Tuesday, November 17, 2009

அய்யப்பனின் அற்புதங்கள்


இன்று இனிய நாள், என் மனதுக்கு மிகுந்த சந்தோசம் தரும் நாள். ஆம், தமிழ் மாதம் கார்த்திகை ஒன்றாம் நாள் தான், எங்களின் பிறந்த நாளை வீட சந்தோசம் தரும் நாள். ஆம் நாங்கள் அந்த கலியுக வரதன், கண் கண்ட தெய்வம், எங்கள் அய்யப்பனைக் காண சபரிமலை யாத்திரைக்காய் மாலையிடும் அருமையான நாள். இன்று முதல் நான் சுகங்களைத் துறந்து, தரையில் படுத்துறங்கி, காலை சிற்றுண்டி தவிர்த்து ஒரு முனிவரைப் போல, சாதுவைப் போல, சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளும் விரத ஆரம்ப நாள். இந்த வருடம் நான் எனது பதினேராம் மலையாத்திரை மேற்கொள்ள உள்ளேன். அந்த கன்னிமூல மகா கணபதியும், காந்தமலை பகவானும் எந்த விக்கினமும் இன்றி எங்களின் யாத்திரையை நிறைவேற்றித் தருமாறு பிரார்த்திக்கின்றேன்.

என் வாழ்க்கையில் தாராபுரத்தில் உள்ள காடு ஹனுமந்தராய சுவாமியும்(எனது முதல் பதிவு), அய்யப்பனும் என் கண் கண்ட தெய்வங்கள். என் வாழ்வில் வரும் இன்பம்,துன்பம் ஆகிய எல்லாவற்றிக்கும் இவர்கள் தான் பொறுப்பு. பல முறை என் வாழ்வில் பல அற்ப்புதங்களை இவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள். அதிலும் அய்யப்பன் என் தோழனாக, கடவுளாக, குருவாக, வழிகாட்டியாக இருந்து வழினடத்துபவர். அவர் நான் ஒவ்வெரு முறை மலையாத்திரை முடிந்தவுடன், என் வாழ்க்கையை உயர்த்தியும், மாற்றியும் உள்ளார். அவரின் மலையாத்திரை பயணத்தையும், அவரின் அற்புதங்களையும் தொடராக எழுத உள்ளேன். தங்களின் ஆதரவும் கிடைக்கும் என கண்டிப்பாக நம்புகின்றேன். வாருங்கள் நாம் நமது யாத்திரையைத் தொடங்கும் முன்னர் என்னைப் பற்றியும் எனது நம்பிக்கை பற்றியும் ஒரு சிறு அறிமுகம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

என் சிறு வயதில் என் வீட்டின் பின்புறம் ஒரு முருகன் கோவில் உள்ளது. அங்கு அய்யப்பன் பஜனை, இருமுடிக்கட்டு முதலிய பூஜைகள் நடக்கும். நான் இந்த பூஜைகளில் சென்று கலந்து கொள்வேன். அப்போது இருந்து எனக்கு அய்யப்பன் மீது ஒரு தீராத பக்தி இருந்தது. அந்த பூஜைகளும், பாடல்களும் எனக்கு மிகுந்த சிலிர்ப்பைக் கொடுத்தன. நான் பள்ளியில் நாலாவது படிக்கும் சமயம் எனக்கு பிரேமானந்தன் என்ற நண்பன் அறிமுகம் ஆனான். அவன் தாத்தா அய்யப்பமலைக்குப் பக்தர்களை அழைத்துச் செல்லும் குருசாமி. அவர் தலைமையிலும் இந்த முருகன் கோவிலில் பூஜைகளும்,அன்னதானமும்(ரொம்ப முக்கியம்) நடக்கும். நான் இந்த பூஜைகளில் ஆர்வமுடன் கலர்ந்து கொண்டேன். அந்த வருடம் நானும் போக மிக ஆசைப் பட்டேன். ஆனால் எங்கள் வீட்டில் தகுந்த துணை இல்லாமல், அடுத்தவர்களை நம்பிப் போகக் கூடாது என்று கூறிவிட்டனர். அதனால் என் ஆசை மனதளவில் மட்டும் இருந்தது. அனாலும் எல்லா வருடமும் அய்யப்ப பூஜைகள் நடந்தால், அது யார் செய்யும் பூஜையாக இருந்தாலும் நானும் போய் அமர்ந்து கொள்வேன். இப்படி போகும் காலத்தில் தான் அந்த அய்யப்பன் எங்கள் வீட்டில் ஒரு அற்புதத்தை நடத்தினான். அது

எங்க பெரிய அண்ணா சாலை ஆய்வாளராக, நெடுஞ்சாலைத் துறையில் இணைந்தவுடன் அவருக்கு சேலம் கல்வராயன் மலைப்பகுதியில் வாய்ப்புக் கிடைத்தது. அவரும் ஒரு வருட காலம் அங்கு பணியாற்றினார். அப்போது காட்டுக்கொசுக்கடியினாலும், சரியான வசதியின்மையாலும் மலோரியாக் காய்ச்சல் கண்டது. இந்தக் காய்ச்சலும் அவருக்கு விட்டு விட்டு வந்தது. அண்ணா ஈரோட்டுக்குப் பணி மாற்றம் செய்துப் பின்னர் தாராபுரத்திற்க்கும் பணி மாற்றி வந்துவிட்டார். ஆனாலும் மலோரியா மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்தது.முறையான மருத்துவத்தாலும் மாத்திரைகளாலும் ஒரு வழியாக காய்ச்சலில் இருந்து விடுபட்டார். ஒரு நாள் அலுவகம் சென்ற அவர் மதியத்தின் போது தலையில் கட்டுடன், இருவருடன் கைத்தாங்கலாக வீடு வந்து சேர்ந்தார். என்ன என்று கேட்ட போது வேலையின் போது திடீர்னு ஒரு சத்தத்துடன் மயங்கி விழுந்து, தலையில் அடிபட்டது எனவும் கூறினார்கள். பின்னர் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட், ஸ்கேன் என்று எல்லாம் செய்ததில் டாக்டர் அவர் மலோரியாவிற்காக, அதிகமாக சாப்பிட்ட குளேரோகுயின் மாத்திரைகள் அவருக்கு நரம்புத்தளர்ச்சியை உண்டு பண்ணி, அதன் காரணமாய் வலிப்பு வந்ததாக கூறினார். பின்னர் அவருக்கு அதற்க்கு சிகிச்சை தரப்பட்டது.

அனால் இந்த வலிப்பு அவருக்கு எப்பவும் வராது, சரியாக டிசம்பர் மாதம், முதல் வாரத்தில், ஆறு அல்லது ஏழு தேதிகளில் தான் ஒரு முறை மட்டும் வரும். இப்படி போகையில் ஒரு நாள் எங்கள் வீட்டின் அருகில் உள்ள குருசாமி ஒருவர் அவரை சபரிமலை சென்று வருமாறு கூறினார். அதுவும் எப்படித் தெரியுமா?அந்த வருடம் இந்த வலிப்பு வந்த மறுனாள் இவர் கவலையுடன் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கையில் எதிரில் மிதிவண்டியில் வந்த குருசாமி(தெரிந்தவர் என்றாலும் மிகுந்த பழக்கம் இல்லை) ஆவேசம் வந்தவர் போல சைக்கிளை நிறுத்தி எங்க அண்ணன் சட்டையைப் பிடித்து அடிப்பவர் போல" நீ மலைக்கு போ, போ என்று கத்தியுள்ளார், பின் வண்டியை எடுத்து சென்று விட்டார். எங்க அண்ணாவும் இதை வீட்டில் கூற சரி அடுத்த வருடம் மலைக்குச் செல்லாம் என கூறி, அடுத்த வருடம் எங்க அண்ணா அவரின் நண்பர்களுடன், லாரி ஓனர் சேகர் மற்றும் இலைக்கடை குணாவுடன் சேர்ந்து மாலையிட ஆற்றுக்குச் சென்றார்கள். அங்கு இவரை மாலையிட வந்த குருசாமியும் அவர்தான். அண்ணா அவரிடம் கூற அவர் எனக்கு அன்னைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. வீட்டிற்க்கு வந்து யோசித்துக் கூட எனக்குப் புரியவில்லை, நானும் அதன்பின்னர் மறந்து விட்டேன் என்றார். மாலையிட்ட அந்த வருடமும் அவர் குளியறையில் மயங்கி விழுந்தார். அதற்கு அடுத்த வருடமும் பூஜை செய்யும் போது மயங்கி விழுந்தார். மூன்றாம் வருடம் அவருக்கு மயக்கம் வருவது போல தோன்றவே அவர் படுத்துக் கொண்டார். ஒரு மூன்று மணி நேரம் படுத்திருந்த அவர் பின் கண்விழித்தார். அந்த வருடம் மலைக்குச் சென்ற அவர் என் மூன்றாவது அக்காவின் திருமணத்திற்க்காக வேண்டி மாளிகைப்புறத்தம்மன் மஞ்சமாதா கோவிலில் பூஜை முடித்து சாமி கும்பிடும் சமயம் ஒரு சிறு விபத்து ஒன்று நடந்தது அது....... தொடரும்.


டிஸ்கி: இந்த அழாகான படத்தைத் தன் பதிவில் இட்டு, எனது பதிவுக்கும், என் கணினித் திரைக்கும் இட உதவி செய்த அய்யா தமிழ் ஓவியா அவர்களுக்கு நன்றி.

Monday, November 16, 2009

சுவையான பாகற்க்காய் பொரியல்

என் பதிவைப் படிக்கும் அனைத்து பதிவர்களும், சகோதர சகோதரிகளும் எல்லாரும் ரொம்ப நல்லவங்க. நான் என்ன தப்பு பண்ணாலும் கண்டுக்காம உட்டறாங்க. அல்லது என் மீது இருக்கும் நம்பிக்கையால் கவனிப்பது இல்லை என்று நினைக்கின்றேன். அல்லது என் இராசி நான் தப்பா சொன்னாக் கூட எல்லாரும் பாராட்டுவாங்க போல. அவியல் பதிவைப் படித்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள். ஆனா நான் அந்த பதிவில் மூன்று தவறுகள் செய்து இருந்தேன்.
அந்த மூன்று தவறுகள் என்ன என்றால்,

1. அரைக்கும் போது காரத்திற்க்கு மூன்று பச்சை மிளகாய் போடனும். (காரத்திற்க்கு நான் ஒன்றும் சொல்லவில்லை என்ற சந்தோகம் யாருக்கும் வரவில்லையா?)
2. முதலில் காய்களின் மீது உப்பு. மஞ்சத்தூள் தூவும் போது வாசனைக்கு ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் தூவவேண்டும்,
3. கடைசியாக கொஞ்சம் கடுகை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் தாளித்துக் கொட்டவேண்டும்.

இந்த மூன்றும் நான் அவியல் பதிவில் திருத்தி விட்டேன்,நீங்கள் இந்த முறையில் செய்யும் போது மீண்டும் படிக்கவும். (என்ன சுசி,சத்தியா இதுக்கு எல்லாம் தோப்புக் கரணம் போடச் சொன்னா அழுதுருவேன், ஆமாஆஅ.) தவறுகளுக்கு மன்னிக்கவும் நன்றி. இன்னிக்குப் பதிவுக்குப் போகலாம்.

நிறையப் பேருக்கு பாகற்காய்ன்னா பிடிக்காது, அதிலையும் சமைத்து விட்டால் குழந்தைகளையும், ரங்கமணிகளையும் சாப்பிடக் கெஞ்சனும். காரணம் கசப்புதாங்க.
கொஞ்சம் கசப்பு இல்லாமல் சுவையாக சமைத்தால் அவங்களே கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அதுக்கான பதிவுதான் இது. இந்த முறையில் அனைவரும் ஏற்கனவே சமைப்பார்கள். இரத்த அழுத்தம், இரத்த சுத்தி மற்றும் சாக்கரை வியாதிக்கு மருந்தான பாகற்காய் ரொம்ப நல்லது. அதை சாப்பிடாமல் விடலாமா?. ஆதலால் சுவையாக சமைத்து உண்பது எப்படி என்று பார்க்கலாம். இது எனக்கு ரொம்ப பிடித்த பொரியல், ஆதலால் தான் இந்த பதிவு.

தேவையான பொருட்கள் :

1.பாகற்காய் கால் கிலோ,
2. பெரிய வெங்காயம் மூன்று,
3. தக்காளி இரண்டு,
4. மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் அல்லது காரத்திற்க்கு ஏற்ப,
5. உப்பு தேவைக்கு ஏற்ப,
6.பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்,
7.மஞ்சத்தூள் ஒரு ஸ்பூன்,
8.புளித்தண்ணீர் அரை டம்ளர்,
9.வெல்லம் அல்லது அஸ்கா இரண்டு ஸ்பூன்.
10. எண்ணெய் நாலு ஸ்பூன்.

பாகற்காயை ஒன்று அல்லது ஒன்றை அங்குல நீளமூம், மெல்லியதாகவும் நறுக்கவும். வெங்காயத்தை நாலா நறுக்கிப் பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை எட்டுத்துண்டுகளாக நறுக்கவும். இவைகளை நறுக்கி முடித்த பின், ஒரு வாணலியை அடுப்பில் இட்டு நாலு ஸ்பூன் எண்ணெய் விட்டு (எண்ணெய் அதிகமாக ஊற்றவும், வத்தக்குழம்பிக்கு ஊற்றுவது போல.) கடுகு, மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் விட்டு தாளித்துப் பின் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கும் போது தக்காளியும் இட்டு வதக்கவும். இவை சிறிது வதங்கியவுடன் நறுக்கிய பாவற்க்காயை போட்டு ஒரு களறுக் களறிப் பின் அதில் புளித்தண்ணீர் அரைடம்ளர் ஊற்றிப் பின் மிளகாய்த்தூள், உப்பு, சக்கரை அல்லது வெல்லம் போடவும்.(எலுமிச்சை அளவு வெல்லம் பொடித்துப் போட்டால் சுவையாக இருக்கும் இல்லாவிட்டால் அஸ்கா இரண்டு ஸ்பூன் போடவும்). இதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு தட்டைப் போட்டு மூடிவிடவும். கவனிக்கவும் தண்ணீர் மீது எண்ணெய் மிதக்க வேண்டும்.
இருபது நிமிடங்கள் கழித்துத் தட்டை எடுத்து விட்டு தண்ணீர் ஆவியாகும் வரை விட்டுப் பின் பாகற்காயை இலேசாகக் கிளறவும். முக்கியமாகப் பாகற்காய் எண்ணெய்யில் சுருள வதங்கவேண்டும். எண்ணெய்யில் சுருள வதங்கினால் தான் அந்தக் கசப்பு குறையும். கொட்டியானவுடன் எண்ணெய் அதிகாமாக இருந்தால் கொஞ்சம் வடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அல்லது ஹாட் பேக் டப்பாவில் போட்டு மூடிவையுங்கள். எண்ணெய்யுடன் இருந்தாலும் சாதத்தில் இந்த பொரியலை பிசைந்து சாப்பிடலாம்.

இந்த பொரியலை சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம் அல்லது சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். எனக்கு சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் பிடிக்கும். நன்றி.

டிஸ்கி : நாளை சுவாஸ்யமான அனுபவ பதிவு ஆரம்பம்( ரம்பம்). பதிவர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகின்றேன்.

Friday, November 13, 2009

ராணி என் மகாராணி - மஜா கவிதை

சில்லென்று மணக்கும் மல்லிகையைத்
தலையில் சூட்டி,அள்ளி அனைத்து
ஆதரவாய் கரம் கேத்து மகிழ
வரும், ராணி என் மகாராணி,

ஜாதி மல்லியின் வாசத்தில்
நீ ஒரு உயர் ஜாதி என
உன் பாதம் தாங்கி அழகு பார்க்க
வரும், ராணி என் மகாராணி,

செண்பகமே மணம் வீச
உன் கூந்தல் என் முகத்தில்
அலைபாய,ஆனந்தமாய் நான்
மயங்க, ராணி என் மகாராணி,

காம்பு தாங்கா ரோஜப்பூ
உன் கூந்தலின் ஓரத்தில்
அழகு சேர்க்க, நான் மயங்கி
நிற்க, ராணி என் மகாராணி,

முல்லை மலரனிந்து சிங்காரித்து
முத்து பல் வரிசையில்
நீ சிரிக்க, நான் இரசித்து
மகிழ, ராணி என் மகாராணி,

மெட்டு அவிழ்ந்த தாமரை போல
கட்டு அவிழ்ந்த காமத்தில் மயங்கி
மார்கழி குளிர் போக அனைத்து
விழி நீருடன் இருமனமும் கலர்ந்து
இருக்க, ராணி என் மகாராணி

தாழம்பூ மயக்கத்தில் பினைந்திடும் பாம்புகளாய்
நாம் இருக்கும் நாள்,எந்த நாளே
நீ வரும் நாளும்,எந்த நாளே
ராணி என் மாகாராணி.

டிஸ்கி: கவிதையைப் படித்து யாரும் தப்பா எடுத்துக்காதிங்க. நம்ம அறிவு அப்ப அப்ப இப்படித்தான் கிளைவிடும்.
கொஞ்ச நாளா தனிமை ரொம்ப பேரடிக்குது. அதுனால எங்க வீட்டுல ஒரு தங்க மணியைப் பார்க்க சொல்லிவிட்டேன். அடுத்த ஜீன் அல்லது ஜூலையில் மோளம் கொட்டியிரலாம் என்று ஆசை.
இம்ம் தங்கமணி வந்து இதைப் படித்து உதைக்கப் போறா. உதை வாங்க நானும் ரெடீய்ய்ய்ய்ய்.
நன்றி.

திருட்டுச் சோறு

எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் நான் எப்பவும் இரண்டாம் வரிசை பெஞ்சு மாணவன். என் கல்லூரி நாட்களில் நான் மூன்றாம் வகுப்புப் பிரிவின்(மூன்றாவது பீரியட்)போது தமிழ் அல்லது ஆங்கில வகுப்பில் இறுதி வரிசைக்குச் சென்று விடுவேன். ஏன் தெரியுமா அங்குதான் பெஞ்சுக்கு அடியில் வெளி ஊர்களில் இருந்து வரும் மாணவர்களின் சாப்பாட்டு பாக்ஸ் வைத்துருக்கும். நான் அந்த பாக்ஸை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து(திருடி) கொஞ்சம் சாப்பிட்டு விடுவேன். சாப்பாடு நல்லா இருந்தா முக்கால்வாசி எடுத்துச் சாப்பிட்டு விடுவேன். நண்பர்களும் சாப்பாடு கம்மியாக இருந்தால், நான் தான் சாப்பிட்டேன் என்று விட்டு விடுவார்கள். இது பல நாள்கள் நடந்தது. என்னதான் வீட்டில் சாப்பிட்டாலும், திருட்டுச் சாப்பாடு தனி சுவைதாங்க. நான் வகுப்பில் அனைவரின் அன்புக்கும் உரியவன் என்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

ஒரு நாள் வெள்ளிக்கிழமை நான் மூலனூர் சி.கார்த்திகேயன் என்பவன் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டேன். சாம்பார் சாதம் சுவையாக இருந்தது. நானும் முக்கால் வாசி சாப்பாட்டைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டேன். பின் என் வீட்டுக்குச் சென்று மதிய உணவை ஒரு கட்டுக் கட்டி விட்டு கல்லூரிக்கு வந்தேன். அப்ப நண்பர்கள் அனைவரும் மரத்தடியில் நின்றிருந்தார்கள். நான் அவர்கள் அருகில் சென்றதும், கார்த்தி என்னிடம் "சுதா என் சாப்பாட்டை நீயா சாப்பிட்டாய்" எனக் கேக்க, நான் ஆமா கார்த்தி இன்னைக்கு "உன் சாப்பாடு சூப்பர்" என்றேன். அவன் "அய்யோ! அய்யோ! அதையா சாப்பிட்டாய்? என சத்தமாகக் கேட்டான். நானும் புரியாமல் ஆமாம் என்று மகிழ்ச்சியாக கூற. அவன் "டேய் அது கறிக்குழம்புடா எனவும், போச்சு அய்யர்வாள் கறி சாப்பிட்டுட்டார்" எனக் கிண்டல் செய்தான். அவன் சொன்னதும், என் நண்பர்கள் கார்த்தி, செந்தில், கனகு, முகுந்தன், இராமச்சந்திரன், ஸ்ரீனிவாசன்,சக்திவேல், குப்புசாமி,வாசு மற்றும் மணி அனைவரும் என்னை நல்லா ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள். எல்லாரும் இதுதான் சமயம் என்று அவர்களுடன் தோழிகள் உமா மகேஷ்வரி,கண்மணி,பாரதி,பெஸிலியா,சுசிலா,மல்லிகாவும் சேர்ந்து கொண்டார்கள். சுதா வேணும்னா சொல்லு, நாங்க செய்து எடுத்து வர்றேம்ன்னு அவங்க ஒரு பக்கம். ஏறக்குறைய மொத்த வகுப்பும் நான் கறிக்குழம்பு சாப்பிட்ட விசயத்தை வைத்து என்னை நல்லா கும்மு,கும்முனு கும்மி எடுத்தார்கள். நான் அழாத குறை. கார்த்தியிடம் டேய் நிசமா சொல்லு அது கறிக்குழம்பா எனக் கேக்க அவனும் ஆமாம் என்றான்.

