Tuesday, September 29, 2009

திருப்பதி பெருமானுக்கு வேண்டுனா, மறக்காம பண்ணீடுங்க....

எங்க அம்மாவிற்கு திருப்பதி பெருமாளிடத்தில் மிகவும் நம்பிக்கை அதிகம், திருமலையானிடம் அளவு கடந்த பக்தி உடையவர். எனது தந்தை பெயரும் திருமலைசாமிதான். எப்போதும் ஸ்ரீனிவாசா, ஸ்ரீனிவாச, என்று அவரின் திரு நாமத்தை உச்சரிப்பவர். சனிக்கிழமை தோறும் பகல் முழுதும் உபவாசம் இருந்து இரவில் கடலையும், பைந்த்தம் பருப்பு பாயசம் மட்டும் அருந்துவார்.
எங்க அம்மா கூட தெய்வ சக்தி வாய்ந்தவர், அது பற்றி பின்னர் பதிவு இடுகின்றேன். தற்போது அவர்கள் வயது 86.
எங்க அம்மாவிற்கு திருமணம் ஆகும் போது வயது எட்டு, அப்பாவின் வயது பதிமூன்று. எண்பத்தியோன்பது வயது வரை மிக ஆரோக்கியமாக வாழ்ந்த என் தந்தை சென்ற வருடம்தான் காலமானார். ஏறக்குறைய எழுபத்தி ஆறு வருட அவர்களின் இல்லற வாழ்க்கையில் என் தந்தையும், தாயும் எனக்கு தெரிந்து பத்து நாள்கள் கூட ஒருவரை ஒருவர் பிரிந்து இருந்ததது இல்லை. நான் இவர்களின் எட்டாவது மகன்(கடைக்குட்டி).பாசம்,நேசம்,பரிவு,அன்பான கண்டிப்பு என எங்க அனைவரையும் வளர்த்தார்கள். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு அதிசயமான சம்பவம்.ஒருமுறை எங்க அப்பாவிற்கு மிகவும் உடல் நலம் இல்லாமல் போய்விட்டது, பொடி போடும் பழக்கம் இருந்ததால் அவர் நுரையிரல் முழுவதும் சளி கட்டி மூச்சுவிட கஸ்டப்பட்டார். மருத்துமனையில் சேர்க்கப்பட்டு நிறைய கவத்தை குழாய் மூலம் எடுத்து சரி செய்தனர். பின்னர் எங்க அம்மாவின் கடுமையான கட்டுப்பாடுகளால் அந்த பழக்கத்தை விட்டுவிட்டார். சரி விசயத்திற்கு வருவோம்.

எனது தந்தை அறுபது வயதில் மேலே சொன்ன மாதிரி மருத்துமனையில் இருந்த போது எங்க அம்மா ஒரு கெட்ட கனவு கண்டுள்ளார், அதை பார்த்தவுடன் அவர்கள் என் தந்தை நல்லபடியாக குணமடைந்து வந்துவிட்டால் தனது திருமாங்கல்யத்தை திருப்பதி உண்டியலில் போடுவதாக வேண்டிக்கொண்டார். சில நாள்களில் எனது தந்தை பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அப்போது எங்களால் உடனடியாக திருப்பதி செல்ல இயலவில்லை. எங்க அம்மாவும் தான் வேண்டியதை பத்தி யாரிடமும் சொல்லவில்லை. ஏறக்குறைய பத்து வருடங்கள் கழித்து நான் என் அண்ணாக்கள், அம்மா,அப்பா அனைவரும் குடும்பத்துடன் திருப்பதி சென்றேம். அப்போது நாங்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்து பின் எங்களின் தங்கும் இடம் வந்து சேர்ந்தொம். அப்போது என் தாயார் சத்தமாக தனது திருமாங்கல்யத்தை காணவில்லை எனக்கூறி அழுதார். அப்போதுதான் கவனித்தொம் என் தாயார் கழுத்தில் தாலி சரடு மட்டும் கழுத்தில் பிரிந்து இருக்க அதில் உள்ள திருமாங்கல்யம், குண்டுமணீ மற்றும் லக்ஸ்மி பாதம் மட்டும் கழன்று விலுந்து இருந்தது. அவரின் கழுத்தில் இருந்த ரெண்டு பவுன் சங்கிலி மற்றும் பவழமாலை ஆகியன அப்படியே இருந்தது. நாங்கள் எல்லாரும் திகைத்து இருக்க, அழும் எனது அம்மாவிற்கு அப்போதுதான் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்து எங்கள் அனைவரிடமும் சொன்னார். அப்போது அங்கு ஒரு மஞ்சள் கிழங்கு வைத்து மீண்டும் அந்த சரடை கட்டினார் என் தந்தை. பின் அனைவரும் ஊர் திரும்பிய உடன் அதேபோல இரண்டு திருமாங்கல்யம் செய்து ஒன்றை என் தாயார் கழுத்தில் கட்டி பின் இன்னோரு தாலியும் கட்டி, முதல் தாலியை கழட்டி மஞ்சள் துணீயில் முடிந்துவைத்து பின் திருப்பதி சென்று உண்டியலில் இட்டு தனது பிராத்தனையை நிறைவேத்தினார்.
மற்றும் ஒரு விளையாட்டான சம்பவம்,

