Tuesday, March 9, 2010

ஒப்புதல் வாக்குமூலம் பதின்மம் தொடர் - நிறைவு


நான் எட்டாவது படிக்கும் சமயம் எனது நண்பன் பிரபாகரனின் வீட்டில் பொழுதைப் போக்குவேன், கலந்து படித்தல் மற்றும் விளையாடுதல் ஆகியன இருக்கும். அவனின் அம்மா எங்கள் இருவரையும் நல்லாக் கவனித்துக் கொள்வார்கள். நாலு குடும்பங்கள் ஒன்றாக இருக்கும் கூட்டுக் காலனி அது. பிரபாகரன் அம்மா, ஜெயா அக்கா,வசுமதி அம்மா மற்றும் யசோதா அம்மா (ஜெயாக்காவின் அம்மா) ஆகியோர் அமர்ந்து ஒன்றாகக் கதை பேசிக் கொண்டு இருப்பார்கள். தொலைக்காட்சிகள் வராத சமயம் அது. கூடிப் பேசுதல் மட்டும்தான் அவர்களின் பொழுது போக்கு. இப்படிப் பேசும் போது சில சமயம் நான் மாட்டிக் கொள்வேன். அப்போது ஜெயா அக்காவிற்க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டுருந்தார்கள். அது பற்றியும் பேசுவார்கள்.

பிரபாகரன் அம்மா : சுதா நீ யாரைடா கல்யாணம் பண்ணிக்குவ?

நான் : நான் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்.

வசுமதி அம்மா: ஏண்டா யாரையும் கல்யாணம் பண்ணிக்கலைன்னா, யார் உனக்கு சோறு ஆக்கிப் போடுவா?

நான் : எங்கம்மா சாப்பாடு போடுவாங்க.

யசோதா அம்மா : அவங்க எத்தனை நாளுக்குத்தான் போடுவாங்க, நாளைக்கு நீ யாரையாது கல்யாணம் பண்ணித்தானா ஆகனும்.

நான்: அது அப்ப பார்ப்போம், நான் எங்க அக்கா பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன். ஆனா அவளுக்கு சமைக்கத் தெரியாது.

பிரபாகரன் அம்மா: அது சரி, அய்யா ரெடியாத்தான் இருக்காரு.

ஜெயாக்கா : டேய் நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோடா, நான் நல்லா சமைப்பேன்.

நான்: ஹிகும் மாட்டேன். நான் கல்யாணம் பண்ணவே மாட்டேன்

வ அம்மா : ஏண்டா அக்காவை உனக்கு பிடிக்காதா.

நான் : ரொம்ப பிடிக்கும், ஆனா அவங்க பெரியவங்க.

ஜெயாக்கா : டேய் பரவாயில்லைடா,

பி அம்மா: பாருடா அவளே சொல்லிட்டா, பேசாம கல்யாணம் பண்ணிக்கடா?

ய அம்மா : ஆமாண்டா எனக்கும் மாப்பிள்ளை பார்க்கின்ற வேலை மிச்சம்.

நான் : சரி நான் வேலைக்கு போய்ட்டு, அப்புறமா ஜெயாக்காவைக் கல்யாணம் பண்ணிக்குறேன்.

வ அம்மா: டேய் அதுக்குள்ள அவளுக்கு வயசு ஆகிவிடும்.

நான் : பரவாயில்லை, இப்பக் கல்யாணம் பண்ணினா அப்புறம் மளிகை சாமான் வாங்க முடியாது.

பி அம்மா: டேய் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போற.

நான் : படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்குவேன்.

வ அம்மா: அப்புறம்,

நான் : நான் சம்பாதித்துக் கொடுப்பேன், ஜெயாக்கா எனக்கு சமைத்துப் போடுவார்கள்.

ஜெயாக்கா : டேய், புடவை துணி மணி எல்லாம் வாங்கித் தரமாட்டாயா?

நான் : ஓ நிறைய வாங்கித் தருவேன்,

பி அம்மா: அப்புறம் என்ன ஜெயா, பிரச்சனை இல்லை. (அக்காவின் முகத்தில் வெட்கம்).

ய அம்மா : டேய் என் பொண்ணைக் கட்டனும்னா நிறைய சீர் எல்லாம் செய்யனும்.

நான் : ஓ நான் நிறைய சம்பாதித்து செய்யறன்.

வ அம்மா: ஒன்னும் பிரச்சனை இல்லை, டேய் கல்யாணம் பண்ணினா மத்த வேலை எல்லாம் செய்யனுமே.