மதியம் ஆரம்பித்த இந்த ஓட்டுதல் மாலை மூன்று மணி வரை தொடர்ந்தது. பின் என் முகம் வாடியதைப் பார்த்த கார்த்தி, என்னிடம் கவலைப் படாத சுதா அது சாம்பார்தான் என்று கூறினான். பின் நான் நம்பாமல் பார்க்க, வகுப்பு இடைவேளையின் போது அவன் எல்லார் முன்னிலையிலும் எழுந்து நின்று, எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை கறி செய்ய மாட்டார்கள் என்றும், அதுவும் இது ஆடி மாதம் என்பதால் கண்டிப்பாகக் கறி சமைக்க மாட்டார்கள். எனவே சுதா சாப்பிட்டது சாம்பார் சாதம்தான் என்றும் கூறினான். நானும் ஒரு வழியாக சமாதானம் ஆனேன். அப்புறம் முகுந்தன் என்னிடம் மாலை கல்லூரி விட்டு திரும்பும் போது தனியாகச் சொன்னான். "டேய் அவங்க வெளியூரில் இருந்து காலை ஏழு மணிக்கே சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விடுவார்கள். மதியம் இந்த டப்பா சாப்பாடுதான். விட்டால் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பித்தான் சாப்பிடுவார்கள். நீ எடுத்து சாப்பிட்டால் அவர்கள் பட்டினி தான் இருக்கனும், அல்லது மாலை அவர்களுக்கு பசி எடுக்கும் என்றான். அப்போதுதான் எனக்கு நான் விளையாட்டாகச் செய்த தவறு புரிந்தது. அது முதல் நான் சாப்பாட்டு டப்பாவை எடுத்து சாப்பிடும் பழக்கம் நின்றது.

ஒரு மூனு நாள் கூட ஆகியிருக்காது, செந்திலும், கார்த்தியும் என்னிடம் கவலையாக, "சுதா நாங்க விளையாட்டாதான் சொன்னேம். நீ எப்பவும் போல சாப்பிடு" என்று சொன்னார்கள். நான் கோவித்து சாப்பிடுவதை நிறுத்தியதாக நினைத்தார்கள். நான் அவர்களிடம் "இல்லைடா நீங்க பசியுடன் இருப்பீர்கள் என்று முகுந்தன் கூறினான்". ஆதலால் தான் சாப்பிடவில்லை என்றேன். அதற்கு அவர்கள் "சுதா நீ சாப்பிட்டாதான் எங்களுக்கு சந்தோசம், சாப்பிடு ஆனா கொஞ்சமா சாப்பிடு" என்றார்கள். நான் என் நண்பர்களின் அன்பில் உருகிப் போனேன். அது முதல் வாரத்தில் என்றாவது ஒரு நாள் நான் அவர்களில் ஒருவர் சாப்பாடை அல்லது எல்லார் சாப்பாட்டிலும் கொஞ்சம் எடுத்து சாப்பிடுவது வழக்கம். அவர்களும் என்னிடம் டேய் எங்க வீட்டுல கறி என்று கொணர்ந்தால், முன் கூட்டியே சொல்லுவது வழக்கம். அல்லது ஸ்பெசலாக(கம்பங்க களி மாதிரி) எதாவது கொணர்ந்தால் சுதா இது வைத்திருக்கேன் எடுத்துக் கொள் என்பார்கள்.

ஒரு நாள் சாப்பிடும் சமயம் நான் எங்க அம்மாவிடம் இந்த கதையைக் கூற, அவரும் எல்லாரும் நல்ல பசங்க ஒரு நாள் அவங்க எல்லாரையும் நம்ம வீட்டுக்குச் சாப்பிட கூப்பிடு என்றார். நானும் நண்பர்களை எங்க வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து அளித்தேன். அதில் கார்த்திக்கு மட்டும் என்னிடம் ரொம்ப கோவம். நானும் ஏண்டா என்று விசாரிக்க அவன் சிரித்துக் கொண்டு இவ்வளவு நல்லா, சுவையா உங்க வீட்டில் சமைக்க, நீ எப்பிடிடா எங்க சாப்பாட்டை சாப்பிடுற? என்றான். நண்பர்கள் அனைவரும் பாராட்டிச் சென்றனர். இந்த கார்த்தி தற்போது காவல் துறையில் பணி புரிகின்றான். அவன் கோவை டவுன் ஹால் காவல் நிலைய துணை ஆய்வாளராக பணி புரிந்த போது சந்தர்ப்ப சூழ்னிலை காரணமாக நான் அவனிடம் ஜம்பது ரூபாய் கடன் வாங்கினேன். மறுமுறை கோவை சென்றால் அவனிடம் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் விதி என்னைச் சென்னைக்கு மாற்றிப் பின் சிங்கப்பூருக்கும் மாற்றியது. இப்போ அவன் எங்கு உள்ளான் என்பது எதுவும் தெரியாது. நான் மட்டும் அவனுக்கும், அவன் போட்ட சாப்பாட்டுக்கும், கொடுத்த ஜம்பது ரூபாய்க்கும் கடங்காரனாய் உள்ளேன். அந்த நல்ல நண்பர்கள் தொடர்பும் இப்போது இல்லை. ஆனாலும் ஒரு நாள் கார்த்தியை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி.

டிஸ்கி:
1.ஒரு பதிவரின் பின்னூட்டத்தில் மேனகா சத்தியா தன் தோழிகளுடன் கூட்டாஞ் சேறு சாப்பிட்டதாக போட்ட பின்னூட்டதைப் படித்ததின் விளைவுதான் இந்த பதிவு. இந்த பதிவைப் படித்து திட்டவும், ஆட்டோ அனுப்புவதாக இருந்தால் அவருக்கு அனுப்பவும் நன்றி.

2.சனி ஞாயிறுக்கும் சேர்த்து இரு பதிவுகள். அவியல் பதிவையும், இந்த பதிவையும் படித்துப் பின்னுட்டம் இடுங்கள் நன்றி. மகிழ்வான வார இறுதிக்கு வாழ்த்துக்கள்.

சுவையான அவியல்

அவியல் அனைவரும் செய்வதுதான், ஆனால் நான் முன்னர் சொன்ன மாதிரி, நான் வித்தியாசமான வகைகளை, வித்தியாசமாக, சுவையாகச் செய்வதுதான் என் முறை. இந்த அவியலையும் வித்தியாசமான முறையில், வித்தியாசமான செய்முறையில் சொல்லுகின்றேன். செய்து பாருங்கள் கண்டிப்பாய் நல்ல பாரட்டுக்கள் கிடைக்கும். அவியலில் ரொம்ப முக்கியம் காய் நறுக்குவதுதான். காய்கள் ஒன்றை அங்குல(அல்லது இரண்டு) நீளமும், முக்கால் அங்குல அகலமும் கொண்ட நல்ல சைஸில் நறுக்கினால் காய் அழியாது, குழையாது. ஆதலால் நான் முதலில் காய் நறுக்குவதைத் தான் சொல்லப் போறன். ஒகே பதிவுக்குள்ள போலாம்மா.

தேவையான பொருட்கள் :
காய்கள் :
வெள்ளைப் பூசனி ஒரு பத்தை, மஞ்சப் பூசனி ஒரு பத்தை, பீன்ஸ் கொஞ்சம், கொத்தவரங்காய் கொஞ்சம், முருங்கைக்காய் இரண்டு, உருளைக் கிழங்கு மூன்று, சேனைக் கிழங்கு கால் கிலோ, சேப்பங்கிழங்கு நாலு. கத்திரிக்காய் கால் கிலோ, காரட் நாலு,தக்காளி மூன்று, இன்னமும் சோவ் சோவ்(பெங்களூர் கத்திரி) போன்ற காய்கறிகள், உங்களுக்கு பிடித்தமான காய்களைச் சேர்க்கலாம். முள்ளங்கி, பீட்ரூட், வெண்டைக்காய்,பாகற்காய் போட்டால் அவியலின் நிறம், சுவை கெட்டுவிடும் ஆதலால் இவை நாலு தவிர மீதம் கிடைக்கும் காய்களைச் சேர்க்கலாம். சரியா?

அரைக்க :
தேங்காய் ஒன்று அல்லது ஒரு மூடி,
சீரகம் மூன்று ஸ்பூன்,
சின்ன வெங்காயம் ஒன்று,
பூண்டு மூன்று பல்.
பச்சை மிளகாய் மூன்று.

தேங்காய் எண்ணெய் மூன்று ஸ்பூன்.

முதலில் கத்திரிக்காயை நாலா வெட்டி சிறு சிறு துண்டுகள் ஆக்கவும், நீரில் இடவும்.கிழங்கு வகைகளை உருளைக்கிழங்கை பெரியதாக இருந்தால் எட்டாகவும், சிறியதாக இருந்தால் நாலாகவும் வெட்டவும். சேனைக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டாக ஒன்றை அங்குல நீளமும், முக்கால் அங்குல அகலமும் கொண்ட துண்டுகளாக நறுக்கவும். காய்கள் எல்லாம் ஒரே அளவில் நறுக்கவும், சேப்பங் கிழங்கையும்,காரட்டையும்,பூசனிகளையும்(கொஞ்சம் பெரியாதாக) இது போல நறுக்கவும். பீன்ஸ், கொத்தரவங்காய் போன்றவற்றை ஒன்றை அங்குல நீளம் இருக்குமாறும், முருங்கைக் காய் இரண்டு கனுக்கள் நீளம் இருக்குமாறு நறுக்கவும். நறுக்கிய காய்களைத் தனித் தனியாக வைத்துக் கொள்ளவும்.

செய்முறை :
ஒரு அகலமான வாணலியில் முதலில் அடிப்பகுதியில் வேகக் கடினமான காய்கறிகளான கிழங்குகள், பீன்ஸ், காரட், முருங்கைக்காய் மற்றும் அதிக நேரம் வேகும் காய்களைப் போட்டு, அதன் மேல் சீக்கிரம் வேகும் காய்களான கத்தரிக்காய்,பூசணிகள், தக்காளி மற்ற காய்களும் இட்டு அதில் தேவையான அளவு உப்பு,பெருங்கயாத் தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள்(கொஞ்சமாக தூவவும்,அவியல் கலர் மாறிவிடும்) தூவிப் பின்னர் முக்கால் டம்ளர் தண்ணீரைத் தெளித்த மாதிரி ஊற்றவும். (முக்கிய கவனம்: அடிப்பகுதியில் இருக்கும் காய்கள் மட்டும் தண்ணீரில் மூழ்கலாம். காய்கள் முழுதும் மூழ்கும் வண்ணம் தண்ணீர் ஊற்றக் கூடாது). இனி மிதமான(மீடியம்) சூட்டில் அடுப்பை வைத்து ஒரு தட்டைப் போட்டு வாணலியை மூடி வைக்கவும். ஒரு முப்பது நிமிடங்கள் சூடு ஆகட்டும். (கவனிக்கவும் காய்களைக் களறக் கூடாது, அப்படியே மூடிவிடுங்கள்). அதற்க்குள் அரைத்து விடுவேம்.

அரைக்கும் பொருள்களான தேங்காய், தேங்காய் அளவு காய்களைப் பொறுத்து, நிறைய காய்கள் இருந்தால் ஒரு காயும், அளவாய் இருந்தால் ஒரு மூடியும் போதும். தேங்காயை முதலில் துருவல் செய்து அதில் மூன்று ஸ்பூன் சீரகம், தோலுரித்த ஒரு சின்ன வெங்காயம், மூன்று பல் பூண்டு,பச்சை மிளகாய் ஆகியன சேர்த்து மைய அரைக்கவும். நீர் அதிகம் விடாமல் விழுது போல அரைக்கவும். இப்பத் தட்டை எடுத்துப் பார்த்து காய்கள் வெந்துருக்கும் அளவைச் சேதிக்கவும். பின் இந்த விழுதை அந்த காய்களின் மீது கொட்டிப் பின் விழுது அரைத்த மிக்ஸி ஜாரில் ஒரு அரைத் தம்ளர் நீர் விட்டு அலம்பி, அந்த நீரைக் காய்களின் மீது தெளிக்கவும். காய்கள் ஏற்கனவே வெந்துருந்தால் அரை டம்ளரும், இன்னமும் வேக வேண்டியிருந்தால் முக்கால் டம்ளர் தண்ணீரும் விடவும். இப்பவும் களறக் கூடாது. காய்கள் ஏற்கனவே வெந்து இருந்தால் விழுது இட்டு பத்து நிமிடமும், காய்கள் இன்னமும் வேகவேண்டியிருந்தால் இருபது நிமிடமும் சிம்மில் வைத்துத் தட்டை மூடி சூடு செய்யுங்கள். இருபது நிமிடங்கள் கழித்து தட்டை எடுத்துவிட்டு, மிகவும் மெதுவாகவும், பொறுமையாகவும், மேலும் கீழுமாய் விழுது நல்லா கலக்கும் வண்ணம் களறி விடவும், களறுவதற்கு அப்பளம் பெரிக்கும் சட்டுவதைப் பயன்படுத்தலாம்(ஓட்டைக் கரண்டி). காய்கள் சிதையா அல்லது உடையா வண்ணம் பக்குவமாக கிளறவும். பின் தண்ணீர் இஞ்சும் சமயம் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்கள் தேங்காய் எண்ணெய்யில் வதங்கும் வண்ணம் மெதுவாக கிளறி, கொட்டியாகி,வாசம் வந்ததும் இறக்கி வைக்கவும். இப்ப அவியல் ரெடீ.

இந்த அவியலை சாதம், அடைதோசை போன்றவற்றிக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த அவியல் நல்லா ஆறியதும், இந்த அவியலில், அப்ப சாப்பிடத் தேவையான அளவு மட்டும் எடுத்து, உறைந்த, அதிகம் புளிக்காத தயிரில் சிறிது தண்ணீர் விட்டு,(தயிர் கொட்டியாக இருந்தால் தண்ணீர் விடவும், இல்லை என்றால் வெறும் தயிரில்) காய்களைப்(அவியல்) போட்டு கலர்ந்து கொள்ளவும்.மிச்சம் இருக்கும் தயிர் சேர்க்காத அவியல் மீதியை பிரிஜ்ஜில் வைத்து விடவும்.பின் உபயேகப் படுத்தும் முன்னர் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்யலாம்.உப்பு கம்மி என்றால் தயிரில் உப்பு சேர்க்கலாம். இறுதியாக கடுகு மட்டும் தேங்காய் எண்ணெய்யில் தாளித்துக் கொட்டவும்.

இதில் வித்தியாசம் என்ன என்றால் அவியலில் சின்ன வெங்காயமும் பூண்டும் சேர்ப்பதுதான். இவை சாப்பிடாதவர்கள் சேர்க்காமலும் செய்யலாம். செய்முறையில் காய்களைத் தனித்தனியாக வேக வைக்க அவசியம் இல்லை. காய் நறுக்குவதுதான் சிரமம். மற்றபடி இது போல செய்தால் அவியல் செய்வது சுலபம். செய்து பார்த்துவிட்டு சொல்லவும். தக்காளி போட்டால் நல்லா இருக்கும் போடாவிட்டாலும் சரி. நன்றி.

டிஸ்கி: அடுத்த திங்கள் பதிவில் நாம் வித்தியாசமான செய்முறையில் மிகவும் சாப்ட்டாகவும், சுவையாகவும் ஆப்பம் செய்வதைப் பார்ப்போம். நன்றி.

சகோதரியும், கவிதாயினியும் ஆன ஹேமா அவர்கள் நான் கல்யாணமாம் கல்யாணம் பதிவில் எனக்கு அவியல் பிடிக்கும் என்று நாலு முறை சாப்பிட்டுக் கூறியதால் அவியல் அவ்வளவு பிடிக்குமா? என்று கேட்டு பதிவிட சொல்லியிருந்தார். ஆகையால் இந்த பதிவு ஹேமா ஸ்பெசல்.

Thursday, November 12, 2009

அவன் தான் மனிதன் - நிறைவு

அத்தையின் மரணம் நடந்து சில வருடங்கள் கடந்தன. மைனரின் மகன் பெரியவன் ஆனான். அவருக்கு சாமியின் மூத்த மகளை மைனர் பெண் கேட்க, சாமியின் மகளுக்கும் விருப்பம் இல்லை. மறுபடியும் அந்த குடும்பத்துடன் சம்பந்தம் செய்ய சாமிக்கும் விருப்பம் இல்லை. மைனர் அரசுப் பணியாசிரியை ஒருவருக்குத் தன் மகனை மணம் செய்வித்தார். கொஞ்ச காலம் கழித்து, நல்ல வாட்ட சாட்டமான மைனருக்கு வந்தது இரத்தப் புற்று நேய். அந்தக் காலத்தில் புத்து வியாதிக்கு மருந்து கிடையாது. இப்போது செய்வது போல இரத்த மாற்று சிகிச்சையும் கிடையாது. மைனர் இரத்த வாந்தி எடுத்து இருமி, இருமிச் செத்தார். ஒரு குவளை தண்ணீர் குடித்தாலும் அதே அளவு இரத்த வாந்தி எடுப்பார். மிகவும் மெலிந்து, அமிழ்ந்து, படுத்த படுக்கையாய் பல நாட்கள் கஷ்டப் பட்டு இறந்தார்.

மைனரின் மகனும் நல்லவர். ஆனாலும் குடி அவரைக் கெடுத்தது. தன் சொத்துக்களில் பாதியைக் குடித்து அழித்தார். அவரின் மனைவி அவரிடம் இருந்து விலகிப்,பணியின் காரணமாக தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் பின்னலாடை நகரில் குடி பெயர்ந்தார். கொஞ்ச காலத்தில் அவரும் மறைந்தார். அவரின் மனைவி இந்த சொத்து வந்த கதை எல்லாம் கேள்விப் பட்டு, நிலங்கள் அனைத்தையும் விற்று விட்டு நகரில் குடியேறிவிட்டார். என் சித்தப்பாவும் பொன்னையாவிற்குச் சொத்துக்களை விற்றார். பாப்பா அத்தை மட்டும் தனது சகோதரனுடன் ஜமின் வீட்டில் வசித்து வந்தார். என் அப்பா அத்தையின் வருமானத்துக்காகத் தன் நிலங்களை பாப்பா அத்தையின் பராமரிப்பில் கொடுத்தார். அத்தையின் மறைவுக்குப் பின் பொன்னையனும் மறைய, அவரின் மகனுக்கு எங்கள் பங்கு நிலங்களை என் அம்மாவின் வற்புறுத்தலின் காரணமாய் விற்றார். இப்போது எல்லாரும் எல்லா சொத்துக்களும் விற்ற நிலையில் யாருமின்றி அந்த ஜமின் வீடு மட்டும் பூட்டி இருக்கின்றது.

என் தந்தைக்கு பிரச்சனைகள் வந்த போது எல்லாம், தன் தங்கை கனவில் வந்து ஆறுதல் கூறியதாக என் தாயிடம் சொல்லியுள்ளார். பல சமயங்களில் அவருக்கு கனவில் செய்தி சொல்லியுள்ளார். அவர் தனது 73 மூன்றாம் வயதில் இரட்டை ஹிரண்யா அறுவைச் சிகிச்சை நடந்தது. அப்போது அவருக்கு இரத்த அழுத்தம் தொடர்ந்து 180 முதல் 145 வரை இருந்தது. அவருக்கு உறங்க காம்போஸ் மருந்து டிரிப்ஸ் மூலம் கொடுக்கப் பட்டது. நானும் என் அண்ணாக்களும் அவர் உறக்கத்தில் அவர் கையை ஆட்டி விடாமல் பிடித்துக் கொண்டு இரவும் பகலும் கண்விழித்துக் காத்து இருந்தோம். அப்போது நான் ஒரு கையில் புத்தகமும், மறு கையில் அப்பாவின் கையையும் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தேன். அப்போது ஒரு ஹீம்ம்ம் என்று சத்தத்துடன் எழுவது போன்ற அசைவு அவரிடம் காணப் பட்டது. நான் பயத்தில் அப்பா, அப்பா என்று அவரை உலுக்க, அவர் கண் விழித்த அவர் சிரிப்புடன் என்னிடம் "அம்மா எங்க?" என்று கேட்டார். நான் வெளியில் அமர்ந்த அம்மாவை அழைக்க, என் அம்மாவிடம் எங்க அப்பா குழந்தையைப் போல சிரித்துக் கொண்டு சொன்னார். "கனவில் லஷ்மி வந்தாள்,அவள் என்னிடம் "அண்ணா நீ கவலைப் படாத உனக்கு இன்னமும் நாள் இருக்கு, நீ நல்லா இருப்பாய் என்று கூறிச் சென்றாள்" என்று முகமலர்ச்சியுடன் கூறினார்.அடுத்த இரு நாளில் அவர் பூரண குணம் பெற்று வீடு திரும்பினார்.

