Tuesday, November 23, 2010

கார்த்திகை தீபங்களின் திருனாள்

ஸ்வாமியே ஸரணம் அய்யப்பா, இந்த முறையும் மாலை போட்டாகி விட்டது, அந்த அய்யனை தரிசிக்க ம்லை யாத்திரை போகப் போகின்றேன்.

சென்ற முறை அய்யப்பன் தொடரில் கொஞ்சம் கணக்கு தப்பா நான் பதினேரம் வருடம் என்று சொல்லிவிட்டேன், பின்னர் உடன் வரும் நண்பர்கள்தான் திருத்தினார்கள், சென்ற வருடம் சென்றது பதினாலாம் வருடம், இந்த முறை பதினைந்தாம் வருட யாத்திரைக்காக மாலை இட்டாகி விட்டது. பூஜை, கோவில் மற்றும் அலுவலகம் என நல்லா பொழுது போகின்றது. இந்த வருடம் கார்த்திகை தீப பண்டிகைக்கு எங்கள் வீட்டில் இருந்தேன், அவல் பொரி உருண்டை, கடலை உருண்டை, அப்பம், அதிரசம், பொரி உருண்டை என்று பல திண்பண்டங்கள் செய்து இருந்தார்கள். எங்கள் வீட்டு கார்த்திகை தீபங்களை உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்,
































எங்கள் வீட்டு ஹாலில் தீபங்களை வைத்து ஏற்றி பின்னர் பூஜை செய்து விளக்குகளை வாசல் மற்றும் பால்கனியில் வைப்போம். அரசாங்க குவாட்டர்ஸ் ஆதலால் பால்கனியில் இடம் கொஞ்சம் சின்னதாக இருக்கும்.விளக்குகளை வைத்த பின்னர் தீபாவளியின் போது கார்த்திகைக்கு என்று எடுத்து வைத்த பட்டாசுகள் மற்றும் புஸ்வாணங்களை விடுவேம். பின்னர் செய்த நொறுக்கு தீனிகளை பக்கத்து வீடுகளில் உள்ள அனைவருக்கும் கொடுத்து, நாங்களும் உண்போம்.

நன்றி.

12 comments:

  1. படங்கள் அனைத்தும் சூபப்ர்ப்...

    ReplyDelete
  2. எல்லாம் நல்லபடியா அய்யப்பன் துணையால நடக்கும் அண்ணா.

    ReplyDelete
  3. நல்ல படங்கள். அய்யப்பன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டவும்.

    ReplyDelete
  4. படங்கள் அனைத்தும் சூப்பர்

    ReplyDelete
  5. படங்கள் அனைத்தும் சூப்பர்

    ReplyDelete
  6. பத்திரமா போயிட்டுவாங்க..

    ReplyDelete
  7. படங்கள் அழகு! பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சுவாமியே சரணம் ஐயப்பா! ஐயப்பனிடம் எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளுங்கள்! புகைப்படங்கள் கலக்கல்! வண்ணமயமான இடுகை!

    ReplyDelete
  9. என்ன... அண்ணாத்த...!
    போன பதிவுல நாம்போட்ட பின்னூட்டத்த "ஸ்வாஹா" பண்ணிட்டீங்களே ...! என்னா பிரதர்...!

    சரி விடுங்க...!

    போட்டோஸ் சூப்பரு...!

    ReplyDelete
  10. நான் பிறந்த நாள் பெரிய கார்த்திகை :-).

    //இந்த முறை பதினைந்தாம் வருட யாத்திரைக்காக மாலை இட்டாகி விட்டது//

    இன்னும் மூன்று முறை இருந்தாலும் ஐந்து முறை சென்ற என்னை விட அனுபவம் உள்ளதால் நீங்க இனிமே குருசாமி.

    எந்த குறையும் இல்லாமல் அந்த பதினெட்டாம் படி அரசன் உங்களை காக்க வேண்டுகிறேன், ஹரி ஹர சுதனே சரணம் ஐயப்பா.

    ReplyDelete
  11. படங்கள் சூப்பர்.அருமையாக கொண்டாடீருக்கீங்க.

    ReplyDelete
  12. அவல் பொரி உருண்டை, கடலை உருண்டை, அப்பம், அதிரசம், பொரி உருண்டை ம்ம்ம் எல்லாமே ரொம்ப பிடித்த ஐயிட்டம் தான்

    படஙக்ள் அழகாக இருக்கு

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.