Thursday, April 8, 2010

எங்க போயித் தொலைந்தது















வியாழக் கிழமை, இரவு மணி ஒன்பது, நான் மாலை வெளியில் சுற்றியவன் வீடு வந்து பரபரப்பாகத் தேடிக்கொண்டு இருக்கின்றேன். வீடு பூராவும் தேடுகின்றேன். எல்லா இடத்திலையும் தேடுகின்றேன். பரண், கட்டிலடியில்,புத்தக செல்ப்பில் என்று சகலமும் தேடப்படுகின்றது.

எங்க அண்ணா : என்னப்பா தேடுற,

நான் : ஒன்னும் இல்லை அண்ணா.

அண்ணன் : ஒன்னும் இல்லையா? என்ன என்று சொல்லு நானும் தேடுகின்றேன்.

நான் : இல்லை, அவரசம் இல்லை, நான் தேடிக்கொள்கின்றேன்.மனதுக்குள். (சொல்லிவிட்டு திட்டு வாங்க, நான் என்ன மடையனா?)

அண்ணன் : சரி சரி தேடிக்கே.

அண்ணன் போய் விடுகின்றார். நானும் தேடிக்கொண்டு இருக்கின்றேன். கொஞ்ச நேரம் தேடிக் கொண்டு இருக்கும் போது, மன்னி வர்றாங்க.

மன்னி : என்ன தேடுறிங்க.

நான் : ஒன்னும் இல்லை மன்னி,

மன்னி : ஒன்னும் இல்லாமையா! ஒரு மணி நேரமா தேடுறீங்க. சொல்லுங்க என்ன
தொலைச்சிங்க.

நான் : அது யுனிவர்சிட்டியில(பி.ஜி.டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மானேஜ்மெண்ட்) இருந்து புக்ஸ் கட்டு வந்தது இல்லையா? அது அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்தேன், அதைக் காணவில்லை.

மன்னி : எப்ப வந்தது? எனக்குத் தெரியாதே.

நான் : அது ஒரு ரெண்டு மாசம் இருக்கும், மொத்தம் இரண்டு பண்டில், பத்து புக் இருக்கும்.

மன்னி : அதானே பார்த்தேன். இரண்டு மாசத்துக்கு முன்னால வைச்சது, அய்யாவுக்கு இப்பத்தான் ஞாபகம் வந்துதாக்கும். நல்லாத் தேடுங்க. அப்பத்தான் புத்தி வரும். இப்ப முதலில் சாப்பிட்டு வந்து தேடுங்க. அதையாது உருப்படியா நேரத்துக்குச் செய்யுங்க.

நான் : இதே ஒரு ஜந்து நிமிசத்தில் வருகின்றேன்.

புக் கட்டுக்கள் இரண்டும் பிரிட்ஜின் பின்னாடி சந்து மூலையில் விழுந்து கிடக்கின்றது. கண்டு பிடித்து எடுப்பதைப் பார்த்து விடுகின்றார்.

மன்னி : என்னது இது? இப்படியா புக்கை மூலையில் போடுவது? இன்னமும் புக் சுத்தி இருக்குற கட்டைக் கூட பிரிக்கவில்லை, வந்து இரண்டு மாசம் ஆயிற்று. நல்லா லட்சணமா படிக்கிறீங்க.

நான் : இல்லை மன்னி, அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். அது பின்னால விழுந்து விட்டது.

மன்னி : ஆம்மா இரண்டு மாசமா விட்டு விட்டு, அய்யருக்கு இப்ப ஏன் திடிர்ன்னு ஞாபகம் வந்தது?

நான் : (மென்னு முழுங்கி), இல்லை இந்த வார சனி,ஞாயிறு எக்ஸாம் ஆரம்பம், இந்த வாரத்தில் இருந்து ஜந்து வாரம் வீக் எண்ட் எக்ஸாம்ஸ் இருக்கு.

