Thursday, October 15, 2009

இவளும் ஓர் கற்புக்கரசி

கால் கடுக்க நின்றேன்
கயவன் ஒருவனுக்காக
பலரும் நடக்கின்ற சாலையில்
மனிதர்கள் யாருமில்லை
மனிதம் ஏதும்மில்லை.

கயவனும் வந்தான்
என்னை சுற்றி மேனிஎழில்
பார்க்க பரிதாபமாய் நின்றேன்
என் சதைப் பேரத்துக்காக
வல்லூறாய் வட்டமிட்டான்.

எனது அழகைப் புகழ
கூசினாலும் சிரித்தேன்
மனதுக்கும் வெகுன்டேன்
மானாய் வளைந்தேன்
அவன் இச்சைக்கு இணைந்தேன்.

ஆட்கொண்டான் என்னை
ஆட்கொல்லியாய் அவன்
பற்றிப் படர்ந்தான் விருப்பத்துடன்
விருப்பம் இல்லாமல் சுற்றிக்கிடந்தேன்
மனமில்லா உடல் கூடினான்,பிணத்துடன்.

சதையப் பற்றி சதிராடினான்
மனதைப் பற்றிப் புரியாமல்
ஆடி ஓய்ந்தான் அலுத்து எழுந்தான்
வெற்றுப் சிரிப்புடன் வழியனுப்பினேன்
பாவத்தின் சம்பளம் வாங்கி.

பாவம் என்றாலும் பணம் தானே
வாழ்வின் சுபாவம். குளித்தால் போயிற்று
தண்ணிர் வழிந்தோடியது என்மீது
என் கண்ணிருடன் சேர்த்து
தண்ணிரும் கசந்தது என் மனம்போல.

ஆறா மனதுடன் கை நிறைய
பணமுடன் பாச குணமுடன்
சென்றேன் மருத்துவமனை
என் பாசமிகு கனவனை காண
முப்பதிலும் குழந்தையாய் போனவன்.

நெஞ்சுமிகு காதலுடன் வாழ்ந்த அவன்
பஞ்சனையில் படுத்து இருக்க
அவன் காலுரண்டு செத்துவீழ
விபத்து ஒன்று மாற்றியது
அவனை முடமாய், என்னை விபச்சாரியாய்.

7 comments:

  1. செம்ம தல

    கவிதை படித்ததும் இறுதியில் பரிதாப கோபம் விஞ்சுகிறது விதிய நொந்துகொள்வதா அல்ல விதியை விதைத்த கடவுளை நொந்து கொள்வதா என தெரியவில்லை..

    ReplyDelete
  2. //குளித்தால் போயிற்று
    தண்ணிர் வழிந்தோடியது என்மீது//

    சூப்பர், அருமையான வார்த்தைகள், வார்த்தைகளுக்குள் ஒளிந்துள்ள வலிகளை உணர்த்துகிறது,

    //என் கண்ணிருடன் சேர்த்து
    தண்ணீரும் கசந்தது//

    என்றுதான் நீங்களும் நினைத்திருபீர்கள் என்பது என் கருத்து.

    ReplyDelete
  3. //தண்ணிர் வழிந்தோடியது என்மீது
    என் கண்ணிருடன் சேர்த்து
    கண்ணிரும் கசந்தது என் மனம்போல.//

    படிச்சு முடிச்சதும் கஷ்டமா இருக்குண்ணா...

    ReplyDelete
  4. நன்றி சுசி,வசந்த், சிங்ககுட்டி.

    ReplyDelete
  5. ஆஹா அற்ப்புத கவிதை கண்ணீரை வரவலைத்து விட்டீர் தலைவா.வாழ்க வளமுடன் உம் சேவை.

    ReplyDelete
  6. நன்றி ஒமர், புருகனி தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.