Thursday, December 24, 2009

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 3

அந்த இருளில் கையில் டார்ச்சு லைட்டுடன் எங்களின் பயணம் தொடர்ந்தது. இனி வெள்ளைப் பிள்ளையார் கோவிலில் இருந்து பாம்பாட்டி சுனை, மற்றும் கைதட்டி சுனை, சீதாவனம் வரை, நூறடிகளுக்கு மலைப்பாதையும்,பின்னர் பத்துப் படிகளும் இருக்கும். பாதையும்,படிகளும் மழையினால் ஏற்ற இறக்கமாகவும்,சீர்குழைந்தும் இருக்கும். மெதுவாகவும்,பார்த்தும் நடக்க வேண்டும். சில சமயம் பாறைகளின் மீது நடக்கும் போது அது வழவழப்பாக இருந்தால், நல்லாக் காலை ஊன்றிப்,பின்னர் மறுகாலை எடுத்து வைக்க வேண்டும். வழுக்கி விடாமல் கவனமாக நடக்க வேண்டும். கையில் ஊன்று கோலை கொட்டியக ஊன்றி முட்டுக் கொடுத்து, ஏறி இறங்க வேண்டும். இப்படியாக நாங்கள் பாம்பாட்டி சுனையை அடைந்தோம்.

பாம்பாட்டி சுனை என்பது பாறைகளின் இடையில் கசிந்து வரும் தண்ணீர் ஆகும். நல்ல சுவையான, தெளிந்த சுத்தமான தண்ணீர், இங்கு மினரல் வாட்டர் போல காசில்லாமல் கிடைக்கும். இந்த தண்ணீர் தாகம் தீர்ப்பதுடன் ஆரோக்கியத்தையும், நிறைவையும் தரும். இந்த சுனையில், நீர் வரும் பாதையில் மூங்கில் குச்சியை பிளந்து(மூங்கில் தப்பை) சொருகி இருப்பார்கள். அதில் பைப்பில் வருவது போல தண்ணீர் நில்லாமல் கொட்டிக் கொண்டு இருக்கும். இந்த சுனைக்கும் பாம்பாட்டி சித்தருக்கும் சம்பந்தம் இல்லை. இந்த சுனையில் தண்ணீர் வரும் பாறையின் அருகில் காதை வைத்துக் கேட்டால் பாம்பு சீறுவதைப் போல உஷ், உஷ் என்ற சத்தம் கேக்கும். ஆதலால் இதுக்கு பாம்பாட்டி சுனை என்ற பெயர் வந்தது. இங்கு நாங்கள் அமர்ந்து இரவு உணவுவாக சப்பாத்தியும்,தக்காளித் தொக்கும் சாப்பிட்டேம்.அரைமணி நேர ஓய்வுக்குப் பின்னர் நாங்கள் கைதட்டி சுனை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு கைதட்டி சுனை அடைந்து,அங்கு சிறுது நேரம் ஓய்வு எடுத்தோம். கைதட்டி சுனை என்பது மூன்று பெரிய பாறைகளுக்கு நடுவில் ஒரு மூங்கில் தப்பையைச் சொருகி வைத்துருப்பார்கள். அதில் குழாயில் கொட்டுவது போல தண்ணீர் கொட்டும். இந்த தண்ணீர் பாம்பாட்டி சுனைத் தண்ணீரை வீட அதிகமாகவும், சுவையாகவும் இருக்கும். ஒரு காலத்தில் இங்கு பாறையில் கையைக் குவித்துப் பிடித்து அதில் கொட்டும் தண்ணீர் எடுப்பது வழக்கம்.ஆதலால் இது கைகட்டி சுனை என்றும், இங்கு பாதை ரண்டாக இரண்டாகப் பிரியும். ஒரு பாதை காட்டுக்குள்ளூம்(கழிக்க), மறு பாதை மலைக்கும் செல்லும்,ஆதலால் இது கைகாட்டி சுனை என்றும் அழைக்கப் பட்டு, இப்போது கைதட்டி சுனை என்றாகி விட்டது.(கை தட்டினால் தண்ணீர் வரும் எனக் கதையும் உண்டு)