மன்னி : (அதிர்ச்சியாய்) "என்னது நாளாளைக்கு எக்ஸாமுக்கு, இன்னிக்கு புக்கை தேடுறீங்களா, அய்யய்யே டீ ஆர், ! (அண்ணாவை அழைப்பது) இங்க பாருங்க,நாளாளைக்கு எக்ஸாமாம் இன்னிக்கு புக் தேடுறார் துரை. (நக்கலாக).நல்லா படிக்கிறீங்க போல. உங்களுக்கு எல்லாம் எக்ஸாம் பீஸ்தான் தண்டம்.

அண்ணா : சரி விடு, அன்னிக்கு காலையில தேடாம இப்பவாது தேடுகின்றானே.

மன்னி : சரி, சரி டிபன் சூடு ஆறிவிடும், சாப்பிட்டு விட்டு படியுங்க. ரொம்ப சின்சியர்தான் நீங்கள்.

நான்: சரி என்று தட்டைப் போட்டு உக்காருகின்றேன். அண்ணா மெதுவா ஆரம்பித்து திட்டு விழுகுது.

அண்ணா : என்ன பசங்க நீங்க? ஒரு பொறுப்பு வேணாம், இப்படியா இருப்பாங்க. மத்த பசங்களைப் பாரு, வேலைக்கும் போயிட்டு என்ன அழகா படிக்கிறாங்க. நாளா நாளையிக்கு எக்ஸாமுன்னா, இன்னிக்கா புக்கைத் தேடுவாங்க. உன்னை சொல்லிக் குத்தம் இல்லைடா, உங்களைக் கவலை தெரியாம வளர்த்துட்டேம். அதுதான்.

மன்னி : சரி வளர்ற பையன், சாப்பிடறப்ப திட்டாதீங்க.

அண்ணா: என்ன வளர்ற பையன், வளராத பையன்னு,பையந்தான் வளர்றான், மூளையும் பொறுப்பும் வளர்ந்தால் தானே.

மன்னி : சரி!! சாப்பிட்டு விட்டுப் பேசுங்க, சாப்பிடும் போது பேசாதீங்க. என்ன சுதாகர், இப்படியா இருப்பது? ஒழுங்கா படிங்க. நான் டீ போட்டு பிளாஸ்க்கில் வைக்கின்றேன். இரவு படியுங்க. இந்த இரண்டு நாளாவது ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ற வழியைப் பாருங்க.

நான் : சரிங்க மன்னி.

அண்ணா : ஆமா டீ ஒன்னுதான் குறைச்சல், சரி, சரி ஒழுங்கா படிக்கற வழியைப் பாரு. ஆபிஸிக்கு வேணா இரண்டு நாள் லீவு போட்டுக்கே.

நான் : இல்லைன்னா ! நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்.

சாப்பிட்டு முடிந்ததும், நான் மறுபடியும் தேடுகின்றேன்.

மன்னி:அதான் புக்ஸ் கிடைச்சாச்சு, அட்டையை பிரிச்சுட்டிங்களே, மறுபடியும் என்ன தேடுகின்றீர்கள்.

நான் : ஒன்னும் இல்லை,

மன்னி : ஒன்னும் இல்லை என்றால் எதே இருக்கு. சொல்லுங்க, நானும் ஹெல்ப் பண்ணுகின்றேன்.

நான் : இல்லை, நான் தேடிக்கிறேன்.

மன்னி: சும்மா சொல்லுங்க, தேடித் தருகின்றேன். தெரிந்த கதைதானே.

நான் : இல்லை அண்ணாகிட்ட சொல்லிடுவீங்க, அவர் மறுபடியும் திட்டுவார்.

மன்னி : சரி சொல்லவில்லை, அண்ணா திட்டுவார் மட்டும் தெரியுது, பொறுப்பா படிக்கத் தெரியல்லையா? சொல்ல மாட்டேன் சொல்லுங்க, என்ன தேடுறீங்க.

நான் : இல்லை, போன வாரம் ஹால் டிக்கெட் வந்தது, எங்க வைச்சேன்னு தெரியல்லை. அதான்.

