இது என் இருபத்தி ஜந்தாவது பதிவு. மொதல நான் ஒரு சென்னை நிறுவனத்துல கணக்கரா வேலை செய்யற மாதிரி ஆக்ட் பண்ணிட்டு இருந்தன். ஒரு நாலு வருசம் ஆணி புடுங்கன என் திறமைய பார்த்து எங்க நிருவன நிர்வாக இயக்குனர் என்ன கூப்பிட்டு நீ ரொம்ப ஆனீ புடுங்கிட்ட இனிமே இங்க உனக்கு வேலை இல்லைனு சொல்லிட்டார், நான் ஜெர்க் ஆக அவர் சிரித்துக்கொண்டு நம்ம நிருவனம் சிங்கபூருல ஒரு இருபத்தி ஏழு மில்லியன் (மில்லி இல்லீங்க) டாலர் இன்வெஸ்ட் பண்ணி இருக்கோம்.நீ ரொம்ப நம்பிக்கையான ஆளு,ஆதலால் நீ அதை போய் கணக்கு பார்த்துட்டு அங்கன ஆனீ புடுங்குனு சொல்லீட்டார்.நானும் பழனிமலை டாலரா இல்ல திருப்பதி டாலரானு சந்தொகம் கேக்காமல் சரி சொல்லிட்டன். அவரே எனக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்து கொடுத்து அப்பா போய்த்தொலைடா சாமீனு சொல்லீட்டார். என் நண்பர்களும் வாழ்த்து சொல்லிட்டு நிம்மதியா வீட்டுக்கு போய்ட்டங்க.
நானும் சரி சிங்கையில யாராது மாட்ட மாட்டங்களா அப்பிடினு நம்பீ வந்துட்டன். இங்கன வந்தா எல்லாம் சுத்தமா இருக்கு, ஒரு பான் பராக் போட்டு பஸ்ல இருந்து பைக்ல வர்ரவன் மேல துப்பமுடியாம ஏக்கத்துல அலுவலகம் வந்து சீனா முதாலாளிடம் ஸேர்ந்தென். அவர் ரொம்ப டீசண்டா எனக்கு ஒரு சிஸ்டம், குளிர் சாதன அறை எல்லாம் கொடுத்து நீ ஆனீ புடுங்கு ஆனா அதை தவிர எந்த வேலையும் செய்யக்கூடாதுனு சொல்லீட்டார். நான் எந்த ஆனி புடுங்கனனும் கேட்டன் அவர் நீ புடுங்கற எல்லா ஆனியும் வேண்டாத ஆனிதான் சொல்லீட்டார். எனக்கு ஒரு வேலை வெட்டீ இல்லாம எப்படி சம்பளம் வாங்கறதுனு கூச்சம் அதுக்கு பதிலா உக்காந்து நெட்டுல மேய ஆரம்பித்தன். அப்பதான் தட்ஸ் தமிழ்ல நான் ப்லொக்ஸ் எல்லாம் படிச்சன் அப்ப குடுகுடுப்பையாரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்தன. பின் நான் ஒரு மாசம் எல்லா ப்லொக்ஸ்யும் படிக்க ஆரம்பிச்சன் அதுக்கு அப்புறம் என் சிங்கை நண்பன் ஒருவன்தான் நீங்களும் எழுதலாம் பாஸ்னு கொழுத்திபோட்டார். அப்புறம் ஒரு ப்லொக்கை ஒபென் பண்ணி எதுவும் எளுதாம எல்லா ப்லொக்ஸ் நடைகளை வாட்ச் பண்ணேன். துளசீ டீச்சர்அம்மா வேற கோவில் பத்தி எழுதி எனது ஆர்வத்தை அதிகம் ஆக்கினார். நம்பினால் நம்புங்கள் ஒரு வாரம் அலுவலத்தில் எந்த வேலையும் செய்யாமல் இவர்கள் இருவரின் அனைத்து பதிவுகளையும் படித்தென்.அப்புறம் ஒரு ரெண்டு மொக்க போட்டு நானும் ஒரு பதிவர் ஆகிட்டன். அப்பதான் எனக்கு வால்பையன் அவர்களின் நட்பு கிடைத்தது அவர் எனக்கு பதிவின் டிசைன் மற்றும் அழகியை பரிசாக கொடுத்தார் (அதுனால எனக்கு யாராது ஆட்டே அனுப்பறாதா இருந்தா அதை அவருக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்). பின்னாடி எனக்கு குழலி ப்லொக் எழுத்தாளர் திரு. புருஸேத்தமன் அவர்கள் முலம் ப்லொக்ல ஆர்வம் கூடியது, என்னையும் ஒரு ப்லொக் எழத்தர்னு நம்பீ அவர் என்னை சிங்கை பதிவர் கூட்டத்திற்கு அழைத்து இருந்தார். அங்க நிறைய பதிவர்கள் வந்து நிறைய தகவல்கள் குடுத்தார்கள். நானும் எனக்கு பிடித்த கோ.வி.கண்ணன், புருஸேத்தமன் மற்றும் சில பதிவர்களை பார்த்துவிட்டு, மூனு பதிவு போட்டுவிட்டு பதிவர்னு அவங்க கிட்ட சொல்ல கூச்சமா இருந்தால யாருகிட்டையும் பேசாம, வடை, காப்பி சமேசா எல்லாம் சாப்பிட்டு(போனதே இதுக்குதான) சத்தமில்லாம பாதில (போனவேளை முடித்து) எஸ் ஆகிட்டன்.
