இருவரும் தங்கள் வீட்டில் காதலுக்காகப் போராடினார்கள். இருவரின் வீட்டில் மிக்க அன்புடையவர்கள் ஆனாலும் ஊராரை எதிர்க்கத் தயங்கியதால் எதிர்ப்பு மட்டுமே பரிசாகக் கிடைத்தது. இதற்கு இடையில் டைரிஸ் இவர்களுக்கு எதிராக ஊராரின் ஆதரவைப் பெற முயற்ச்சித்தான். பெருந்தனக்காரர்கள், பெரியேர்கள் என அனைவரிடம் ஒன்றுக்கு,இரண்டாக கூறி அவர்களின் மனதில் நஞ்சினைக் கலந்தான். டைரிஸ் முயற்ச்சியால் ஊர் இரண்டு பட்டது. பணக்காரர்கள், பெரிய மனிதர்கள் காதலுக்கு எதிர்ப்பாகவும், பாமரர்கள்,ஏழைகள் ஆதரவாகவும் திரண்டது. காதலர்களின் வாழ்க்கை, வர்க்கப் போராட்டமாக மாறியது. பிரச்சனையை ஊதிப் பெரிதாக்குவதில் டைரிஸ் வெற்றி பெற்றான். ஒரு புனிதமான மொளனிகாவின் காதல், பணக்காரனை வளைத்துப் போட்ட கதையானது. இதில் மொளனிகா மிகவும் மனம் உடைந்தாள். ஆனாலும் மோரிஸிடம் அவள் கொண்ட காதல் மட்டும் குறையவில்லை.தங்களின் காதல் ஊர்ப் பிரச்சனையானது கண்டு இருவரும் மனம் உடைந்தனர். வாழ்வின் விரக்தியின் உச்சத்திற்கே சென்றனர். இளைமையும், குறும்பும் கொண்ட அவர்களின் காதல் வெறும் சோகமும்,அழுகையும் மட்டுமே கண்டது.
அவர்கள் இருவரும் தங்கள் திட்டப்படி சோலையில் சந்தித்தனர். அதே சமயம் மோரிஸின் தந்தையும், ஊர்த்தலைவரான டைரிஸின் தந்தையும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் மனம் விட்டுப் பேசி, இருவரையும் இணைத்து வைப்பது என்று பேசிக் கொண்டார்கள். டைரிஸையும், ஊர்ப் பெரியவர்களையும் பார்த்துப் பேசி சம்மதம் வாங்கும் பொறுப்பை தலைவர் ஏற்றுக் கொண்டார். இவர்களின் திருமணத்தை ஊராரின் முன்னிலையில் பிரமாண்டமாக நடத்த மோரிஸின் தந்தை நினைத்தார். வழக்கம் போல காலம் வேறு நினைக்கும் அல்லவா?. அதுபோலத்தான் நடந்தது. சோலையில் சந்தித்த காதலர் இருவரும் ஊர் தங்களால் பிளவு படுவதை விரும்ப வில்லை. அதே சமயம் தங்களின் காதலையும் துறக்க இயலவில்லை. தங்களால் முடிந்த அளவு ஒருவருக்கு ஒருவர் சமாதானம் கூறிக் கொண்டார்கள். ஆறுதலாய் அனைத்துக் கொண்டார்கள். தங்களின் காதலின் புனிதத்தையும்,உறுதியையும் உலகு அறியச் செய்ய உறுதிபூண்டார்கள்.சோலையில் இறுதியில் உள்ள கடல் அன்னையின் கோயிலில் சென்று மனமுருக பிரார்த்தனை செய்தார்கள்.
