந்த பின் தானம் செய்வது நல்லது.
பச்சைமா மலைபோல் மேனி,
பவழவாய் கமலச் செங்கண்,
அச்சுதா அமரஏறே,ஆயர்தம் குலந்தே!
என்னும் இச்சுவைதவிர யான்போய்,
இந்திரலேகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்,
அரங்கமா நகருள்ளானே.
நன்றி அப்படியே சமையல் பதிவில் சீரக மிளகு இரசம் படிக்கவும்.
அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
ReplyDeleteநேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..
//உள்ளே சென்று மூலவரை வணங்கிப் பின் வெளியே வரும்போது உள்ளே இருக்கும் உற்சவ மூர்த்திகளை வணங்க வேண்டும். பின் வெளியே வரும் போது கருடாழ்வாரை வணங்கலாம்.//
ReplyDeleteஇம்புட்டு வணக்கமா ? கழுத்து சுளுக்கிடும் போல, கோவில்களைப் பார்த்து தான் உட்சவர் மூலவர் என்று பல்வேறு வணக்கங்கள் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
சாமியை வணங்களால் அடுப்பொடிகளையெல்லாம் வணங்க வேண்டும் என்பது என்ன முறை ?
இம்புட்டு வணக்கமா ? கழுத்து சுளுக்கிடும் போல, கோவில்களைப் பார்த்து தான் உட்சவர் மூலவர் என்று பல்வேறு வணக்கங்கள் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
ReplyDeleteசாமியை வணங்களால் அடுப்பொடிகளையெல்லாம் வணங்க வேண்டும் என்பது என்ன முறை ?
நம் வீட்டில் பெரியோர்கள் பலர் இருந்தால் சீனியாரிட்டி முறைப்படி வணங்குகிறேம் இல்லையா. அதுபோலத்தான். கடவுளையும், கடவுளுக்கு தொண்டு செய்தவர்களையும் வணங்குகின்றேம்.
கோவில் தரிசம் பற்றி இவ்வளவு இருக்கா !உண்மையில் பிரமிப்பாய் இருக்கு.
ReplyDeleteபித்தன்,நானும் நீங்கள் தந்த முறைப்படியே ரசம் செய்வது வழக்கம்.
அருமையான ஒரு கலாச்சார விளக்கம்.
ReplyDeleteசமயம் வாய்த்தால் மதுரை அழகர் மழை சென்று வாருங்கள், இதே விளக்கத்தை அங்கு நான் கேட்டு இருக்கிறேன்.
நன்றி.
எவ்ளோ முறைகள் இருக்குன்னு பிரமிப்பா இருக்கு.. ஆனா அப்டியே கோயில் போய் வந்த திருப்தி படிச்சு முடிச்சதும்.
ReplyDelete// கோவில் தரிசம் பற்றி இவ்வளவு இருக்கா !உண்மையில் பிரமிப்பாய் இருக்கு. //
ReplyDelete// அருமையான ஒரு கலாச்சார விளக்கம்.//
// எவ்ளோ முறைகள் இருக்குன்னு பிரமிப்பா இருக்கு.. ஆனா அப்டியே கோயில் போய் வந்த திருப்தி படிச்சு முடிச்சதும். //
நம் முன்னேர்கள் சமுதாய முன்னேற்றம் மற்றும் கலாச்சாரத்திற்காக மட்டும் இல்லாமல் ஆன்மீக நெறிகளையும், பழக்க வழக்கங்களையும் மன அமைதிக்காகவும் நிறுவினர். ஆனால் காலத்தின் போக்கால் அவை வியாபார நிலையங்கள் ஆகிவிட்டன.
ஒரு முறை கோவிலுக்கு செல்லும் போது இதுப்போல வணங்கிப் பாருங்கள், நீங்களே அதன் மகத்துவத்தை உணர்வீர்கள்.
ஹேமா,சுசி, மேனகசத்தியா உங்கள் அனைவருக்கும் நன்றி.
/ / சமயம் வாய்த்தால் மதுரை அழகர் மழை சென்று வாருங்கள், இதே விளக்கத்தை அங்கு நான் கேட்டு இருக்கிறேன். //
பலமுறை அழகர் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று பிரியப் பட்டு இருகின்றேன், ஆனால் அந்த கள்ளழகரின் தரிசனம் இன்னமும் சாத்தியப் படவில்லை. கண்டிப்பாக செல்லவேண்டும். நன்றி சிங்ககுட்டி.