நான் : அது ஒன்னும் பிரச்சனை இல்லை, எங்க வீட்டுல மாதிரி, வேலைக்காரி வச்சுக்கலாம்.

பி அம்மா : ஜெயா, பையன் எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கான்.

ஜெயாக்கா : போங்க அக்கா, நீங்க ஒன்னு.

ய அம்மா: டேய் என் பொண்ணை கண்ணு கலங்காம காப்பாத்துவாயா?

நான் : இம்ம் சூப்பரா வச்சுக்குவேன்.

பி அம்மா : ஆகா இப்பவே ரெடியா இருக்கான். ஆமாண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டா இராத்திரி எல்லாம் இவகூடத்தான் இருக்கனும் தெரியுமில்லை.

ஜெயாக்கா : அக்கா! பிளிஸ், என்னது விவஸ்த்தை இல்லாமல்.

நான் : அது எல்லாம் முடியாது, நான் எங்க அம்மா பக்க்தில் தான் தூங்குவேன்.

வ அம்மா : அது எப்படிடா, கல்யாணம் பண்ணினா இவகூடத்தான் இருக்கனும். இப்ப நாங்க எல்லாரும் அம்மா கூடவா இருக்கின்றேம்.

நான் : அது எல்லாம் தெரியாது, நான் அம்மாவின் பக்கத்தில் தான் இருப்பேன்.

பி அம்மா : போச்சுடா, அப்படி எல்லாம் கூடாது, நீ அக்கா கூடத்தான் இருக்கனும், அப்புறம் மத்த வேலை எல்லாம் யாரு பார்ப்பாங்க.

நான் : அப்புறம் என்ன?. சாப்பிட்டாத் தூங்க வேண்டியதுதான, அவங்க, அவங்க அம்மாகிட்ட தூங்கட்டும், நான் என் அம்மாவிடம் தூங்குவேன்.

வ அம்மா : அது எப்படிடா, கல்யாணம் பண்ணினா இவகூடத்தான் தூங்கனும்.

நான் : சரி அப்படின்னா, நான் எங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வந்து தூங்கறேன்.

வ அம்மா : அப்புறம் என்ன ஜெயா! நல்ல நாளு பார்க்க வேண்டியதுதான்.

ஜெயா அக்கா : சீய் சும்மா இருங்க அக்கா, சின்னப் பையன் சொல்றான்னு.

நான் : பராவயில்லை அக்கா, நான் எங்க வீட்டுல சொல்லிட்டு வரறன்.

வ அம்மா,பி அம்மா : சிரிப்புடன், அப்புறம் என்ன ஜெயா பையன் ரெடி.

ய அக்கா : சும்மா இருங்கடி, அவன் வீட்டுல போயி எதாது உளறி வைக்கப் போறான்.
லஷ்மியக்கா (எங்க அம்மா பெயர்) பெத்த பசங்க ஒன்னு ஒன்னு தங்கம். நல்ல பசங்க.

பி அம்மா : சரி சுதா, முதல்ல நீ போய்ப் படி, அப்புறமா ஜெயாக்காவைக் கல்யாணம் பண்ணிக்கலாம்.

நான் : சரிங்கம்மா. நான் போயிட்டு வறேன்.

ஜெயாக்கா : டேய், என்னை மட்டும் மறந்துடாதடா .

நான் : இல்லையக்கா, மறக்க மாட்டேன். நான் படிச்சு வேலைக்குப் போயிட்டு வந்து , உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.

வ அம்மா : என்னது இது, சும்மா சொன்னா, நிஜமாகவே பண்ணிடுவாங்க போல இருக்கே . ரெடியா இருக்காங்க.

ய அம்மா : சும்மா இருங்கப்பா, சுதாக்குட்டி தங்கமான பையன், விட்டாக் கெடுத்துருவீங்க போல.
(பெண்கள் அனைவரும் சிரிக்க, நான் ஒன்னும் புரியாமல் வெட்கத்துடன் ஓடுகின்றேன். )

வ அம்மா : பாருங்கப்பா பையனுக்கு கல்யாணம்ன்னு சொன்னதும் வெட்கம் வந்துருச்சு. என்று கூறி மீண்டும் சிரிக்கின்றார்கள்.

