Friday, August 21, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை- பாகம் 2

இந்த மூன்று நாகரீங்களும் ஆற்றுபடுகைகளை கொண்டது, ஆகவே, கால்நடை,விவசாயம் மற்றும் நெசவு என வாழ்ந்துவந்தனர். இவர்கள் இந்த தொழில் ரீதியான ஒற்றுமை இவர்களின் கடவுள் ரீதியான ஒற்றுமைக் கூட ஒரு காரணம் என சொல்லலாம். எனவே கடவுள் பற்றி நாம் கூற முற்ப்படும் முன்னர் இவர்களின் வாழ்க்கைதரம், மற்றும் சூழ்நிலைகளை பற்றி அறிந்தால் மட்டும் கடவுளின் கோட்பாடும் அறிய முடியும். நாம் கடவுள் யார் என்பதை இவர்களை வைத்துதான் அறிய முடியும். கடவுள் எப்படி உருவகம் செய்யப்பட்டார் எனவும் அறிய முடியும். நாம் முதலில் கடவுள் எப்பிடி உருவானார், பின் எப்பிடி பல உருவங்கள் எடுத்தார் எனப் இந்திய வரலாற்றுடன் பார்க்கலாம்.
கடவுளை பற்றி கூறும்முன் ஒரு கவியரசரின் பாட்டு பற்றி கூற விரும்ப்புகின்றேன்.
அது கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்றூ வந்ததும் கொடி அசைந்ததா?
இதில் ஒரு இயக்கம் மற்றும் ஒரு இயக்கத்தில் சம்பந்தப்பட்டுள்ளது. கொடி தானக அசையாது, ஆக காற்று வந்துதான் கொடி அசைய முடியும், இல்லயா, மாற்றிக்கூறினால் கொடி அசைந்த உராய்வின் காரணமாக காற்று வந்திருக்கலாம் எனவும் விவாதம் செய்யமுடியும். அனால் காற்றினால் கொடி அசைந்தது என்பது மட்டும் பொரும்பாழும் ஏற்றுக்கொள்ளப்படும் உன்மை. அதுபோல
கடவுள் மனிதனை படைத்தான், மனிதன் கடவுளை படைத்தான் எனபதும் உன்மை. இதை கொஞ்சம் இந்திய வரலாற்றையும் கடவுள் வராலாற்றையும் ஸேர்த்து படித்தால் தெரியும்.
ஆதியில் மனிதன் உணவு, இருப்பிடம், காமம் மட்டும் கொண்டு இருந்தான், பின் அவன் நிலையாக ஒரிடத்தில் தங்கி உணவு மற்றும் இருப்பிடம் கொண்டபோது அவனுக்கு அதை பாதுகாப்பது பிரச்சனையாக இருந்தது.
எதிரிகள் மூலம் பிரச்சனை இருந்த போது சண்டையிட்டான். ஆனால் இயற்க்கை மூலம் பிரச்சனை எங்கின்ற போது அவன் தன்னை மீறிய சக்தி உள்ளது என நம்ப்பதொடங்கினான். இந்த நம்பிக்கைதான் கடவுளின் மூல ஆதரம். தன்னை மீறி விசயங்கள் நடக்கும் போது எல்லாம் தனக்கும் மீறிய சக்தியை நம்ப்பதொடங்கினான்.
முதலில் அவன் தன் இருப்பிடத்தில் இருக்கும் அடைக்கலம் கொடுக்கும் மரம், காற்று, தன்னீர் கொடுக்கும் மழை ஆகியவற்றை நன்றி மற்றும் தெவைகள் காரணமாக வணங்க ஆரம்பித்தான். பின் தன் இந்த வாழ்வை கெடுக்கும் சக்திகளை பயத்தின் காரணமாக வணங்க ஆரம்பித்தான். எனவே அவனை அழிக்க அல்லது ஆக்க சக்திகளான
