என்னைப் பொறுத்தவரையில் கடவுள் தனக்கு யாரை பிடிக்கவில்லையோ அவருக்கு நிறைய அள்ளிக் கொடுக்கிறார். நிறைய பணம் இருப்பதும் ஒரு வகையில் ஏழையாக இருப்பதுக்கு சமம்.
பணம் இருந்தால் வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் என நினைப்பது முட்டாள்தனம் என்றுதான் நினைக்கின்றென். மனிதன் தன் வாழ்க்கையின் முதல் பகுதி முழவதும் வெல்த்தை
தெடி அலைகின்றான், வாழ்க்கையின் பின் பகுதி முழுவதும் தெடிய வெல்த்தை கொண்டு ஹெல்த்தை தெடுகின்றான். பணம் சில பிரச்சனைகளின் முடிவு என்றாலும் பல பிரச்சனைகளின் ஆரம்பமாக இருக்கின்றது. முதலில் பணத்தை ஸேர்க்க உறவை பிரிந்து இருந்தும் பின் ஸேர்த்த பணத்தை காக்க உறவினர்களிடம் இருந்து விலகி இருக்கவும் வேண்டும். இப்படி பணம் பணம் என ஸேர்த்து பின் பணம் கொண்டு ஒன்றும் செய்யாமல் நம் மறைவுக்கு பின் மகன் மகள் அடித்துகொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை நடுத்தர குடும்பங்களில் பிறந்தவர்களும், வாழ்வபர்களும் தான் கடவுளுக்கு பிடித்த குழ்ந்தைகள். ஒரே மாதிரியான வாழ்க்கை முறை, நிம்மதியான குடும்பம் ஆகியன ஒருவனுக்கு கடவுள் அளிக்கும் வரங்கள். காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் கேட்டார், ஆனால் நான் கடவுளிடம் கேக்க ஒரு லிஸ்ட் போட்டு வைத்து இருக்கின்றேன். அவை:
1.நல்ல அமைதியான நிலையான, மனதுக்கு நிறைவான (அதிகமான அல்ல)சம்பளத்துடன் கூடிய வேலை.
2. நல்ல மனைவீ (அழகான அல்ல) நமக்கு பிடித்த, நம்மை அறிந்த, புரிந்த மனைவி.
3.சிறிய நல்ல அமைதியான ஒரு வீடு( ஒரு ரெண்டு அல்லது மூனு மரம் இருந்தால் பெஸ்ட்)
4. அன்பான மகள் மற்றும் மகன். (ஆனால் மகள் கண்டிப்பாய் இருக்கவேண்டும்)
5. கொஞ்சம் அவசரத்தெவைக்காய் கையில் ஸேமிப்பு.
6. என்றும் என்றும் உன் ஸேவகம் ஏத்திப்பறை கொள்ளும் மனம்.(அப்பா கடவுளை மறக்கதா மனம்)
7. என்றும் எப்பொழதும் பிரியாமல் கைகொடுக்கும் நல்ல நண்பர்கள்
இதுபோதும் எனக்கு இப்படி நடுத்த வர்க்கம் குடும்பங்கள் சென்னையிலும் தமிழகத்திலும் பல உள்ளனர். உன்மையில் அவர்கள்தான் பொரும் பணக்காரர்கள், மன நிறைவுடன் வாழ்கின்றவர்கள்.
//என்னைப் பொறுத்தவரையில் கடவுள் தனக்கு யாரை பிடிக்கவில்லையோ அவருக்கு நிறைய அள்ளிக் கொடுக்கிறார். //
ReplyDeleteஇன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் கடவுளுக்கு பிடிக்காதவர்கள்னு சொல்றிங்க சரியா!?
கடவுளுக்கு மட்டும் அல்ல நண்பரே, அவர்களின் மனசாட்சிக்கும் அவர்களை பிடிக்காது.
ReplyDelete