இங்கும் ஒரு கடை இருக்கும், ஆரஞ்சு மிட்டாய்,மாங்காய்,நெல்லிக்காய்,மிக்சர்,நிலக்கடலை போன்றவற்றை விற்பார்கள். சூடாக பால் இல்லாத சுக்கு டீ, மற்றும் சுக்கு காப்பி கிடைக்கும். தூங்குவதற்க்கு குடிசையும் இருக்கும். இங்கு நாங்கள் ஒரு மணி நேர ஓய்வும்,முக்கால் மணி நேர தூக்கமும் போட்டேம். பின்னர் அங்கு இருந்து சீதாவனம் நோக்கிப் பயணத்தை தொடர்ந்தோம். ஏறுவதற்க்கு மிகச் சிரமமான, அதைவீட இறங்குவதற்க்கு கடினமான வழுக்குப் பாறை பயணம் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம். தொடரும்.

டிப்ஸ் : நண்பர் இராஜேந்திரன் அவர்கள் நாளை இங்கு செல்வதால் மலையாத்திரைக்குச் செல்ல அவசியமானவைகளை டிப்ஸாக செல்கின்றேன். ஒரு தோல் பை ஒன்றும், ஒரு பெரிய வாட்டர் கேனும், தண்ணீர் குடிக்க ஒரு பிளாஸ்டிக் வாட்டர் கேனும் எடுக்கவும். பெரிய வாட்டர் கேனில் வரும் போது ஆண்டி சுனை தீர்த்தத்தை வீட்டில் உள்ளவர்களுக்காகப் பிடித்து வரலாம்.நல்ல பெரிய டார்ச் லைட் மற்றும் புதிய பாட்டரிகள் பெருத்தப் பட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்(இரவில் ஏறினால்). மழை பெய்தாலே, அல்லது இரவில் தங்கினால் படுக்க பாலித்தீன் ஷீட் அல்லது உரச் சாக்கு எடுத்துக் கொள்ளவும். கையில் பிரசாத நைவேத்தியத்திற்க்கு, முந்திரி, உலர் திராட்சை, கற்கண்டு,பேரிச்சை,அவல்,நாட்டுச் சக்கரை எடுத்துக் கொள்ளவும். வழியில் தொண்டை வறட்சிக்கு ஆரஞ்சு மிட்டாய், பாப்பின்ஸ், மாங்கோ பைட்ஸ் அல்லது கலோரி தரும் எக்லர்ஸ் சாக்லோட்டுகள்,குட் டே பிஸ்கட்கள் எடுத்துச் செல்லவும். கண்டிப்பாய் குளுக்கோஸ் பாக்கெட் எடுத்துக் கொள்ளவும்.உணவுக்குக் கூடுமான வரையில் வயிற்றுக் தெந்திரவு தராத காரமற்ற உணவுகள் நன்று. என்னைப் பொறுத்த வரை சப்பாத்திதான்(காரமில்லாத தக்காளித் தொக்கு) சிறந்தது. கட்டுச் சாதங்கள் வயிற்றில் பொருமல்,அல்லது வயிறு உப்புசம் ஏற்படுத்தும். கால் அல்லது அரை வயிறு உணவு சிறந்தது. மலை அடிவாரத்தில் தான் கழிப்பிடம் உள்ளது. மலை ஏறினால் அடுத்த நாள்தான் மீண்டும் வர முடியும். ஆதலால் உணவுக் கட்டுப் பாடு அவசியம். இல்லாவிட்டால் சுனை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குத்தான் செல்லவேண்டும். பின்னும் களைப்படைய வைக்கும். ஆதலால் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். காதுக்கு மப்ளரும்,முடித்தால் ஸ்வெட்டர் ஒன்றும் எடுத்துக் கொள்ளவும். அல்லது கனமான டீ ஸர்ட் போடவும். மலை ஏறும் போது வெற்று உடம்பும், தங்கும் போது டீ ஸ்ர்ட்டும் போட்டுக் கொள்ளலாம். நடக்கும் போது மிகவும் வேர்க்கும், தொண்டை வறளும். நிற்கும் போதும், தங்கும் போதும் மிகவும் குளிரும் இடம் அது.இளவயதினர் அங்கு விற்கும் ஊன்று கோலான மூங்கில் கழி இல்லாமல் ஏறிவிடுவார்கள். ஆனால் ஏறுவதற்க்கு வீட றங்குவதற்க்கு ஊன்று கோல் மிக அவசியம். இது நம் காலின் சுமையைக் குறைப்பதுடன், கால் ஆடுதசையின் பிடிப்பைக் குறைக்கும். கழி இல்லாமல் பயணம் செய்தால் விழுவதற்க்கு அதிகமான சாத்தியங்களும், அடுத்த ஒரு வாரம் கால் பிடிப்பும் நிச்சயம். ஆகவே உங்களால் முடிந்தாலும் கழி வைத்துக் கொள்வது நன்று.