மன்னி: சுத்தம்!. பெருமாளே!!!! எப்படி இப்படி இருக்கிங்க. ஹால் டிக்கட்டைக் கூட ஒழுங்க வைச்சுக்க மாட்டிங்களே. நாங்க எல்லாம் எக்ஸாம் சொன்னா போதும், சாப்பாடு எல்லாம் இறங்காது,தூக்கம் வராது. எப்படி இப்படி நெஞ்சழுத்தமா இருக்கீங்க. ஒரு பயமே கிடையாதா?

நான் : இல்லை மன்னி, இங்கதான் சோ கேஸ் மேலை வைத்தேன். காணேம்.

மன்னி : ஏன் உங்களுக்கு ஒரு செல்ப், சூட்கேஸ் எல்லாம் இருக்கு இல்லை, அதில வைக்க வேண்டியதுதானே.

நான் : இல்லை, அப்புறமா கவரை பிரிக்கலாம்ன்னு வைத்தேன். அது எங்கயே காணேம்,

மன்னி : ஆமா புஸ்தக கட்டையே இன்னமும் பிரிக்கலை. ஹால் டிக்கெட் கவரையா பிரிக்கப் போறிங்க. என்ன அவரசம் எக்ஸாம் அன்னிக்கு காலையில் தேடினால் போதும். எதுக்கும் சோ - கேஸ் அடியில பாருங்க, வேலைக்காரி கூட்டித் தள்ளியிருப்பா.

நான் : (குனிந்து எடுத்துக் கொண்டு) ஆமா மன்னி அடியிலதான் விழுந்து இருக்கு, நாளைக்குப் போயித்தான் எக்ஸாமினர் சைன் வாங்க வேண்டும்.

மன்னி : பேச்சுடா, நல்ல கவனமாத்தான் இருக்கீங்க. கஷ்டகாலம். பிளாஸ்க்கில் டீ போட்டு டேபிள்ல வைச்சுருக்கேன். தூக்கம் வந்தால் குடியுங்க. நாங்க தூங்கப் போறேம். டீ வீ பார்க்காம இந்த இரண்டு நாளாவது ஒழுங்கா படியுங்க.

அண்ணா : ஆமா இரண்டு நாள்ல படிச்சு அய்யா டாக்டர் பட்டம் வாங்கப் போறார்.இதுக்கு கட்டுண பீஸைப் பெருமாள் கோவில் உண்டியலில் போட்டா புண்ணியமாவது கிடைக்கும். சரி இப்பவாது ஒழுங்கா படி.

நான் : (ரொம்ப நல்ல புள்ளை மாதிரி) சரிங்க அண்ணா, குட் நைட் மன்னி.

இரண்டு நாளிலும், அதுக்கு அடுத்த வாரத்திலும் வந்த எக்ஸாமும் இரண்டு நாளில் படித்து. அரியர்ஸ் எதுவும் இல்லாமல் சிங்கிள் அட்டம்ப்டில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணி விட்டேன்.

மன்னி : நம்ப முடியல்லை, படிக்காம இப்படிப் பாஸ் பண்ணிருக்கீங்க, அதும் பர்ஸ்ட் கிளாஸல. வாழ்த்துக்கள். பால் பாயசம் பண்ணிரலாம். போயிப் பிள்ளையாருக்கு ஒரு ரூபாய் போட்டு,அர்ச்சனை பண்ணி வாருங்கள்.

நான் : பாஸ் பண்ணது நான், பெருமாளுக்குப் பாயசமா,பிள்ளையாருக்கு ஒரு ரூவாய்யா?

மன்னி : இந்தக் குதர்க்கம் எல்லாம் வீட்டுக்கு வெளியில பேசறதேட நிறுத்திக்குங்க. அண்ணா காதுல கேட்டா தொலைச்சிடுவார். தெரியுமில்லை. ஆமா எப்படிப் பாஸ் பண்ணீங்க? பிட்டா இல்லை காப்பியடிச்சீங்களா நம்ப முடியல்லையே.