மோரிஸ் தான் வாங்கிய தங்க மாலையை அவள் கழுத்தில் இட்டான். காட்டுக் கொடிகளாலும்,மலர்களாலும் செய்யப்பட்ட மலர் மாலைகளை, ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொண்டு, தங்களின் இருவரின் திருமணத்தை உறுதி செய்தனர்.தங்களின் கைகளைக் கேர்த்துக் கொண்டு சோலையை ஆனந்தமாக சுற்றி வந்தார்கள்.இறுதியாக சோலையில் உள்ள மண்டபத்தை அடைந்து அங்கு தங்களின் அன்பைப் பறிமாறிக் கொண்டனர். மோரிஸ் தன் காதலியை ஆதரவாய் அனைத்துக் கொண்டான். மொளனிகாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீரும்,இதழ்களில் மெலிதான புன்னைகையும் ஓடியது. மெல்ல அவளின் அதரங்களை ஆறுதலாய் பற்றிக் கொண்டான். அங்கு தனிமையும் சோகமும் மட்டுமே இருந்தது. மொளனிகா, மோரிஸிடம், "இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது, அந்தக் காலத்தால் கூட நாம் பிரிக்க முடியாத தம்பதிகளாய் இருப்போம்," என்றாள். மோரிஸ் அதற்க்கு மறுமொழி சொல்வதைப் போல அனைத்துக் கொண்டான். இருவரும் தாங்கள் கொண்டு வந்துருந்த பழரசத்தை அருந்தினார்கள். மோரிஸ், மொளனிகாவைத் தன் பக்கமாக இழுத்து அனைத்துக் படுக்க வைத்துக்கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் முகம்பார்த்த வண்ணம் இருந்தார்கள். மொளனிகாவின் முகத்தில் காதலுடன் இணைந்த ஒரு திருப்திப் புன்னகை மலர்ந்து இருந்தது. மோரிஸ் அவளை ஆதரவாய்க் கைளால் அனைத்துக் கொண்டான். மொளனிகாவும் அதற்க்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் தன் கால்களை அவன் மீது போட்டுப் படுத்துக் கொண்டான். வானம் மெல்லிய வண்ணங்களுடன் சிவந்து இருந்தது. இருவரின் உடல்களும் மெல்ல நீலம் பூரித்து இருந்தது. ஆம் அவர்கள் பழரசத்தில் கலந்து இருந்த நாக பாஷானம் மெல்ல,மெல்ல அவர்கள் இருவரின் உயிரையும் பறித்து, உடலை மட்டும் நீலமாக்கியது. அந்த நிலையில் கூட அவர்கள் இருவரும் அனைப்பில் இருந்து பிரியவில்லை. இனி டைரிஸால் கூடப் பிரிக்க முடியா வண்ணம் ஒன்றாகச் சுகித்து ஒன்றாக மரணித்து, மரணத்திலும் இணைந்து இருந்தது அந்தக் காதல் ஜோடி.
இந்த மரணச் செய்தி ஊர் முழுக்கக் காட்டுத்தீயாய் பரவியது,ஊர் முழுவதும் அந்தக் காதல் ஜோடியினைப் பார்த்துக் கதறி அழுதார்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சொன்னார்கள். இதைச் சற்றும் எதிர்பாரத டைரிஸ் ஆடிப் போனான். காமத்தை மட்டும் கற்று வைத்திருக்கும் அவன், அன்புக்கு இருக்கும் சக்தினை நினைத்து வருந்தினான். முதன் முதலாக அவன் கண்களில் கூடக் கண்ணீரை வரவழைத்தது அந்தக் காதலர்களின் ஜோடியான மரணக் கோலம். மோரிஸின் தந்தையும், மொளனிகாவின் தந்தையும், இருவரும் அவரசப் பட்டு விட்டார்கள் எனக் கூறித் தலையில் அடித்துக் கொண்டார்கள். பிரச்சனையாய் இருந்த ஊர், இப்போது கண்ணீரும் கம்பலையும் ஆனது. அனைவரும் ஒருமனதாக காதலர்களைப் பிரிப்பது இல்லை,என முடிவு செய்து ஒன்றாகப் புதைத்தனர். அங்கு ஒரு சமாதியும் கட்டிவைத்தனர்.
பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தோண்டிய போதும், அனைத்த நிலையில் தான் இருந்தனர். இன்றும் அவர்கள் அனைத்த நிலையில் காட்சியாகவும், அம்பிகாவதி-அமராவதி போல,ரோமியே-ஜூலியட் போல,சலிம்-அனார்கலி போல,ஒத்தேலோ-டெஸ்டிமேனா போல, தூய காதலுக்குக் சாட்சியாகவும் லோதல் அருங்காட்சியகத்தில் உள்ளார்கள். முற்றும். நன்றி.
டிஸ்கி: இந்த எழும்புக் கூடுகளின் புகைப்படம்தான் இந்தத் தொடரை எழுதத் தூண்டியது. ஒருவரை ஒருவர் அனைத்த நிலையில் தூங்குவது போலக், காலைக் குறுக்காக போட்டுக் கொண்டு, அவனின் முகத்தைப் பார்க்கும் பெண்ணின் முகமும், விஷம் அல்லது மரணத்தின் வீரியம் தாங்காது, முறுக்கித் திரும்பும் ஆணின் முகமும்தான் இப்படி ஒரு காதல் கதையினை எழுத வைத்தது.
இத்தனைக்கும் மேலாக விடாமல் படித்து ஆதரவு அளித்த உங்களின் பின்னூட்டமும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகது. நன்றி எனது அன்பு நெஞ்சங்களே. மிக்க நன்றி.
இந்த எழும்புக் கூடுகளின் புகைப்படம்தான் இந்தத் தொடரை எழுதத் தூண்டியது. ஒருவரை ஒருவர் அனைத்த நிலையில் தூங்குவது போலக், காலைக் குறுக்காக போட்டுக் கொண்டு, அவனின் முகத்தைப் பார்க்கும் பெண்ணின் முகமும், விஷம் அல்லது மரணத்தின் வீரியம் தாங்காது, முறுக்கித் திரும்பும் ஆணின் முகமும்தான் இப்படி ஒரு காதல் கதையினை எழுத வைத்தது.
ReplyDelete........அண்ணாச்சி, கதை ரொம்ப நல்லா இருந்தது. காரணம் நல்லா இருந்தது. அடிக்கடி இப்படி கதைகளும் எழுதுங்க.
பி.கு. நிறைய எழுத்து பிழை வருது - கொஞ்சம் கவனிங்க.
(எழும்புக் கூடுகளின் ???)
அருமையான தொடர்
ReplyDeleteஇன்னும் நிறைய எழுதுங்கள்
காதலுக்கு மரியாதை ??? !!!!!!
ReplyDeleteஒரு மாசம் எழுதுவீங்கன்னு பார்தால் , யாருக்கோ பயந்து கொண்டு டக்கெண்று முடிச்சிட்டீங்களே.
ReplyDeleteஇது போன்று இண்னொரு கதையை எதிர்பார்கிறோம்..
ReplyDeleteதொடர்கதையா....முழுசும் படிச்சிபோட்டு வாரேன் :))
ReplyDeleteகதை நல்லாவே இருக்கு.அடுத்த கதை எப்போ?
ReplyDeleteகதை நல்லா இருக்கு அண்ணா.. அருமையான நடை..
ReplyDeleteசூப்பரா எழுதி இருக்கீங்க அண்ணா..
ReplyDeleteநன்றி சித்ரா, உண்மையில் எழும்புக் கூடுகளுக்கு ஸ்பெல்லிங் தெரியல்லை. நான் தமிழ்ல தற்க்குறி. இதுபோல தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும். நன்றி.
ReplyDeleteநன்றி தியாவின் பேனா,
நன்றி ஜெய்லானி, ரொம்ப வழ வழ, கொழன்னு இழுக்க வேண்டாம் என்றுதான் முடித்து விட்டேன்.
ஆற அமர படியுங்கள் சைவ கொத்து பரோட்டா, வருகைக்கு நன்றி.
நன்றி ஸாதிகா,(ஜலில்லா, பாயிஜான்னு உங்களைத்தான் சொல்வார்களா?)
நன்றி திவ்யாஹரி,
நன்றி சுசி,
பின்னூட்டமும் ஓட்டுக்களும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.