எனக்கு ரெண்டங் கிளாஸ்னா உடனே இதுதாங்க ஞாபகம் வரும், ஒன்னு நான் வாங்கின முதல் பரிசு அப்புறம் நான் வாங்கின முதல் அடி. அது என்னன்னா நான் எல்லாம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பரம்பரையில வந்தவன். அட அதாங்க அந்த கணக்கு,மணக்கு ஆமனக்கு விவகாரம். அவர மாதிரியே நமக்கு கணக்கு வீக்குங்க (இது தெரியாம இப்ப எனக்கு கம்பெனி கணக்கு பாக்க சொல்லி மாசம் எனக்கு ஒன்னரை லட்சம் சம்பளம் கொடுக்கறான்). ஒன்னும் ஒன்னும் எவ்வளவுனா ஒரு செகொண்டுல கால்குலெட்டருல போட்டு சொல்லிருவன் அந்த அளவுக்கு நான் கணக்குல புலீ!!!!.
அப்பதான் ரெண்டாங்க கிளாஸ்ல லலிதானு ஒரு புது டீச்சர் வந்தாங்க அவங்களுக்கு நம்ம அருமை எல்லாம் தெரியாது, அவங்க கணக்குல ஒரு டெஸ்ட் வச்சாங்க நான் ஒரு குத்து மதிப்பா பக்கத்து பெண்ண பார்த்து எளுதீட்டன். ஆனா பாருங்க நமக்கு அப்பவும் சரி இப்பவும் சரி தமிழ் எழுத்தும், கையெழுத்தும் சரியா வராது. (நமக்கு கையெழுத்து, தலையெழுத்து ரெண்டும் சரி கிடையாது).
அவங்க என் சிலேட்ட வாங்கிப் பார்த்துட்டு என் கையெழுத்து பார்த்து மிரண்டு போய்ட்டாங்க, எங்ககிட்ட கோவமா இது என்ன தமிழ் எழுத்தா இல்ல தலையெழுத்தானு கேட்டங்க அதுக்கு நான் ரொம்ப பயந்து சாஃப்ட் வாய்ஸ்ல தமிழ் எழுத்துனு சொன்னன் அதுக்கு அவங்க சரியா கேக்காத்துனால உம்ம்னு மிரட்டுனாங்க நான் பயந்து தப்பா சொல்லிட்டம் போல நினைச்சு தலையெழுத்துனு பயத்துடன் சொன்னென், அதுல அவங்களுக்கு சாமி வந்து எம்மேல ஆடிட்டாங்க. என் கன்னத்தை புடிச்சு கிள்ளி,தலையில கொட்டி அடிச்சு என்ன முட்டி போட வைச்சாங்க(புது டீச்சர் இல்ல அதான் ஜயா யாருனு தெரியலை). என் சிலெட்டுல ஒரு அடி, அதாங்க கிராஸ் போடுவாங்க இல்ல அதை போட்டு ஒரு முட்டை மார்க் போட்டாங்க. எனக்கு அதான் மொதல் அடி பிளஸ் மொதல் முட்டை(இதான் கடைசியும்)வாங்கியது. எனக்கு அழுகை தாங்க முடியல்லை. அழுதுகிட்டே முட்டிபோட்டு பெல் அடிச்ச உடன வீட்டுக்கு போனன். அப்ப புதுசா கல்யாணம் பண்ணி போன என் பெரிய அக்கா வந்துருந்தாங்க அவங்களுக்கும், என் மூணு அக்காவுக்கும் என்மேல பாசம் அதிகம்(கடைக்குட்டினா சும்மாவா,அதும் கொலுக்கு முலுக்குனு இருப்பன்). என்னை பார்த்ததும், அப்படியே என் கைய புடிச்சு இன்னெரு கையில சிலெட்டையும் எடுத்துக்கிட்டு ஸ்குலுக்கு வந்தாங்க. எடுத்த எடுப்புல நீ யாருடி என் தம்பிய அடிக்க, யாருன்னு நினைத்த அப்பிடினு ஏக வசனத்தில் எடுக்க டீச்சரும் பதிலுக்கு பேச அந்த இடம் குழாய்யடி அகிடுச்சு.