நான் : மன்னீயீயீ!! எனக்கு பிட்டு காப்பி அடிப்பது எல்லாம் புடிக்காது. இது மார்க்கெட்டிங் பேப்பர்ஸ்தானே. நான் செய்யும் வேலை அதுதானே. அப்புறமும் எல்லா சப்ஜெட்டும் நான் யூஜில படித்ததுதான். நிறைய கேஸ் ஸ்டடிதான் கொடுப்பாங்க,கவனமா எழுதினா போதும், பால் பாயசத்திற்கு தேங்கஸ் மன்னி.

மன்னி : சரி மொதல்ல கோவிலுக்குப் போயிட்டு வாங்க,உங்க அண்ணா அன்னிக்கே என்ன சொன்னார் தெரியுமா?, அவன் சொந்தமா எழுதி பாஸ் பண்னீருவான், ஆனா முன்னாலேயே படித்து நல்ல மார்க் எடுத்தா குறைஞ்சா போயிடுவான் என்றார். இப்ப அவருக்கும் சந்தேசம்.

டிஸ்கி : சித்ரா செல்பேனைத் தொலைத்து விட்டு, தேடிய பதிவால் வந்த கொசுவத்திப் பதிவு இது. உங்களுக்கும் கொசுவத்தி சுத்துமே,அப்ப பதிவா போட்டு விடுங்கள். இந்தப் பதிவைப் போடுகின்றேன் என்று சொன்னதும் சித்ரா என்ன சொன்னாங்க தெரியுமா?

// சித்ரா, இனி நீ செல் போன் தொலைப்பே? தொலைப்பே? தொலைப்பே? தொலைச்சாலும், பதிவு போட்டு உலகத்துக்கு, குறிப்பாக அன்னாச்சிக்கிட்டே சொல்லுவே? சொல்லுவே? சொல்லுவே?..... அவ்வவ்வ்வ்வ்........ //

கொஞ்சம் பெரிய பதிவாய் போய்விட்டது,பொறுமையாய் படித்த அனைவருக்கும் எனது நன்றி.

32 comments:

  1. //இரண்டு நாளிலும், அதுக்கு அடுத்த வாரத்திலும் வந்த எக்ஸாமும் இரண்டு நாளில் படித்து. அரியர்ஸ் எதுவும் இல்லாமல் சிங்கிள் அட்டம்ப்டில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணி விட்டேன்.//

    நம்பிட்டேன் சார் , நம்ம ஜெய்லானி மேல சத்தியமா நம்பிட்டேன் சார்

    ReplyDelete
  2. nambitten.. intha mathiri neraya vangi iruken college padikarapa.

    ReplyDelete
  3. கொசுவ‌த்தி அனுப‌வ‌ம் ந‌ல்லா இருக்கு சார்..

    ReplyDelete
  4. //மங்குனி அமைச்சர் said...


    நம்பிட்டேன் சார் , நம்ம ஜெய்லானி மேல சத்தியமா நம்பிட்டேன் சார்//

    அடப்பாவி நீ சத்தியம் பண்ண நாந்தான் உனக்கு கிடச்சேனா!!

    ஒரு வேளை தப்பா போனா அப்புறம் எங்கதி என்ன ஆவறது ?

    ReplyDelete
  5. ஓஹோ! பரீட்சை வந்தா படிக்கிற பழக்கமெல்லாம் இருந்ததா? சொல்லவேயில்லை???

    ReplyDelete
  6. படத்தை பார்த்ததும் நான்கூட,
    வடையை தொலைச்சிடீங்க போலன்னு
    நினைச்சேன்...........:))

    ReplyDelete
  7. அண்ணா திட்டும்போதும் இப்டித்தான் தலைய குனிஞ்சு கிட்டு நின்னீங்களோ??

    நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா.

    ReplyDelete
  8. எப்படியோ படிச்சு பாஸ் ஆகியாச்சு .......