எனது பெரிய அண்ணா திருமணம் முடிந்த சமயம் ஒரு நாள் மாலை நான் மட்டைபந்து விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தென். எனது வீடு முழுவதும் ஒரே அல்லொகோலமாக காட்சியளித்தது. எல்லாரும் பரபரப்புடன் எதையோ தேடிக்கொண்டு இருந்தனர். நான் என்ன என்று கேக்க எனது பெரிய அண்ணியின் நாலு சவரன் சங்கிலியை காணவில்லை என்று கூறினர். நான் நிதானமாக அவர்களிடம் கடைசியாக எங்கு வைத்தீர்கள் என்று கேக்க அவர்கள் படுக்க போகுமுன் தனது மெத்தையில் தலையணைக்கடியில் வைத்ததாகவும் எழுந்து குளித்துவிட்டு வந்தால் காணவில்லை என கூறினார்கள். நான் அவர்களை எல்லாரையும் வெளியில் போகச்சொல்லிவிட்டு நிதானமாக அவர்கள் படுக்கை அறை முலுதும் தேடத்துடங்கினேன். எங்க அம்மா என் பின்னல் வந்து "எங்க போயிருக்கும் யாரும் வரைலையே" எனக் கூறி "ஸ்ரீனிவாச,ஸ்ரீனிவாச" என கூறத்தொடங்கினார். நான் உடனே சத்தமாக மொதல கொஞ்சம் வெளில போறிங்களா, இப்ப ஸ்ரீனிவாசன் வந்து என்ன மெட்டல் டிடிக்டர் வச்சு தேடப்போறாறா?, எனக்கூறியதும் என் வீட்டில் எல்லாரும் கவலையை மறந்து சிரித்தார்கள். பின் நான் அவர்கள் படுக்கையை நிதானமாக ஆராய்ந்த போது சங்கிலி மெத்தைக்கும் மெத்தை உறைக்கும் இடையில் உள்ளே தள்ளி இருப்பதை மெத்தை முழுவதும் தடவிப்பார்த்து கண்டுபிடித்தேன்(நம்ம தான் துப்பறியும் சாம்பு ஆச்சே). பின் அனைவரும் டென்சன் குறைந்து, ஏண்டா அதுபோல் அம்மாவிடம் சொன்னாய் என கேக்க, அமாண்ணா கொஞ்சம் விட்டா அம்மா அந்த சங்கிலி கிடைச்சா அதையும் உண்டியல போடனும் வேண்டிக்குவாங்க என்று விளையாட்டா கூற, என் அம்மா சிரித்துக்கொண்டு உனக்கு எப்பபாரு என்னை எதாது சொல்வது வேலையாப்போச்சு என்று கடிந்துகொண்டார். இது பலர் இருக்கும் கூட்டுக்குடும்பங்களின் சிலிர்ப்பான அனுபவம்.

