Thursday, August 20, 2009

பள்ளிக்கு கட் அடிக்கலாம் வாங்க

நான் ரெண்டாவது படிக்கும் போது நடந்த சம்பவம். எனது நண்பன் அந்தொனி பத்தி முந்தைய பதிவில் கூறீருந்தென். அவனுடன் நடந்தது. எங்கள் ஊரில் ஒரு வாய்க்கால் இருந்தது அதன் பெயர் இராஜவாய்க்கல்.
அதில் வருடம் ஆறுமாதங்கள் தண்ணிர் ஓடும் பின் சாக்கடை தண்ணிர் ஓடும், தண்ணிர் ஓடும் சமயங்களில் அதில் குளிப்பது என்பது எனக்கு பிரியம் அதிலும் கட்டைபாலத்தின் மீது ஏறி அதில் குதித்து நீந்துவது நல்லா இருக்கும்.
எங்கள் வீட்டில் அவ்வளவு குளிக்க அங்க அனுப்ப மாட்டார்கள். சுமார் 10 அடி உயரத்தில் இருந்து குதித்து நீச்சல் அடித்து கரை ஏற வேண்டும். ஒரு நாள் நான் ரெண்டாவது படிக்கும் போது, அந்தொனீ என்னிடம் மதிய வகுப்பு போது குளிக்க போலாமா என கேக்க நானும் விசயம் புரியாமல் அவனுடன் குளிக்க சென்றென். பின் பள்ளிக்கு வந்தால் எனனை காணாமல் பார்த்து இருக்கார்கள். டீச்சர் எங்கு சென்றிர்கள் எனக்கேக்க நான் சத்தமாக வீரசாகஸம் புரிந்தவனாக வாய்க்காலுக்கு குளிக்க போனாம் டீச்சர் என கூறினென். அவர் பள்ளிக்கு கட் அடித்தது இல்லாமல் அதை பொருமையாக கூறுகிறாய் என அடித்து எங்களை பள்ளியின் பிரயார் க்ரௌண்டில் முட்டிபோடவைத்தார்.
வெய்யில் மணலில் முட்டிபோட்டது கூட வலிக்க வில்லை எல்லாரும் பார்த்து கொண்டுபோனது எனக்கு அவமானமாக இருந்தது. அந்த டீச்சருக்கு நான் யார் எங்கின்ற விவரம் தெரியாது. தெரிந்தால் எங்கள் வீட்டுக்கு சொல்லி என்னை அடிக்காமல் விட்டுஇருப்பார். நான் தர்மசங்கடத்தில் முட்டிபோட்டு இருந்த போது என் அப்பா பள்ளிக்கு வந்த்தார். அப்பாவை பார்த்த உடன் எனக்கு பயம் அனாலும் முட்டி போடவிடமாட்டார் என சந்தொசம்.
என் அப்பாவை பத்தி சொல்லனும் இல்லையா.. அவர் இந்த பள்ளிகளுக்கு ஒரு டேப்பிடி இன்ஸ்பெக்டர் ஆப்பிஸ் இருக்கும் இல்லை ( கல்வித்துறை ஆய்வாளர் அலுவலகம்) அதில் அவர் ஹெட் க்ளார்க் ஆக வேலை பார்த்துவந்தார். நல்லவர், யாருக்கும் உதவீ செய்வார். அந்த வட்டாரத்தில் உள்ள ஆசிரியர் அனைவரும் ஒரு சந்தெகம் என வந்தால் என் அப்பாவிடம் தான் கேப்பார்கள். எனது முன்று ஸகோதரிகள் மற்றும் 4 ஸகோதர்கள் அனைவரும் நல்ல நடத்தையும் நல்ல படிப்பும் உள்ளவர்கள். எங்களின் வீட்டில் படிப்பும் டிசிப்பிலின் தான் முக்கியம், இதில் தவறினால் பின்னிப் பெடல் எடுத்துவிடுவார்கள், இதனால் எங்கள் குடும்பத்திற்கு நல்ல பெயர் இருந்தது. மற்றபடி நான் கடைக்குட்டி செல்லம் ரெம்பா அதிகம். நான் முட்டிபோட்டு உள்ளதை பார்த்தபடி உள்ளே சென்ற என் அப்பா அதை பற்றி தலைமை ஆசிரியரிடம் ஒரு வார்த்தை கூட போசாமல் வந்தார். என் அப்பாவை வழியனுப்ப வெளிய வந்த தலைமை ஆசிரியர் நான் முட்டி போட்டு உள்ளதை பார்த்து காரணம் கேக்க அப்போதுதான் என்னை பார்த்த காந்திமதி டீச்சர் என் வகுப்பு ஆசிரியையிடம் நான் யார் என கூறினார். உடன் அந்த டீச்சர் வந்து தலைமை ஆசிரியரிடம் என் அப்பாவிடமும் வந்து காரணத்தை கூறி மன்னிப்பு கேக்க தலைமை ஆசிரியை முட்டிபோட்டது போதும் எனக் கூறினார். அதுவரை அமைதியாய் இருந்த எனது அப்பா இல்லை அவன் இன்னும் ஒரு அறைமணி நேரம் முட்டிப் போடட்டும் என கூறி ஆசிரியை பாரட்டிச்சென்றார்.
எனக்கு வருத்தம் தாங்கவில்லை. அப்போதுதான் நான் எதோ தவறு செய்துவிட்டென் என உனர்ந்த்தென்.
பின் வீட்டிற்கு வந்ததும் அப்பா சிவந்து வீங்கிய என் முட்டிகாலுக்கு என்னை தடவி பள்ளியில் இருந்து சொல்லாமல் வெளியில் செல்லக்கூடாது என அறிவுரை கூறினார். ஆனால் எங்க அம்மா மேலும் முட்டி போட சொன்னத்தற்க்காக எங்க அப்பாவை நல்லா டின்(திட்டி) கட்டினாங்க்க எங்க அம்மாவிற்க்கு அவர் பிள்ளைகளை யாரும் எதும் சொன்னால் பிடிக்காது.

1 comment:

  1. நல்ல அப்பா - தவறுகளை அன்பாக எண்ணை தடவி திருத்தும் அப்பா - அமமா வழக்கம் போல் - டின் கட்டுபவர் - பித்தனோ வாலு

    நல்லாருக்கு இடுகை - ரசிச்சேன்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.