Wednesday, September 23, 2009

நல்லா படிக்கனுனா பாம்புக்கு பால் ஊத்துங்க.

பதிவுலக நண்பர்களே. இதுவும் நான் நாலாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம்.
நானும், சகாயத்துல்லாவும் நல்ல நண்பர்கள் நாங்கள் இருவரும் வகுப்புகளில் ஒன்றாக அமர்ந்து இருப்போம். எப்போதும் என் வலதுபக்கம் எப்பவும் ஆனந்தகுமாருக்கு ரிசர்வ் செய்யப்பட்டு இருக்கும். இடது பக்கம் மட்டும் நண்பர்கள் மாறி மாறி வருவார்கள். அப்படி எனது இடதுபக்கம் அந்த வகுப்பில் வந்தவன் சகாயத்துல்லா. நான் படிப்பில் சுமார். அவன் எனக்கும் கொஞ்சம் குறைச்சல்..
அதுக்கு அவன் சொல்லும் காரணம் அவன் படிக்கிறானாம் ஆனா மண்டையில ஏறலயாம். அதனால நானும் அவனும் நல்லா படிக்க ஒரு வழிகண்டுபுடிச்சம். அது பாம்பு புத்துக்கு பால் ஊத்துனா நல்லா படிப்பு வரும்னு. அதனால நான் பாம்புக்கு பால் ஊத்தறது, சகாயத்துல்லா முட்டை ஊத்தறதுனு முடிவு பண்ணுனம்.

அதன்படி நான் பால் கொண்டு வருவதும், அவன் முட்டை எடுத்து வருவது என முடிவு செய்தெம்.
பின் எங்க ஊருல இருக்க பார்க் ஒன்னுல இருக்க மின்னமரத்துக்கு அடியில இருக்க சின்ன பாம்பு புத்துக்கு பால் ஊத்தறதுனு முடிவு பண்ணுயாச்சு. அந்த நாளும் வந்தது. நாங்க ரெண்டு பேரும் பாலும், முட்டையும் எடுத்துக்கிட்டு கூட கூடுதல் இலவச இணைப்பா மஞ்சள், குங்குமம் எடுத்துகிட்டு போனம். அங்க போனா பார்க் பூட்டியிருந்தது. நாங்க மதிற்ச்சுவரை தாண்டிக் குதிர்த்து(மொத்த உயரமே 3.5 அடி தான்). உள்ள போனேம். எனக்கு உள்ளுக்குள்ள பயம் (பாம்புனா பயம் இருக்காத) ஆனா சாகாயத்துல்லாதான் அது ஒன்னும் பண்ணாது வாடா தகிரியம் சொன்னான். அவனுக்கு ஃப்ரெண்ட் போல. பின் நாங்க சத்தம் போடம புத்துக்கு குங்கும பொட்டு வச்சு முடிக்கறம் எங்க ரெண்டு பேரு சட்டையும் ஒருத்தர் புடிச்சுக்கிட்டார். அவரு பார்க் வாட்ச்சுமேன். ஜம்பது வயது முதியவர். அவரு டாய் யாருடா நீங்க? இங்க என்ன பண்ணுறீங்கனு? கேக்க, சகாய் முழிக்க, நாந்தான் கொஞ்சம் துருதுருப்பாச்சே உடனே பாம்புக்கு பால் ஊத்தற விசயத்த சொன்னன். அவர் சிரித்து அது கரையான் புத்து, பாம்பு புத்து இல்லைனார். உடனே நான் சுறு சுறுப்பா அப்ப பாம்பு புத்து எங்க இருக்கும் கேக்க, அவர் என் துருதுருப்பை பார்த்து நாங்க யாருனு விசாரிக்க நான் என் வீட்டைபற்றிச் சொன்னென், அவர் உடனே தன் கையை என்மிது இருந்து எடுத்து விட்டு ஆச்சீரியமாக நீ சீனிவாச அய்யங்கார்(அம்மா வழித்தாத்தா) பேரனா? கணக்கு பிள்ளை அய்யர்(அப்பா வழித் தாத்தா) பேரனா? எனக் கேட்டார். நானும் ஆமானு சொன்னன். அவர் ரொம்ப ஆச்சிரியப்பட்டு என்னை எதொ கடவுள் ரொஞ்ச்சுக்குப் பார்த்தார். எனக்கும், சகாய்க்கும் ஒன்னும் புரியலை. உங்களுக்கு எங்க தாத்தாவை தெரியுமானு கேக்க, அவர் தெரியும்பா என்று கூறி எங்களுக்கு டீயும், முருக்கும் வாங்கிக்கொடுத்து, எங்க பரம்பரை வரலாறு பற்றி கூறினார். அப்பதான் ஆகா, ஆகா நமக்கு கூட ஒரு வரலாறு,புவியியல் எல்லா இருக்குனு தெரிஞ்சுது. பின்னால அவர் உங்க வீட்டுல எல்லாரும் நல்லா படிப்பாங்க, நீயும் நல்லாப் படிப்ப, ஒழுங்கா போய் படிங்க, இந்த மாதிரி எல்லாம் சுத்தாதிங்க புத்தி சொல்லி அனுப்பினார். நாங்களும் அவருக்கு வணக்கம் கூறி வீட்டுக்கு வந்து எங்க அம்மா கிட்ட சொன்னன். அம்மா இந்த மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது உன்மையில பாம்பு இருந்த என்ன பண்றது, சொல்லிட்டு எங்க தாத்தா கதைகளை சொல்ல ஆரம்பித்தார். (என்ன தாத்தா கதை வேனுமா). இம்ம் பழைய பொருமை எல்லாம் எதுக்கு தலை. நம்ம என்ன உருப்படியா பன்னனுனம் பாக்கலாம். இப்படியா படிக்கறத்துக்காக புத்துக்கு பால் ஊத்த போய், பரம்பரைக் கதை தெரிந்து வந்தென்.

2 comments:

  1. உங்க தாத்தா கால்த்துலருந்தே இப்படித்தானா!?

    ReplyDelete
  2. /// உங்க தாத்தா கால்த்துலருந்தே இப்படித்தானா!?///

    இப்படிதானா அப்படினா நான் எப்படி எடுத்துக்கறது. இப்படி இப்படினு விளக்கமா சொன்னா நான் அப்படி அப்படினு புரிஞ்சுக்குவன் இல்லையா

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.