பதிவு நண்பர்களுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள், ரம்ஜான்னு சொன்னா இஸ்ஸாலாமிய நண்பர்களுக்கு முதலில் ஞாபகம் வர்றது, காலைத்தொழுகையும், நேன்பும் தான். ஆனா எனக்கு எல்லாம் ஞாபகத்துக்கு வர்றது ரம்ஜான் கஞ்சிதாங்க(அட நான் ஓட்டுக்காக குடிக்கறவன் இல்லப்பா). என்னுடய ரம்ஜான் பண்டிகை அனுவபங்களை உங்ககூட பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். எங்கள் ஊரு தாராபுரத்தில் உள்ள மசூதி தெருவில் உள்ளது ஜாமியா மசூதி.இதை ஸோளக்கடை வீதி மசூதி என்றும் கூறுவார்கள். இங்கும் தினமும் மாலைத்தொழுகை முடிந்தவுடன் மந்திரிப்பார்கள்,சில சமயம் மந்திரித்த துணியால் முகத்தில் விசுறுவார்கள்(பச்சை துணி) . அவர்கள் குருமார்கள் மயிலிறகு கொண்டு ஓதிக்கொண்டு வருடிவிடுவார்கள், அதனால் உடல் குணமடையும் என்பது நம்பிக்கை. எங்க வீட்டுல எனக்கு அல்லது எங்க அண்ணங்களுக்கு யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் உடனே சாமி கும்புட்டு குங்கும் இட்டு சி.ஸ்.ஜ மருத்துவமனைக்கு போய்ட்டு,அப்படியே இந்த பள்ளிவாசலைக்கு போய் மந்திரிச்சுருவம்(என்ன நல்லினக்கம் பாருங்க). அப்ப எல்லாம் பள்ளி வேறு,தெவாலயம் வேறு, கோவில் வேறு என்று நினைப்பாரில்லை.
இந்த பள்ளிவாசலில் கொடுக்கும் கஞ்சிதாங்க அருமையாக இருக்கும். நல்ல அரிசிகுருனையில இஞ்சி,மிளகு, ஏலக்காய் மற்றும் தெங்காய் எல்லாம் போட்டு இருக்குமுங்க. எப்படி பண்ணாறங்கனு தெரியாது.நமக்கு அதுவா முக்கியம். நம்ம நண்பன் கடை ஜீவா பிரிண்டர்ஸ் அங்கதாங்க இருக்கும். அதுக்கு பக்கத்து கடை ஸேட்டு அப்பிடிங்கற முகமதிய நண்பர் விரதம் இருந்து பள்ளிக்கு போய்ட்டு வர்றப்ப ஒரு பெரிய தூக்கு நிறைய கஞ்சி வாங்கிவருவான். அதுக்கு நாங்க அங்க பள்ளியின் அருகில் ஒரு பிரபல டீக்கடையில் வடை, ஊறுகாய் பாக்கெட் வாங்கி நல்லா நாலந்து டம்ளர் அடிப்பங்க.(கஞ்சியும் எலுமிச்சை ஊறுகாயும் நல்ல கூட்டனிங்க) அப்புறம் ஒரு இரண்டு நாள் கழித்து இதுபோல் தினமும் என் நண்பர்கள் சாப்பிடுகிறார்கள் என்று தெரிந்து நான் சத்தம் போட்டடேன். இது நேன்பு இருக்கும் அன்பர்களுக்காவும், ஏழைகளுக்காவும் தருவது, நாம் பொழுதுபோவதற்காக அருந்த கூடாது என்று கூறினேன்,அதுமுதல் நாங்கள் ஒவ்வெறு ரம்ஜானுக்கும் இதுமாதிரி ஒன்று அல்லது இரண்டு நாள் கஞ்சி அருந்துவது உண்டு. எனது மற்றும் ஒரு நண்பனான சிக்கந்தர் கூட வருடம் ஒருமுறை கஞ்சியை கடைக்கு கொண்டு வந்து தருவதுண்டு.
எனது நெருங்கிய நண்பரான முகமது ஆசிப் அவர்கள் ஒவ்வெறு ரம்ஜான் விரதம் போது அவர்கள் வீட்டில் எனக்கு கஞ்சியும், வடையும் தருவார். ரம்ஜான் தினத்தன்று அவர் விளையாட்டாக," டாய் அய்யிரு வாடா பிரியானி சாப்பிடாலம்" என அழைப்பார். எனக்காக தனியாக சைவபிரியானியும் வைத்துஇருப்பார். என் அண்ணனின் நண்பர் டிப் டாப் டைலர் இஸ்மாயில் அண்ணாவும் கஞ்சியும் வடையும் தருவார். இப்படி ரமலான் மாதத்தில் நண்பர்களுடன் கஞ்சி சாப்பிடுவது நல்ல விஸயங்க. நண்பர்களின் அன்பும் ஆதரவும் அந்த கஞ்சிய வீட சுவையான விசயங்க. இந்த ரமலான் மாதத்தில் ஒரு விஸேஸம் என்னனு பார்த்திங்கனா விரதம் ஆரம்பித்த இருபத்திஏழாம் நாள் ரொம்ப நல்ல நாள், அன்றைய தினம் வானில் இருக்கும் தெவதகள் பூமிக்கு வந்து ஆசிர்வதிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதில் இருந்து நானும் இந்த நாள் அவர்களை போல விரதம் இருக்க ஆரம்பித்து ஒரு இரண்டு மூன்று வருடங்கள் இருந்தென். அதன் பிறகு அந்த நாள் என்று கூற நண்பர்கள் அருகில் இல்லாததால் இப்பொழுது இருக்க இயலவில்லை. இருந்தாலும் ரமலான் நினைவுகள் மறக்க இயலாது. நன்றீ
நல்லதொரு பகிர்வு
ReplyDelete