Friday, December 18, 2009

மென்மையான சுரைக்காய் மற்றும் தக்காளி தோசை

சமையல் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு, அதுனால ஒரு வித்தியாசமான பதிவு போடலாம்ன்னு. கிராமத்துல பிறந்த பெண்களுக்கு இந்த பதிவு ஒன்னும் புதுசா இருக்காது. இன்றைய பதிவு மென்மையான சுரைக்காய் தோசை. இது திருச்சிப் பக்கம் கிராமங்களில் செய்யும் தோசை. அந்த ஊரு அம்மா ஒருத்தர் எங்க அண்ணிகிட்ட சொல்லும் போது நான் ஒட்டுக் கேட்டுப் போட்ட பதிவு இது.


சுரைக்காய் தோசை : --

தேவையான பொருட்கள் :
அரிசி- 3 கப் அல்லது உங்கள் குடும்பத்திற்க்கு தேவையான அளவு,
ஒரு பிடி துவரம் பருப்பு
சுரைக்காய் ஒன்று. (பெரியதாய் இருந்தால் பாதியளவு).
உப்பு தேவையான அளவு.

செய்முறை : அரிசியையும் துவரம் பருப்பையும் ஒன்றாக இட்டு, தண்ணீரில் ஒரு ஜந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
சுரைக்காயை தோலுரித்து அதன் சதைப் பகுதிகளை மட்டும் தனியாக வெட்டி எடுத்துப் பின்னர் மாவு அரைக்கும் போது சுரைக்காயும் சேர்த்து அரைக்கவும். மாவு புளிக்க வைத்து தோசை ஊற்றினால் மிகவும் மென்மையான சுவையான சுரைக்காய் தோசை ரெடி.

தக்காளி தோசை : --

தக்காளி தோசை நான் ஊருக்கு போய் இருந்த பொழுது என் மூன்றாவது அக்கா சமைத்த தோசை இது. அன்று நான் முழு விரதம் ஆகையால் நான் சாப்பிடவில்லை. ஆதலால் நீங்கள் சமைத்து நல்லா வந்தா பார்சல் அனுப்பவும். அவரிடம் நான் அளவு கேட்டு இட்ட பதிவு இது.

தேவையான பொருட்கள் :
அரிசி - மூன்று கப்
உளுந்து மூன்று கப்,
துவரை ஒரு கப்
தக்காளி எட்டு
வெங்காயம் இரண்டு.
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்,
பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை : முதலில் தக்காளியை வெந்நீரில் இட்டு தோலை உரித்து விடவும், பின்னர் நாம் உளுந்து மாவு மற்றும் அரிசி மாவு ஆட்டி(வழக்கமாக மாவு அரைப்பது போல), மாவை எடுக்கும் தருவாயில் மூன்று அல்லது நாலு தக்காளியை மாவில் விட்டு ஆட்டவும். சில சுற்றுக்களில் தக்காளி அரைத்ததும் மாவை எடுத்து, சில மணி நேரம் மாவை புளிக்க விடவும்.வெங்காயத்தை சிறிதாக அரிந்து, வாணலியில் இட்டு வதக்கிப், பின்னர் அதில் மீதம் உள்ள தக்காளியை நறுக்கி அல்லது பிய்த்து போட்டு,மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, மாவில் கலக்கி தோசை இடவும். செய்து பார்த்துப் பின்னூட்டம் இடவும். நன்றி.

நீங்கள் அனைவரும் தரும் ஆதரவு மற்றும் தைரியத்தால் நான் திங்கள் முதல் மீண்டும் ஒரு படங்களுடன் கூடிய தொடர் பதிவு ஆரம்பிக்க உள்ளேன்.சகோதரிகள் அனைவருக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் இந்தத் தொடர் ஒரு பரிசு. குறிப்பாக பெண் பதிவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. அவர்கள் சென்று பார்க்க முடியாத ஒரு இடத்தையும், அந்த இடத்தில் நடக்கும் ஒரு அற்புதத்தையும் நான் பதிவாக இடவுள்ளேன். எனது அருமை பதிவுலக சகோதரிகளுக்கு இத் தொடர் ஒரு பரிசாக அமையும். தங்கள் அனைவரும் தொடரின் அனைத்தையும் படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இது ஒரு ஆன்மீகம் மற்றும் பயணத் தொடர் ஆகும். வாருங்கள் திங்கள் முதல் பயணத்தைத் தொடருவேம். நன்றி. தங்கள் ஆதரவை நாடும் உங்களின் சகோ. சுதாகர்.