நான் சுறுப்சுறுப்பாக ஓடி அம்மாவிடம் சொல்கின்றேன். அம்மா என் தலையை வருடி, ஆமா இவங்களுக்குப் பொழுது போகலைன்னா என் பையன் தான் கிடைத்தானா என்று சிரிக்கின்றார். இப்படிக் கூடிக் கும்மி அடித்தது ஏராளாம். இப்படிச் சாம்பிளைக் கூறி தொடரை முடிக்கின்றேன். அதுக்காக கும்மி எழுத மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. அப்ப அப்ப நகைச் சுவை பதிவுகளில் எழுதுகின்றேன்.

என்னை மட்டும் இப்படி மாட்டி விட்டா எப்பூடீயீயீயீயி ?. ஆதுனால நான் இந்த தொடரைத் தொடருவதுக்கு அழைப்பது

பெண் பதிவர்களில்

சுசி தங்கை, ஜெலில்லா அக்கா, சாருஸ்ரீராஜ், சித்ரா தங்கை மற்றும் கவிதாயினி ஹேமு.

ஆண் பதிவர்களில்

மங்குனி அமைச்சர், பட்டா பட்டி, ஜெய்லானி, எல் கே மற்றும் சைவ கொத்து பரோட்டா அவர்களையும் அழைக்கின்றேன்.

நான் அழைத்த பதிவர்கள் அனைவரும் ஏற்கனவே இத்தொடரைப் போட்டுருந்தால், அதை பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு, விட்டு விடுங்கள், இதுவரை போடவில்லை என்றால் பதிவு இடுங்கள் நன்றி. இனித் தொடராது.

டிஸ்கி : நாளைக்கி இதை வீட சூப்ப்பாரா ஒரு பதிவு போடப் போறேன். அதை நீங்க எல்லாரும் படிச்சித்தான் ஆகனும். இல்லைன்னா என் சாபம் உங்களுக்குக் கிடைக்கும். அது என்னன்னா

காலையில் ஆறு மணிக்கு உங்களுக்கு வயிறு பிசையும்,
எட்டு மணிக்கு பசி எடுக்கும்,
மதியம் பன்னிரேண்டுக்கு வயிறு கப கபன்னு பசி எடுக்கும்,
இராத்திரி தூங்குனத்துக்கு அப்புறம் கண்ணுத் தெரியாது.
கனவுல திரிஷா, ஸ்ரேயா எல்லாம் வருவாங்க, பெண் பதிவர்களுக்கு விஜய்,அஜித்,சல்மான் சாருக் எல்லாம் வருவாங்க.

அதுனால ஒழுங்கா அடுத்த பதிவைப் படிச்சுருங்க. நன்றி.

29 comments:

  1. எட்டாவது படிக்கும்போது உங்களுக்கு பதின்மம் ஆரம்பிச்சுடுச்சா?

    ReplyDelete
  2. உங்க கேள்வி எனக்குப் புரியவில்லை. பதின்மம் என்பது தமிழில் பதிமூன்றில் இருந்து பதினெட்டு வயதும், ஆங்கிலத்தில் டீன் ஏஜ் என்பது தெர்ட்டீன் ல் இருந்து எய்யிட்டீன் வரைக்கும் தானே. எட்டாம் வகுப்பு என்பது பதிமூன்றில் இருந்து தானே வருகின்றது. நன்றி சின்ன அம்மினி.

    ReplyDelete
  3. :) மறுபடியும் படத்தைப் போட்டு டார்சரா ? வன்மையாக கண்டிக்கிறேன். படம் தெளிவாக இல்லை.

    ReplyDelete
  4. கலகலப்பான பதிவு! பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  5. ஐயோ ஒரு சின்ன பையன்ட்ட..? நீங்க இனி அவங்க கூடலாம் சேராதிங்க அண்ணா.. நிறைய எழுதுங்க படிக்க நாங்க இருக்கோம்..

    ReplyDelete
  6. பாவம் "சின்னத்தம்பியை" இப்படியா கலாய்ப்பது :))
    என்னை முன்னரே, இந்த தொடர்பதிவுல மாட்டி விட்டுடாங்க தல, நானும் எழுதி விட்டேன், நேரம்
    கிடைத்தால் படித்து பாருங்கள்.
    நன்றி என்னை நினைவு கொண்டதற்கு.

    ReplyDelete
  7. கும்மி மட்டும் அல்ல, கோலாட்டம், பொம்மலாட்டம் எல்லாம் உள்ள பதிவு. அருமையான நினைவுகளில், மூழ்கி எழுதி இருக்கீங்க.

