Friday, September 25, 2009

பிரிவின் ஆற்றாமை

அதிகாலை நேரத்தின் நிசப்த்தம்
உன் தெள்ளிய மொளனத்தையும்
காலை நேர வளரும் இளம்சூரியன்
உன் அழகிய சிவந்த முகத்தையும்
காலைப்பொழுதின் பரபரப்பு
உன் இடைவிடா மொழிகளையும்
மதியத்தின் சூரிய வெம்மை
உன் அழகான கோபத்தையும்
மதியத்தின் பசிவேதனை
உன் உடன் கழித்த நினைவையும்
மாலைச் சூரியனின் இளவெம்மை
உன் உடன் இருந்த அருகாமையும்
அந்தி நேரச் சூரியன் ஒளி
உன் அழகான நிறத்தையும்
பொளனம்மி இரவின் முழு நிலவு
உன் அழகான முகத்தையும்
இரவு சந்திரனின் குளுமை
உன் அருகாமையின் அமைதியும் தர
இவை எல்லாம் கனவாய்போய், நிஜமாய்
ஏனோ நிலவற்ற அம்மாவாசை இரவு
உன் பிரிவை கூட்டி அழவிடுகிறது.

4 comments:

  1. இவ்வோரு இரண்டாவது வரியின் முதல் எழுத்தும் ”உ” ஆரம்பிக்கும் அரசியல் என்ன?

    உன் என்றால் உண்மையிலேயே ஒரே ஒரு பெண் தானா?

    ReplyDelete
  2. இவ்வோரு இரண்டாவது வரியின் முதல் எழுத்தும் ”உ” ஆரம்பிக்கும் அரசியல் என்ன?

    உன் என்றால் உண்மையிலேயே ஒரே ஒரு பெண் தானா?
    உ என்பது சீர் கொண்டு அமைக்கபொற்றது.
    அடி அமையவில்லை சரி சீர் ஆவது அமையட்டும் என்று எழுதினேன்.
    உன்மையில் ஒன்னுதான் தலை,அதுக்கே வாழ்க்கை வெறுத்துப்போச்சு

    ReplyDelete
  3. அண்ணே கவிஜையெல்லாம் எழுதுவிங்களா ?

    அட்டகாசம்

    ReplyDelete
  4. அண்ணே கவிஜையெல்லாம் எழுதுவிங்களா ?

    அட்டகாசம்

    அப்ப அப்ப எதாது கிறுக்குவன் அண்ணே. நன்றி

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.