    ReplyDelete
  9. ஜெயலலிதா ( முன்னாள் நடிகை )April 8, 2010 at 5:02 PM

    படிக்கிறதே தப்பு.இதில வேற எக்ஸாமா? Mr.பித்தன்..

    ReplyDelete
  10. சரி.. சரி.. விடுங்க..

    ஆமா. எக்ஸாம் எல்லாம் ,எழுத்தாணி + எழுத்தோலையில தானே
    எழுதினீங்க Mr.பித்தன்..?

    ReplyDelete
  11. கலக்கிட்டீங்க போங்க :-)
    இப்ப இந்தத் தலைப்புல வேற தொடர்பதிவு வந்தாச்சா.. நடக்கட்டும் நடக்கட்டும்..

    ReplyDelete
  12. என்னாது கொசுவத்தி சுத்துதா? ஆளைவிடுங்க அண்ணா தலையே சுத்துது..இப்படி படிச்சி ஆபீசர் ஆனீங்களா அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  13. எப்படி இப்படிலாம் கொசுவத்தி சுத்த முடியுது...எப்படியோ படித்து பாஸாணீங்களே அதுவே சந்தோஷம்...

    ReplyDelete
  14. அப்புறம் ரொம்பவே பயந்த புள்ள மாதிரி சாப்பிடற போஸ் நல்லாயிருக்கு சகோ...

    ReplyDelete
  15. பித்தன்(சுதாகர்) சார்,ரொம்ப விறுவிறுப்பாக இருந்திச்சு,ஹால் டிக்கட்டை வேலைக்காரி பெருக்கி அள்ளி வெளியே கொட்டியிருந்தால் நம்ம மின்மினி மாதிரி எக்ஸாமினருக்கு கல்தா கொடுத்து இருப்பீங்க,கொசுவத்தி பதிவு புதுசாக இப்ப தான் கேள்விபடுறேன்.

    ReplyDelete
  16. // சித்ரா, இனி நீ செல் போன் தொலைப்பே? தொலைப்பே? தொலைப்பே? தொலைச்சாலும், பதிவு போட்டு உலகத்துக்கு, குறிப்பாக அன்னாச்சிக்கிட்டே சொல்லுவே? சொல்லுவே? சொல்லுவே?..... அவ்வவ்வ்வ்வ்........ //

    ....ditto! ha,ha,ha,ha...

    ReplyDelete
  17. நீங்கள் கையில் வைத்திருப்பது, பெருமாள் கோயில் உண்டகட்டியா?..
    அல்லது ஆரஞ்சு பழ பச்சிடியா?.. சொல்லுங்க Mr.பித்தன்..

    மேலும், ”பகிர்ந்துண்டு வாழ்” என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
    ஆனால் , இருவர் உண்ண, நால்வர் வேடிக்கை பார்க்கின்றனரே?

    ஏன்.. என்னால் தாளமுடியவில்லை..
    இதோ, அவர்களுக்காக உழைக்க , எனது ஓய்வை உதறித்தள்ளவும் தாயாராக..
    சாரி Mr.பித்தன்..தயாராக உள்ளேன்..

    ReplyDelete
  18. நீங்கள் கையில் வைத்திருப்பது, பெருமாள் கோயில் உண்டகட்டியா?..
    அல்லது ஆரஞ்சு பழ பச்சிடியா?.. சொல்லுங்க Mr.பித்தன்..

    மேலும், ”பகிர்ந்துண்டு வாழ்” என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
    ஆனால் , இருவர் உண்ண, நால்வர் வேடிக்கை பார்க்கின்றனரே?

    ஏன்.. என்னால் தாளமுடியவில்லை..
    இதோ, அவர்களுக்காக உழைக்க , எனது ஓய்வை உதறித்தள்ளவும் தாயாராக..
    சாரி Mr.பித்தன்..தயாராக உள்ளேன்..