தன் பதிமூன்று வயதில் மணம் புரிந்து,பதினேட்டு வயதில் இல்லறம் தொடங்கிய சாமி. தொடர்ந்து 73 மூன்று ஆண்டுகள் என் தாயை விட்டு பத்து நாட்கள் கூட பிரிந்து இருந்ததில்லை. வீட்டின் அவரின் எல்லா வேளையும் அவரே செய்வார். எங்கள் வீட்டில் சாதம் சமைத்தவுடன், சாப்பிடுவதற்கு முன் அந்த சாதத்தை பெருமாளுக்கு நிவேதனம் செய்து,காக்கைக்கும் ஒரு பிடி வைத்து, பின்னர் சாப்பிடுவதுதான் வழக்கம். அதாலால் எங்கள் வீட்டில் தினசரி குளித்து விட்டுதான் சமைப்பது வழக்கம். அதுபோல குளித்து விட்டு பின் தண்ணீர் எடுப்பதும் வழக்கம். என் தந்தைதான் பெருமாளின் திருனாமங்கள் கூறியவாறு தண்ணீர் பிடிப்பார்.தண்ணீர் எடுத்த உடன் காப்பி குடித்து பின்னர் ஒரு மணிணேரம் பூஜையில் ஈடுபடுவது அவர் அன்றாட வழக்கு. நல்ல திடமான ஆரோக்கியத்துடன் தனது 89 வயது வரை வாழ்ந்த அவர், கடந்த 2008 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி காலை வழக்கம் போல நாராயணா, நாராயணா என்று உச்சரித்தவாறு குளித்த அவர் திருமண் என்று அழைக்கும் நாமம் இடுவதற்க்காக தலை நிமிர்ந்த அவர் தடுமாறி மயங்கினார். என் அம்மா அவருக்கு காப்பி எடுத்து வந்தவர் அதை மேஜையில் வைத்து விட்டு அவரை "என்னங்க" என்று தாங்கிப் பிடிக்க முடியாமல் அப்படியே படுக்க வைத்தார். அப்போது அவரை மருத்தவமனையில் சேர்க்க தலையில் ஸ்கேன் செய்ய வேண்டும் எனவும் கோவை அழைத்துச் செல்லவும் கூறினார்கள். கோவை பி எஸ் ஜீ மருத்துமனையில் அவருக்கு மூளையின் மத்திய நரம்பு மண்டல முக்கிய நரம்பான சென்ரல் வெரிக்குலர் நரம்பு வெடித்து மூளையில் மொத்தம் 16 இடங்களில் இரத்தம் கட்டியுள்ளதால் அவருக்கு மூளைச்சாவு ஏற்ப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரின் உடல் உறுப்புகள் தொடர்ந்து செயல் புரிகின்றன. எப்போது மரணம் சம்பவிக்கும் எனத் தெரியாது என்றனர். வலி, வேதனை என்று எந்த உணர்வுமில்லாமல் கேமாவில் இருந்த அவருக்கு தூக்கத்தில் இருதய வலி வந்து மறுனாள் உயிரிழந்தார்.பதிமூன்று வயதில் ஆரம்பித்து 73 மூன்று ஆண்டுகள் மணவாழ்வில் அவருடன் சில நாட்கள் கூட பிரியாமல் வாழ்ந்த என் அம்மா இப்போது பேரன், பேத்தி என்று எங்களுடன் இருந்தாலும் வருத்ததுடன் இருக்கின்றார். ஒரு நல்ல மனிதரைப் பத்தி உங்களுடன் பகிர்ந்து கொண்டது எனக்கு மிக்க சந்தோசம். விடாது படித்து ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது அடுத்த விறு விறுப்பான அனுபவத் தொடர் வரும் செவ்வாய், கார்த்திகை முதல் நாள் அன்று தொடரும். அதுவும் அற்புதமான என் சொந்த வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைக் கொண்ட தொடர். அதற்க்கும் இது போன்ற ஆதரவு அளித்து உற்சாகப் படுத்துமாறு வேண்டி நன்றியுரைகின்றேன். நன்றி. சுபம்.

Wednesday, November 11, 2009

அவன் தான் மனிதன் - பாகம் 5

துரைசாமி தன் மகனுடன் வெளியேறிய பின்னர், ஜமினில் கேள்வி கேக்க யாருமில்லாமல் அத்தையின் அதிகாரம் தொடர்ந்தது. சொத்துக்கள் மற்றும் ஜமின் அவர் வசம் வந்தது. அவரும் தன் தம்பியை தன் இஷ்டப்படி ஆட்டிப் படைத்தார். இப்படியே சில வருடங்கள் கழிந்தன. எல்லாம் நல்ல படியாக போயிற்று. அப்போதுதான் மைனருக்கு ஒரு புது தொடர்பும், காதலும் அரும்பியது. சாதியக் கட்டுப்பாடுகள் நிறைந்த அந்நாளில் நல்ல அழகான உயரமான சிவந்த நிறமுடைய தனிமரமான மைனரின் விளையாட்டுக்களும் தொடந்தன. அப்போது அவரின் பார்வை ஒரு பாப்பா என்ற பெண்ணின் மீது விழுந்தது.

அந்த பெண்ணும் நல்ல உயரம், சிவந்த நிறம், அழகான குணவதி. ஆனாலும் இவரின் காதல் வலையில் விழுந்தார். காதல், உறவாய் மலர்ந்து மணக்கத் தொடங்கியது மணக்கும் மணமும், முத்திய கத்திரிக்காயும் கடைத்தெருவுக்கு வந்துதான் தீர வேண்டும் அல்லவா? அதுபோல ஊராருக்கும் தெரிய வந்தது. அந்த பெண் அந்தப் பகுதியின் ஆதிக்க சாதியைச் சார்ந்தவர். ஜமின் என்றாலும் மரியாதைக்குறிய பதவி என்றாலும் தங்களின் சாதியில் பெண்டாள வந்தவனை விடும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. எல்லாரும் ஒன்று கூடினார்கள். தடி அரிவாளுடன் ஜமினை முற்றுகையிட்டார்கள். மைனர் உள்ளே மாட்டிக் கொண்டார். வந்தால் வெட்டிவிடும் சூழ்னிலை. அத்தை அனைவரிடமும் கெஞ்சினாள், பரிதவித்தாள். அனைவரின் காலில் விழாத குறையாக மன்றாடினாள். தன் பையனை விட்டு விடுமாறு அழுதாள். ஊரார் " நீ என்னடி சொல்வது பஞ்சம் பொழைக்க வந்தவ. பெரிய அய்யரை வரச் சொல். அவரிடம் பேசுவேம் " என்றனர். தகவல் துரைசாமிக்குத் தெரியப் படுத்த துரைசாமி அவரின் மகன் சாமி மற்றும் தனது சகோதரகளுடன் போனார். மதியம் மூன்று மணிக்கு வீட்டுக்குள் மாட்டிய அவர்கள் ஆறு மணி வரை அஞ்சியும், கொஞ்சியும் வந்தனர். ஆறு மணிக்கு வந்தவர்களுடன் பஞ்சாயத்து இரவு ஏழு மணி வரை போனது. பின் பத்து மணி அளவில் ஏமாற்றிய பாப்பாவை மைனர் மணமுடித்து தன் வீட்டில் வைப்பது என்றும் தங்களின் பெண்ணுக்கு எதாவது என்றால் அதற்கு இவர்கள் தான் பொறுப்பு என்றும் முடிவு செய்து, வந்தவர்கள் கிளம்பிப் போனார்கள். இந்தக் கூத்துக்கள் அடங்க இரவு பதிணோரு மணி ஆனது.

இரவு படுத்த அத்தைக்கு உறக்கம் வரவில்லை, புரண்டு படுத்தாள், துடித்தாள், நேற்று வரை வணக்கம் போட்டவர்கள் எல்லாம் மாறி மாறித் திட்டினார்கள். எல்லாரின் காலில் விழாத குறையாக கெஞ்ச வைத்தார்கள். இனி அவளை யார் மதிப்பார்கள், எப்படி அழைப்பார்கள். கேலிப் பேசுவதும், கிண்டல் செய்வதுமாக மாறி விடும்.ஊராரின் மதிப்புப் போய் ஏளனம் மட்டும் மிஞ்சும். எப்படி நடமாடுவது, எப்படி வாழ்வது என்ற குழப்பம் அவளை வாட்டியது. யாருக்குத் துன்பம் செய்தேமே, யாரை விரட்டினமே இன்று அவர்களால் உயிர்ப் பிச்சை அடைந்தை அவளால் தங்கிக் கொள்ள இயலவில்லை. புழுங்கிச் செத்தாள். ஊராரின் பேச்சுக்களும், மிரட்டல்களும், இவரின் கெஞ்சல்களும் மாறி மாறி அவளை உறங்க விடாமல் செய்தது. இன்று வரை அவளின் கட்டுப் பாட்டில் இருந்த ஜமின் வீடு நாளை அந்தப் பெண்ணின் கட்டுப் பாட்டில், சொந்த ஊரில் தமது மக்களின் உதவியுடன் இருக்கும் அவள், தன்னை மதிப்பாளா? அவளுக்கு கட்டுப்பட்டு நான் நடக்க வேண்டுமா? என்று அவள் மனம் தணலில் வெந்த புழுவைப் போல துடித்தது. இறுதியாக ஒரு முடிவு செய்தாள். அது.

தான் யாரைக் கொடுமைப் படுத்தினாளே. எப்படி எல்லாம் சித்தர வதை செய்து லஷ்மியை கிணற்றில் தள்ளினளே. அந்தக் கிணற்றில் அதிகாலை ஜந்து மணிக்கு விழுந்து செத்தாள். அழுவதற்கும், பிணத்தை எடுக்க ஆளில்லாமல் பக்கத்து ஊரில் இருந்து அழைத்து வந்தனர். அவள் மரணத்திற்கு ஊரார் ஒத்துழைக்க மறுத்தனர். பின் ஒரு வழியாக அவளின் கதையும் முடிந்தது. அதன் பின் பாப்பாவைத் திருமணம் செய்த மைனர் பாப்பாவுடனும், தன் புதல்வனுடம் குடித்தனம் செய்தார். நாங்கள் எல்லாம் பாப்பா அத்தை என்று அன்புடன் அழைத்து ஏற்றுக் கொண்டேம். அவரும் எங்கள் வீட்டினருடன் அன்பாய் பழகி வந்தார். ஆனாலும் எப்ப அந்த கிராமம் போனாலும் இரத்த அழுத்தம் அதிகம் ஆகி மயங்கி விடுவதால், எங்க அப்பாவை அனுப்புவதை தவிர்த்தேம். வருடம் ஒரு முறை அங்கு சென்று எங்களின் கிராம கன்னிமார் சாமியை வழிபடுபது வழக்கம். அப்போது மட்டும் என் அப்பா அந்த தோட்ட கிணற்றடியில் சிறிது நேரம் அமர்வார். ஆனாலும் ஜமின் வீட்டுக்குள் போக மாட்டார். எனது நாற்பது அண்டு அகவையில் நான் இருமுறை மட்டும் இந்த ஜமினுக்கும், ஒரே ஒருமுறை மட்டும் பாப்பா அத்தையின் அழைப்பின், அன்பின் பேரில் அந்த வீட்டுக்குள் சென்றேன். இன்னமும் வரும் தொடரும் நன்றி.

Tuesday, November 10, 2009

எனக்கு புடிச்சா என்ன? புடிக்காட்டி என்ன

எனக்கு இந்தத் தொடர் விளையாட்டுக்கள் பிடிக்காது. ஏன் என்றால் இதனால் சற்றுப் பொழுது போவதைத் தவிரச் சொல்லவே, பகிரவோ எதுவும் இல்லை,என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். பதிவர்கள் இந்தத் தொடரில் என்ன எதிர் பார்க்கின்றார்கள் என்பதும் புரியவில்லை.
பதிவர்கள் இத்தொடரில் ஒருவரைப் பிடிக்காது என்பதால், அவருக்குப் பிடிக்காதவர் உணர்ந்து மாறிவிடுவாரா? அல்லது இவருக்கு பிடிக்கும் என்பதால்தான் தொடர்ந்து அப்படியே சேவை செய்யப் போகின்றாரா எதுவும் இல்லை, பின் எதுக்கு? சரி பிடிக்கும், பிடிக்காது என்பதை வைத்து ஒரு பதிவரின் குணாதியசத்தைக் கணக்கிடலாமா, என்றால் அதுவும் முடியாது. மனிதர்களில் பலரும் கடவுள் பாதி, மிருகம் பாதி வகைதான். வாய்ப்புக் கிடைத்தால் தவறு செய்யும் சராசரிகள்தான். ஆனாலும் பலரும் படிக்கும் பதிவில் தங்களின் கடவுள் குணத்தைத் தான் காட்ட முற்படுவார்கள். இதில் நாம் அவரைக் கணிக்க முடியாது. எதே பொழுது போகுது என்பதுதான் இத்தொடர்கள். எங்க மச்சானும் சந்தைக்குப் போனார் என்பது போல நானும் தொடர் போட்டேன் என சந்தோசப் படலாம், என்பதைத் தவிர வேற எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனக்கு சிலுக்கு ஸ்மிதா புடிக்கும் என்று எழுதினால் நான் கெட்டவனும் ஆகவும் மாட்டேன், கே ஆர் விஜயாவின் அம்மன் வேடம் புடிக்கும் என்றால் நான் நல்லவனும் இல்லை. பின் எப்படி கணிப்பது. நம் இதர பதிவுகள், கருத்துக்கள், பொதுவான எண்ணங்களில் யதார்த்தங்கள் ஆகியனவும், நம் நல்ல நடத்தையும் தான் நம்மை கணிப்பவை. நமது புறத் தோற்றங்கள் மற்றும் நமது வெளிப் பாடுகள் அல்ல. எனது இந்த கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

ஆனாலும் என்னை இத் தொடருக்கு அழைத்தது என் அன்புத்தங்கை சுசி, ஆதலால் நானும் இத்தொடரில் கில்லியடிக்கின்றேன். அப்புறம் அவர் போயும் போய் இந்தப் பைத்தியத்தைப் (பித்தன்)போய்க் கூப்பிட்டேன் பாரு என்று நினைக்கக் கூடாது அல்லவா. ஒளிவு மறைவு இன்றி மனம் திறக்கின்றேன்.

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்கள் :-காமராஜ், கக்கன்,தோழர் ஜீவானந்தம், இரா.செழியன்,நல்ல கண்ணு மற்றும் வை கோ ( மோடி எனக்கு பிடித்த தலைவர், அடால்ப் ஹிட்லரையும் மிகவும் புடிக்கும்)
பிடிக்காதவர்கள் :- ஊழலில் வயிறு வளர்க்கும், எந்த பிணம் திண்ணும் நாய்களையும் எனக்குப் பிடிக்காது.
2. எழுத்தாளர்
பிடித்தவர்கள் :- கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன்,சுஜாதா, பீ வி ஆர். சோ மற்றும் மாத்ரு பூதம் (புதிரா புனிதமா)
பிடிக்காதவர்கள் :- இளைஞர்களைக் கெடுக்கும் ஆபாச எழுத்தாளர்கள்.
(ஒரு வரியில் ஒன்பது தப்பு செய்யும் பித்தனின் வாக்கு சுதாகர்--எழுதுவதில் இன்னமும் திருப்தி வரவில்லை)
3. கவிஞர்:
பிடித்தவர்கள் :- கண்ணதாசன், வைரமுத்து, எழுத்தோசை தமிழரசி, கவிதாயினி ஹேமா, கலகலப் பிரியா மற்றும் கயல்விழி நடனம்.
பிடிக்காதவர்கள்:- ஆபாசப் பாடல்(இரட்டை அர்த்தம்) எழுதும் அனைவரும்.
4. இயக்குனர்:
பிடித்தவர்கள் :- நாகராஜ ராவ் (திருவிளையாடல் ) பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர். கர்ணன்(சிறிது ஆபாசம் இருக்கும்), மணிரத்தினம் அண்ட் மணிவண்ணன்.
பிடிக்காதவர்கள்:- ஜோஸி, கோபால கிருஷ்னன். (மக்கா ஒரு பிட்டுப் போட ஒருமணி நேரம் அறுப்பாங்க).
5. நடிகர்:
பிடித்தவர்கள் :- என்றும் சிவாஜி. அண்ணன் ரஜினி காந்த், விக்ரம், மம்முட்டி , கமல் (நடிப்பு மட்டும்)
பிடிக்காதவர்கள்: - சரியா சொல்லத் தெரியலை. நம்ம அருண் பாண்டியன்,ராஜ் கிரண் மாதிரி எல்லாத்துக்கும் ஒரே ஆக்சன் பண்ணுவபர்கள்.
6. நடிகை:
பிடித்தவர்கள் :- ஜெயந்தி, தேவிகா,வென்னிற ஆடை நிர்மலா, ஜெயப்பிரதா, பானுப் பிரியா, கனகா, சோபனா,மீனா மற்றும் கண்கள் அழகாய் உள்ள அனைத்துப் பெண் நடிகைகள்(பெண்களும்) பிடிக்கும். ஜெயபாரதி ரொம்ப புடிக்கும். சில்க் ஸ்மிதாவின் வசிகரமான கண்கள்.
பிடிக்காதவர்கள் :- இதுவும் கண்ணுதான், அதுல எப்பவும் கண்ணீர் கொட்டுற அழுகாய்ச்சி நடிகைகள் புடிக்காது உதாரணம் கண்ணாம்பா ஆனால் இவர் மிகவும் திறமையான நடிகை. கோலங்கள் அபி. சுஜாதா, வரலட்சுமி.
7.இசையமைப்பாளர்:
எல்லா மெலோடி இசையமப்பாளர்களையும் பிடிக்கும்.
சாவு மேளம், டப்பாங்குத்து இசைக்கும் இசையமைப்பாளர்களைப் புடிக்காது.
8. பாடகர்:

என்றும் யேசுதாஸ், வீரமணி, பாலமுரளி கிருஷ்னா, சீர்காழி கோவிந்தராஜன், டி எம் எஸ்,சிதம்பரம் ஜெயராமன், பிபி ஸ்ரீனிவாஸ். ஏ.எம்.இராஜா, அந்த குடுமி பாடகர் பெயர் என்ன அவரின் படல்கள் ரொம்ப புடிக்கும் (வென்னிலவே வென்னிலவே - மின்சாரக் கனவு)(கலோனிகல் கஸின்ஸ்)
பிடிச்ச லிஸ்ட் அதிகம் ஆனா பிடிக்காதவர்கள்- குத்து பாடும் பாடகர்கள்.
9. பாடகி:
பிடித்தவர்கள் :- பானுமதி, ஜமுனா, ஜானகி, சித்ரா, சாருலதா, அவரின் தங்கை(பெயர் தெரியவில்லை) , எல் ஆர் ஈஸ்வரி. எவர் கீரீன் பாடகி பி. சுசிலாம்மா, மகானதி சோபனா மற்றும் நித்தியஸ்ரீ.
பிடிக்காதவர்கள் :- நல்ல திறமை இருந்தும் காசுக்காக கத்தும் மாலதி (மன்மத ராசா). இன்னும் குத்துப் பாட்டில் முக்கி முனகும் பாடகிகள்.
10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்கள் :- ஸ்ரீகாந்த், யஸ்பால் ராணா, தெண்டுல்கர். ரெய்னா, அனில் கும்ளே, வெங்சங்கார், குண்டப்பா விஸ்வனாத். செக்ஸ் (சாரி) செஸ் ஆனந்த். நம்ம அண்ணாத்தே கபிலு. சின்ன அண்ணார் அஸாருத்தின்.
பிடிக்காதவர்கள் :- ஹாராத்து ஹர்பஜன் சிங், தலைக்கனம் சுனில் காவஸ்கர்,யுவராஜ் மற்றும் இரவி சாஸ்த்திரி.

அப்பாடி ஒரு வழியா முடிஞ்சது. எதோ நான் மூனு பேர டீல்ல விடனுமாம்மில்ல யாரை மாட்டலாம் ஆங்க்க்க்க்க்க்
மூனு பேரு வேண்டாம் நம்ம நாலு பேருக்கு நல்லது பண்ணமுன்னு பேரு வரனுமில்லை, அதுதானய்யா முக்கியம்

அந்த நாலு நல்லவிங்க யாருன்னா

நம்ம இளமுருகு தம்பி, (அப்பாவியை மாட்டி விடனும் இல்லையா)
நம்ம சுரு ஸ்ரீ சுவையான சுவை அக்கா,
நம்மளை அன்பாய் மிரட்டும் திருமதி.துளசி டீச்சர்.
அப்புறம் ஒரு நல்ல பையன் மாதவிப் பந்தல் கே ஆர் எஸ்.

நாலு படிச்சா ஒரு பதிவு இலவசம்,இலவசம்

எங்க ஊரு அம்மிணி, கொங்கு மண்ணின் சிங்கம், தாரையின் தங்கம், என் சமையலறையில் பதிவர், திருமதி தெய்வ சுகந்தி அவர்கள்.

ஹையா எதோ என்னால முடிஞ்ச ஜந்து பேரை மாட்டி விட்டுட்டேன்.

பின் குறிப்பு : எனது கருத்துக்களின் காரணமாக அல்லது நான் மாட்டிவிட்ட பதிவர்கள் யாராயிருந்தாலும் எனக்கு ஆட்டோ அனுப்பும் போது மருத்துவச் செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புமாறு அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்(கொல்கின்றேன்) - உங்களுக்காக இன்று இரண்டு பதிவுகள், அவன் தான் மனிதன் பாகம் 4 படிக்கவும் நன்றி.

அவன் தான் மனிதன் - பாகம் 4

சாமியின் பெரியப்பா மிகவும் கண்டிப்பானவர், அவரின் உயரமும், கடினமான கட்டைக்குரலும் அதட்டும் தொனியும், அவரை மிரட்சியுடன் பார்க்க வைக்கும், படிப்பில் சாமி குறைந்தால் அவர் மிகவும் திட்டுவார். அதுபோல வரதராஜனுக்கும் நிறைய கண்டிப்புக்கள் அவர் தந்தையிடம். ஆகவே நண்பர்கள் இருவரும் கூடிப் பேசி, இதில் இருந்து விடுபட வீட்டை விட்டு ஓடுவது என்று முடிவு செய்தார்கள். அதன்படி பழனிக்கு ஓடிப் போய்விட்டார்கள். அங்கு ஒரு பொழுதைக் கழித்த அவர்கள் பசியில் என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு ஓட்டலில் சாப்பாடு மற்றும் வேலை கேட்டார்கள். அந்த கடையின் உரிமையாளர், உங்களைப் பார்த்தால் பெரிய இடத்து பசங்க மாதிரி தெரியறிங்க, ஆதலால் டேபிள் துடைப்பது மற்றும் தட்டு கழுவும் வேலை தராமல், சாமிக்கு சப்பளையர் வேலையும், வரதராஜனுக்கு கணக்கு மற்றும் நிர்வாகமும் தந்தார். நண்பர்கள் இருவரும் சந்தோசமாகச் சில நாள்கள் கழித்தனர். இதில் சாமிக்கு பெரியம்மாவும், வரதராஜனுக்கு அம்மாவின் நினைவும் வந்துவிட, திரும்பிப் போக முடியாமல் தவித்தனர். போனால் அடி விழுகும் என்ற பயம். அவர்களை அவர்களின் வீட்டுப் பெரியோர்களும் தேடி வந்தனர்.