    அண்ணாச்சி, நம்ம கடை பக்கம் வந்து நாளாச்சுன்னு நினைக்கிறேன். நம்ம பதிவு:

    http://konjamvettipechu.blogspot.com/2010/02/blog-post_26.html

    ReplyDelete
  8. http://www.karthikthoughts.co.cc/2010/02/blog-post_12.html

    அழைப்பிற்கு நன்றி. நான் என்னுடைய கல்லூரி நினைவுகளை எழுதி உள்ளேன்

    ReplyDelete
  9. //நான் : படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்குவேன்.
    வ அம்மா: அப்புறம்,
    நான் : நான் சம்பாதித்துக் . கெடுப்பேன், ஜெயாக்கா எனக்கு சமைத்துப் போடுவார்கள்.
    //

    சார்.. நிசமாத்தான் சொல்றீங்களா?..

    ReplyDelete
  10. @ஆண் பதிவர்களில்
    மங்குனி அமைச்சர், பட்டா பட்டி, ஜெய்லானி, எல் கே மற்றும் சைவ கொத்து பரோட்டா அவர்களையும் அழைக்கின்றேன்.
    //

    ( அழகாக , என்னை கோத்துவிட்டதால்..இதோ.. அவசரமாக வெளியூர் போகிறேன்..)
    அய்யா மன்னிச்சுக்கோங்கையா...

    நான் ..10 வயதுக்குப்பின் , நேரடியாக , 20 வயதுக்கு சென்றுவிட்டதால்,
    எதை எழுதுவது என்று தெரியவில்லை சார்..
    அதுவுமில்லாமல்.. . நக்கீரனாரு கோவிச்சுக்குவாரு சார்.(.அவருக்கு போட்டியா நான் எழுதுகிறேன் என்று)


    (பட்டாபட்டி.. நீ எழுதுவதை.. உன்னாலேயே படிக்க முடியாது..
    அப்படியே ஷட்டரப் போட்டுட்டு, ரோஸ்விக்க கோத்து விடு...
    இது பட்டாபட்டிக்கு.. பட்டாபட்டி மனச்சாட்சி சொன்னது.. ஹி..ஹி)

    ReplyDelete
  11. முந்தாநாளே நம்ம காரமட ஜோசியர் சொன்னாரு உனக்கு கெரகம் சரியில்ல கொஞ்சநாளைக்கு "பித்தன் வாக்கு" பதிவு பக்கம் போகாத உனக்கு சூனியம் வச்சுருவாருன்னு, நானும் ஒழுங்கா தான் போகாம இருந்தேன் , ஆனா சனி பட்டாபட்டி ரூபத்தில வந்து வென வச்சிருச்சு ,

    //பட்டாபட்டி.. said...
    டே மங்குனி அமைச்சர்
    அண்ணன் பித்தனின் வாக்குக்கு சென்று உடனடியாக
    அட்டனென்ஸ் போடு.. உன்னை கும்மியடிக்கச்சொல்லியிருக்காரு..//


    நானும் சூனியத்தில சிக்கிட்டேன்.
    (தலைல என்ன எழுதிருக்கோ அதுதான நடக்கும் )
    நான் எழுத போறத படிச்சு யாரெல்லாம் கிறுக்குபுடிச்சு , கொம்பு மொளைச்சு , வால் மொளைச்சு அலையபோரான்களோ தெரியலையே ?

    பித்தன் வாக்கு சார் ரொம்ப நன்றி, எனக்கு ஒன்னும் இல்ல படிக்க போற நீங்க தான் காரமட ஜோசியர பாத்து பரிகாரம் என்னன்னு கேட்டு வச்சுகங்க

    ReplyDelete
  12. நல்லா இருக்கு. ஆறு வருடத்துக்கும் ஒரே ஒரு நினைவுதானா?

    ReplyDelete
  13. சார் கடைசீல மேட்டர சொல்லாம விட்டேன் பாருங்க ,
    சார் ரைட்டிங் ஸ்டைல் ரொம்ப அருமையா இருக்கு சார், உங்கள் பதின்ம வயது நினைவுகள் அனைத்து அருமை சார் ( நாம ஏதாவது கேட்க அந்த படுகாலி பட்டாப்பட்டி வந்து கலாய்ப்பான்)

    ReplyDelete
  14. //அய்யா மங்குனி, நமது சக பதிவரும், ஆன்மீக ஞானியுமான திரு.ஓம்கார் சுவாமிகளும்,திரு. கேபிள் சங்கரும் வரும் புதனன்று சிங்கை வர உள்ளார்கள். அவர் வரும் வெள்ளியன்று, சிரங்கூன் ரோட்டில் உள்ள வடபத்திர காளியம்மன் கோவிலில் திருமந்திரம் பற்றி உரையாற்ற உள்ளார்கள். அது சமயம் சக பதிவர்கள் அனைவரும் (உங்களுக்குத் தெரிந்த) வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன்//