    ReplyDelete
  19. மங்குனி எங்க ஊரு தேவிவிலாஸ் ஸ்பெசல் உளுந்து மிளகு வடை உனக்குத்தான்.நன்றி. அய்யே பாவம் ஜெய்லானி.

    நம்புங்க எல் கே, நான் ஒரு உண்மை விளம்பி, நன்றி. நான் எப்பவும் ஒரு முறை படித்து விட்டு சொந்த நடையில் எழுதும் வழக்கம் உள்ளவன். டப்பி அடித்து வாந்தி எடுக்கும் பழக்கம் இல்லை.

    நன்றி நாடோடி,

    ஜெய்லானி,பயப்படாதிங்க, நான் சொன்னது உண்மை, அதுனால உங்களுக்கு ஒன்னும் ஆகாது. ரெண்டாவது புளுகு அமைச்சர் சத்தியம் எல்லாம் பலிக்காது. நன்றி.

    பரிச்சை வந்தா படிச்சுத்தான் ஆகனும் சேட்டை இல்லை என்றால் மார்க் இல்லாமல் உதை வாங்குவது யாரு?. நன்றி.
    எல்லாரும் படம் நல்லா இருக்குன்னு சொல்றிங்க. இது எங்க அலுவலகத்தில் சுதந்திர தினம் முடித்து ஸ்வீட், மிக்ஸர், காபி குடித்த ஸ்டில். நான் தான் கொடி ஏத்தினேன் என்பதில் பெருமை. நன்றி சைவ கொத்து புரோட்டா.

    அண்ணா திட்டும் போது தலை குனிந்து கொள்வது மட்டும் அல்ல, திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி ஒரு சைலண்ட் வேற. இல்லைன்னா பேச்சுக்கு பேச்சு திட்டு அதிகமாகும். என்ன சுசி, இந்த அண்ணா திட்டினா நீ, சித்ரா,மேனகா,ஜலில்லா எல்லாம் இப்படித்தான் இருக்கனும். இரங்கமணியை டோஸ் விடுற மாதிரி எல்லாம் விடக்கூடாது புரிஞ்சுதா? நன்றி சுசி.

    அதானே, தலைவர் ஸ்டைலில் சொன்னா, எப்படிப் படிக்கிறேம் என்பது முக்கியம் இல்லை,எப்படிப் படிக்கின்றேன் என்பதுதான் முக்கியம், நன்றி சாருஸ்ரீராஜ்.

    படிக்கறது தப்புதான், நான் இதுக்கு முன்னாடி படிச்சு உதை வாங்கின பதிவு ஒன்னு இருக்கு படிச்சுப் பாருங்க. நீங்க ஜெயலலிதா (முன்னாள் நடிகை ) என்றால் எனக்கு தெரியாதா, நான் நீங்க யாருன்னு கண்டு புடித்து விட்டேன். ஆனா அதுக்கு எல்லாம் பட்டா போட்டு சொல்ல முடியாது.

    // எழுத்தாணி + எழுத்தோலையில தானே எழுதினீங்க Mr.பித்தன்..? //

    ஆமாங்க எப்படி கரட்டாக சொன்னீங்க. உங்க கிட்ட கத்துக்கிட்டத நான் எப்படி மறப்பேன்?.

    நன்றி உழவன். இது நம்ம கிளப்பி விட்ட பூதம்.

    என்ன தமிழரசி, இதுக்குதான் உங்களை கவிதை எழுதியவுடன் என் பதிவைப் படிக்காதிங்கன்னு சொன்னேன். ஒரே நேரத்தில் ரெண்டு கொடுமை பண்ணிணா, இப்படித்தான் தலை சுத்தும். எதுக்கும் உங்க அவரை பேன் பண்ணச் சொல்றேன். அப்புறம் நின்னு போய்டும். இதுதான் நான் வெட்டி ஆபிசருக்கு படிச்ச இரகசியம்.
    நல்லா தமிழ் கத்துக்குறே தமிழரசி. இப்பத்தான் ஆ கத்துக்கிட்டு இருக்கீங்களா?. நன்றி தமிழ்.