இப்படி நான் இருந்த அப்ப கோ.வி. கண்ணனும் சில திராவிட பதிவர்களும் ஒரு தடவை பாரதியாரை,திலகரை ஜாதியின் பெயர் சொல்லி விமர்சனம் செய்ததால் நாம் ஏன் இந்திய வரலாறும், தலைவர்களும் பத்தி எளுதக் கூடாது என்று எழுத ஆரம்பித்தென்.
ஆகவே நான் எழுத காரணமாக இருந்த குடுகுடுப்பையார், துளசி டீச்சர், வால் பையன், இட்லீவடை, கோ.வீ.கண்ணன், கார்க்கி,இம்சை அரசி,பயமறியா பாவயர் சங்கம்,சித்திரகூடம், மற்றும் பின்னூட்டம் இட்டவர்கள் வால்பையன், கோவி, கிருஸ்னமூர்த்தி,உழவன் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி// நன்றி/// நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றென். எனக்கு பிடித்த பதிவுகளான வகுப்பு அறை வாத்தியார் அவர்களுக்கும், ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
உங்களுக்கு நகைச்சுவை வருது!
ReplyDeleteஆனா வர்ற சிரிப்பை எழுத்துப்பிழை தடுத்துடுது!,
சம்பவங்கள் மாறும் போது பத்தி பிரியுங்கள்!
படிப்பவர்களுக்கு மூச்சு வாங்க ஏதுவாக இருக்கும்,
குவாட்டர் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்!
பல ஃபுல் பாட்டில்கள் உருண்டோட எழுதித்தள்ளுங்கள்!
25 ஆவது பதிவை நிறைவு செய்வதற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழில் தட்டச்சுவதில் முன்னேறிவிட்டீர்கள்
இன்னிக்குதான் உங்க பதிவு பாக்கிறேன். வாழ்த்துக்கள். நான் கூட ஒரு பதிவர் உருவாக காரணமா??????
ReplyDeleteதமிழ்மணத்திலும், தமிழிஷ் திரட்டியிலும் சேர்க்கவும்.
நன்றி
நன்றி, வால்பையன்,கோ.வீ.கண்ணன் மற்றும் குடுகுடுப்பையார். நான் முதலில் படித்தது தங்களின் பதிவுகள் தான், ஆதலால் குடுகுடுப்பை மற்றும் வருங்ககால முதல்வர், கு ஜ மு க ஆகிய பதிவுகள் எனக்கு எளுதும் ஆவலை தூண்டிவிட்டன. ஆதலால் தங்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்.
ReplyDeleteஅட! பதிவு எழுதுனா இப்படியெல்லாம் ஆபத்துகளை உருவாக்கும் நிலை இருக்கா?
ReplyDeleteச்சும்மா...... நம்மைப்பார்த்து நாலுபேர் வந்தா......
கூட்டமா ஓட வசதியா இருக்கும்:-)))))
இனிய வாழ்த்து(க்)கள்.
teache naanga singam, oduna kuuda single thaan oduvam, enna enga vali thaniee vali.
ReplyDelete