நெருப்பு, நதிகள் மற்றும் ஒளி கொடுக்கும் சூரியன் ஆகியவற்றை வணங்க ஆரம்பித்தான்.
இப்போது மீண்டும் அந்த பாடலைப் பார்ப்போம் காற்று என்கிற சக்தி கொடியை அசைத்தது போல் இயற்க்கை அல்லது நம் முன்னொர்கள் கூறியது போல் எதோ ஒரு கடவுள் (என்னைப் பொறுத்தவரையில் எலக்ட்ரோ மாக்னட்க் போர்ஸ்) நம் பிரபஞ்சம் முலுவதும் நிறைந்தூள்ள அந்த சக்தி எதோ ஒரு இயக்கதின் காரணமாக உயிரினம் தொன்றி அது பரினாமவளர்ச்சி அடைந்து இருக்கலாம். எனினும் மனிதன் எனபன் தானாக உருவாகமல் இன்னொரு சக்தியால் உருவாக்கப்பட்டு இருக்க சாத்தியகூறுகள் அதிகம்.
ஆக கடவுள் மனிதனை படைத்தான் என்பதை அனைவரும் ஒப்புகொள்வார்கள். டார்வினின் கொள்கைபடி பார்த்தாலும் அந்த முதல் உயிரினத்தை மூலக்கூறுகள் எனகின்ற சக்திதான் படைத்தது, எனவே நாம் அறியாத சக்திதான் கடவுள் எனபது முதற்க் கருத்து. நமக்கும் மீறிய ஒரு சக்தி உள்ளது அது நம்மால் உணர மட்டும் முடியும், நாம் அதை கட்டுப்படுத்த முடியாது என மனிதன் நினைத்தாணே அன்றுதான் கடவுளும் படைக்கப்பட்டார்.அந்த சக்தி உள்ளது உன்மை ஆக கடவுள் இருப்பதும் உன்மை..
ஆக கடவுளின் தொடக்கம் என்பது மனிதனின் நன்றி, பயன்பாடு மற்றும் பயத்தின் காரணமாக பஞ்ச பூதங்ககளையும் வணங்க ஆரம்பித்தான். இவைகள் தான் முதல் கடவுள்.
ஆக இயற்கையின் மீது தன்னை மீறிய சக்தியின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கை தான் கடவுள். நம்பினால் கடவுள் நம்பாவிட்டால் இல்லை, அனால் மனிதன் எல்லொரும் ஒரு கட்டத்தில் கடவுளை நம்புவார்கள், அதுதான் கடவுளின் லீலை.. மரணம் எப்போது வரும், எப்பிடி வரும் என்று நிச்சயமாக தெரியாதவரை மனிதன் கடவுளை கண்டிப்பாய் நம்புவான். மரணத்தை மறைத்துதான் கடவுள் தன் நாடகத்தையும் நடத்துவார். ஒரு விசயம் தெளிவாக கொள்ளுங்கள் நம்பிக்கைதான் கடவுள். இதை நான் பின்னாளும் பலமுறை கூறுவென் அதாலால் மனிதனின் பயம் மற்றும் தெவைகள் தான் தன்னை மீறிய ஒரு சக்தியிடம் நம்பிக்கை கொள்ள வைத்தது.
எனவே நம்பிக்கைதான் கடவுள் என கூறி பதிவின் நீளம் கருதி முடித்து பின் மீண்டும் நமது இந்திய வரலாறும் இந்துக்கடவுள்களும் பத்தி எளுதுகின்றேன். நன்றி.

