Monday, September 28, 2009

ஆயுத பூஜை - மலரும் நினைவுகள்

இம் இப்பதான் ஆயுத பூஜை முடிஞ்சு இருக்கு, இந்த ஆயுத பூஜை வந்தாலே சிறுவயது பசுமையான நினைவுகள் ஞாபகம் வரும்.
நான் ஆறாம் வகுப்பு படிக்கறப்ப எங்க ஊருல டாக்ஸி ஸ்டாண்டுல ஆயுத பூஜை கொண்டடாடுவாங்க. மொத்தம் ஒரு இருனூறு டாக்ஸிகள் இருக்கும். ரொம்ப விமர்சரியாக கொண்டாடுவார்கள்.

சாயங்காலம் மொதலே ஆரம்பித்துவிடுவார்கள் மொத்த டாக்ஸி ஸ்டாண்ட் புல்லா கலர் டுயுப் லைட் போட்டு, ரொடியோல பக்தி பாட்டு போட்டுவிடுவாங்க, எல்லாரும் அந்த பகுதி முலுக்க வேப்பிலை தோரணம் கட்டி மைக்சுவுண்ட்ஸ் போட்டு அதுல எல் ஆர் ஈஸ்வரி பாட ஆரம்பிச்சா பண்டிகை களை கட்ட ஆரம்பிச்சுரும். எல்லா காரு ஓட்டறவங்களும் அவங்க அவங்க காரை நல்ல துடைச்சி பொட்டு, பூ, மாலை எல்லாம் வச்சி காருக்கு முன்னாடி இலைபோட்டு அவங்க வீட்டுல பண்ண சுண்டல், பொங்கல், பொரி அவல் வைத்து பூஜை பண்ணுவாங்க.

பூஜை முடிச்சதும் எல்லா காரும் ஒன்னா ஊருக்குள்ள ஹாரன் அடிச்சு பவனி வருவாங்க, பாருங்க அதான் இந்த நாளின் முக்கியமே(அந்த வயசுல எங்களுக்கு இதான் முக்கியம்). நாங்க இப்படி எந்த காருல போறதுனு ஒரு போட்டி. இதுக்காக நாங்க ஒரு வாரத்திற்கு முன்பே எதாது ஒரு டிரைவரை காக்கா புடிக்க ஆரம்பிப்போம். அந்த அன்னிக்கு போய் அவருக்கு எல்லா உதவியும் பண்ணி காருல ஏறிப்பம். எங்க அண்ணன் உடைய நண்பர்கள் சிலர் கார் ஓட்டுனர்களாக இருந்தால் இந்த பிரச்சனை எதுவும் எனக்கு இல்லை. எங்க அண்ணன் நண்பர் மற்றும் எங்க வீட்டிற்கு அடிக்கடி கார் ஓட்டும் கனகராஜ் அண்ணன் காருலதான் நாங்க ஊர் சுத்தி வருவம். இது ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை தொடர்ந்தது. அதுக்கு அப்புறம் இது பேர் அடிக்க ஆரம்பித்துவிட்டதால் நகர்வலம் செல்வது இல்லை.(நாங்க பெரிய மனுசன் ஆகிட்டம் இல்லை).

இந்த நகர்வலம் முடிந்து கோவையில் இருந்து ஆர்கொஸ்ட்ரா கொண்டுவந்து போடுவார்கள். நிறைய தடவை கோவை எலைட் அல்லது சேரன் அல்லது கீதாலயா பார்ட்டிதான் வரும். அப்ப எல்லாம் மொதல் பாட்டு சங்கரா பரணத்துல வர்ற சங்கரா அல்லது எதாது பிள்ளையார் பாட்டு பாடுவாங்க. ரெண்டாவது அகர முதல எழுத்தலேல்லாம் அறியவைத்தாய் தேவி(சரஸ்வதி சபதம்)பாட்டும் பாடிவிட்டு, மொதல் சினிமா பாட்டா அப்ப ரிலிஸ் ஆன ரஜினி பாட்டு பாடுவாங்க. ரஜினி பாட்டுத் தவிர வேறபாட்டு பாடுனா கலாட்ட பண்ண நாங்க மொத வரிசையில உக்காந்து இருப்பம். அந்த பாட்டு முடிஞ்ச உடன பக்கத்துல எங்காவது பொட்டிக்கடை வாசல்ல தம் போட்டுக்கிட்டு கச்சேரி கேப்பம்.ஒரு ரெண்டு, மூனு தம் அல்லது ஆறு, ஏழு பாட்டு முடிஞ்ச உடன நல்ல பிள்ளையா வீட்டுக்கு வந்து வாசத்திண்ணைல படுக்கைய போட்டு படுத்துட்டு பாட்டுக்கேப்பன். இதுல முக்கியமான ஒன்னு என்னன்னா இப்படி ஆர்கொஸ்ட்ரா போனாலும் சரி, இல்ல ரெண்டாவது ஆட்டம் படத்துக்கு போனாலும் சரி. வாசத்திண்ணையில படுக்கையைப் போட்டுட்டு போனாலும், வீட்டுக்கு வந்தவுடன வெளியில இருந்து அம்மா நான் வந்துட்டேன் சொல்லி குரல் குடுக்கனும், அவங்களும் கதவை திறக்காம சரிப்பா பாத்து படுத்து தூங்கு என்று சொல்லி தூங்கபோவார்கள், அப்படி சொல்லாம படுத்துட்டம் வையுங்க எப்படியும் அடுத்த பத்து நிமிசத்தில் வந்து ஏம்பா சொல்லிட்டு படுக்கறது இல்ல அம்மா பையனா காணமுன்னு தூங்காம படுத்துஇருக்கன்னு சொல்லுவாங்க. அதுனாலையே நான் அவ்வளவா ரெண்டாது ஆட்டம் படம் போவது இல்லை. அப்படியும் போனா அது சகீலா படம் மட்டும்தான், ஏன்னா அதுதான் இண்டெர்வெல் முடிஞ்சவுடன எந்திரிச்சு வந்துராலாம் இல்ல.

2 comments:

  1. Nice.. தமிழ்மணம், தமிழிஷ்ல சேத்து விடுங்களேன். இன்னும் நெறயப் பேர் வந்து படிப்பாங்க.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வுங்க... :)))

    சிறு வயது நினைவுகள் எப்போதுமே சிறப்பானவை...
    இந்த வருடம் எப்படி கொண்டாடினீர்கள்????

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.