    //நீங்க அடிக்கடி சிங்கை பற்றி எழுதுவதால் சிங்கையில் இருப்பதாக கருதுகின்றேன். ஆதலால் தாங்கள் அவசியம் வரவும்.//

    சார் அழைப்புக்கு மிக்க நன்றி , சார் நான் சென்னை வாசி , சிங்கப்பூர் ஒரு வாட்டி டூர் வந்தேன்.

    ReplyDelete
  15. @மங்குனி அமைச்சர் said...
    //சிங்கப்பூர் ஒரு வாட்டி டூர் வந்தேன்.//

    தெரியும்..தெரியும்..
    குட்டி மங்குனி, Tampanis School-ல படிப்பது தெரியும்..
    ஆனா ஒண்ணு.. நம்ம பித்தன் சார், ரொம்பவே வருத்தப்படப்போறாரு..
    (ஏப்பா.. கூப்பிட்டது ஒரு தப்பாப்பா...)

    அண்ணே.. மன்னிச்சுக்கோங்கண்ணே..

    ReplyDelete
  16. வந்திட்டியா!
    வந்திட்டியா!!
    வந்திட்டியா!!!

    ReplyDelete
  17. பழி வாங்கினத்துக்கு நன்றி அண்ணா..

    எழுதறேன்.. கொஞ்சம் டைம் குடுங்க :)))

    உங்க நினைவுகள் கலக்கல்..

    ReplyDelete
  18. சுவையா எழுதியிருக்கிங்க.... நிகழ்வுகள் அருமை.

    ReplyDelete
  19. பட்டு அண்ணே... என்னைய நீங்க இந்த பதிவுக்கு கூப்பிட முடியாது எனக்கு இப்போ வயசு 11 தான். பதின்மம்-னா என்னான்னு நம்ம பித்தன் அண்ணே முதல் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி இருக்காருல ... அத வச்சு தான் தெரிஞ்சுகிட்டேன்...

    இது மாதிரி பதின்ம வயது பதிவுகளை படிச்சு தான் எதிர்காலத்துல எங்க எங்க கோட்டை விடக்கூடாத்துன்னு தெளிவடைஞ்சுகிட்டு இருக்கேன்...

    நிறைய ட்ரிக் கத்துகிட்டு இருக்கேன்.

    ReplyDelete
  20. nineteenம் டீன்ஏஜ்தாங்கோவ்

    ReplyDelete
  21. @ரோஸ்விக் said...
    பட்டு அண்ணே... என்னைய நீங்க இந்த பதிவுக்கு கூப்பிட முடியாது எனக்கு இப்போ வயசு 11 தான். பதின்மம்-னா என்னான்னு நம்ம பித்தன் அண்ணே முதல் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி இருக்காருல ... அத வச்சு தான் தெரிஞ்சுகிட்டேன்...
    இது மாதிரி பதின்ம வயது பதிவுகளை படிச்சு தான் எதிர்காலத்துல எங்க எங்க கோட்டை விடக்கூடாத்துன்னு தெளிவடைஞ்சுகிட்டு இருக்கேன்...
    நிறைய ட்ரிக் கத்துகிட்டு இருக்கேன்.
    //

    அப்ப சரிதான்.. பதின்ம வயது வந்ததும் சொல்லியனுப்புங்க..
    நாங்க வந்து கும்மி அடிச்சுட்டு , பதிவ எழுதச்சொல்றோம்..
    அப்புறம்.. இந்த படக்கு ,படக்குனு எப்படி பேசரது வீடியோ இருந்தா எடுத்துட்டு வாங்க..
    பேசிப்பழகலாம்

