ஒருசில விசயங்கள் நம் வாழ்க்கையினல் மறக்கமுடியாது. முதல் அடி, முதல் காதல்,முதல் பரிசு மற்றும் எல்லா முதலும் ஒரு தனி சுவைதான், இந்த பதிவில் நான் முதலில் பரிசு வாங்கினதை மொக்கை போடலாமுனு.
நில்லுங்க கொஞ்சம் கொசுவத்தி சுத்திட்டு வரன்(பிளாஸ்-பேக்).
அப்ப எனக்கு ஏழு வயசு, இரெண்டாம் கிளாஸ் படிக்கறப்ப ஒரு ஆரம்ப பள்ளிகளுக்கு இடையில போட்டி நடந்தது (என்ன போட்டியா, சாப்பிடறது இல்லிங்க போச்சுப்போட்டி). அதுல என் பெயரும் கொடுத்தாங்க(எனக்கு என்ன தெரியும் என் சின்னக்காதான் கோத்துவிட்டங்க, நம்ப அருமை அவங்களுக்கு தெரியும் போல). போட்டிக்கு முன்னாலயே என்ன போட்டு ரெண்டவது அக்கா படுத்தி எடுத்துட்டாங்க ஒரு நாள் பூர ஒரு பக்க வசனத்த கொடுத்து, என்ன நேரு மாதிரி பேசச் சொன்னாங்க, நானும் நாந்தான் நேரு மாமா, எனக்கு குழந்தைகள்னா ரொம்ப புடிக்கும், நான் இந்த நாட்டின் விடுதலைக்காக் பாடுபட்டேன், இந்த நாட்டின் பிரதமாராக இருந்தென் அப்பிடினு மனப்பாடம் செய்தென். இப்படி என்னை பெண்டு கழட்டிங்காக.
போட்டி நாளும் வந்தது,எனக்கு பைஜாமா,ஜிப்பா போட்டு(மொதல் அக்கா பெரிய அக்கா தைத்து தந்தாங்க), அதுல ஒரு ரோஜா பூவை சொருகி, பள்ளிக்கி போனா அங்க யாருமே இல்லை. அப்பதான் நான் காஸ்ட்யும்ல பிளஸ் மேக் அப் போட லேட் ஆனதால என்னை விட்டுட்டு போய்ட்டாங்க, எனக்கு ஒரே அழுகாச்சியா வந்துருச்சு,அழுக ஆரம்பிச்சன், என்ன ஸ்குலுக்கு கூட்டிப் போன சின்னஅக்கா என்ன பண்ணறது தெரியாம ஓடிப்போய் எங்க அப்பா கிட்ட சொல்ல அவர் அழாத அப்பிடினு சொல்லி குதிரை வண்டியில என்னை போட்டி நடந்த இடத்துக்கு அனுப்பிவைத்தார். அங்கயும் அழுதுகிட்டே போனன்.அங்க இருந்த வாத்தியருங்க என் அலுகைய நிறுத்தி என்னை போட்டில ஸேர்த்துக்கிட்டங்க. என் அக்கா பிஸ்கட்,தண்ணி(ஹொலோ இது குலாய் தண்ணி) எல்லாம் லஞ்சமா கொடுத்து என்ன போட்டிக்கு ரெடி ஆக்குனாங்க.
என்னை கூப்பிட்டதும் போய் நின்னு அழகாய் பின்னிப்பொடல் எடுத்தன், நல்லா பேசிட்டு வந்த என் அக்கா நான் எதிர் பார்த்த மாதிரி பேசிட்டடா சொல்லி செல்லமா முத்தம் கொடுத்தாங்க(இதுதாங்க பெரிய பரிசு), கடைசியா முடிவும் சொன்னாங்க நாந்தான் முதல் பரிசு(அழுது வாங்கீருவம் இல்ல).எனக்கு மாகாத்துமா காந்தியடிகள் எளுதுன சத்தியஸேதனை புத்தகம் தந்தார்கள். முதல் பரிசாக சத்தியஸேதனை புத்தகம் வந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. புத்தகம் பத்தி தெரியர வயசு இல்லைனாலும் குண்டு புத்தகம்(அதாங்க பெரிய புத்தகம்) வாங்குனதுல சந்தொசம். அதுல ஆரம்பிச்சங்க நான் கல்லூரி வரைக்கும் பள்ளியின் இலக்கிய மன்ற கூட்டத்திலும், கல்லூரி போட்டிகளிலும் மேடை ஏறுனா பரிசு வாங்காம இருந்தது இல்லை. போச்சுப்போட்டி, நாடகம், மாறுவேடப்போட்டி மற்றும் மோனா ஆக்டிங் இப்படி எதுனா ஒன்னுல பரிசு வாங்கி வந்துருவன். இதுல என் கூட கவிசுரபதி எங்கின்ற மா. இராஜெந்திரன் என் நாடக நண்பனும் பள்ளி பிளஸ் நண்பன் தான் கூட்டு.
இப்படி நான் வாங்கின சர்டிபிகேட் மட்டும் ஒரு நூறு இருக்கும், நான் கல்லூரியில் அறுபத்தி ஏழு சதவீத மதிப்பொண்கள் பொற்று மேற்படிப்புகாக (எம்.ஏ. கூட்டுறவு )கோவை இராமகிருஸ்னா வித்தியாலய கல்லூரிக்கு அப்பளை செய்த போது நான் ஓஸி என்பதால் இடம் கிடைக்கவில்லை. அப்போது எதாது ஸ்போர்ட்ஸ் சர்டிபிகெட் கேட்டங்க. நான் இந்த சர்டிபிகட் காட்டிய போது அதுல நான் வாங்கிய ஜந்து ஜோனல் லெவல் சர்டிஃபிகட் மட்டும் செல்லும் மீதி வேஸ்ட்னு சொன்னங்க என்ன பண்றது ஓஸியா பொறந்த பாவம் நினைச்சுட்டு நேரா வீட்டுக்கு வந்து மொதல் வேலையா அந்த தொன்னுற்று ஜந்து சர்டிபிகட்டையும் கொளுத்திபோட்டன்.நிம்மதியா ஒரு டீ அடிச்சன், அதொட சரி மேடை ஏற வழக்கம் முடிந்து மக்கள் நிம்மதி ஆகிட்டங்க. என்னாதான் சர்டிபிகட் கொளுத்தினாலும் போட்டிகளும் அது கொடுத்த அனுபவங்களும் ரொம்ப அருமை. என்றும் மறக்க முடியாது. பரிசுகள் இருக்கே இல்லையோ அனுபவங்கள் மனதின் சந்தொசங்கள். என்னப்பா இதுக்கே அலுதா எப்படி? இன்னும் மொக்க வரும். பயப்படாதிங்க.
படாமொக்கை என்று லேபிளிடாமல் ”அனுபவம்” என்று லேபிளிடுங்கள்!
ReplyDeleteகொஞ்சம் எழுத்து பிழைகளை கவனியுங்கள்!
முடிந்தவரை வட மொழி சொற்களை பயன்படுத்தால் இருங்கள்!