5 comments:

  1. நானும் இப்படித்தான் காணாமப்போன நகையோ இல்லை எதுவானாலுமோ கிடைச்சால் சாமிக்குப் போடறதாச் சொல்லிருவேன்.

    ஒருசமயம் கால் கொலுசு ஒன்னு காணொம். இன்னொன்னு மட்டும் வச்சுக்கிட்டு என்ன செய்வது? சாமிக்குப் போடறேன்னு சொன்ன ரெண்டாம் நாள் நம்ம வீட்டுத் தோட்டப் பாதையில் கிடைச்சுருச்சு!

    ஒரு சமயம் மில்க் குக்கரை அடுப்பில் வச்சுட்டு ஆன் செஞ்சுட்டு மறந்துபோய் பக்கத்தூருக்குப் போயிட்டேன். திரும்பி வரும்போதுதான் நினைவுக்கு வருது அடுப்பை அணைக்காம வந்துட்டோமோன்னு.

    பாவம் கோபால்....காரை அடிச்சுப் பத்திக்கிட்டு வீட்டுக்கு வந்தோம். வீடே எரிஞ்சுகிடக்குமுன்னு மனசு அடிச்சுக்கிச்சு. பெருமாளே...ஒன்னும் ஆகி இருக்கக்கூடாது. பால்குக்கர் விலையை உண்டியலில் போடறேன்னு வேண்டிக்கிட்டேன்(பால் குக்கரையே உண்டியலில் போட்டா நல்லாவா இருக்கும்?)

    ஆச்சரியமான வகையில் வீடு அப்படியே பத்திரமா இருக்கு. பால் குக்கர் பால் ஒன்னும் ஆகலை. ஸ்டவ் பர்னர் ஆன்லே இருக்கு. ஆனால் நோ கேஸ் வாசனை.

    இப்படி நாலைஞ்சு சம்பவம் நம்ம'வரலாற்றில்' இருக்குங்க.

    ReplyDelete
  2. அண்ணே நானும் பித்தன்தான் ஆனால் நான் கொஞ்சம் நேரம் முன்பே இங்கே வந்துவிட்டேன். குறைந்த பட்சம் உங்கள் பின்னூட்ட பெயரையாவது மாற்றினால் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு தனித்துவம் கிடைக்கும். மாற்றுவதில் சிரமம் இருப்பின் தெரிவிக்கவும் நான் மாற்றிக் கொள்கிறேன்.

    http://niyazpaarvai.blogspot.com/

    ReplyDelete
  3. உங்கள் அப்பா அம்மாவின் வாழ்வை நினைக்கவே மனதிற்கு நெகிழ்வாய் இருகிறது.இப்போ இப்படி ஒரு தம்பதியினரைக் காண்பது என்பது அரிதே.

    ReplyDelete
  4. உன்மைதான் சகோதரி, அவர்கள் காலத்தால் பிணைக்கப்பட்டு இப்போது மரணத்தால் பிரிக்கப்பட்டுள்ளார்கள். ஜந்து மகன் நல்ல வசதியாய் வைத்து தாங்க தயாரக இருந்தாலும் இன்னும் என் தந்தை வாழ்ந்த வீட்டில்தான் இருப்போன் என பிடிவாதமாக அந்த வீட்டில் தனியாக உள்ளார். எனது ஒரு அண்ணன் அவருடன் இருக்க தனது வேலையை விட்டு அவருடன் உள்ளார்.

    ReplyDelete
  5. ஒரு வேளை நிறைவேற்றவில்லையென்றால் தண்டனை இங்கயேவா இல்லை கோர்டில் நிறுத்தி வைத்து விசாரணை நடத்துவார்களா?

    கொலை குற்றவாளி ரீலீசாக வேண்டும் என்று நான் வேண்டி ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என்கிறேன்!
    அவர் ரீலீஸ் ஆவாரா? அல்லது எம்புட்டு துட்டு கொடுத்தால் ரீலீஸ் செய்வார்!

    மூளைக்கு வேலை தரணும்னு உங்களுக்கு யாருமே சொல்லி தரலையா!?

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.