இப்படி சில நாள் கழிகையில் ஒரு நாள் பழனிக்கு வந்த உறவினர் ஒருவர் இவர்களைப் பார்த்துவிட்டுச் சத்தமில்லாமல் தாராபுரத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்களும் வந்து அழைத்துச் சென்றனர். பசங்களுக்கு நல்லாப் பாடம் கொடுத்துப் பஞ்சாயத்து ஆரம்பம் ஆனது. அப்போது இருவரும் பத்தாவது முடித்ததால், அவர்கள் இருவரையும் பியுஸி படிக்க வைக்க காடையூர் ஸ்ரீனிவாசன் என்ற இவர்களின் மாமா அழைத்துச் சென்றார். காடையூர் ஸ்ரீனிவாசனும் கண்டிப்பானவர், ஆனால் அன்பாலும், நைச்சியமாகவும் பேசித் திருத்துவார். அவரின் வீட்டில் பல உறவினர்கள் தங்கி காங்கயத்தில் படித்தனர். இவர்கள் இருவருக்கும் சந்தோசமாக பொழுது போயிற்று. பியூஸி முடித்தவுடன் இவர்கள் இருவரும் தமிழ் நாடு தேர்வானையத் தேர்வும் எழுதி தகுதி பெற்றார்கள். சாமிக்கு கல்வித்துறையிலும், வரதராஜனுக்கு நெடுஞ்சாலைத்துறையிலும் வேலை கிடைத்தது.


இவர்களை இப்படியே விட்டால் சரிப்படாது என்று நினைத்த பெரியோர்கள் பதிமூன்று வயது சாமிக்கு லஷ்மி என்ற எட்டு வயது சிவந்த அழகான பெண்ணையும், வரதராஜனுக்கும் நண்பனைப் போலவே லஷ்மி என்ற மற்றேர் பெண்ணையும் திருமணம் செய்வித்தார்கள். முதலில் கொள்ளேகாலில் பணிபுரிந்த சாமி, பின் சொந்த ஊரான தாராபுரத்திற்கு பணிமாற்றி வந்தார். சாமியும், வரதராஜனும் இறுதி வரை ஒரே தெருவில் தங்களின் லஷ்மிகளுடன் குடியிருந்தார்கள். சாமி தன் தம்பியை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து, அவனுக்கு வாத்தியார் வேலையும் வாங்கிக் கொடுத்து, மணம் செய்வித்து, பின் தன் வீட்டின் பின்னால் அவருக்கு ஒரு சிறிய வீடும் கட்டிக் கொடுத்தார். சாமிக்கு அழகான மூன்று பெண்களும், நல்ல ஜந்து பசங்களும் பிறந்தார்கள். இப்படியாக சாமி வீடு நிறைய குழந்தைகளும், மனம் நிறைய அன்பும், மகிழ்ச்சியுமாக வாழ்வைக் கழித்தான். சாமியின் இளைய, கடைசி மகன் மட்டும் கொஞ்சம் பீலா பார்ட்டி, அவன் பித்தனின் வாக்கு என்ற பிளாக் எழுதி எல்லாரையும் இம்சை செய்வான். ஆம் தோழர் மற்றும் தோழிகளே! இந்த கதையின் நாயகன் சாமி என்பவர் எனது தந்தை திருமலைசாமி அய்யங்கார். இறந்த லஷ்மி எனது சொந்த அத்தை. எனது தாத்தா துரைசாமி என்னும் துரைசாமி அய்யங்கார். மணி எனது சித்தப்பா. வரதராஜன் என்பர் மாமா, அவர் சந்தன முல்லை மற்றும் மேனகா சத்தியாவின் பதிவுகளில் பின்னுட்டம் இடும் பத்து என்னும் பத்மஜா. எனது சகோதரி மகளும், எனது நல்ல நண்பியுமான அவளின் தாத்தா.

இது என் அப்பாவின் கதை. என் அப்பா என்னைப் பெறுத்தவரை ஒரு நல்ல மனிதர். தன்னால் இயன்ற உதவிகளை தன்னை நாடி வருவேர்க்கு செய்யும் மனப்பான்மையுடையர். காசு பணத்திற்க்கும்,சொத்துசுகங்களுக்கு ஆட்படாமல் இறுதி வரை வாழ்ந்தவர். அவரைப் பற்றியும், அவர் அடுத்தவர்க்கு செய்த உதவிகளையும், எங்களை அன்பாய் வளர்த்த விதமும் பல பதிவுகளில் போடலாம். ஆனால் அது சுய புராணம் ஆகிவிடும். எனக்கு இத்துடன் சுபம் என்றுதான் போட ஆசை. ஆனால் சில விசயங்களைப் பகிராமல் போனால் இந்த கட்டுரையின் நேக்கம் அடிபட்டு விடும். ஆதலால் நான் சிலவற்றைக் கூற ஆசைப் படுகின்றேன். ஆதலால் இனி வரும் சம்பவங்களையும் நீங்கள் படித்தால் தான் பாவமும், பழியும் என்ன செய்யும் என்பதை அறிய முடியும். தங்களின் ஆதரவுடன் மீண்டும் நாம் இனி குருப்பனாய்க்கன் பாளையம் போவேம். தொடரும்..... நன்றி.

டிஸ்கி : நான் என் அத்தையைப் பற்றி பத்மாஜாவுடன் பேச, அவள்தான் இதை கதையாக பதிவு இடுமாறு என்னிடம் கூறினாள். அவளுக்கும் எனது நன்றிகள்.

Monday, November 9, 2009

அவன் தான் மனிதன் - பாகம் 3

கிணற்றைப் பயமுடன் பார்த்த லஷ்மி ஒரு காரியம் செய்தாள், அப்போது ஒரு நிமிடம் தன் அண்ணன் சாமியை நினைத்து அழுத அவள், தன் கால் வரை தொங்கும் தன் அழகான கூந்தலை எடுத்து தன் தலையைச் சுற்றி மூன்று சுற்றுக்கள் சுற்றி, அது அவிழ்ந்து விடாமல் முடிச்சும் போட்ட மறு நிமிடம் கிணற்றில் குதித்து விட்டாள். குளத்திற்க்கு துவைக்கப் போய் இரண்டு மணி நேரமாக வரவில்லை என்று அத்தை தோட்டக்காரப் பொன்னையன் என்ற சிறுவனைப் போய்ப் பார்க்குமாறு அனுப்பினாள். பொன்னன் குளத்தில் காணது தேட, அவன் கிணற்றடி மேல் இருக்கும் துணி மூட்டையைப் பார்த்தான். அங்கு வந்த அவன் கிணற்றில் மிதக்கும் லஷ்மியின் பிணத்தைப் பார்த்ததும் " அம்மா! சின்னம்மா செத்துப் போய்ட்டாங்க" என்று கத்திக் கொண்டு ஓடினான். அவன் அலறலைக் கேட்ட ஊராரும் தோட்டத்திற்கு ஓடிப் போய்ப் பார்த்தார்கள். அங்கு அழகிய லஷ்மி பச்சையான கிணற்றில் தங்கமாக மிதந்து கொண்டுயிருந்தாள், அவர்களின் அன்பான லஷ்மி அவர்களையும், அவளின் பாசமுள்ள அண்ணன் சாமியையும், தம்பி மணியையும் விட்டுப் போய்விட்டாள். அவள் கொடுமைகளுக்கு எல்லாம் ஒரு விடுதலை கிடைத்தது.

பின் அது ஜமின் வீடு மற்றும் கர்ணத்தின் வீடு என்பதால் அங்கு தாசில்தார் துரையும்(வெள்ளைக்காரர்), நகர காவல் ஆய்வாளரும் வந்துவிட்டனர்.ஊரார் அவர்களிடம் கொடுமைகளைப் பத்தி புகார் செய்தனர். ஆனால் வெங்கடராமன் அவர்களை சமாதானம் செய்தான். சாமியோ தங்கையின் மரணம் பொறுக்காமல் மயங்கி விழுந்தவன் பேச வார்த்தைகள் இல்லாமல் பித்தம் பிடித்தவன் போல் ஆனான். அவன் உறைந்து மரமாய் நின்றான். அப்போது ஒரு பெண்மணியை விட்டு உடம்பை பரிசேதிப்பது என்று முடிவு ஆனது. அதன்படி பொன்னம்மா என்ற உறவுக்கார பெண் ஒருவர் லஷ்மின் கீழ் ஆடைகளை விலக்கிப் பார்த்தாள். கால் எல்லாம் புளிய விளாரால் அடிக்கப் பட்டு ரணகளமாய் இருந்தது. தொடையில் சூடு போட்ட அடையாளமும் இருந்தது. ஆனால் உறவினர்களும், மைனரும் நடந்தது நடந்து போச்சு, இனிச் சொல்லி என்ன பயன் என்றும், பொன்னம்மாவைக் காயம் ஏதும் இல்லை என்று கூறச் சொல்லி வற்புறுத்தினார்கள். அவர்களின் சொல்லுக்குக் கட்டுப் பட்ட பொன்னம்மாவும் லஷ்மியின் உடலில் காயம் எதும் இல்லை என்று சாட்சி கூற, லஷ்மியின் மரணம் தற்கொலை என்று மைனரின் செல்வாக்கால் மறைக்கப் பட்டது. குளிக்க மஞ்சள் கிடைக்காத லஷ்மியின் உடல் மாலைகளும், மலர்களும் போட்டு அழகாய் நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டு இருந்தது. சாமி தன் தங்கையை பார்த்துப் பார்த்து கதறி அழுதான். பழனியில் சுற்றிய அவளின் தந்தைக்கு தகவல் தந்து அவர் வருவதற்க்குள் அவளின் பிணமும் எரிக்கப் பட்டுவிட்டது. சிறுவர்களையும் எதுவும் கூறக் கூடாது என்றும் மிரட்டப் பட்டனர்.

சாமி முற்றிலும் செயல் இழந்து போனான், அவன் என்ன பேசுவது என்று புரியாமல் திக்பிரமை அடைந்தவன் போல ஆனான். திரும்பி வந்த துரைசாமி கத்திக் கூச்சல் போட்டும், நிலைமை கைமீறிப் போய்விட்டது. மைனர் செல்வாக்கில், துரைசாமியாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.
சொத்துக்களைக் கேக்க 25 ஏக்கரா காட்டில் 8 ஏக்கராவும், 20 ஏக்கரா தோட்டத்தில் 8 ஏக்கராவும், ஜமின் வீட்டில் குதிரை மற்றும் மாடுகள் கட்டும் காலியிடமும் இவர்கள் பங்குகாக தரப்பட்டது. துரைசாமியின் பெரிய அண்ணன் சித்ராவுத்தன் பாளையம் கர்ணம் அவர்களின் வீடு தாராபுரத்தில் இருந்தது, அதன் பக்கத்தில் துரைசாமிக்கும் ஒரு காலியிடம் இருந்தது, அங்கு ஒரு வீடு கட்டி, அங்கு வந்துவிடுமாறு சொல்ல துரைசாமியும் இனி சொத்துக்கள் தனக்கு தேவை இல்லை, நான் வாழ்ந்து காட்டுகின்றேன் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு தன் இரு மகன்களுடன் தாராபுரம் வந்தார். வந்தவருக்கு அந்த தாசில்தார் துரை அவர் பழைய கர்ணம் வேலை சிறப்பாக செய்ததால் குண்டடம் கிராம கர்ணம் வேலை கொடுத்தார். தாராபுரத்தில் தன் கையாலயே செம்மண்ணும் செங்கலும் கொண்டு ஒரு சின்ன வீட்டைக் கட்டி அதில் மகன்களுடன் வசிக்க ஆரம்பித்தார். சாமியும், மணியும் தாராபுரத்தில் படிக்க ஆரம்பித்தனர். தோட்டமும் காடும் பொன்னையனிடம் குத்தைக்கு கொடுத்து, இவர்கள் குருப்பனாய்கன் பாளையம் போவதைத் தவிர்த்தனர்.

அத்தைக்காரி இந்த சத்தம் சந்தடி எல்லாம் அடங்கியவுடன் தன் மகனுக்கு இன்னேரு இடத்தில் இருந்து மணமுடித்தார். அவர்களின் வாழ்வும் நன்றாக போயிற்று. வந்த மணமகளும் மைனருடன் குடும்பம் நடத்தி வந்தாள். அவர்களின் இல்லறத்தின் சான்றாக வந்தவளும் ஒரு நல்ல ஆண்மகவைப் பெற்றுக் கொடுத்துவிட்டு பிரசவத்தில் இறந்து போனாள். மைனர் மறுபடியும் தனிமரமானார்.

தாராபுரம் வந்த சாமி அந்த தெரு முழுதும் தன் உறவினர்கள் ஆதலால் நடந்ததை கொஞ்சம் மறந்து படிப்பில் கவனம் செலுத்தினார். துரைசாமி குண்டடம் சென்றுவிட்டதால் பெரியப்பாவும் சித்தராவுத்தன் பாளயம் கர்ணமும் ஆன அவர்களின் வீட்டில் சென்று படிக்க ஆரம்பித்தான். அப்போது குழந்தை இல்லாத அவர்கள் சாமியையும் மணியையும் தங்களின் குழந்தைகளாக பாவித்தனர். பெரியம்மா சாமியிடம் அளவு கடந்த பிரியம் வைத்து இருந்தாள். அப்போது அவர்கள் கர்ப்பமும் தரிக்க, சாமி தங்களின் வீட்டுக்கு வந்த நேரம்தான் குழந்தை வந்தது என்று ஆனந்தப் பட்டு, சாமியை ஒரு நிமிடம் கூடப் பிரியாமல் இருந்தாள். இப்படியாக சாமியின் வாழ்க்கை போயிற்று. அப்போது அந்த தெருவில் இருந்த காரத்தொழுவு கர்ணம் மகன் வரதராஜன் என்பரும் சாமியின் நண்பர் ஆனார். இந்த வரதராஜனுக்கு நகைச்சுவை என்பது கைவந்த கலை. அவர் பத்து நிமிடம் பேசினால் அத்தனை நிமிடமும் அங்கு உள்ளவர்கள் கண்டிப்பாய்ச் சிரிப்பார்கள். அவருடன் இணைந்ததால் சாமியும் பழைய கவலைகளை மறந்து வரதராஜனுடன் நட்பாய் இருந்தான். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாய் இணைந்து இருந்தனர். மெல்ல சாமியின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கலாயிற்று. ஆனாலும் அதிலும் வரதராஜனுக்கும், சாமிக்கும் ஒரு குறை இருந்தது அது...... தொடரும்.


டிஸ்கி : இந்த பதிவைத் திருத்திக் கொடுத்த எனது சகோதரி மகள் மற்றும் என்னை ஊக்குவிக்கும் நண்பி பத்து என்னும் பத்மஜாவிற்கு நன்றி.

Friday, November 6, 2009

அவன் தான் மனிதன் - பாகம் 2

சாமி தன் தங்கையின் மீது உயிரையே வைத்திருந்தது போன்று அவன் தங்கை லஷ்மியும் அண்ணனிடத்தில் அளவற்ற பாசம் வைத்திருந்தாள். தம்பி பிறந்தவுடன் தாயை இழந்த அபலையான அவள் இப்போது தந்தையும் உடன் இல்லாமல், கனவனின் அன்பும் இல்லாமல், தான் பிறந்த வீட்டிலேயே ஒரு வேலைக்காரி போல கஷ்டப்பட்டாள். அனாதரவாக மூன்று குழந்தைகளும் பரிதவித்தனர். விதவையாக, ஆதரவற்றவாளக,தன் மகனுடன் பிழைக்க வந்த துரைசாமியின் சகோதரி ஜமிந்தாரினியாக அனைவரையும் ஆட்டிப் படைத்து வந்தாள். பூப்பெய்தா சிறுமியான லஷ்மி இளம்வயது(எட்டு) திருமணம் காரணமாக வாழ்க்கையும் புரியாமல் துன்பத்தில் தத்தளித்தாள். அவளின் ஒரே ஆதரவு தன் அண்ணன் சாமிதான். ஆனாலும் சாமி பத்து வயது சிறுவன் என்ன செய்வான் பாவம். அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொள்வதை வீட.

இந்த இடத்தில் நான் லஷ்மியைப் பற்றிக் கூறவேண்டும். நல்ல மஞ்சள் அழகி. நல்ல களையான முகம். மஞ்சள் நிறத்தில் தங்க விக்கிரகம் போல இருப்பாள். எட்டு வயது என்றாலும் பொறுமை, புன்னகை இரண்டும்தான் அவள் அழகைக் கூட்டியது. லஷ்மியின் தலைமுடிதான் அந்த ஊரில் பிரசித்தம். அந்த கிராமத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் அவளின் முடியைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுவார்கள். ஆம், அடர்த்தியாக, அவள் முழங்கால் வரை நீண்டு தொங்கும் ஜடை. லஷ்மிக்கு பேரழகைக் கொடுக்கும். குணத்திலும் அவள் அழகுதான். அனால் விதி அவள் வாழ்க்கையைத்தான் அழகில்லாமல் செய்து விட்டது. லஷ்மியின் மாமியார் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகியது. அவள் கிட்டத்தட்ட ஒரு பணப் பேயாக மாறியிருந்தாள். அதிகாரமும் ஆணவமும் அவளை அரக்கியாய் மாற்றியது.

இத்தனைக்கும் சொந்த அத்தைதான், ஆனால் சொத்தும், ஜமின் அந்தஸ்த்தும் அவரின் மனதை மாற்றியிருந்தது. எந்த ஒரு நல்ல பெண்ணையும் கெடுக்கும் பகட்டும், பணமும் அவர் மனதையும் கெடுத்து வைத்திருந்தது. அவள் மனம் சொத்தின் மீது உள்ள ஆசை காரணமாய் இறுகி கல்லாய்ப் போனது. பொழுது விடிவதில் இருந்து இரவு வரை லஷ்மியிடம் அவள் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது. தன் கடந்த கால வாழ்க்கையை நினைக்காமல், கிடைத்ததை உறுதி செய்வதில் மும்மரமாய் இருந்தாள். குழந்தைகளை பாடாய் படுத்தினாள். ஊரில் கிடைத்த மரியாதையும், ஜமின் அந்தஸ்த்தும் அவளை திமிராகவும், ஒரு பெரும் ஆணவக்காரியாயும் மாற்றித் தற்பெருமை கொள்ள வைத்துருந்தது. கால்கள் நிலை கொள்ளாமல் ஆலைந்து கொண்டிருந்தாள்.

லஷ்மியின் வேதனைகளும், சாமிக்கு நடக்கும் கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டியிருந்தது. சாமி படும் கஸ்டங்களைப் பார்த்து அவள் அதிக வேதனைப் பட்டாள். நம்மால்தான் அண்ணன் இவ்வளவு கஷ்டப்படுகின்றார். நாம் இல்லாமல் இருந்தால் அவருக்கு இவ்வளவு கஷ்டம் இருக்காது என்று நினைக்கவும் ஆரம்பித்தாள். சாமி அவளுக்கு ஆறுதாலாய் பேசி அன்பாய் இருந்தான்.கடைசித் தம்பி மணி விவரம் புரியாத ஆறு வயது சிறுவனாய் இருந்தான். காலம் இப்படிப் போகையில் ஒரு நாள் காலையில் சாமியும், மணியும் பள்ளிக்குச் சென்று விட்டனர். லஷ்மி குளத்தில் குளிக்கப் போவதற்க்காக தன் மாமியாரிடம்(அத்தை) குளிப்பதற்காக மஞ்சள் கேட்டாள். ஏற்கனவே அவள் அழகில் பொறாமையும், எங்கே தன் பையனை அவள் சொல்படி கேட்க வைத்து விடுவாளோ என்ற பயத்தில் இருந்த அவளின் மாமியார். ஆமா நீ கெட்ட கேட்டுக்கு மஞ்சக்கிழங்குதான் வேணுமாக்கும் என்று கூறி அவள் கையில் வைத்துருந்த பித்தளை சொம்பால் நங்க் என்று லஷ்மியின் தலையில் அடித்தார். போடி போய் மண்ணைத் தோய்த்துக் குளி என்று கூறி அனுப்பி விட்டாள். அதுவும் பத்தாமல் துவைக்க ஒரு மூட்டை துணிகளையும் கொடுத்தாள்.

வலியுடன் வந்த லஷ்மி குளத்தின் கரையில் சிந்தைனையில் அமர்ந்தவள், தம்பி பிறந்தவுடன் இறந்த அம்மா, தன்னையும் கூட்டிப் போயிருக்க கூடாதா என்று கண்ணீர் சிந்தினாள். தன்னால்தான் அண்ணா, மற்றும் தம்பிக்கும் கஷ்டம்,தான் இல்லாவிட்டால் அவர்கள் இங்கிருந்து போய்ப் பிழைத்துக் கொள்வார்கள் அல்லது அப்பாவைத் தேடிப் போவார்கள் என்ற முடிவுடன் எழுந்தாள். அங்கு அவர்களின் தோட்டத்தில் உள்ள ஆழமான கிணற்றில் விழுந்து உயிரை விடுவது என்று முடிவு செய்தாள். அவள் தோட்டக் கிணற்றில் சென்று பார்க்கும் போது அது மிக ஆழமாக, பெரியதாக பயத்தை தந்தது. பச்சைப் பசேல் என்று அகன்று, விரிந்த அந்த கிணறு அவளை மிகவும் பயப்படுத்தியது.என்ன செய்வது, உயிரை விடுவதா வேண்டாமா என்று தயங்கி நின்றாள். கிணற்றைப் பார்த்தால் பயமகவும் உள்ளது என்ற குழப்பத்தில் பரிதவித்தாள். எட்டு வயது சிறுமி கொடுமைகள் துரத்தினாலும், பயம் அவள் உயிரைப் போக்கிக் கொள்ளத் தடையாய் இருந்தது. தயங்கிக் கிணற்றின் மேட்டில் நின்றாள். அப்போது அவள் ....... தொடரும் நன்றி.

