Wednesday, September 9, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-3

இந்த மூன்று நாகரீகங்களும் நிறத்தால், மொழியால், குணத்தால்,பழக்கவழக்கங்களால் மாறுபட்டு இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று ஒன்றுபட்ட இணைக்கப்பட்ட சமுதாயமாக இருந்தத்துக்கு காரணம் கடவுள். மூன்று கடவுள்கள் மூன்றும் ஒரே நோக்கிற்காக படைக்கபட்டன(அல்லது அவதாரம் செய்தன) ஆரிய நாகரீகத்தில் ஈஸ்வர்(தலைவர்), சிந்து நாகரீகத்தில் பசுபதி நாதர், திராவிட நாகரீகத்தில் சிவன். இந்த மூன்று தெய்வங்களும் முதல் தெய்வங்கள், மூன்றும் ஒரே தெய்வம் என்பதுதான் ஒற்றுமை.

கால்நடைகளை காக்க, பயிர்களை வளர்க்க தங்களின் குழுக்களை வழிநடத்த இந்த தலைவர்கள் தெய்வங்களாக பின்னாளில் வழிபடப்பட்டனர். இவர்களின் ஆன்மா அல்லது சக்தி நிரந்தரமானது அது தாங்களை காக்கும் என்று நம்பிக்கை கொண்டு அவர்களை வழிபட்டனர்(வழிபடுகின்றனர்). பின்னாளில் மக்கள் அதிகம் ஆக ஆக அவர்களின் பிரிவும் அதிகம் ஆகினார்கள், பிரிவுகள் அதிகம் ஆக அவர்களின் தெய்வங்களும் அதிகம் ஆகிற்று. இப்படி இந்த மூன்று நாகரீக காலத்தில் மக்களிடம் எந்த போதமும் இல்லாமல் நல்ல முறையில்தான் வாழ்க்கை நடத்தினார்கள். இந்த காலகட்டம் மக்களின் மிகச்சிறப்பான காலகட்டம் ஆகும். பொண்கள் கூட உரிய பாதுகாப்பு மற்றும் மதிப்புடன் வாழ்க்கை நடத்தினார்கள். இந்த காலகட்டம் ஆறுகளின் போக்கு மாறியதாலும், தொழில்களின் எண்ணிக்கை கூடியாதாலும், புவீயியல் மாற்றம் காரணமாக நாகரீகங்களும் மாறுபட்டன(அழியவில்லை). இந்த நாகரீங்களை இணைத்த கடவுளின் ஒற்றுமை பற்றி கூறி இந்த நாகரீங்களை பற்றிய கட்டுரை முடிக்கின்றென்.

சிவன்- ஆதியும் அந்தமும் இல்லாதவர், சித்தர்களில் முதன்மையானவர்(யோகங்களை பதினெட்டுசித்தர்களுக்கு அருளியவர், அவர்களுக்கு தலைவர்,இவர்தான் சுந்தரனாந்தர் என்ற முதல் சித்தர் ஆவார்) மலையில்(பொதிகை) வாழ்க்கை நடத்துபவர், மாட்டை வாகனமாக உடையவர்.பஞ்ச பூதங்களுக்கும் அதிபதி.

ஈஸ்வர்- ஆதியும் அந்தமும் இல்லாதவர், மகரீசிகளின் முதன்மையானவர்,(சனாகாதி முனிவர்கள், இவர்களுக்கு ஈசன் தான் வேதம் மற்றும் அதன் உட்பொருளை விளக்க அவர்கள் பரப்பியதாக வராலாறு) இவர் மலையில்(கைலாயத்தில்) வாழ்க்கை நடத்துபவர், மாட்டை வாகனமாக உடையவர். அனைத்து தொவர்களின் தலைவர்.

பசுபதி நாதர் - ஆதியும் அந்தமும் (அப்பா,அம்மா அல்லது பிறப்பு இறப்பு) இல்லாதவர், முனிவர்களின் தலைவர், மலையில் வாழ்க்கை நடத்துவர்(காத்மாண்டு) மாட்டை வாகனமாக உடையவர். அனைத்து இயற்கையும் கட்டி ஆழ்பவர்.