அந்த சத்தம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர் ஓடி வந்து என் அக்காவிடம் என்ன கோதை என்ன தகராறு என கேக்க அக்கா விவரம் கூறினார். தலைமை ஆசிரியர்(அவங்களுக்கும் என்மேல பிரியம் அதிகம்) என் கன்னத்தையும் என் சிவந்த முழங்காலையும் பார்த்து டீச்சரை திட்டினார்கள். பின் அக்காவிடம் அவர்கள் கல்யான வாழ்க்கை குடும்ப சமாச்சாரம் பேசி அனுப்பினார்கள். நானும் என் அக்கா கூட வீட்டுக்கு வந்துட்டன். அதற்க்கு அடுத்த நாள் பள்ளி சென்றபோது என்ன சொல்லவார்களே என பயந்து போனன். அவர்கள் மிகுந்த கோவத்துடன் என்னைப் பார்த்து படிச்சா படி, படிக்காட்டி போ, எனக்கு என்ன என்று கூறிவிட்டார். பின் அவர்கள் என்னை கண்டுகொள்வதில்லை. பின்னாளில் தான் தெரிந்தது அவர்கள் என் ரெண்டாவது ஆசிரியை அக்காவின் நண்பி, ஒரு ஆசிரியையின் தங்கை என்று. நான் கல்லூரி படிக்கும் போது அவர்களை சந்திக்க நேர்ந்தது அப்பவும் அவர்களிடம் எனக்கு பயம்(பின்ன மொதல அடிச்சவங்கள் இல்லயா). அவர்கள் என்னிடம் சிரித்துக்கொண்டு கேட்டார்கள், என்ன சுதா உன் கையெழுத்து இன்னமும் அதே கோழிகிறுக்கல் தானா அப்பிடினு. நானும் சிரித்துக்கொண்டு ஆமாம் டீச்சர் ஒழுங்கா நீங்க அடிச்சப் மாத்திற்க்கனும் அனா பண்ணாம விட்டு இப்ப மாத்த முடியல அப்பிடினு சொன்னன். அதுக்கு பரவாயில்ல கையெழுத்து நல்லா இல்லைனா தலையெழுத்து நல்லா இருக்கும் அப்பிடினு சொன்னாங்க. இம்ம் நமக்கு ரெண்டு எழுத்தும் சரி கிடையாதுனு மனசுல நினைத்தென். ஆதலால் உங்க வாத்தியார் அடிச்சா ஒழுங்க எதுக்கு அடிக்கிறார்னு புரிஞ்சு உங்களை மாத்திக்கங்க( அப்பா ஒரு மெஸேஜ் சொல்லிட்டன்)
//கையெழுத்து நல்லா இல்லைனா தலையெழுத்து நல்லா இருக்கும் அப்பிடினு சொன்னாங்க.//
ReplyDeleteஇம்மாதிரியான மூட நம்பிக்கைகளை கிளம்பிவிடாதிங்க!
அப்புரம் சிலர் வேணும்னுன்னே கோழி கிறுக்கு கிறுக்குவானுங்க!
ஆசியர் அடிப்பது நல்லதுக்கு தான் என்பது தான் பதிவின் சாராம்சம் என்று நினைக்கிறேன்!
அவர்கள் தண்டிப்பது தான் முக்கியமே தவிர அடிப்பது தவறை திருத்த சரியான வழியல்ல!
மீண்டும் மீண்டும் எழுதச்சொல்லலாம்!
உடற்பயிற்சிக்கு சமமான எதாவது தண்டனை கொடுக்கலாம், அடிப்பது என்னை பொருத்தவரை சரியான வழியல்ல!