    இந்த தேடும் கொசுவத்தி எல்லாருக்கும் இருக்கும் என்ற நம்பிக்கைதான். நன்றி மேனகாசத்தியா.

    வாங்க ஆசியாக்கா, அது மாதிரி தொலைத்த கதையும் இருக்கு. (அப்ப அதுவும் பதிவா வந்து தொலைக்குமான்னு, நீங்க புலம்புவது புரியுது என்ன பண்ணுவது, வேற வழி). இந்தக் கொசுவத்திப் பதிவு, நான் கிளப்பி விட்ட ஒன்னு.

    நன்றி ஸ்ரீராம்,

    ஒரு பதிவுக்கு குளு கொடுத்த சித்ராவுக்கு நன்றி. (இதுனால,, உன்னை உதைக்க சுசி,மேனகா,சாரு,தமிழ் எல்லாம் தேடிக் கொண்டு இருப்பதாக தகவல், எதுக்கும் ஜாக்கிரைதையாக இருக்கவும்).

    பின்னூட்டங்களும் ஓட்டுக்களும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  20. ( ஆனா, ஆரஞ்சு பச்சிடி சாப்பிடுனு தொந்தரவு பண்ணக்கூடாது..சொல்லிட்டேன்..)

    சேச்சே நான் ஆரஞ்சுப் பச்சடி எல்லாம் சாப்பிடச் சொல்லி தொல்லை தரமாட்டேன். புலித்திரவம் அல்லது இராஜ மீன் கொத்தி திரவம்தான் நம்ம கவனிப்பு அய்யா.
    சிங்கையில் இருப்பதால் புலித்திரவம் தெரியும் என்று நினைக்கின்றேன். கண்டிப்பாக அழையுங்கள்.

    ஆமா உங்களை சந்திக்க ரோஸ்விக், அப்பாவி முருகு எல்லாம் ஆர்வமாக உள்ளார்கள். நீங்களும் வெளியூரும் ஏன் மறைவாக இருக்கின்றீர்கள். வாங்க பழகலாம்.

    ReplyDelete
  21. சுதாகர் அண்ணாச்சி,இன்னுமும் அதே..அதே..மாதிரியே இருக்கீங்க இல்லே?கொசுவத்தி சூப்பர்.ஏதோ பக்கத்து வீட்டிலே நடக்கும் சம்பவம் போல் நேரில் பார்ப்பதைப் போலிருந்தது.

    ReplyDelete
  22. கொசுவர்த்தி இவ்வளவு நீளமாக சுருள் சுருளாக இருக்கும் என்று நான் நினைக்க வில்லை..

    ஆனாலும் அருமையான நினைவுகள்..

    நன்றி..

    ReplyDelete
  23. வடை வேணும்னா. மங்குனி.. அவங்களுக்கு..
    எனக்கு ஒரு காப்பி குடுத்திருங்க..!!
    ஹால் டிக்கெட், புக்ஸ்.. தொலைத்த அனுபவம் சூப்பர்..
    சொன்ன விதம் நல்லா இருக்குங்க..

    பி.கு. இனிமேல் அடிக்கடி எதாவது தொலைங்க.. நல்லா இருக்கு... :P

    ReplyDelete
  24. நான் வந்திட்டேன்
    உங்கள் ஆக்கங்களை
    உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
    தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
    இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

    நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  25. கொசுவ‌த்தி அனுப‌வ‌ம் ந‌ல்லா இருக்கு சார்..:)LOL

    ReplyDelete
  26. ஸாதிகா said...

    சுதாகர் அண்ணாச்சி,இன்னுமும் அதே..அதே..மாதிரியே இருக்கீங்க இல்லே?
    //

    இதில ஏதும் உள்குத்து இல்லையே Mr.பித்தன்..

    ReplyDelete
  27. nalla anubavam.... mr. pitthan...

    intersting story.....

    natpudan...
    kanchi murali....

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.