முக்கியமான டிப்ஸ்:
குண்டானவர்கள், என்னைப் போல தொப்பை உடையவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் செங்குத்தாக இறங்கும் போது முன்னேக்கி விழ வாய்ப்புக்கள் அதிகம். ஆதலால் அவர்கள் இறங்கும் போது முன்புறமாக தடியைக் குறுக்கு வாட்டில்(கவனிக்கவும் உடலின் முன், உடலுக்கு குறுக்கு வாட்டில்) ஊன்றி இறங்கவும்.நன்றி.

14 comments:

  1. இந்த சுனையில் தண்ணீர் வரும் பாறையின் அருகில் காதை வைத்துக் கேட்டால் பாம்பு சீறுவதைப் போல உஷ், உஷ் என்ற சத்தம் கேக்கும். ஆதலால் இதுக்கு பாம்பாட்டி சுனை என்ற பெயர் வந்தது. ............நல்லா வைக்குறாங்க பேரு....... அருமையான தகவல்களுடன், நல்ல பதிவு.

    ReplyDelete
  2. சப்பாத்தியும் தக்காளித்தொக்கும் , ஆஹா என்ன ருசி, என்ன காம்பினேஷன்.

    ReplyDelete
  3. நல்ல பயண அனுபவம். எங்களைப் போல அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இதன் மூலம் இப்பயணம் பற்றி அறிய உதவுகிறது. :-)

    ReplyDelete
  4. பயண அனுபவமும் டிப்ஸும் மிகவும் உபயோகமாக இருக்கும்

    ReplyDelete
  5. புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

    http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

    ReplyDelete
  6. நீண்ட நாட்களாக என்னக்கு இங்கே செல்லவேண்டும் என்று ஆசை..

    ReplyDelete
  7. ரொம்ப நல்ல பதிவு அண்ணா.

    புதுமையா இருந்துது படிக்க.

    உங்க நண்பர் பயணம் நல்லபடி அமையட்டும்.

    ReplyDelete
  8. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. வருட இறுதிக் கணக்கு சமயம் ஆதலால் மிகவும் வேலைப்பளு இருக்கின்றது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். மீண்டும் சந்திக்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  9. நல்ல இடுகை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. நானும் இங்கே எதிர்பாராமல் போய் வந்ததைப் பற்றி எழுதியுள்ளேன்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு

    அன்புடன்
    ராம்

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  11. உங்க டிப்ஸ் எல்லாமே மிகவும் உபயோகமானது ....

    ReplyDelete
  12. பாம்பாட்டி சுனை, கைகாட்டி சுனை பெயர்களே நன்றாக இருக்கிறதே.

    ReplyDelete
  13. அங்கு இனி செல்ல இருப்பவர்களுக்கு அருமையான டிப்ஸ்கள் கொடுத்து இருக்கீங்க.

    பாம்பாட்டி சுனை கேள்விபடாததது விசித்திரமாக இருக்கு.

    இது போன வருடம் என் மாமி வந்த போது சொன்னார்கள். ஆண்டவன் சொல்லியிருக்கிறான், மலைகள், பாறைகளில் காது வைத்து கேட்டால் இது போல் சத்தம் வரும் என்றூ. அவைகளுக்கும் உயிர் இருக்கு என்று.

    நீஙக்ள் சொல்வதை பார்த்தால் ஏறுவது சுலபம் ஆனால் இறங்கும் போது தான் ரொம்ப கழ்டம் என்று தோணுது.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.