17 comments:

 1. தக்காளி தோசை நல்லாருக்கு ....

  ReplyDelete
 2. தக்காளி தோசை கேள்விபட்டதில்லை இதுவரை!

  ReplyDelete
 3. இரண்டுமே கேள்விபடாத தோசை வகைகள் ..பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .
  ரொம்ப ஆவலாக இருக்கு , என்ன பதிவு என்று தெரிந்து கொள்ள!

  ReplyDelete
 4. வித்தியாசமா இருக்கு. பகிர்தலுக்கு நன்றி

  ReplyDelete
 5. வித்தியாசமா இருக்கு. பகிர்தலுக்கு நன்றி

  ReplyDelete
 6. இரண்டுமே கேள்விபடாத தோசை வகைகள் ..பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

  ReplyDelete
 7. சுரைக்காய் தோசை வித்தியாசமா இருக்கு கேள்விபடாத தோசை!!

  ReplyDelete
 8. இங்க சுரைக்காய் கிடைக்காதுங்கண்ணா.

  தக்காளி தோசை ட்ரை பண்றேன்.

  ReplyDelete
 9. தக்காளி தோசை செய்து பாக்கணும்.
  நல்லாருக்கும்ன்னு நினைக்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 10. பித்தன் உங்களை நம்பித் தான் இந்த விஷப்பரிட்சையில் இறங்கப் போறேன்...ஹிஹிஹி சும்மா இத அப்படியே அக்காகிட்ட சொல்லப்படாது சரியா?

  ReplyDelete
 11. தக்காளி தோசை நான் அடிக்கடி செய்வது தான் ஆனால் சுரக்காய் தோசை செய்ததில்லை,


  புது வகையான ஒரு தோசை வகை உங்கள் மூலம் அறிந்து கொண்டதில் மகிழ்சி.

  ஒரு தோசை போட்டோவும் இனைத்திருந்தால் நல்ல இருக்கும்,

  ReplyDelete
 12. நான் இருப்பது பாலைவனத்தில் இந்த மாதிரி தோசையை பத்தி பதிவு போட்டு எங்களோட பசியை இப்படி கிளப்பி விடுகிறேர்கள...

  ReplyDelete
 13. நன்றி மகா,
  நன்றி சந்தனமுல்லை,
  நன்றி சாருஸ்ரீராஜ்,
  நன்றி சின்ன அம்மினி,
  நன்றி நினைவுகளுடன் நிகோ, தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்,
  நன்றி சுஸ்ரீ
  நன்றி சுசி, எப்படி உள்ளீர்கள்?,
  நன்றி ஹேமா,
  நன்றி தமிழரசி, நான் என் அக்காவிடம் சொல்லிவிட்டுதான் வந்தேன், உங்களை நம்பி பதிவு போடுகின்றேன், யாரும் உதைக்காமல் இருக்கனும் என்று.
  நன்றி ஜலில்லா, அது அவர் கூறக் கேட்டு இட்ட இடுகை. நான் அப்ப மலைக்கு கிளம்ப பிஸியாக இருந்ததால் புகைப்படம் எடுக்கவில்லை.
  நன்றி புதியவன், தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்,
  பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 14. அருமையான பதார்த்தத்தை யதார்த்தமாக வழங்கியிருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்! இனி ​தொடர்ந்து படிக்கிறேன், ​செய்தும் பார்க்கிறேன்.

  ReplyDelete
 15. நன்றி ஜெகனாதன், தங்களின் வரவும், பின்னூட்டமும் மிக்க மகிழ்வை அளிக்கின்றது.

  ReplyDelete
 16. ம்\உளுந்து முன்று கப் பாஆஆஆ???

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.