டிஸ்கி: என் கண்களில் கண்ணிர் அரும்பியதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. மன்னிக்கவும், மீதி திங்கட்கிழமை எழுதுகின்றேன்.

Thursday, November 5, 2009

அவன் தான் மனிதன்

ஒரு நல்ல மனிதரின் கதை இது, இந்த கதையில் வரும் அனைத்து சம்பங்களும் உண்மை என அடித்து ஆனித்தரமாக கூறுகின்றேன். அடுத்துக் கெடுப்பது, அடுத்தவர் சொத்தை திருடுவது போன்ற செயல்கள் முடிவில் தீமை தரும் என்பது இந்த கதையின் பாடம். கதையின் முடிவில் நான் பல உண்மைகளைக் கூற உள்ளேன். படியுங்கள். கதை நடக்கும் காலம் 1930.

அந்த அதிகாலை நேரம் ஆதவன் சேம்பலுடன் வரலமா,வேண்டாமா என யேசிக்கும் போது, அந்த ஜமின் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டுருந்த சாமி மெல்ல கண் விழித்தான். விடியப் போகின்றது,எழா விட்டால் மாமா அடிப்பார் என்று எழுந்தான். எழுந்தவன் பக்கத்தில் தூங்கிய தம்பி மணியையும் எழுப்பினான். தொழுவத்திற்க்குப் போய், மாட்டுக்காரனை எழுப்பி பால் கறக்கச் சொல்லனும்,தோட்டத்திற்க்குப் போய்த் தண்ணீர் பாய்ச்ச சொல்லனும். திரும்பி வந்து பள்ளிக்குப் போகனும் என்று சாமியின் வேலை முறைகள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து கினற்றடிக்குப் பல் தேய்க்கப் போனான். காலைக்கடன் முடிந்ததும் தொழுவத்திற்க்குப் போனான். பாலை கறந்து தங்கையிடம் கொடுத்தால்தான் காபி கிடைக்கும். தூங்கும் மாட்டுக்காரனை எழுப்பி பால் கறக்கச் சொன்னான்.
இத்தனைக்கும் சாமிக்கு வயது பத்துதான். இந்த சாமிதான் நம் கதையின் கதானாயகன்.

இந்த ஊர் குருப்பனாய்க்கன் பாளையம் என்ற குக்கிராமம், இந்த கிராமத்தின் ஜமின், மணியம், கர்ணம் என்று இருந்த வெங்கடராமன் என்னும் மைனர்தான் சாமியின் மாமா. சாமியின் தங்கையைத்தான் அவர் மணந்து இருந்தார். உண்மையில் சாமிதான் அந்த ஜமினின் வாரிசு. அத்தனை சொத்துக்களும் சாமிக்குத்தான் சொந்தம். சாமியின் தம்பி பிறந்த போது அவன் தாய் பிரசவத்தில் இறந்து விட, சாமியின் அப்பா துரைசாமி வாழ்க்கையை வெறுத்தவர் ஆனார்.உலக பிடிப்பு இல்லாமல் வாழ்ந்த அவர் தன் பெண்ணிற்க்கு எட்டு வயது ஆகும் போது அவளை தன் விதவை சகோதரியின் மகன் வெங்கடராமனுக்கு மணம் முடித்துக் கொடுத்து,சொத்துக்களுக்கு அவர்களை காப்பாளர்களாக வைத்துவிட்டு தேசாந்திரம் போய் விட்டார். சாமியின் தந்தையிடம் நல்லவர்களாக நடித்த அவர்கள் நாளடைவில் குழந்தைகளைக் கொடுமைப் படுத்த ஆரம்பித்தனர். நல்லா வேலை வாங்குவார்கள். இடையில் சாமியிடம் சொத்துக்களை எழுதிக் கேட்டு, சாமியையும், அவன் தம்பி தங்கைகளையும் அடிப்பார்கள். குதிரை சவுக்கு, புளிய விளார், பிரம்புக்குச்சி என்று கையில் கிடைப்பதில் அடிப்பார்கள். சாமியும் தனது தங்கைக்காக இத்தனையும் பொறுத்துக் கொண்டார்.

மாமா வெங்கடராமன் நல்ல உயரம்,சிவந்த நிறம், அழகாய் ஆடை அணிபவர். ஊர் மக்கள் அவரை மைனர் என்றுதான் அழைப்பார்கள். ஒரு குதிரை வண்டியும், இரண்டு சராட்டு வண்டியும் இருந்தது. குதிரை வண்டியில் சாமியின் அத்தையும், சராட்டு வண்டியில் மைனரும் பயணம் செய்வார்கள். இன்னேரு வண்டியில் தான் தினமும் சாமி பள்ளிக்குப் போய் படித்து வந்தான். சாமி தன் தங்கையின் மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தான். அவளுக்காக தான் படும் எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டான். சாமி நல்லவன், யாருக்கு கஷ்டம் என்றாலும் வலிந்து போய் உதவி செய்வான். எல்லாருடனும் அன்பாய் சிரித்துப் பேசிப் பழகுவான். அந்த ஊர் மக்களும் ஜமினின் வாரிசு என்பதாலும், நல்ல பையன் என்பதாலும், சாமியின் மீது உயிரை வைத்து இருந்தாலும் மைனருக்கு பயந்து எதும் பேசாமல் இருந்தனர். அப்போது ஒரு நாள்...... தொடரும்.

எனது முதல் கதை இது. அலேசனைகளை வரவேற்கின்றேன். ஆதரவும் கருத்துக்களையும் கூறவும். நன்றி.

Wednesday, November 4, 2009

அந்த நாள் பயங்கரம் சுனாமி- நிறைவுப் பகுதி.

நான் கூறியது போல சுனாமியால் பாதிப்புகள் அதிகம் இருந்தாலும், நிறைய நல்ல பல விசயங்களை அறிய முடிந்தது. ஜாதி, மதம், அந்தஸ்த்து என நிறைய வித்தியாசங்களை வைத்து தங்களுக்குள் கூறு போடும் மனிதர்களை இயற்கை ஒன்றினைத்தது அன்றுதான். நல்லவேளையாக ஞாயிறுக்கிழமையாகப் போயிற்று இல்லை என்றால் பாதிப்புகள் இன்னமும் அதிகமாக இருக்கும். அலுவலகம் செல்பவர்கள், பள்ளிக்குழந்தைகள் எனப் பலரும் உயிர் இழக்கும் அபாயம் இருந்திருக்கும். நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் நகரியத்தில் உள்ள பள்ளிகளில் பொரும்பாலும் நாலு பள்ளிகள் இந்த கடலை ஒட்டித்தான் அமைந்திருக்கும். பள்ளி நாள் என்றால் பள்ளி மாணவர்கள் பீதியில் அலைகளில் மாட்டியிருப்பர். அவர்களை தேடி பொற்றேரும் அலைந்துருப்பர். வேலைக்கு செல்லும் அனைவரும் அந்த சமயத்தில் அந்த சாலையில் தான் பேருந்துக்குக் காத்துருப்பார்கள். எனவே சேதம் அதிகம் ஆகியிருக்கும். அது தவிர்த்தது ஒரு சோதனையிலும் நன்மை. கடலை ஒட்டித்தான் மருத்துவமனை அமைந்துள்ளது ஆனால் அங்கு பெரும் பாதிப்புகள் இல்லாததும் ஒரு நன்மையே.

ஆனால் அன்று கிறிஸ்மஸ் தினம் ஆதலால் கடலை ஒட்டியுள்ள ஒரு சர்ச்சில் வழிபாடு செய்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தேவாலயத்தின் சுற்றிலும் புரட்டி எடுத்த அலைகள், அங்கு இருந்த பெண்கள்,குழந்தைகள் மற்றும் நிறுத்தி வைக்கப் பட்டியிருந்த வாகனங்கள் அனைத்தையும் எதிரில் உள்ள ஒரு குழியில் தள்ளி சேறும் சகதியுமாய் ஜலசமாதியாக்கியது. அந்த இடத்தைப் பார்க்கும் போதே கண்களில் நீரை வரவழைத்த ஒன்று.காலை பிரார்தனைகளில் இருந்த அவர்களை ஈவு இரக்கமற்ற அலைகள் அடித்து நெறுக்கியது.

சுனாமி அடித்து இரண்டு மணிணேரத்தில் இராமகிருஷ்னா மடமும், அம்மா அமிர்தானந்த மாயின் சேவா தளமும் இன்னம் பிற தொண்டு நிறுவனங்களும் அங்கு மக்களுக்கு வேன் நிறைய சாப்பாட்டு பொட்டலங்களை வழங்கியது மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டு. தொடர்ந்து இரு நாளைக்கு இந்த சேவையைத் தொடர்ந்தார்கள். பலரும் துணிகள், அத்தியாவசிய பொருள்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்த வண்ணம் இருந்தனர். உதவிகளும் ஆதரவுகளும் சுனாமிக்கு போட்டி சுனாமியாக செய்தனர்.
பாதிக்கப் பட்ட மீனவர்கள் பலரும் நிறைய உதவிகளை பணமாக எதிர்பார்த்துப் பொற்றனர்.நாகப்பட்டினத்தில் தொடங்கி கரையேர கிராமம் மற்றும் குப்பங்களில் நிறைய அறுவடை செய்து கிறிஸ்த்தவர்ளாக மாற்றியிருந்தனர். ஆனால் கிறிஸ்மஸ் அன்று சுனாமி அடித்ததால் அவர்களுக்குத்தான் இழப்பு அதிகம். ஆனால் அடுத்த ஆறுமாத காலத்திற்க்கு சேவை மற்றும் ஆறுதல்களால் மீண்டும் முன்னை வீட மதமாற்ற அறுவடை தொடர்ந்து நடந்தது.இன்னமும் நடக்கின்றது.

அடுத்த வந்த மாதங்களில் அவர்களில் ஜனூறு ரூபாய் தாள்கள் சர்வ சாதரனமாக புழங்கியது. ஆனாலும் இல்லை கோசமும் தொடர்ந்து இருந்தது. பானிபூரி கடையில் கூட ஜனூரூபாய் கொடுத்து சிலர் சாப்பிட்டனர். ஆண்களில் பலரும் இந்த பணத்தில் குடித்தது வேதனை. அவர்கள் வாழ்ந்து வந்த குடிசைகள் எல்லாம் போய் காங்கீரிட் கட்டிடங்கள் ஆனது. ஆனாலும் உயிர் இழப்புகளின் வேதனைகள் யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது. அநோகமாக எல்லார் வீட்டிலும் ஒரு குழந்தையின் படம் மாலையுடன் மாட்டியிருக்கும். அந்த சாலை முழுதும் புதுப்பிக்கப் பட்டு பராமரிக்கப் பட்டது.

சுனாமி அடித்த இரவு மக்கள் உயிருக்கு பயந்து தங்களின் வீடுகளை விட்டு ஓடியிருந்தார்கள். அப்போது சென்னைக் குப்பத்தை சேர்ந்த சிலர் போட்டில் கடல் வழியாக வந்து ஆளில்லா வீடுகளை கொள்ளயடித்த சம்பவமும் நடந்தது. நகரியத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப் பட்டினம் காவல்துறையும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு ரோந்து மற்றும் மீட்புப் பணியில் அயராது பாடுபட்டனர். மருத்துவர்கள் மற்றும் அங்கு உள்ள ஊழியர்கள் நல்ல சேவை செய்தனர். மத்தியபொதுப்பணித்துறை மின்சாரம், ரோடு, கேபிள் டீவி குடினீர் ஆகியன மின்னல் வேகத்தில் இரண்டு நாளில் சரி செய்தனர். சாலை பழுது பார்க்கும் பணியும்,அடித்துப் போன குடினீர் குழாய்களும் ஒரு வாரத்தில் சரி செய்யப் பட்டது. பூங்காக்கள், தோட்டங்கள் ஆகியன முன்னைவீட புதுப் பொழிவுடன் ஒரு மாதத்தில் செய்து அழித்த இயற்கைக்கு சவால் விட்டனர்.

ஒரு அழகான சுனாமி பார்க்கும், இறந்த அந்த குழந்தைகளின் நினைவாக கட்டப்பட்டது. கடல்கரை எங்கும் மதில் சுவர்கள் முன்னைவீட வலிமையாக காங்கிரிட் முறையில் கட்டப்பட்டு, அவற்றின் ஓரங்கள் பெரிய கருங்கற்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இனி சுனாமி அடித்தாலும் இதுபோல பாதிப்பு நிகழா வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. கரையை ஒட்டிய வீடுகளில் சுனாமி அபாய மணி ஒலிக்கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் இந்த சுனாமி பதிவை முடிக்கின்றேன்.தங்களின் தொடந்த ஆதரவுக்கு நன்றி.

Tuesday, November 3, 2009

கொள்ளு மசியல், கொள்ளு இரசம் மற்றும் கொள்ளு சுண்டல்

மேனகா சத்தியா அவர்கள் கொள்ளு பீன்ஸ் உசிலி பதிவு போட்டாங்க, சுவையான சுவை பதிவில் கொள்ளு தோசை போட்டார்கள். சரி இந்த வாரம் கொள்ளு வாரம் ஆக போட்டால் என்ன என்று தோன்றியது. ஆதலால் நான் கொள்ளு மசியலும், கொள்ளு இரசமும் பதிவிடலாம் என்று உள்ளேன். குளிர் காலத்தில் உடலுக்கு உஷ்ணமும், அதிக சக்தியும் கொடுப்பது கொள்ளுதாங்க( என்ன இரங்கமணி கொஞ்சம் வம்பு பண்ணுவார், அப்புறம் என்ன பண்ண, சூட்டைக் கிளப்பியது நீங்கதான ). பாக்கியராஜ் முருங்கைக்காய் மாதிரி கொள்ளுக்கும் அந்த சக்தி உண்டுங்க. சரி கொள்ளு மேட்டரை சொல்லியாச்சு(பத்த வச்சுட்டியே பரட்டை). பதிவுக்குப் போவேமா. முதலில் கொள்ளு மசியல் பார்ப்போம். இது ஒன்னும் பெரிய விசயம் இல்லீங்க. நீங்க பாசிப்பருப்பு மசியல் பண்ணுவிங்க இல்ல, அந்த பார்முலாதான் இதுக்கும்.

தேவையான பொருட்கள் :

1. கொள்ளு அரைக்கிலோ,
2. சின்ன வெங்காயம் 8,
3. பச்சை மிளகாய் மூன்று,
4. தாளிக்கும் பொருள்கள்.

முதலில் கொள்ளு நல்லா அலம்பி சுத்தம் செய்து, கொள்ளு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு(இரண்டரை டம்ளர்), அரை ஸ்பூன் உப்பு போடவும். குக்கரில் ஏழு அல்லது எட்டு விசில் விடவும். பின் கொள்ளு வெந்தவுடன் கொள்ளு வெந்த தண்ணீரை வடித்து சேகரித்துக் கொள்ளவும்.(இரசத்திற்கு). கொள்ளு மசிய வேகாமல் இருந்தால் அதை கொஞ்சம் கடைந்து கொள்ளவும் அல்லது மிக்ஸியில் நாலு சுற்றுக்கள் சுற்றவும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கொஞ்சம் கடுகு.வெள்ளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் மஞ்சசத்தூள், இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை போட்டு தாளித்து பின் அதில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டு அல்லது நாலு துண்டுகளாக நறுக்கிப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் கொள்ளு மசியலை அதில் போட்டு தேவையான அளவு உப்புப் போட்டு, கொஞ்சமாக களறி இறக்கவும். கொள்ளு மசியல் ரெடி. இனி கொள்ளு இரசம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

1. கொள்ளு வேகவைத்த தண்ணீர் இரு டம்ளர்,
2. புளிக்கரசல் முக்கால் டம்ளர்,
3. சீரகம் ஒரு ஸ்பூன்,
4. மிளகு 10,
5. தணியா அல்லது கொத்தமல்லி ஒரு பிடி
6.பூண்டு நாலு பல்
7.சின்ன வெங்காயம் 4,
8. தாளிக்கும் பொருள்கள்.


முதலில் புளிக்கரசல் கொட்டியாக உப்பு, மஞ்சத்தூள் பெருங்காயம் போட்டு கொதிக்க வைத்து ரெடி பண்ணவும். பின் சீரகம், மிளகு, தணியா ஆகியனவற்றை பொடியாக ஒரு முக்கால் திட்டம்(மைய அரைக்காமல் உதிரியாக) அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். புளித்தண்ணீர் கொள்ளுத் தண்ணீர் ஆகியன கலர்ந்து நல்லா கொதிக்கவிடவும். இது நுரை கட்டும் போது அரைத்த பொடியைப் போட்டு கலக்கவும். பின் நுரை கட்டி வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து, பக்கத்து அடுப்பில் தாளிக்கவும். கொஞ்சம் எண்ணெய்யில் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் பொடி கருவேப்பிலை போட்டு அதில் நாலு சின்ன வெங்காயத்தை தோலுரித்து கையில் ஒரு தட்டுத் தட்டிப் போடவும், பூண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும். வெங்காயம்,பூண்டு வதங்கியவுடன் இரசத்தில் கொட்டி ஒரு கொதி விட்டு இறக்கவும். கொஞ்சம் நேரம் மூடி வைக்கவும். இரசமும் ரெடி.

இதற்கு ஊறுகாய், அப்பளம் மற்றும் வடகம் நல்ல காம்பினேசன் ஆகும்.

கொள்ளு சுண்டல் :

இதில் வெந்த கொள்ளைக் கொண்டு மசியல் பண்ணாவிட்டால், வெங்காயம் போட்டுத் தாளித்து தேங்காய் துருவல் போட்டு சுண்டல் செய்யலாம். சுண்டல் தண்ணீரிலும் இரசம் செய்யலாம்.
பெரியவர்கள் இதை உடலுக்கு உஷ்னம் என்று செல்வார்கள், ஆதலால் கர்ப்ப காலத்தில் தவிர்க்கவும். குளிருக்கு ஏற்றது.

டிஸ்கி : எனக்குத் தெரிந்து ஜந்து அல்லது ஆறு பதிவர்களுக்கு மேல் சமையல் பதிவுகளை எழுதுகின்றனர். இவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து வாரம் ஒரு வகை அல்லது காய். ரெசிப்பிஸ் எடுத்து அதில் அவர்களுக்கு தெரிந்தை பதிவிட்டால் என்ன. ஒரு ஒழுங்கும்,குழு உணர்வும் இருக்கும் அல்லவா. சிந்திக்கவும். நன்றி.

Monday, November 2, 2009

அந்த நாள் பயங்கரம் சுனாமி -4

சுனாமியால் மக்கள் பட்ட வேதனைகளும் வடுக்களும் பலருக்கும் ஏராளம், எங்கள் வீட்டில் வந்த பலரில் ஒரு நடுத்தர வயது பெண்மணி,தன் இரு சிறுமிகளுடன் வந்துருந்தார். அவர் கூறியதை கேட்ட நான் உறைந்துபோனேன். அவர் காலையில் தனது குழந்தைகளுக்கு காபி கொடுத்துவிட்டு, காலை சிற்றுண்டி தயார் செய்துகொண்டுருந்தார். கனவர் அலுவலகம் சென்றுவிட்டார். அப்போதுதான் அந்த ஊழிக்காலத்தின் அலைகள் போல பெரிய அலை அடித்து தண்ணீர் அவர் வீட்டுக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது, இவர் செய்வது அறியாது தன் இரு குழந்தைகளை பிரோவின் மீது ஏற்றிவிட்டார். பின் அலையில் பிரோ கவிழ்ந்து விடாதபடி சுவருடன் அழுத்தி தாங்கி பிடித்துக் கொண்டு நின்றுள்ளார். தண்ணீர் மிக வேகமாக வர மிகவும் சிரமப்பட்டு, என்ன நடந்தாலும் சரி எப்படியாவது தன் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் நிற்க. வேகமாக வந்த தண்ணீரின் மட்டம் அவரின் கழுத்து வரை ஏறியது, அவர் எல்லாத் தெயவங்களையும் வேண்டியபடி இருந்தார். அலைகள் எவ்வளவு வேகமாக அடித்தாலும் அவர் இறுதி வரை சுவருடன் அழுத்திப் பிடித்த பிரோவை விடவில்லை. அவர் மருவத்தூர் பக்தை என்பதால் மேல்மருவத்தூர் அம்மா காப்பாத்து என வேண்டியபடி நிற்க, அவர் முகம் வரை ஏறிய தண்ணீர் பின் வடிந்தது. திரும்பிச் செல்லும் அலைகள் அவரை இழுக்க, அவர் பிரோவை கொட்டியாக பிடித்து நின்றதால் அவரின் புடவை முழுதும் உருவிச்சென்றது. தண்ணீர் சென்றவுடன் மாற்று ஆடை அணியக்கூட அவர் சிந்தனை செல்லவில்லை. குழந்தைகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி நின்றதால், அவர் தன் இரு குழந்தைகளை இறக்கி, கைகளைக் பிடித்துக் கொண்டு தெருவில் ஓடி, சாலையின் இந்த புறம் வந்துவிட்டார். பின் பலரும் அவரிடம் புடவை இல்லை என்று கூறும்போதுதான் தன் நிலை உணர்ந்தார். அங்கு கிடைத்த ஒரு துணியைக் சுற்றிக் கொண்டு வந்தவர்.எங்கள் வீட்டில் மன்னியின் நல்ல புடைவை ஒன்றைக் கட்டிக்கொண்டார். காலையில் நனைந்த நைட்டியுடன் இருந்த அந்த குழந்தைகளுக்கு எங்கள் மன்னி அவரின் சுடிதார்களைக் கொடுத்தார்.