5 comments:

  1. //அவனை அழிக்க அல்லது ஆக்க சக்திகளான
    நெருப்பு, நதிகள் மற்றும் ஒளி கொடுக்கும் சூரியன் ஆகியவற்றை வணங்க ஆரம்பித்தான்.//


    அவற்றை வணங்கினால் அது அவனை அழிக்காமல்ச் என்று விடுமா!?
    பின் ஏன் வணங்கணும் சும்மா லுலுலாயிக்கா!?


    வேரு வெரிபிகேசனை எடுங்கள்!

    dashboard->settings->comments-> show word verification இதில் no என்று செலக்ட் செய்யவும்!

    ReplyDelete
  2. நல்ல ஆய்வு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
    கொஞ்சம் எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தினால் நல்லது நண்பரே.

    ReplyDelete
  3. வால்பையனும், கோவி கண்ணனும் வந்து கேள்வி கேட்டதும் கொஞ்சம் மேம்போக்காகவே எழுத ஆரம்பித்து விட்டாற்போல இருக்கிறதே!

    ராகுல சங்கிருத்யாயன எழுதிய வோல்கா முதல் கங்கை வரை என்ற புத்தகம், தமிழிலேயே கிடைக்கும், கொஞ்சம் படித்துப் பாருங்கள். ஒரு கற்பனை புனைவு தான், ஆனாலும் மனித சமூகத்தின் வரலாற்றை, தாய்வழிச் சமுதாயமாக இருந்த நாட்களில் இருந்து, இன்றைய வர்கங்களாகப் பிரிந்து கிடக்கும் சமுதாய அமைப்பு வரை, ஒரு கோர்வையாக, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கதைப் போக்காகச் சொல்லியிருப்பார்.

    இந்திய வரலாறு பன்முகம் கொண்டது. பல்வேறு முரண்பட்ட தகவல்களோடு, முழுமையல்லாத வடிவத்தில், தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடக்கும் தன்மையோடிருப்பது. அதனால் தான், ஆளுக்காள், மனம் போன போக்கில் திரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரே நேரத்தில் அத்தனை விஷயத்தையும் சொல்லி விட முடியாது. அதே நேரம், தொடர்பு இல்லாத விஷயங்களைத் தொட்டுப் பேசுவதில், நீங்கள் சொல்ல நினைப்பது ஒன்றும், பதிவில் வெளிப்படுவது ஒன்றுமாய் இருக்கிறது எனத் தோன்றுகிறது.

    கடைசி இரண்டு பாராக்களையும் படிக்கும் போது, நிறையக் குழம்பியிருக்கிறீர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

    நதிக்கரை நாகரீகங்கள், வாழ்க்கை முறை பற்றி தெரிந்தது கொஞ்சமே. தாய்வழிச் சமுதாயத்தில் இருந்து, நதிக்கரை நாகரீகங்கள், நிலவுடைமைச் சமுதாயமாக வளர்ந்ததும், மொழி, இனம், கலாசாரம் இப்படி படிப்படியான வளர்ச்சிகளும், தத்துவம் வளர்ச்சி கண்டதும் கொஞ்சம் ஆழமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை.

    தனக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன என்ற கேள்வி, மரணம் பற்றிய பயம் நாளடைவில் மரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்த சிந்தனை, மறுபிறப்பு, மரணமில்லாத நிலை என்பதான சிந்தனைகள், அதற்கப்புறம் தான் கடவுள் கோட்பாடு அல்லது கடவுளைப் பற்றி அல்லாமல், இந்த உலகத்தை, காணும் காட்சியை மட்டும் ஆராயும் லோகாயுதக் கோட்பாடு இப்படி இருகூறாகப் பிரிந்து, தேடல் என்பது என்று வரை நடந்துகொண்டே இருக்கிறது.

    கடவுள் கோட்பாட்டில், நம்பிக்கை என்பது ஒரு படிக்கட்டு, ஒரு சாதனம் அவ்வளவு தான்! நம்பிக்கையே கடவுள் இல்லை. நல்லவொரு தேடலில் இறங்கியிருக்கிறீர்கள்!

    இப்போதைக்கு இது ஒரு ஆரம்பம்!

    ReplyDelete
  4. //தனக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன என்ற கேள்வி, மரணம் பற்றிய பயம் நாளடைவில் மரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்த சிந்தனை, மறுபிறப்பு, மரணமில்லாத நிலை என்பதான சிந்தனைகள், அதற்கப்புறம் தான் கடவுள் கோட்பாடு அல்லது கடவுளைப் பற்றி அல்லாமல், இந்த உலகத்தை, காணும் காட்சியை மட்டும் ஆராயும் லோகாயுதக் கோட்பாடு இப்படி இருகூறாகப் பிரிந்து, தேடல் என்பது என்று வரை நடந்துகொண்டே இருக்கிறது.//


    அதாவது சும்மா இருக்கும் குட்டைய குழப்பி கொள்வார்கள் சரியா!?

    ReplyDelete
  5. வால்பையன் கேட்டது:
    /
    அதாவது சும்மா இருக்கும் குட்டைய குழப்பி கொள்வார்கள் சரியா!?/

    குழப்புவதும், குழம்பிபோவதும் ஆரோக்கியமான கேள்விகளைக் கேட்க முடியாத, பதிலுக்குக் காத்திருக்க, புரிந்துகொள்ள முடியாத இயல்பிலிருந்து தொடர்வது.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.