Tuesday, October 6, 2009

புளியம்பூ தொக்கு

புளியந்தொக்கு இது ஒரு வித்தியாசமான,சிக்கனமான தொக்கு வகை ஆகும். நல்ல துவர்ப்பு, உப்பு, காரம் நிறைந்தது. புளியம்பூ பூக்கும் சீசனில் கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாம். சென்னை போன்ற நகரங்களில் இருப்பேர் கூட குறித்துக் கொள்ளுங்கள்,எப்பேதாவது கிராமப் பக்கம் போனால் செய்யலாம். இதை செய்வதைப் பார்ப்போம்.
தேவையான பெருட்கள்:
1.துணிப்பை நிறைய புளியம்பூக்கள்,
2. நாலு அல்லது ஜந்து வரமிளகாய்,
3. ஒரு உருண்டை புளி(எலுமிச்சை அளவு)
4. அரை நெல்லிக்காய் அளவு பெருங்காயம்,
5. மூன்று அல்லது நாலு ஸ்பூன் உப்பு.
6.ஒரு உதவியாளர் அல்லது கணவர்.

முதலில் பூவைப் பறிக்க இருவர் அல்லது மூவர் வேண்டும், பூவைப் பறித்து அலம்பி உணர்த்திக் கொள்ளவும் அல்லது நியுஸ் பேப்பரில் போட்டு ஈரம் எடுக்கவும். பின் பூக்களை காம்பு இல்லாமல் உருவி பூக்களும், பூ மெட்டுக்களும் தனியாக எடுக்கவும். கல்லுரலில் போட்டு இடிப்பது என்றால் எல்லாத்தையும் ஒன்றாக போட்டு இடிக்கலாம். மிக்ஸி என்றால் முதலில் வரமிளகாய்யை பொடிசெய்து பின் அதை எடுத்துவிட்டு புளி,பெருங்காயம், உப்பு,பூ போன்றவை இட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும். இது மைய துகையல் போல் அரைக்காமல் கொஞ்சம் விழுது போல அதே சமயம் கொஞ்சம் உதிரியாகவும் அரைக்கவும். பூவில் இருக்கும் தண்ணீர் மற்றும் ஈரம் போதும். ஒரு முக்கால் பதம் அரைத்து பின் மிளகாய்ப் பொடி சேர்த்து அரைத்தால் தொக்கு ரெடி. உப்பும் மிளகாயும் தேவைக்கு ஏற்றார் போல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது கொஞ்சம் நல்லனனெய் அல்லது நெய்யுடன் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சுவையாகவும் நன்றாகவும் இருக்கும். செய்தவுடன் சாப்பிடவும் இல்லாவிட்டால் தண்ணிர் விட்டுவிடும். ஒரு துணிப்பை அளவு பூ இருந்தால் மூவர் அல்லது நால்வர் சாப்பிடலாம்.

பின் குறிப்பு: இதை சாப்பிட நல்ல கூசாத பற்கள் அவசியம். வயதானவர்கள் சாப்பிட்ட பின் பிபி மாத்திரை சாப்பிடவும்.

8 comments:

  1. good one aanaal sila santhekam ullathu..sirithu neraththil ketkiren..kadamai alaikkirathu..thanks for your lovely comments in mmy blog..

    ReplyDelete
  2. குரிப்பு நல்லாயிருக்கு.இதுவரை நான் புளியம்பூ தொக்கு சாப்பிட்டதில்லை.ஊருக்கு வந்தால் புளியம்பூ கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.நன்றி உங்கள் குறிப்புக்கு!!

    ReplyDelete
  3. புளியை பச்சையாக அரைத்து சாப்பிடுவதென்றால் பச்சை வாசனை இருக்குமே?நன்றாக இருக்குமா?அதே போல் தான் மிளகாயும்..இது வரை செய்ததில்லை...முடிந்தால் நான் இன்று இரவே செய்து விடுகிறேன்..


    அன்புடன்,

    அம்மு.

    ReplyDelete
  4. சகோதரி தாங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள், இது புளித்தொக்கு அல்ல புளியம்பூ தொக்கு. புளியை அரைக்ககூடாது, புளியம் பூவை அரைக்கவேண்டும்.

    ReplyDelete
  5. // குறிப்பு நல்லாயிருக்கு.இதுவரை நான் புளியம்பூ தொக்கு சாப்பிட்டதில்லை.ஊருக்கு வந்தால் புளியம்பூ கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.நன்றி உங்கள் குறிப்புக்கு!!//
    நன்றி சகோதரி. நான் இன்னமும் பல வித்தியாசமான சமையல் குறிப்புகள் எழுதவுள்ளேன், படிக்கவும், பயன்படுத்திப் பாருங்கள்.

    ReplyDelete
  6. பித்தன் இது புளியம்பூ தொக்கு என்று எனக்கு தெரியும் புளியம்பூ தொக்கு குறிப்பில் நீங்கள் ஒரு உருண்டை புளி என்று கொடுத்துள்ளீர்களே அதை தான் கேட்டேன்..:)நேற்று இந்த thokku செய்தேன்..எனக்கு மிகவும் பிடித்தது....லெமன் ரைஸ்க்கு சூப்பர் காம்பினேஷன்...சிறிதுநெய்யில் பூவை வறுத்து ரசத்தில் போட்டேன் சுவை அருமை..ஒரு முறை செய்து பாருங்க..



    அன்புடன்,

    அம்மு.

    ReplyDelete
  7. வீட்டில் மரம் இல்லை..தோப்பு வைத்திருக்கிறோம்..மாந்தோப்பு,புளியந்தோப்பு,மேலும் சில பழங்கள் மூலிகைகள் எல்லாம் வைத்துள்ளோம்..அதனால் வேண்டும் என்று சொன்னால் உடனே வீட்டிற்கு வந்துவிடும்..

    ReplyDelete
  8. உங்களுக்கு விருது இங்கே!

    http://sandanamullai.blogspot.com/2009/10/with-oscar-and-nobel.html

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.