இதுபோன்று எங்கள் அண்ணாவின் அலுவலகத்தில் பணி புரியும் ஒருவர் கடலில் கரையில் நின்று தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தார். அவர் பெரிதாக வரும் அலைகளைப் பார்த்து ஓடத்தொடங்க, அடித்த அலையில் சென்ற அவர் இடையில் ஒரு பாலத்தின் கைப் படி சுவர் கிடைக்க அதைப் பற்றிக் கொண்டார். அலைகள் அவரின் முழு ஆடைகயும் உருவிச் சென்றன. 45 வயது மதிக்கத் தக்க அவர் பிறந்த மேனியாக தெரு முழுதும் ஓடிப் பின் அங்கு ஒரு வீட்டுக்குள் சென்று வேஷ்டி கட்டினார். அவர் இது தனது மறுஜென்மம் என்றுதான் கூறுவார்.

அது போல நான் டீ சாப்பிடும் கடை உரிமையாளர், கடலை ஒருபுறம் வரும் பெரிய அலையை புரியாமல் வேடிக்கை பார்க்க, அவர் கடையின் பின்புறமாக வந்த அலை அவரைக் கடலினுள் இழுத்துச் சென்றது. அவர் கடலை நேக்கி வேகத்துடன் இழுத்துச் செல்லும் அலையுடன் போராடும் போது, அவரின் நல்ல காலம் அடுத்து வந்த பெரிய அலை ஒன்று அவரை மிண்டும் கடலில் இருந்து அடித்து ஒரு மரத்தின் மேல் போட்டது. அவர் அந்த மரத்தை கொட்டியாக பிடித்துக் கொண்டு மரக் கிளையில் மயங்கி விழுந்தார். பின் நினைவு திரும்பும் போது மருத்துமனையில் இருந்தார்.

நான் இருபது ரூபாய் மிச்சம் பிடிக்க போலாம் என்று சொன்ன ஸ்டேர்ஸ் முழுதும் கடலால் மூழ்கி, சுற்றிலும் கடல் அலைகள் அடித்து துவசம் ஆகிவிட்டது. அங்கு பணிபுரிந்த இருவர். காலையில் பொருள் வாங்க வந்த நால்வர் பலி ஆனார்கள். நானும் மூன்றாவது அண்ணாவும் அங்கு சென்று இருந்த்தால் கண்டிப்பாய் மரணம்தான். எங்க இரண்டாவது அண்ணாவின் தன்னிச்சை செயல் எங்களைக் காப்பாற்றியது(அய்யப்பன் காப்பாத்தினார்னு சொன்னா வால்ஸ் திட்டுவார்). நான் காலை ஏழு ஜம்பத்தி ஜந்துக்கு போட்ட பெட்ரோல் பங்கு முழுதும் அடுத்த எட்டு நிமிடங்களில் அலைகள் அடித்து சின்னா பின்னம் ஆகியது. அங்கு பணிபுரிந்த மூவரில் ஒருவர் உயிரிழக்க, ஒருவர் மரத்தின் மீது ஏறித்தப்பிக்க, ஒருவரை அலைகள் அடித்து பக்கிங்காம் கால்வாயில் தள்ளியது. மீனவர் ஆன அவர் நீச்சல் தெரிந்ததால் அலைகளின் போக்கில் போய் உயிர் தப்பினார். நான் எட்டு மணிக்கு பயணம் செய்த சாலை முழுதும் அலைகள் அடித்து ரோடு முழுதும் முழங்கால் அளவு சேறும் சகதியும் ஆனது. அந்த சாலையின் இடப்புறம் அரைக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் வந்த அலைகள் சாலையைக் கடந்து சாலையின் மறுபுறம் நின்று இருந்த டிப்பர் லாரியைக் கூட (எல் & டியின் சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கலவை, காங்கிரீட் கலவை எந்திரம்) கவிழ்த்து உருட்டும் அளவுக்கு வலிமை கொண்டதாக இருந்தது. மூன்று நிடங்களுக்கு முன்னால் இந்த சாலையினை கடந்து சென்றேன் எனபதை நினைத்தால் பயமாக உள்ளது.

நான் முன்னால் சொன்னது எல்லாம் சாலையின் வலப்புறம் உள்ளதுதான். சாலையின் இடப்புறம் தான் கடலை ஒட்டிய குடியிருப்புகள் மொத்தமாக அழிந்தன. மீனவர் குடியிருப்புகள் எல்லாம் தரைமட்டமாயின. நகரியத்தில் உள்ள அடுக்கு மாடி வீடுகளின் தரைமட்ட வீடுகள் எல்லாவற்றிலும் தண்ணீர் புகுந்து, வீட்டில் அனைத்துப் பொருளும் நாசமாயின்ன. எங்க அண்ணாவின் நண்பரும், அவரின் மனைவி எங்க மன்னியின் தோழிக்கு கடல் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்காக அவர் கடலை ஒட்டியுள்ள வீடு வாங்கினார். தினமும் காலை எழுந்தவுடன், சாரளம் வழியாக கடலைப் பார்த்துக் கொண்டுதான் பல் விளக்கி, அடுப்பங்கரையில் கூட கடலைப் பார்த்துதான் காபி போட்டுக் குடிப்பார். அவர் அன்று காலை வழக்கம் போல காபி போடும் போது கடலைப் பார்த்தார். அப்போது ஒரு பனைமர உயரத்திற்கு எழுந்து வரும் அலைகளைப் பார்த்து எதே உள்ளுனர்வு உந்த ஹாலுக்கு ஓடி வந்து தனது இரு மகன் களின் கைகளைப் பிடித்து கனவரையும் கத்திக் அழைத்துக் கொண்டு தெருவில் ஓடிவந்தார். அலைகள் அவர் ஓட ஓட துரத்தி வந்தது. சாலைக் கடந்த அவர் அங்கு அடுக்கு மாடியில் மேல் நின்றவர்கள் மேலே ஏறுமாறு கத்த மேலே ஏறிக் கொண்டார். அவரின் வீட்டில் பின்புறம் சாரளம், வெண்டிலோட்டரை உடைத்துப் புகுந்த அலைகள் வீடு முழுதும் அடித்து, வீட்டின் பால்கனி மற்றும் வாசல்கதவை உடைத்து வெளியேறியது.

டீவி, துவைக்கும் எந்திரம், குளிர் சாதனப் பொட்டி, பிரோ, என அனைத்தும் உடைந்து சர்வ நாசம் ஆகியது. நாங்கள் போய் அந்த வீட்டில் இருந்த பாத்திரங்கள் முடிந்த வரை அங்கு இருந்த பொருள்கள் எல்லாம் அவருக்கு தற்காலிகமாக கிடைத்த வேறு வீட்டுக்கு மாற்றிக் கொடுத்தேம். எங்கள் மன்னியும் அவர் நண்பியும் அவரின் வீட்டில் கணங்கால் அளவு மூடிக்கிடந்த மண்ணில் குச்சியால் தோண்டித் தோண்டி நகைகள் எல்லாம் தேடி எடுத்தார்கள். அப்படியும் ஒரு பத்து பவுன் நகைகள் போனது. வீடு மொத்தமும் போய் எல்லாம் புதியதாக வாங்கினார்கள்.

நானும் எங்க மூன்றாவது அண்ணாவும் மதியம் அனைத்தும் முடிந்தவுடன் கடலுக்கு அருகில் இருந்த இரண்டு அடுக்கு மொட்டை மாடியில் போய் கடலைப் பார்த்தேம். அழகாய் நான் இரசித்த கடல் செந்தண்ணிராக பொங்கி குமறிக் கொண்டு இருந்தது. அதன் அலைகள் நகரியத்தின் இடிந்த மதில் சுவர் வரை வந்து போய்க் கொண்டு இருந்தது. நான் பயம் மற்றும் பசி வயிறைப் பிசைய அண்ணாவை அழைத்துக் கொண்டு திரும்பினேன். பெரிய கூட்டம் ஒன்று பக்கிங்காம் கால்வாயில் கடல் புகுவதை வேடிக்கைப் பார்க்க, எங்க அண்ணா பிரியப்பட்டார் என நாங்களும் போனேம். அங்கு கடலை அலைகள் கால்வாயில் புகுவதால், கால்வாயிலும் அலைகள் அடித்தன. அப்போது எங்கள் முன்னால் ஒரு போரலை ஒன்று வர, அண்ணா ஓடி வாங்க என்று கத்திக் கொண்டு பின்னங்கால் பிடறியில் பட, புலி துரத்தும் மானாய் ஓடிணேன். சிறிது தூரம் ஓடி வந்து விட்டு திரும்பிப் பார்த்தால் எங்க அண்ணா சிரித்துக் கொண்டு நூறு அடி பின்னால் நின்று கொண்டிருந்தார். அவர் " டேய் அலை அப்பவே பின்னால போயிருச்சு, நீ இப்படி பயப்படுறியே" என்றார். பின் நான் அவரை நச்சரித்து வீட்டுக்கு கூட்டிப் போனேன்.

ஒரு டாட்டா சுமோவை அடித்து புரட்டிப் போட்டு இருந்தது. ஒரு அம்பாசிடர் தலைகீழாக கவிழ்த்தும், மாருதி ஜென்னை இழுத்து பக்கிங்காம் கால்வாயிலும் தள்ளி இருந்தது. அடுத்த நாள் கடலை ஒட்டி எங்கு பார்த்தாலும் பிணங்கள், மொத்தம் ஜம்பது பேருக்கு மேலே உயிர்கள் நகரியத்தில் பலியாகினர். அதில் அதிகம் குழந்தைகள்தான், அப்புறம் பெண்கள். இவர்களின் நினைவாக ஒரு சுனாமி பூங்கா ஒன்று உள்ளது. அதில் இவர்கள் அனைவரின் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளது. ஒருவர் தன் இரு செல்லக் குழந்தைகளையும், மனைவியும் பறிகொடுத்து மருத்துவமனையில் இருந்து குழந்தைகளைப் பொட்டலமாக வாங்கி வந்தார். துணி சுற்றிய அந்த பிஞ்சு குழந்தைகளின் துணியை விளக்கி அவர் அழுத போது மனம் நெடித்துப் போனேன்.

இப்படி சுனாமி பற்றி சொல்ல நிறைய இருக்கு ஆனாலும், இந்த சுனாமி பற்றி எழுதி ரொம்ப சேகத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று பெரிய பதிவாக போட்டு அடுத்த தொடருடன் முடிக்கின்றேன். அந்த கோவில்களைப்(கருமாரியம்மன் கோவில்) பற்றி ஒரு பதிவு பின்னால் ஆன்மீகப் பதிவில் போடுகின்றேன்.

Friday, October 30, 2009

அந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3

அவர் அப்படி என்னிடம் கேட்டுவிட்டுப் பின் தான் தள்ளிக்கொண்டு வந்த அவரின் வண்டி கடல் தண்ணியால் பழுதுஆகி விட்டது. ஆதலால் உங்கள் வீட்டு காம்பவுண்ட் உள்ளே நிறுத்திப் போகின்றேன். அப்புறமா மெக்கானிக் கூட்டி வந்து சரி செய்து எடுத்துக் கொள்கின்றேன் என்றார்.(ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் வாகனம் வைத்துள்ளார் ஆனால் இடம் பெயர உதவவில்லை,இதாது பரவாயில்லை கார்களின் நிலை இன்னமும் மேசம், அடித்துச் செல்லப்பட்டு கதவு கண்ணாடிகள் உடைந்து சீட் எல்லாமும் செம்மண்ணும் சேருமாக இருந்தது). அவரும் நிறுத்திவிட்டுப் பின் தயங்கி என்னிடம் நீங்க கொஞ்சம் சாப்பாடு கேரியர்ரில் தர முடியுமான்னு கேக்க நான் இருங்க என்று சொல்லி என் மன்னியிடம் தெரிவித்தேன். அவர் சிறிதுகூட (நான் கூட யேசித்தேன்) யேசிக்காமல் சரி, உள்ள கூப்பிட்டு உக்கார சொல்லுங்க நான் கேரியர் ரெடி பண்ணுகின்றேன் என்று சமையலறை உள் சென்றார்.
மூன்றடுக்கு கேரியரில் எவ்வளவு அடைக்க முடியுமே அவ்வளவு போட்டு சாம்பார், ரசம் மேர் என்று கலர்ந்து கொடுத்தார். அவரின் கண்களில் தண்ணீர் வந்துவிடும் போல உணர்ச்சி வசப்பட்டு நன்றி கூறி கிளம்பினார். நான் இன்னும் யாராது கூப்பிட ரோட்டிக்கு அவருடன் வந்தேன். அவர் என்னிடம் மிகவும் தயங்கி தயங்கி ஒன்று கேட்டார்.

தம்பி சாப்பாடு கொடுத்தீங்க நன்றி, கேக்கக்கூடாது, ஆனாலும் எனக்கு வேறவழி தெரியலை, தப்பா எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு நூறுரூபாய் தரமுடியமா? நான் வண்டி எடுக்கும் போது கேரியரும் பணமும் கண்டிப்பா தருகின்றேன் என்றார். நான் ஒரு நிமிடம் திகைக்க அவர் சொன்னார், திடீர்னு கடல் அலைகள் வீட்டினுள் புகுந்து பீரோ, எல்லாம் கவித்து அடிச்சுட்டு போய்டுச்சு, பணம் நகை எல்லாம் போய்விட்டது, மின்சாரம் இல்லாததால் ஏ டி எம் வேலை செய்யவில்லை. அனுப்புரம் போய் எப்படி சென்னைக்கு இவர்களை உறவினர் வீட்டுக்கு அழைத்துப் போவது? பஸ்ஸிக்கு காசு வேணும் என்றார். அவரின் கண்கள் கலங்கிய நிலையில் இருந்தது. நான் அதுனால என்னங்க பரவாயில்லை என்று கூறி என் சட்டை பையில் பணம் எடுக்கும் நேரம் அவரின் மனைவி குழந்தைகள் மற்றும் பெரியோர் இருவரை கைபிடித்து அழைத்து இவரை காணாமல் தேடி வந்த அவரைப் பார்த்ததும் நான் ஒரு நிமிடம் மொத்த வாழ்கையும் வெறுத்துப் போனேன். எனக்கு மிக ஆச்சரியம் என்றாலும் கவலை சூழ்ந்தது. அவரின் மனைவி என்னுடன் பஸ்ஸில் வந்து பணிபுரியும் பெண்மணி.

நான் அவருடன் பேசியது இல்லை என்றாலும் தினமும் பார்த்து இருக்கின்றேன்(வேற என்ன வேலை). எப்படி இருப்பார் தெரியுமா? அவர் ஒரு பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளர். எங்கள் அலுவலகம் செல்லும் வழியில்தான் அவரின் கல்லூரியும் உள்ளது.
லலிதா, ஜி ஆர் டி, குமரன் என அத்தனை நகைக்கடைகளின் நகைகளையும் மொத்தமாக கழுத்தில், காதில், கையில் என தினமும் ஒரு முப்பது பவுன் நகை அனிந்துதான் வருவார். அவர் போடாதது கையில் புஜத்தில் மாட்டும் அணியும், ஒட்டியானமும் தான். இதை தவிர கழுத்தில் ஒரு மூனு வட செயின், நெக்லஸ், ஆரம் எனவும், இரு கைகளில் இருபது தங்க வளையல்களும் மூன்று விரல்களில் மேதிரம் என தினமும் கல்யாணத்திற்கு போவது போல்தான் கல்லூரிக்கு வருவார். அவர் கருப்பு என்பதால் நகைகள் இன்னும் ஜொலிக்கும். நானும் டிரைவரும் அவரை நகைக்கடை வருது, போகுது என்றுதான் பேசிக்கொள்வேம்.நான் அவருக்காக இல்லை என்றாலும், அவர் எனக்கு மிகவும் புடிக்கும் காதில் போடும் ஜிமிக்காக பார்ப்பேன். அப்படி இருந்தவர் எப்படி வந்தார் தெரியுமா. கலைந்த தலை, கண்களில் சேகம், பயம், சேர்வு, அவசரம் என்று வெறும் நைட்டியில் தாலி மட்டும் அனிந்து வந்தார். அவரைப் பார்த்ததும் நான் வாங்க என்றேன். அவர் தன் கனவரை என்னுடன் பார்த்ததும் புரியாமல் விழித்து, என்னங்க இவ்வளவு நேரம் கானமுன்னு பயந்து போய்த் தோடிக்கொண்டு வந்தேன் என்றார். அவர் இந்த தம்பி வீட்டில் நம்ம குழந்தைகளுக்கும், அப்பா அம்மாவிற்கு சாப்பாடும், சென்னை போவதற்கு பண்மும் கொடுத்தார்கள் என்றார். அவர் ஒரு நிமிடம் பார்த்து நீங்கள் பஸ்ஸில் வருவீர்கள் அல்லவா என்றார். நான் ஆமாங்க நீங்க வேனுமுன்னா எங்க வீட்டில் வந்து சேலையுடுத்தி பின் சாப்பிட்டு செல்லுங்க என்றேன். அவர் டையம் இல்லை, நான் அனுப்புரம் சென்று சாப்பிட்டு, உடைமாற்றிப் பின் சென்னைக்கு போகின்றேன். இப்ப அனுபுரம் பஸ்ஸை நிறுத்திவிட்டால் கஸ்டம். நாங்க சீக்கிரம் இங்கிருந்து போகவேண்டும் என்றார்.நான் அவர் கனவரிடம் இருனூறு ரூபாயாக கொடுத்து நாலு பேரும் போறதா இருந்தா 100 ரூபாய் பஸ்ஸிக்கே சரியாகிவிடும் ஆதலால் இதை வைத்துக் கொள்ளுங்கள், ஒன்றும் அவரசம் இல்லை பொறுமையாக கொண்டுவந்து தாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.
அந்த மனிதர் ஒரு பொறியாளர். மத்திய அரசில் உயர்ந்த பதவியில் உள்ளவர். வீடு நில புலங்கள் உள்ளவர், ஆனால் ஒரு நிமிடத்தில் இயற்கை நடுத்தெருவில் கொணர்ந்தது. அப்போது உணர்ந்தேன் நான் :---

கற்றது எங்கே? கட்டிய மனையாள் எங்கே?உற்றார் எங்கே? பெற்ற செல்வம் எங்கே? மாட மணி மாளிகை எங்கே? சூழ்ந்த நண்பரும் எங்கே? சேர்த்த செல்வமும் எங்கே ?பாடையில் போகும் போது உடன் வருமோ? ஆவிதான் அதை திருப்பித் தருமோ? என்ற பட்டினத்தாரின் பாடல் என் கண்களில் நீராக வந்தது. உண்மையில் அந்த பாடல் அப்போதுதான் உறைத்தது. தெருவில் நான் குட்டிப்பாலத்தின் கைப்பிடி சுவரில் பிரமித்து சில நிமிடங்கள் உக்காந்து இருந்தேன். எங்க மன்னி சன்னல் வழியாக கூப்பிட சிந்தனை கலைந்து சென்றேன். அப்புறம் ஒரு தாயின் அன்பும் எமனிடம் போராடிய கதையும் ஒன்றும் உள்ளது. அந்த கதைக்குப் பின் நான் உயிர் பிழைத்த கதையச் சொல்லுகின்றேன். நன்றி.

டிஸ்கி : அடுத்த வாரம் நாங்கள் சபரி மலை செல்லுவதற்காக எங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டேம். அவர்கள் அந்த கேரியர் நிறைய ஸ்வீட்டுடன், பணத்தையும் எதிர் வீட்டில் கொடுத்துச் சென்றுள்ளார்கள். அந்த நிகழ்வுக்குப் பின் அவர்கள் கடல் ஓர வீடே வேண்டாம் என்று செங்கல்பட்டில் சென்று குடியேறிவிட்டனர். கோடிரூபாய் கொடுத்தாலும் அந்த வீட்டுக்கு வருவதாக இல்லை என்றும் கூறிவிட்டார் அந்தம்மா. அதற்கு பிறகு நான் அவர்களை இதுவரை பார்த்ததில்லை. இது கூட அவர் போனில் கூறியதுதான். நன்றி.

Thursday, October 29, 2009

அந்த பயங்கர நாள் - சுனாமி 2

நான் இந்த பதிவு எழுதும் முன் சதுங்கப்பட்டினம் என்ற அந்த ஊரைப் பற்றிக்கூற வேண்டும். இந்த ஊரை நீங்கள் அனைவரும் கேள்விப் பட்டுருக்கமாட்டீர்கள். ஆனால் அனைவரும் ஒரு வரி உங்களின் ஏழாம் அல்லது எட்டாம் வகுப்பில் படித்துருப்பீர்கள்.
ஆம் முதன் முதலில் நம் நாட்டிற்கு கடல் வழி கண்டுபிடித்து வந்த போர்த்துக்கீசியர்கள், நம் நாட்டில் மூன்று இடங்களில் தங்களது கோட்டை மற்றும் பண்டகசாலைகளை கட்டினார்கள். தரங்கம்பாடி, கோழிக்கோடு மற்றும் சதுங்கப்பட்டினம் என்று படித்துருப்பீர்கள். அந்த சதுங்கப்பட்டினம் தான் இந்த ஊர். இங்கு அவர்களின் கோட்டை ஒன்றும் உள்ளது. பின்னாளில் இதை ஜான் டூப்ளே பிரஞ்சு கைப்பற்றி அவர்களின் கோட்டையாக்கினார். இங்கிருந்து பக்கிங்க்காம் கால்வாய் வழியாக அவர் அடையாறு ஆறு சென்று பின் சென்னைக் கோட்டையும் கைப்பற்றினார். சிலுவைப் போர்களின் பிரான்ஸின் தேல்வியை அடுத்து சென்னை மற்றும் இந்த கோட்டைகள் ஆங்கிலேயர் வசமாயிற்று. இன்று தொல்பொருள் இலாகாவிடம் உள்ளது. இது ஓர் ஊர் என்றும் கிராமம் என்றும் கூற முடியாத அளவில் உள்ளது. ஒரு பெரிய முக்கிய சாலை அதன் வலப்புறம் முழுதும் மீனவர் குப்பமும், கடலும் உள்ளது. இடப்பூறம் ஊரும் மார்கொட் முதலியவை உள்ளது. இந்த சாலை கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் ஆரம்பித்து புதுப்பட்டினம் வரை செல்லும். இந்த சாலைதான் முக்கிய தொடர்பு வழி. இதன் முக்கால் பகுதி கடலின் அருகில் அரை பர்லாங் தூரத்தில் இருக்கும். கல்பாக்கத்தின் ஒருபுறம் புதுப்பட்டினமும்(கேட்) மறுபுறம் சதுங்கப்பட்டினமும் இருக்கும். எங்கள் வீடு சதுங்கப்பட்டினம் அருகில் உள்ள கேட் பக்க்ததில் உள்ளது. எங்களுக்கு மார்கெட் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் சதுரை கேட் பக்கத்தில்தான். இங்கு ஒரு பொருமாள்(கிரி வரதர்) கோவிலும் ஒரு சிவன்(திருவட்டீஸ்வரர்) கோவிலும் உள்ளது. மற்றபடி நகரியத்தின் உள் பல கோவில்கள் தற்காலத்தில் கட்டப்பட்டது.