இதில் சிந்து நாகரிகமான மொகஞ்சதாரோ,ஹராப்பா அகழ்வாரச்சியில் நமது இந்திய சிந்து சமவெளி நாகரீக அகழ்வாரச்சியில் பசுபதி நாதர் சிலை கிடைத்துள்ளது, ஆகவே நான் பசுபதி நாதர் இந்து சமயத்தின் முதல் கடவுள் என குறிப்பிட்டேன். நமது வரலாறும் அதில் இருந்துதான் தொடங்குகிறது, ஆதலால் அவ்வாறு குறிப்பிட்டேன். உன்மையில் பசுபதி நாதர். சிவன் மற்றும் ஈஸ்வர் ஆகிய தெய்வங்கள் மூன்றும் ஒன்றுதான், அவர்கள்தான் இந்து மதத்தின் முதல் தெய்வங்கள். இதில் பசுபதி நாதருக்கு மட்டும் வரலாற்று குறிப்புகள் உள்ளன. மற்ற இரண்டு கடவுளுக்கும் புரானங்கள் மற்றும் நூல்கள்தான் ஆதாரம் ஆக உள்ளது.
இவற்றின் உருவங்கள் கூட ஒற்றுமையாக உள்ளது. இந்த ஒற்றுமைதான் நமது மக்களை கட்டிபோட்டது. நல்ல ஒலுக்கம்,கட்டுபாடு,பொரியொர் மதித்தல், விட்டுகொடுத்தல் அகியன முக்கியமாக இருந்தன. இந்த காலகட்டத்தில் மது இருந்தது ஆனால் அதை பருகுவர்கள் சமுகத்தில் தரம் குறைவாக மதிக்கப்பட்டனர்,ஆகையால் அதை பருகுவர் மிகவும் குறைவு.
இந்த காலகட்டத்தில் விலைமகளீர் இல்லை, அனால் பொண்கள் தான் விரும்பும் ஆண்மகனுடன் திருமணம் புரியவும், அவர்களை விட்டு விலகி செல்லவும் சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டனர். உடலுறவு பெரியதாக கருதப்படாமல் குழந்தைபேறு மட்டும் கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டது. பொண்கள் தான் விரும்பும் அல்லது தனக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய ஆண்மகனுடன் வாழ அனுமதிக்கப்பட்டனர். இனப்பொருக்கம் ஒன்று மட்டும் அவர்கள் கடைமையாக இருந்தது.

இந்த நாகரீக காலகட்டத்தில் குற்றம் என்றால் அது களவு மட்டும்தான், களவு செய்வபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
பொரும்பாலும் நெல்லும், காலநடைகள்தான் களவு பொருட்கள், பண்ட மாற்றுமுறை நடைமுறை இருந்தது பணம் கண்டுபிடிக்கப் படவில்லை. அணிகலங்கள் அலங்ககார பொருள்ளாக மட்டும் பார்க்க பட்டது. தொழிலின் காரணமாக சமூகம் பிரிக்கபடவிட்டாலும் கொல்லர்கள், வேளாங்குடிகள்,மறவர்கள், அந்தனர்கள் மற்றும் மீனவர்கள் என்னும் பஞ்சமவர்கள் இருந்தனர். ஆனால் ஒற்றுமையாக ஒன்றாக வசித்தனர். கலப்பு மணம் பொண்களின் விருப்பபடி நடந்துதது.

7 comments:

  1. //மூன்று கடவுள்கள் மூன்றும் ஒரே நோக்கிற்காக படைக்கபட்டன(அல்லது அவதாரம் செய்தன)//

    படைக்கப்பட்டன என்பது தான் உண்மையாக இருக்கும்! கடவுளே தோன்றியிருந்தால் எதற்கு மூன்று நாகரீகம், ஒன்றே போதுமே!

    ReplyDelete
  2. //ஆரிய நாகரீகத்தில் ஈஸ்வர்(தலைவர்), சிந்து நாகரீகத்தில் பசுபதி நாதர், திராவிட நாகரீகத்தில் சிவன்.//

    சிவன் என்று திராவிட நாட்டில் ஒரு கடவுளும் இல்லை!

    அது ஷிவன்! வடமொழிச்சொல், அங்கிருந்து இங்கே பரப்பட்டது!

    உங்களுக்கு பசுபதி நாதர்னா ரொம்ப பிடிக்குமோ!?

    அந்த நாதரோட வரலாற்றை கொஞ்சம் எழுதுங்கள்!

    ReplyDelete
  3. //கால்நடைகளை காக்க, பயிர்களை வளர்க்க தங்களின் குழுக்களை வழிநடத்த இந்த தலைவர்கள் தெய்வங்களாக பின்னாளில் வழிபடப்பட்டனர். //

    அப்போ இப்ப இருக்குற தலைவர்களும் பின்னாளில் கடவுள்களா?

    ReplyDelete
  4. ஈஸ்வர்=மாட்டை வாகனமாக உடையவர்.

    ஆரியர்களுக்கும் மாட்டுக்கும் என்ன சம்பந்தம்!

    ReplyDelete
  5. //நமது இந்திய சிந்து சமவெளி நாகரீக அகழ்வாரச்சியில் பசுபதி நாதர் சிலை கிடைத்துள்ளது, ஆகவே நான் பசுபதி நாதர் இந்து சமயத்தின் முதல் கடவுள் என குறிப்பிட்டேன்.//


    சிலை தானே கிடைச்சுச்சு!
    முதல் கடவுள்னு எதுவும் ஓலைச்சுவடி கிடைக்கலையே! அப்படியே கிடைச்சாலும் அதை எப்படி உண்மையென்று நம்புவது?

    ReplyDelete
  6. கதை நல்லாயிருந்தது!

    புனைவுன்னு லேபிள் போட மறந்துட்டிங்க!

    ReplyDelete
  7. இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
    நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

    http://www.srilankacampaign.org/form.htm



    அல்லது

    http://www.srilankacampaign.org/takeaction.htm



    என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
    அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.