    ReplyDelete
  22. நன்றி சின்ன அம்மினி,
    நன்றி கோவி அண்ணா,
    நன்றி சேட்டைக்காரன்,
    நன்றி திவ்யாஹரி, அப்ப நான் சின்னப் பையன், இப்ப நான் ரொம்ப ரொம்ப சின்னப்பையன் அதுனால அவங்க கூட சேரமாட்டேன்.
    நன்றி சைவ கொத்துபரோட்டா,
    நன்றி சித்ரா,
    நன்றி எல்கே,
    நன்றி பட்டாபட்டி, அய்யா எனக்கு தமிழ் கொஞ்சம்(நிறையவே ) தடுமாறும். அதை வச்சு குடும்பத்தில் குழப்பம் பண்ணிராதிங்கைய்யா. தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.
    நன்றி மங்குனி அமைச்சர்,
    நன்றி ஸ்ரீராம், மொத்தம் மூணு பதிவு போட்டுவிட்டேன், பத்துப் பதிவுகள் போடுமளவிற்க்கு சரக்கு இருக்கு, ஆனா படிக்கும் பதிவர்களுக்கு போர் அடித்து விடும் என்பதால் நிறுத்தி விட்டேன்.
    நன்றி சுசி, டைம் கிடைக்கும் போது எழுதுங்கள் போதும்.
    நன்றி கருணாகரசு,
    நன்றி ரோஸ்விக், உங்களையும், அப்பாவியையும் கூப்பிடாலாம் என்று நினைத்தேன், ஆனால் புதிய பதிவர்களை அழைத்ததால் அந்த லிஸ்ட்டில் சேர்க்கவில்லை.
    நன்றி அனானி, ஆமாங்க நீங்க சொல்வதை ஒத்துக் கொள்கின்றேன். பத்தென்பது எனபதால் அது பதின்மத்தில் சேரவில்லை.
    பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
    மேனகா,சாருஸ்ரீராஜ்,ஜலில்லா எல்லாரும் வரவில்லை, ஏன்னு தெரியவில்லை.

    ReplyDelete
  23. //நன்றி பட்டாபட்டி, அய்யா எனக்கு தமிழ் கொஞ்சம்(நிறையவே ) தடுமாறும். அதை வச்சு குடும்பத்தில் குழப்பம் பண்ணிராதிங்கைய்யா. தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.
    //

    அய்யா.. தவறை சுட்டிக்காட்டி , உங்களை பெருத்த அவமானத்திலிருந்து
    காப்பாற்றியதால் ( உயிரைப் பணயம் வைத்து )..
    இந்த கமென்ஸ் கண்டவுடன், $121.50-யை ,காசோலையாகவோ , அல்லது அமெரிக்க
    டாலராகவோ, பட்டாபட்டி முன்னேற்றக்கழகத்துக்கு (ப.மு.க),
    அனுப்பி வைக்குமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

    ReplyDelete
  24. அது என்ன கணக்கு $121.50. (கணக்கு கேட்டால் கட்சியில் குழப்பம் வருமா?)

    ReplyDelete
  25. //அது என்ன கணக்கு $121.50. (கணக்கு கேட்டால் கட்சியில் குழப்பம் வருமா?)//
    கண்டிப்பா வரும் சார்..

    BreakDown Details-க்கு , $ 32.18 ஆகும்.. சரியென்றால்,
    $153.68-யை அனுப்பிவைக்கவும்..

    ReplyDelete
  26. //எட்டாம் வகுப்பு என்பது பதிமூன்றில் இருந்து தானே வருகின்றது.//

    ஹிஹி , எனக்கெல்லாம் வயசு ஜாஸ்தி குடுத்து சின்னதிலயே ஸ்கூலுக்கு சேத்திவிட்டுட்டாங்க. எனக்கேல்லாம் பதின்மம் ஒம்பதாவது படிக்கும்போது தான் :)

    ReplyDelete
  27. ரொம்ப கலகலப்பான பதிவு.

    மங்குனி அமைச்சருக்கு யாரோ சூனியம் வச்சுட்டாங்கலாம்.

    என்னையும் அழைத்து இருக்கீங்க , முடிந்த போது பதிவு போடுகிறேன்.

    ReplyDelete
  28. சார், கடைசியில நம்மல கோர்த்துவிட்டுட்டீங்களே சார். ..ஒரு வாரம் வெளியே போனதுக்கு இந்த தண்டனையா ? ஓகே முயற்சி செய்வோம்..

    ReplyDelete
  29. ஆகா இங்கேயுமா. என்னா அட்டகாசம்பா இந்தவயதிலும் நாங்களும்தான் இருந்திருக்கோம் பாவம் பச்சப்புள்ளையாட்டம்.

    நாங்க என்னாசெய்தோமுன்னு பாருங்க வந்து.
    http://niroodai.blogspot.com/2010/03/blog-post_31.html

    நல்ல நடத்தியிருக்கீங்க பதின்ம வயதை[ஒரு டவுட் பதின்ம ம்ன்னா என்னா சார் எனக்கு புரியவேயில்ல

    எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.