ஆனால் இங்கு மீனவர்கள் அவர்கள் குடியிருப்பு பக்கத்தில் பல அம்மன் கோவில்கள் கடலைப் பார்த்தவாறு இருக்கும். இந்த கோவிலுக்கும் கடலுக்கும் நடுவில் யாரும் வீடு கட்டமாட்டார்கள். அம்மன் கடலைப் பார்த்து அமர்ந்து, கடலில் செல்லும் தங்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். (நான் இதை சொல்லுவதற்கும் ஒரு காரணம் உள்ளது, அது இந்த தொடரின் தனிப்பதிவாக வரும்)அதில் முக்கியமான ஒரு கோவில் தேவி கருமாரியம்மன் கோவில் ஒன்று(தனிப்பதிவு).

இந்த சாலையில் தான் ஸ்டேர்ஸ்,பெட்ரோல் பங்கு, மற்றும் பல கடைகள் அமைந்துள்ளன. அன்று காலை எங்க அண்ணாவிற்கு காலைப் பணி ஆதலால் அவர் காலை 5.30க்கு சென்று மதியம் 2.30க்கு திரும்புவார். ஆதலால் நாங்கள் காலை 4.30க்கு எழுந்து குளித்து 5.30க்கு பூஜை முடித்தேம். காலை தோனீர் அருந்தும்போது எங்க அண்ணா சொன்னார், மளிகையுடன் பூஜைப் பொருட்களையும் சேர்த்து செட்டியார் கடையில் வாங்கிவிடு, அதுக்கு ஒருதரம் இதுக்கு ஒருதரம் போகவேண்டாம் என்றார். நான் இல்லையண்ணா இருபது ரூபாய் மிச்சம் ஆகும் என்றேன். அண்ணா கடவுளுக்கு இவ்வளவு பண்றேம், அந்த இருபது ரூபாயில் என்ன பண்ணப்போறேம். இங்கேயே வாங்கிவிடு என்றார். நானும் மறுவார்த்தைப் பேசி பழக்கம் இல்லாததால் சரி என்றேன்.
அவர் சொன்னார் எனக்கு என்னமே ஸ்டேர்ஸ் போவது சரியாகப் படவில்லை என்றார்.அண்ணா சொன்னார் காலை செட்டியார் கடையில் திறந்தவுடன் பொருட்களை வாங்கிவிட்டு,சாமிகளுக்கு கொடுக்க ஒரு மூனு அல்லது நாலு லிட்டர் பாலும் வாங்கி வைத்துக்கொள் என்றார், நீ வாழைத் தோப்புக்குப் போய் ஸ்வாமி சப்பரத்தேர் கட்ட வாழைமரம், வாழையிலை, வாழைப்பழம் ஆகியவற்றை வாங்கி வா. சாமிகள் வந்துவிடுவார்கள். கேசவன் வீட்டில் அவர்களுக்கு துணையாக இருக்கட்டும் என்று கூறிவிட்டு, எங்கள் மன்னியிடம் இன்னைக்கி காலை எத்தனை பேர் சாப்பிட வருவாங்கன்னு தெரியாது நீ எதுக்கும் பத்துப் பேருக்கு சமைத்துவிடு. சுதா வாழைத்தோப்புக்கு போய் வந்து உனக்கு சமையலில் உதவுவான் என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். காலை ஆறுரை மணிக்கொல்லாம் கடைக்குப் போய் மளிகை வாங்கி வந்து, பின் 7.30க்கு இரு சாமிகள் வந்தனர். அவர்களுக்கு காபி கொடுத்து, ஒருவரை என்னுடன் அழைத்துக் கொண்டு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் போது ஏழு அம்பது. அந்த சாலை முழுதும் பயணம் செய்து நான் சதுங்கப்பட்டினம் செல்லும்போது எட்டு. பின் வாழைத்தோப்பை அடைந்து அங்கு வீட்டு முதலாளியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சுவாமி சப்பரம் என்றால் பூத்துக் காய்த்த பட்ட மரத்தைதான் வெட்டவேண்டும். புது மரத்தை வெட்டி செய்தால் பாவம். வாங்க தோப்பினுள் சென்று பட்ட மரம் எங்க இருக்குனு பார்க்க சென்றேம். நாங்கள் ஒரு பத்து அடிகூட நடந்து இருக்கமாட்டேம். திபுதிபு என மக்கள் ஓடி வந்து கொண்டுருந்தனர்.

" எல்லாரும் ஓடுங்க ஓடுங்க கடல் கொந்தளித்து அலைகள் ஊருக்குள் வருகின்றது. மிகவேகமாக வருகின்றது எல்லாரும் ஓடுங்கள் " என கத்திக் கொண்டு ஓடி வந்தனர். நான் திகைத்து நிற்க முதலில் நான் ஜூன், ஜீலை காலங்களில் கடல் அலைகள் சிறிது ஊருக்குள் அல்லது மீனவர் குடியிருப்பில் வருவது வழக்கம். அதுபோல என்று இருந்தேன். ஆனால் ஓடிவரும் மக்கள் எண்ணிக்கையைப் பார்த்து அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் சொன்னார்கள் கடல் கொந்தளித்துவிட்டது அலைகள் ஒரு பனைமர உயரத்திற்கு எழும்பி ஊருக்குள் வருகின்றது என்று. நான் உடனே பைக்கை எடுத்துக் கொண்டு வீடு செல்லமுயன்றேன், ஆனால் அவர் இப்ப போகவேண்டாம். எங்கள் வீடு இரண்டு மாடி, அவ்வளவு உயரம் கடல் வராது வா அனைவரும் மொட்டை மாடிக்கு செல்வேம் என்றார். அவர்கள் வீட்டில் அனைவரும் மேல் செல்ல நானும் அவரும் அவர்கள் வீட்டின் வாசல் கதவை திறந்து வைத்து ஓடி வரும் அனைவரையும் அவரின் வீட்டின் மொட்டைமாடிக்கு செல்லச் சொன்னேம். பலரும் பெண்கள் குழந்தைகள் பலரும் ஏறிக்கொண்டார்கள். நாங்கள் அனைவரும் அலைகளுக்காக காத்துருந்தேம். வந்தால் மாடிக்கு ஓடிவிடலாம், இல்லையேல் எவ்வளவு பேரை மாடிக்கு அனுப்ப முடியுமே, அனுப்பலாம் என்று. அலைகள் சத்ததுடன் அவர் வீட்டின் முன்னால் இருபதடி வரை வந்து ஓய்ந்ததை கண்ணால் கண்டேம். அது அலைகள் அல்ல ஒரு கோர இராட்சனின் கைகாளாக தோன்றியது. பின் சகலமும் ஓய்ந்தது. அதன்பின் நடந்த நிகழ்வுகள் கண்ணீர் விட வைப்பதாக இருந்தது.

பல பெண்கள் கண்ணீருடன் விரிந்த தலையுடனும் கத்திக், கதறி தங்களின் சொந்தங்கள் குழந்தைகளை தோடிக்கொண்டுருந்தார்கள்.
நான் வீட்டின் முன் நின்று அவர்கள் கூறும் பெயர்கள் மாடியில் இருக்கின்றார்களா இல்லையா எனக் கேட்டு கூறிக்கொண்டு இருந்தேன். பலரும் பல பெயர்களை கூறி இருந்தால், அடுத்தவர்களை தோடத் தொடங்கினார்கள். இல்லை என்றால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினார்கள். அங்கு நடந்தைவைகள் எனக்கு முழுதும் வயிற்றைப் பிசையத் தொடங்கியது. இயற்கையில் இரக்க சுபாவம் உடைய எனக்கு கண்களில் நீரும், மயக்கம் வரும் நிலை. என் கை கால்கள் நடுங்கின. அந்த வீட்டின் ஓனர் தெய்வம், அவரும் அவரின் அழகிய பெண்ணும்(குணத்தில் மாகலஷ்மியை சொல்லாம்) அங்கு எல்லாருக்கும் சக்திக்காக லெமன் ஜீஸ் கொடுக்க்த் தொடங்கினார். அப்போது ஒருவரிடன் நான் என்ன ஆயிற்று என்று வினாவ அவர் கடல் அலைகள் ஊருக்குள் வந்தையும் இன்னமும் அலைகள் வேகமாக பக்கிங்க்காம் கால்வாயில் உள்புகின்றது என்று சொன்னார். அவர் சொன்ன மறுவினாடி என் சர்வ அங்கமும் ஒடுங்கியது. ஏன் என்றால் பங்கிங்க்காம் கால்வாய் பேக்வாட்டர்ஸ் அருகில் உள்ள சீனியர் ஹாஸ்டல் பக்க்த்தில்தான் என் வீடும். என் வீடு முதல் மாடி என்பதால் அவ்வளவு உயரம் போய் இருக்காது என்றாலும் ஓபன் கால்வாயில் கடல் அலைக்கள் சீற்றத்துடன் சென்றால் உயர வாய்ப்புள்ளது ஆகையால் நான் உடனே கிளம்ப ஆரம்பித்தேன். என்னுடன் வந்த சாமியும் நான் எங்க வீட்டில் போய் பார்த்து வருகின்றேன் என்று சொல்லிப் போனார்.நானும் கிளம்ப அவர் விடவில்லை, அவரின் வீட்டு தொலைபேசியும் அவுட் ஆப் அர்டர் ஆகி இருந்தது, நான் புரியாது விழிக்க அவர் இருங்கள் முதலில் ரோடுவரை போய்ப் பார்ப்போம். பின் அனுப்பிகின்றேன். நானும் அவரும் ரோடுவரை சென்றேம். வழிபூராவும் கடல் தண்ணீர் முழங்கால் வரை இருந்தது. மக்கள் அவர்களின் வீடுகளின் இடிபாடுகளை சரி செய்தவண்ணம் இருந்தனர். அவர் சொன்னார் இதில் வண்டி ஓட்டிப் போனால் கடல் தண்ணீர் வண்டி கொட்டுவிடும் என்று. நான் பரவாயில்லை நான் முதலில் வீட்டுக்குப் போக வேண்டும் என்றேன்.பின் அவரும் சரி நிகழந்த பாதிப்புகளைப் பார்க்கும்போது இன்று பூஜை நடக்கும் என்று தோனவில்லை. மாலையில் வேண்டுமானால் வாருங்கள் மரம் தருகின்றேன் என்றார். நானும் சரி என்று என் பைக்கை வேகமாக ஓட்டத் தொடங்கினேன்.முழங்கால் தண்ணீரில் கொஞ்ச தூரத்தில் பைக் ஆப் ஆகிவிட்டது. இறங்கி அதில் தள்ளிக் கொண்டு வந்தேன். கல்லும்,வீட்டின் ஜன்னல் உடைந்த கண்ணாடித் துண்டுகளும், முட்களும் இருந்தாலும் வீட்டின் நினைவில் செருப்பில்லாத காலில் தள்ளிக் கொண்டு வந்தேன். வழி பூராவும் இடிந்த வீடுகள் சிதைந்த பாதைகள் என காட்சிகள் அலங்க்கோலமாக இருந்தது, கண்ணில் கன்னீர் முட்ட தள்ளி வந்தேன். சரியாக எங்கள் வீட்டின் பத்தடி முன்னால் அலைகள் ஓய்ந்துபோய் இருந்தது. ஆனால் அடுத்து பூகம்பமே அல்லது சுனாமி வரக்கூடும் என்ற காரணத்தினால் அங்கு அனைவரும் வீட்டை விட்டு காலி செய்துகொண்டு இருந்தனர்.
எங்கு பார்த்தாலும் கண்ணீர்ருடன் கவலை தேய்ந்த முகங்கள். பயத்தின் ரேகைகள்.

நான் என் வீட்டில் வந்து அண்ணா வந்துவிட்டார என வினவ எங்கள் அண்ணி, மூன்றாவது அண்ணா, நான் அனைவரும் நலம். ஆனால் கடலின் மிக அருகில் உள்ள அனுமின் நிலையத்தில் புகுந்து இருந்தால், அந்த அண்ணா எப்படி உள்ளார் என தெரியாமல் அண்ணி அழுதுகொண்டு இண்டர்காமில் முயற்சி செய்ய அதுவும் பழுது ஆகி இருந்தது.பின் அடுத்த ஜந்து நிமிடத்தில் எங்களுக்கு ஒருவர் வந்து தகவல் சொன்னார் எங்கள் அண்ணா கட்டுப்பாட்டு அறையில் இருந்தால் பத்திரமாக உள்ளார் எனவும் தன் செல்போனுக்கு போன் செய்தார் எனவும் சொன்னார். பின் நாங்கள் அனைவரும் ரோட்டில் வரும் பெண்கள் குழந்தைகள் அனைவருக்கும் உதவிகள் செய்யத் தொடங்கினேம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரும் எங்கள் வீட்டில் மாடியில், படியில் அமர்ந்துருந்தனர். அவர்களுக்கு பெண்களுக்கு காலில் கண்ணாடியும் முள்ளும் கிழித்தவர்களுக்கு எங்க அண்ணி ஆயின்மெண்ட் பிளஸ் கட்டுப் போட்டுவிட்டார். அதில் நனைந்த உடையுடன் வந்த இளம் பெண்களுக்கு அவரின் சுடிதாரும், புடைவையும் கொடுத்தார். பின் அவர்கள் அனைவரும் காலை எட்டு ஜந்துக்கு அலை அடித்ததால் ஒருவரும் சாப்பிடவில்லை என்று அறிந்து அனைவருக்கும் சாப்பாடு கொடுத்தார். அதில் ஒரு பெரியவர் நாங்க பசி தாங்குவேம். வீடு வாசல் இழந்து சாப்பிட மனமில்லை ஆதலால் குழந்தைகள் மற்றும் சிறு வயது உடையவர்களுக்கு கொடுங்கள் என்றார். அப்போது நகரிய போருந்துகள் வரிசையாக வந்து மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்றது. பல பஸ்களில் மக்கள் கூட்டங் கூட்டமாய் காலி செய்து போய்க் கொண்டு இருந்தனர். நானும், என் மூன்றாவது அண்ணாவும் பஸ்சிக்கு காத்துருந்தவர்களிடம் சென்று, குழந்தைகள்,சிறுவர்களுக்கு உணவு உள்ளது சாப்பிட வாருங்கள் என்று அழைக்கத் தொடங்கிகினேம். பலரும் தங்களின் குழந்தைகளுக்கு உணவும் பாலும் வாங்கிச் சென்றனர். அதில் பல பெண்கள் எங்க அண்ணிக்கு மகப்பேறு கிடைக்க வாழ்த்திச் சென்றனர். இப்படி நாங்கள் அழைக்கும் போது ஒருவர் வந்து மிகத் தயங்கி கூச்சத்துடன் குழந்தைகளுக்கு உணவு உள்ளதா எனக் கேட்டார். நானும் இருக்கு அழைத்து வாருங்கள் என கூற, அவர் வருத்ததுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவர் உள்ளனர். அவர்கள் பஸ்ஸிக்காக நிறுத்ததில் உள்ளனர். அழைத்து வர இயலாது என்றார். அப்போது நான் கற்றபாடம் ஒன்று. பதிவு நீளமாகிவிட்டபடியால் மீதி அடுத்த பதிவில். (சேகங்கள் தொடரும்).

Wednesday, October 28, 2009

அந்த பயங்கர நாள்- சுனாமி 1

சென்னையில் இருந்து பாண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் தாண்டியவுடன் வரும் புதுப்பட்டினம் கிராமத்தில் இறங்கி உள் சென்றால் வருவது கல்பாக்கம் அனுமின் நகரியம். அதில் ஒருபுறம் வீடுகளும், பார்க்குகளும் இருக்க, மறுபுறம் முழுதும் நீண்ட அழகான சுத்தமான வங்ககடல் கரை. அழகான கடற்கரை, நிறைய நெறுக்குத்தீனிகளுடன் நண்பர்களுடன் சென்று இரண்டு மணி நேரம் உரையாடி, மணலில் படுத்து வானத்து நட்சத்திரங்களை வேடிக்கைப் பார்த்து, விழும் எரிகற்களைப் பார்த்துப் பொழுதுபோக்கும் கடற்கரை, துக்கமே அல்லது மகிழ்வே நான் தனிமையில் இருக்கும் கடற்கரை, இதை நான் காதலித்ததும் உண்டு. சித்திரை முழுனிலவு நாளில் எங்க வீடு,எதிர் மலையாளி வீடு, என் அண்ணியின் நண்பியின் வீடு அனைவரும் கூட்டாஞ் சேறு கொண்டு சாப்பிட்டு மகிழும் கடற்கரை. கல்பாக்கம் நகரிய கடற்கரை, ஆனால் இது எல்லாம் ஒரு நாளில் மாறிப்போனது. அந்த நாள்?

எங்க பார்த்தாலும் செல்போன் மயம், மனிதர்கள் பைத்தியாமாகி விட்டனர் என்று செல்போனை நான் திட்டுவது உண்டு, வீட்டில் இருக்கும் பெரியேரை மதிக்காத ஒருவன், செல்லில் நண்பருக்கும், நண்பிக்கும் எஸ் எம் ஸில் குட்மார்னிங் சொல்வார்கள் என கிண்டல் செய்ததும் உண்டு. ஆனால் செல்போன் மிகவும் அவசியம் என உணர்த்திய நாள். அந்த நாள்?.

நாம் திரட்டிய செல்வம், பணம், காசு, ஏ டி எம், நகைகள், கட்டிய வீடு அனைத்தும் பெய், இயற்கை நினைத்தால் அனைத்தையும் ஒரு நொடியில் புரட்டிப் போட்டுவிடும் என உணர்த்திய நாள் அது. நம்மால் ஆவதும் ஒன்று இல்லை, நம்மால் முடியாத காரியமும் உள்ளது என உணர்த்திய நாள் அது. செல்வந்தனும், குடிசை ஏழையும் தெருவிற்கு வந்த நாள்.

கட்டிய மனைவி, பெற்ற செல்வம்(குழந்தை), உடன் பிறந்தவர், உற்றார் உறவினர் என அனைத்தும் மாயை. நொடியில் அழியும் என எனக்கு உணர்த்திய நாள் அது. என் வாழ்வில் நிகழ்ந்த,எனக்கு பாதிப்பு இல்லாது, ஆனால் என்னை மிகவும் வேதனையிலும்,துன்பத்திலும் ஆழ்த்திய நாள் அது. என் கண் முன் நடப்பது, காண்பது கனவா அல்லது நிஜமா என்பது புரியாத நாள். இறைவா நீ இருக்கின்றாயா அல்லது நீயும் செத்துவிட்டாயா எனக் கேட்ட அந்த நாள்.
என் வாழ்வில் முன் கண்டிராத பயங்கர நாள். நானும் இறக்கவேண்டியிருந்து அல்லது நான் மயிரிழையில் தப்பித்த அந்த நாள் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று காலை. ஆம் நம் நாட்டின் சுனாமி என்னும் அரக்கன் வந்த நாள். எல்லாமும் புரட்டிப் போட்ட நாள் அது. அதை ஒரு பதிவில் சொல்வது இயலாது என்பதால் தொடராக எழுதுகின்றேன். படியுங்கள்.

அந்த வருடம் எனது ஏழாவது சபரி மலை யாத்திரைக்காக மாலை போட்டுருந்தேன். எங்க இரண்டாவது அண்ணா முதல் வருடமும், என் மூன்றாவது அண்ணா இராண்டாம் வருட யாத்திரைக்காக மாலை போட்டுயிருந்தார்கள். எங்க இரண்டாம் அண்ணாவின் முதல் வருடம் என்பதால் கன்னிசாமி பூஜை அன்று மாலை நடப்பதற்க்கு ஏற்பாடுகள் செய்துகொண்டு இருந்தேம்.அதன் முந்திய நாள் பொருட்கள் வாங்குவது குறித்த விவாதம் நடந்தது. நான் மளிகை பொருட்கள் எல்லாம் சட்ராஸ் செட்டியார் கடையிலும், பூஜை பொருட்கள் எல்லாம் நகரிய ஸ்டேர்ஸ்லும் வாங்கலாம் என்றேன். பத்தி, சூடம் எல்லாம் ஸ்டேர்ஸில் ஒரு ரூபாய் அல்லது ஜம்பது காசு கம்மீயாக இருக்கும் மொத்தமாக வாங்குவதால் ஒரு இருபது, முப்பது ரூபாய் மிச்சமாகும் என்றேன், எங்க அண்ணாவும் சரி என்றார். அதன்படி நானும் எங்க மூனாவது அண்ணாவும் போய் காலை 6.30க்கு மளிகை வகைகளை செட்டியார் கடையிலும், காலை எட்டு மணிக்கு ஸ்டேர்ஸ் திறந்தவுடன் பூஜை பொருட்களை வாங்குவது என்று முடிவு செய்தேம்.அதன் பின் மாலை(24.12.04) நாங்கள் கடலுக்கு மிக அருகில் உள்ள ஒரு வீட்டில் பக்தர் ஒருவரின் பூஜையில் கலந்துகொண்டேம். பூஜை சரியாக பத்து மணிக்கு ஆரம்பித்து அன்னதானம் முடிய மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. அதன்பின் நாங்கள் அங்கு வந்த அனைவரையும் நாளை எங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துவிட்டு அங்கு கடற்கரையில் அவர்கள் குழு மீட்டிங் நடந்தது. அதில் ஒரு சாமியின் குடும்ப சூழ்னிலை காரணமாக பணம் செலுத்த இயலவில்லை எனவும் குழுவில் உள்ளவர்கள் சிறிது பணம் போட்டு அவரை அழைத்து செல்லாம் என குருசாமி கூறியவுடன் எங்க அண்ணா அவருக்காக ஜநூறு ரூபாய் பணம் கொடுத்தார். அவரும் நாளை பூஜைக்கு காலையிலேயே வந்து உதவி செய்வதாக கூறினார். குருசாமியும் இன்னும் இருவரை காலையில் எங்கள் வீட்டுக்குப் போய் உதவி செய்யுமாறு பணித்தார். அவர்களும் வர இசைந்தனர். நாங்கள் நாளை முழுதும் எங்கள் வீட்டில் சாப்பிடுங்கள் எனவும் காலையில் வந்துவிடுங்கள் எனவும் கூறிவிட்டு கடற்கரையில் இருந்து வந்தேம். அப்போது கூட இன்னம் எட்டு மணி நேரத்தில் அந்த கடல்கரை மரண சாம்ராஜ்ஜியம் ஆகும் எனத் தெரியாது.

அந்த மறுனாளும் வந்தது. பதிவின் நீளம் கருதி முடித்து அடுத்த பதிவில் எழுதுகின்றேன். நன்றி.

Tuesday, October 27, 2009

புளி அவல் உப்புமா

எல்லாரும் சீக்கிரமாக சமைக்க அருமையாக விரைவில் செய்ய ஒரு டிபன் வகை உப்புமா. இதுல அவல் உப்புமா எல்லாரும் பண்ணுவது ஒன்றுதான். ஆனாலும் அதில் மிகவும் சுவையான புளி அவல் உப்புமா தான் நம்ம பதிவு. இதை உப்புமா என்று சொல்லக் கூடாது ஏன் என்றால் இதுவும் புளிசாதம் மாதிரிதான். இது கோயிகளில் கூட பிரசாதமாக தரும் ஒன்று. ஏகதசி விரதத்திற்கு ஏற்றது. சரி செய் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
1. கொட்டி அவல் 1/2 கிலோ,
2.புளி சிறிதளவு,
3.பச்சை மிளகாய் 4
4. இஞ்சி சிறிது,
5.நிலக்கடலை 50கிராம்.
6.முந்திரி 4 (தேவைப்பட்டால்),
7.எண்ணெய்,கடுகு,பெருங்காயத்தூள் தாளிக்க,
8.தேங்காய் துருவல் நாலு ஸ்பூன்.

முதலில் ஓர் உருண்டைப் புளியை நல்லா கொதிக்கும் தண்ணிரில் விட்டு ஊறவைத்து கரைத்து அந்த கரசலை கொஞ்சம் பச்சை வாசம் போக, கொஞ்சம் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதிக்கும் போது, கொட்டி அவலை கல் இல்லாமல் எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு இரண்டாக்கவும்( ஒரு சுற்றுப் போதும்). அவல் இரண்டாக உடைபட்டால் போதும். தூள் ஆகக் கூடாது. ஒரு பாத்திரத்தில் இந்த உடைத்த அவலில் சூடான புளித்தண்ணிரை கொஞ்சமாக விட்டு கிளறி ஊறவைக்கவும். அவலும் தண்ணீரும் சரியாக இருக்கவேண்டும். அதிக புளித்தண்ணீர் கூடாது. தெளித்தாற் போல அதே சமயம் அவல் நனையும் வண்ணம் இருக்கவேண்டும். இதை ஒரு 5 நிமிடம் ஊற வைக்கவேண்டும்.

நிலக்கடலையை ஒன்றுக்கு நாலு ஆகா (கடலைப் பருப்பு) அளவில் மிக்ஸில் இட்டு பொடித்துக் கொள்ளவும், முந்திரியையும் அதே அளவில் பொடிக்கவும்.இஞ்சியை மிக சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

பின் அடுப்பில் ஒரு வாணலியை இட்டு இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி, அரைஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அதில் கடலைப் பருப்பு ஒரு ஸ்பூன், நிலக்கடலை, முந்திரி, பச்சை மிளகாய் கருவேப்பிலை,இஞ்சி போட்டுப் பின் உறிய அவலையும் போட்டு கலக்கவும். அவலில் உள்ள ஈரப்பதம் போகும் வரை சூடு செய்யவும்(மிதமான சூட்டில்). அவல் வெந்ததும் அடுப்பை அனைத்து அதில் தேங்காய் துருவலை போட்டு களறி அடுப்பின் மீது மூடி வைக்கவும். அடுத்த ஜந்து நிமிடத்தில் புளி அவல் ரெடீ.

கவனிக்க: புளி அவல் உதிரியாக இருக்க வேண்டும். ஆதலால் புளித்தண்ணீர் கொஞ்சமாக தெளித்தாற் போல விடவேண்டும். லேசு அவல் ஆக இருப்பின் புளித்தண்ணிரில் ஊற வைக்காமல் தாளித்து முடித்ததும் அதில் அவலைப் போட்டு அதில் புளித்தண்ணீர் தெளித்துக் கிளரினால் போதும்.அவல் புளித்தண்ணீர் பிளஸ் சூட்டில் வெந்துவிடும்.
இதில் புளிக்கு பதிலாக எழுமிச்சை கலர்ந்த நீரைப் பயன்படுத்தி எழுமிச்சை அவல் கூட பண்ணலாம். நன்றி.

Friday, October 23, 2009

நாங்களும் கிரிகெட் அடுவமில்லை

என்னங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா, இன்னைக்கு நம்ப நர்சிம் ஒரு கிரிக்கெட் மறுபதிவு போட்டு நம்மள கொஞ்சம் டென்சன் ஆக்கிட்டார். எனக்குள்ள இருக்கற பூனை முழிச்சுக்கிச்சு. அதுனால இன்னைக்கி நான் கில்லி சீய் கிரிக்கெட் விளையாடின சுவாரஸ்யமான விசயங்கள் தான் இந்த பதிவு. சும்மா சொல்லக்கூடாதுங்க நான் கிரிக்கெட் ரொம்ப நல்லா ஆடுவன். நான் ஒரு ஆல் ரவுண்டர் ஆக்கும். எங்க டீமின் ஒபெனிங் மட்டையாளர் மற்றும் பார்ட் டைம் பவுலர் நான். பரிசு கிடைக்குதே இல்லையே நமக்கு முழங்கால் முழங்கை, கால்ல கைல அடி நல்லா வாங்குவேன். பேட்டிங்க் பார்த்திங்கனா எங்க டீமில் நாந்தான் ஒபினிங் பாட்ஸ்மென். அப்பிடினு எனக்கு ரொம்ப பெருமை. அப்புறம்தான் தெரிஞ்சுது மக்கா என்னை இறக்கி பாஸ்ட் பவுலிங் எல்லாம் முடிஞ்சவுடன அவனுங்க வந்து அடிப்பாய்ங்க. நம்மல பலிகாடா ஆக்குனங்கா. பாட்டிங் நல்லா பண்ணுவன். நான் ஒபனிங் இறங்கப் போகும்போது, கேப்டன் சிவக்குமாரும், கார்த்தியும் வந்து என் கிட்ட கெஞ்சுவாங்க, சுதா தயவு செய்ஞ்சு கிராஸ் பேட் ஆடாத. ஸ்ரெய்ட் பேட் ஆடுன்னு. ஆமாங்க நான் ஸ்ரெய்ட் பேட் ஆடுன்னா டிராவிட் மாதிரி, என் விக்கெட்டை எவனாலும் எடுக்க முடியாது. அவ்வளவு மட்டை(டெக்) வைப்பன். என்னேட ஸ்ரெய்ட் பேட் டாப் ஸ்கேர் என்னன்னு சொன்னா உங்களுக்கு புரியும் 13 ஒவர் விளையாடி எட்டு ரன் எடுத்தேன். அதுவே கிராஸ் பேட் ஆடுன்னா நான் ஸ்ரீகாந்து மாதிரி பால் எல்லாம் பாக்கமாட்டேன் சும்மா காட்டுஅடிதான். கவர் டிரைவ், ஸ்கொயர் கட். ஒவெர் த ஹெட், ஹூக் சாட்னு சும்மா அடி மாத்துவன். மார்புல, கீல கால்ல நமக்கு விழுகிற அடியும் கணக்கு இல்லைங்க. கிராஸ் பேட் டாப் ஸ்கேர் 142 ரன் 79 பால்ல எடுத்துருக்கன். அதிக பட்சமா பசங்க எங்கிட்ட முதல் 10 ஒவெர் நிக்கனும், ஒரு 30 ரன் எடுத்தா போதும்னு சொல்லுவாங்க. என்னேட டார்கெட் 25 ரன் வரைக்கும் பொறுமையா ஆடுவேன், அதுக்கு அப்புறம் கிராஸ் பேட் இறங்கி ஒரு 10 15 ரன் எடுத்து அவுட் ஆகிடுவன். இதுதாங்க என் பேட்டிங்க் ஸ்டைல். எங்க ஊருல எங்க எம் ல் ஏ பையன் முருகேசன் ஒருத்தன் பயங்கர வேகப்பந்து வீச்சாளர். அவன் பந்துன்னா எல்லாரும் தொடை நடுங்குவாங்க, மக்கா என்னை ஒபனிங் சொல்லி இறக்கி விட்டாங்க, எனக்கும் நடுக்கம்தான் சும்மா ஒரு துனிச்சல்ல நின்னேன். ஒவெர் போடுறதுக்கு முன்னாடி எங்கிட்ட வந்து சுதாகரு நீயா பேசாம ஓடிப்போய்டுன்னான். முதல் ஒவெர் முதல் பால் போட்டான். பந்து சாட் பிச்சுல பவுன்சர்,எனக்கு தலைக்கு குறி வைத்து, அப்ப ஹெல்மட் எல்லாம் கிடையாது. நானும் கண்ணை மூடிக் கொண்டு ஒரு ஹீக் சாட் சுத்தினேன், என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியாது. எங்க டீம் பசங்க எல்லாரும் கைதட்டி ஒரே சத்தம் என்னனு பார்த்த பந்து பேட்ல பட்டு கீப்பர் தலைக்கு மேல பறந்து சிக்ஸருங்க. இதுதான் நான் அடித்த முதல் சிக்ஸர்.
அவன் வந்து என்னை முறைத்துப் பார்த்து போய் மறுபடியும் மிடில் அண்ட் லெக்ல ஒரு பாஸ்ட் பால். நான் இம்முறையும் பல்லை கடித்துக்கொண்டு ஒரு லெக் டிரைவ் செய்ய பந்து பவுண்ட்ரிக்கு பறந்து விட்டது. அவன் கடுப்பாகி விட்டான். அடுத்த பால் ஸ்ரெட் யார்க்கர், நான் லாங் மிட் ஆப்பில் டிரைவ் செய்ய பால் மிஸ் ஆகி என் மிடில் ஸ்டெம்பை காலி செய்தது. முருகேசன் வந்து பரவாயில்லை சுதா ஒல்லிப்பிச்சான் மாதிரி இருந்துகொண்டு என் முதல் பால் சிக்ஸ் அண்ட் ஃபேர் அடித்தது நீதான் என்றான் சிரித்துக் கொண்டு. இதுதாங்க நம்ம பேட்டிங் ஸ்டைல்.

பவுலிங் பார்த்திங்கன நான் மிதவேகம் மற்றும் ஸ்பின் ரெண்டும் போடுவங்க, நான் போடுற பால் ரொம்ப வேகம் இருக்காது, பாக்க சும்மா அல்வா கணக்கா சுலேவா வரும், ஆனா டுவிஸ்ட் அதிகமா இருக்கும். பால் லட்டு மாதிரி இருக்குன்னு பேட்டா தூக்கினா போதும் ஒன்னு ஸ்டெம்ப் இருக்காது இல்லை காட்ச் ஆகிடும். நமக்கு ரைட் ஆர்ம் பவிலிங் வித் ஸ்விங் தான் முக்கியம். ஆப் கட்டர், லெக் கட்டர் பால் தான் என் போவரைட். என் பால் நான் உயரம் கம்மியா இருப்பதால் முழங்காலுக்கு மேல எழும்பாது. ஆதாலால் என் பாலை சாட் செய்வது ரொம்ப கடினம். நான் பவுலிங் போடும் போது பேட்ஸ்மென்னை நல்லா ஏமாத்துவேன். முதல் பால் லொ ஸ்ரெய்ட் டெலிவரியா இருக்கும். இரண்டாவது பால் அவுட் சைடில் ஒரு ஷாட் பால் போடுவேன், அவனும் சும்மா ஒரு பேர் அல்லது இரண்டு ரன் எடுப்பான். மூன்றாது பாலும் நேராக போடுவேன். நாலாது பால் தான் என் பேவரைட் பால். இரண்டாது பால் போலவே அவுட் ஆப் ஸ்டெம்ப் பால் வித் ரிவர்ஸ் ஸ்விங் இன் கட்டர் ஆக இருக்கும். என் இரண்டாவது பால் நினைப்பில் அவனும் சுற்றுவான் ஆனா பால் இன் கட் ஆகி ஆப் அல்லது மிட்டில் ஸ்டெம்ப் தூக்கிடும். அல்லது பேட்ல பட்டு பால் நேராக மேலே எழும்பி காட்ச் ஆகும். ஸ்பின் பவுலிங் பார்த்திங்கனா பால் சும்மா லட்டு கணக்கா மெதுவா வரும் ஆனா ஸ்விங்க் ரொம்பா அதிகமா இருக்கும். கொஞ்சம் அஜாக்கிரதையா அடினா பால் சுத்திக்கிட்டு காட்ச் போகும். என் ஒவெர்னா உசார் ஆகிடுவாங்க டேய் பால் சுத்தும்டா பார்த்து ஆடுன்னு சொல்லறது எனக்கு கேக்கும். வாலிபால் கூட நான் சர்வீஸ் ஸ்விங் பண்ணிதான் போடுவேன். செர்வீஸ் எடுப்பது ரொம்ப சிரமம். கையின் நடுவில்(பேர் ஆர்ம்) தான் சர்விஸ் எடுக்கனும் இல்லைனா பால் அவுட்லைனில் போய்விடும்.
இதுதாங்க நம்ம பவுலிங்க ஸ்டைலு.

நான் சென்னைக்கு வந்தவுடன் எங்க அண்ணன் விளையாடும் டீமில் நானும் பந்து பொறுக்கி போட போவேன். அப்ப ஒரு மேட்சில் ஆள் இல்லைனு சொல்லி என்னைக் கூட்டிப் போனாங்க. நானும் ஆசையாக போனேன். ஆனா கிரவுண்ட்ல போனதும், வரமுடியாதுன்னு சொன்ன ஆளுக எல்லாம் வந்ததால என்னை சும்மா உக்கார வைச்சுட்டாங்க. நான் உக்காந்து வேடிக்கை பார்ப்பது இல்லாமல் கீப்பருக்கு பின்னால பந்து பொறுக்கி போட்டு இருந்தேன். அந்த 30 ஒவர் மாட்சில் 15 ஒவெர் முடிந்தவுடன், எங்க டீம் 85க்கு 6 விக்கெட் போய் இருந்தது. அப்ப என்னை போய் லெக் அம்பரிங் பண்ண சொன்னார்கள். நானும் விளையாடத கடுப்பில் போய் நின்னேன். அப்ப சீனு அண்ணாதான் 35 ரன் எடுத்து டீமின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிக் கொண்டுடிருந்தார். அப்ப திடிர்னு விக்கெட் கீப்பர் ஒரு பாலை காட்ச் செய்து ஸ்டேம்பிங்கும் பண்ணி அவர் யாதார்த்தமாக அவுட் கேக்க நான் பதார்த்தமாக அவுட் கொடுத்தேன். சீனு அண்ணா என்னை முறைத்துக் கொண்டு போய்விட்டார். மாட்ச் முடிவில் நாங்க தேத்துப் போய்ட்டேம். சீனு அண்ணா என்னிடம் ஏண்டா அவுட் கொடுத்தாய் எனக் கேக்க நான் ஸ்டெம்பிங்கு கொடுத்தேன் எனக் கூற அவர் தலையில் அடித்துக் கொண்டு "அடப்பாவி அவன் அவுட் கேட்டது காட் பிகேண்ட்டுக்குடா" அப்பிடினு சொன்னார். எல்லாரும் என்மேல கடுப்பாகி டீம் தேத்ததுக்கு காரணத்தை என்மேல போட்டுட்டாங்க. நானும் ஒருத்தருக்குத்தான் அவுட் கொடுத்தேன் மத்த எல்லாம் ஏன் விளையாடுல்லைனு ஆர்கியு பண்ண, அதுக்குள்ள எதிர் அணி கேப்டன் வந்து உங்க எல்லாருக்கும் சாப்பாடு செய்து வச்சுருக்கேம். சாப்பிட்டுப் போங்க என்றான். எங்க எல்லாருக்கும் ஆச்சரியம்,ஏன்னா அவங்க எங்கிட்ட முதல்ல சொல்லவில்லை. எங்க பசங்க வெளியில் சாப்பிட தயங்கினாங்க.அங்க பக்கத்துல்ல வீடு அதனால அவங்க அம்மா வந்து தம்பி உங்க டீமில ஜயமாரு பசங்க இருக்கிறதா சொன்னாங்க அதுனால நாங்களும், பூண்டு மசாலா இல்லாம சுத்தமா குளிச்சு சமையல் பண்ணியிருக்கேம், மறுக்காம சாப்பிடுங்க என்றார். எங்க ஆளுங்க அந்த அம்மாவின் அன்புக்கு கட்டுப்பட்டு நாங்க அனைவரும் சாப்பிடப் போனேம். அங்க சாப்பாடு, கல்யான சாப்பாட்டை தேக்கடிக்கும் விதமாக பிரமாதமாக செய்துருந்தார்கள். எங்க பசங்க கூச்சத்தை விட்டு வெட்டினார்கள். அப்ப அந்த அம்மாவிடம் சாப்பாடு அருமையாக இருக்கு நன்றி எனக் கூற அவர்களும் உங்க டீமில் ஜயரு பசங்க வராங்கனு சொன்னதும், நான் பக்கதுத்து வீட்டு ஜயரம்மாவை வைத்து சமையல் பண்ணிணேன் என்றார். எங்க டீமில் வந்து சாப்பிடும் இந்த 13 பேரும் ஜயருங்கதான். இன்னைக்கி அம்மாவாசை, நீங்க 13 பிராமினர்களுக்கு சாப்பாடு போட்டுருக்கீங்க, உங்களுக்கு ரொம்ப புண்ணியம் கிடைக்கும் என்றார். அதைக் கேட்டது அந்த வீட்டு அய்யா இன்னைக்கு அமாவாசையா, நீங்க எல்லாரும் ஜயருவூட்டு புள்ளையானு ஆச்சரியப்பட்டு சட்டையை மாட்டிக்கிட்டு வெளிய போனார். நாங்களும் சாப்பிட்டு முடிக்க அவரும் கையில வெத்தலை வாங்கி வந்து எங்க எல்லாருக்கும் 11 ரூபாய் தட்சனை, ஒரு தேங்காய், பழம் எனக் கொடுத்தார். எங்க டீமில் எல்லாரும் கூச்சப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அன்பிற்கு கட்டுப்பட்டு எல்லாரும் வாங்கிக் கொண்டேம். எங்க டீம் பசங்க நம்மளும் ஒரு நாள் கூப்பிட்டு எதாது செய்யனும்டா என்று அடுத்த மாதம் மாட்ச் ஆடி ஜயித்து அவர்களுக்கு எங்க சித்தி வீட்டில் விருந்து கொடுத்தேம். நாங்க தச்சனை கொடுக்கவில்லை.

டிஸ்கி:
1.இதுக்கு அப்புறம் சீனு அண்ணா என்னை கிண்டல் பண்ணுவது இன்னமும் நிற்கவில்லை. நான் எதாது பேசினால் டேய் உன்னைப் பத்தி தெரியுமுடா நீ காட் பிகேண்ட்டு ஸ்டெம்பிங் கொடுத்தவந்தன் தான என்பார்.
2. இந்த டீமில் விளையாடிய மூவர் இப்ப டாக்டர்கள், இருவர் அமெரிக்காவில் பொட்டியும்,இருவர் பொங்களூரில் பொட்டியும் தட்டுகின்றார்கள். என் அண்ணா அனுமின் நிலைய விஞ்ஞானி. ஒருவர் எல்லைப் படையில் எஞ்சினியர். இருவர் மத்திய அரசு அலுவலர். ஒருவர் இஸ்ரேவில் எஞ்சினியராக உள்ளனர்.
3.இந்த பதிவுக்கு என்னை வால்ஸ் கண்டிப்பா திட்டுவார்.
4. நமக்கு கேரளா, கர்னாடகா கொடுக்காத தண்ணி எல்லாம் என் மூக்கில் ஒழுகி ப்புளு வந்துவிட்டதால் இரண்டு நாளாக பதிவு எழதவில்லை. இப்ப பராவயில்லை, டிரை காப் மட்டும் உள்ளது.
நன்றி.