Monday, March 22, 2010

ஆம்லேட்


என்னங்க தலைப்பைப் பார்த்ததும் சமையல் பதிவு என்றும் பித்தனின் பதிவில் ஆம்லேட்டா என்று வந்துருப்பீர்கள். ஆனால் இது ஒரு மொக்கைப் பதிவுங்க. இன்று நான் கடவுள், கோவில் ஆராய்ச்சிப் பதிவினைப் போடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் போன பதிவில் விடலைப் பசங்க பட்டாபட்டியும், வெளியூரும் நம்ம சொட்ட மண்டையப் போட்டு, அக்கு வேறா, ஆணி வேறா பிரிச்சு மோய்ஞ்சுட்டாங்க. அவர்கள் எனக்கு நல்ல நண்பர்கள். அடுத்தவர் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத இளவட்டங்கள். இந்த வயதில் இது சகஜம். ஆனால் இது என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. நானும் என் கல்லூரி வயதில் இப்படித்தான் இருந்தேன். கிண்டலும் கோலியுமாக கழிந்தது. நண்பர்கள் தங்களுக்குள் கிண்டல் செய்வது வாடிக்கை. அப்படி பண்ணும் போது, ஒரு நண்பன் கட்டையாக, குள்ளமாக இருப்பான். அவனை எல்லாரும் குட்டையன் அல்லது கட்டையன் என்று கிண்டல் செய்வது வழக்கம். இது ஆராம்பித்தது முதல் அவன் எங்களை விட்டு ஒதுங்கி இருப்பான், பின்னர் ஒரு நாள் அவன் தற்கொலை செய்வது வரை போனது. இது அவன் வாய் மூலமாக, மற்றவர்கள் அவன் உருவத்தைக் கிண்டல் செய்யும் போது, எதிர்க்கவும் முடியாமல், மனதில் எவ்வளவு வலி ஏற்ப்படுகின்றது என்பதைக் குறிப்பிட்ட போது நான் என்னை நானே நெந்து கொண்டேன். என்னை மற்றவர்கள் விளையாட்டுக்குக் கிண்டல் செய்யும் போது, நான் இதைப் பற்றிக் கவலைப் படுவது இல்லை. நம்மை எதே விசயத்தில் உயர்வாய் நினைப்பவர்கள், மட்டம் தட்ட வேண்டும் அல்லது இது ஒரு வேடிக்கை என்று நினைத்துச் செய்கின்றார்கள் என்று விட்டு விடுவேன். ஆனால் இந்த நண்பனின் மன வேதனைகளும், வலிகளையும் பார்த்துத்தான் நான் இனிமேல் யாரையும் உருவத்தை வைத்து சொட்டை,குள்ளம்,நெட்டை, குண்டு, கறுப்பு,வெளுப்பு, நொண்டி எனக் கிண்டல் செய்வது இல்லை என்ற கொள்கையைக் கொண்டேன். இப்படிக் கிண்டல் செய்வது மூலம் அந்த இடத்தில் வேண்டுமானால் பெரிய ஆள் போல இருக்கலாம். ஆனால் உடன் இருப்பவர்கள் கூட அவன் சென்றவுடன் அவனைப் பற்றி தரக்குறைவான எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள். இது போல கிண்டல் செய்வபர்களை நாகரீகம் இல்லாதவராக நினைப்பார்கள். நானும் இப்படி நடந்து கொள்கின்றவர்களை நல்ல மனிதர்களாக மதிப்பது கிடையாது. நான் இங்கு தத்துவம் சொல்ல வரவில்லை. இந்த பசங்களின் குறும்புக் கும்மி எனக்கு என் வாழ்வில் நடந்த ஒரு இன்னேரு சம்பவத்தை நினைவூட்டியது, அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கின்றேன். இனி எனது நடையில் சொல்லப் போகின்றேன்.

நான் கல்லூரியில் காக்கா ஓட்டிய சமயம்.நாம எங்க படிக்கறது, அது எல்லாம் மண்டையில முடியும்,மூளையும் இருக்கறவங்க பண்ற வேலை. நமக்குத்தான் இந்த இரண்டுமே கிடையாதே. அதுனால எப்பப் பார்த்தாலும், மரத்தடி மகாதேவனா இருப்பேன். அதுதான் நான் கல்லூரியில காக்கா ஓட்டுன கதை. இப்படிக் காக்கா ஓட்டும் போது. சீனியர் மாணவர்கள் எல்லாம் பள்ளியில என்னுடன் படித்தவர்கள் என்பதால், முதல் வருடமே, நாங்களும் ரொளடிதாண்ட ரேஞ்சுக்கு எங்க அதிக்கலம் ஆராம்பம் ஆகிடுச்சு.
நான் பி.எ. கூட்டுறவு முதலாம் ஆண்டு படித்துக் கொண்டுருந்தேன். என் டிபார்ட்மெண்டில் நான் நல்லா படிப்பவன், நல்ல பையன் என்று நம்பியதால், நல்ல பெயர் வாங்கி வைத்து இருந்தேன். என் வகுப்பும், பிகாம் முதலாண்டு வகுப்பும் ஒன்றாக எதிர் எதிரில் இருந்தது. பிகாம்மில் என் நண்பன் ஆனந்தகுமார் படித்துக் கொண்டிருந்தான். அவனும் நானும் ஒன்றாம் வகுப்பு முதல் நண்பர்கள். (இது பற்றி நான் இருவர் ஒரு வித்தியாசமான நட்பு என ஒரு பதிவு போட்டுள்ளேன். படிக்கவும்.) ஒரு நாள் அவன் வகுப்பில் உக்கார்ந்து இருந்தான். அப்போது அவன் டிபார்ட்மெண்ட் எச்.ஒ.டி தாஸ் என்பவர் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். அப்போது நான் அவ்வழியாக போன போது, ஆனந்தன் தான் எழுதும் பேனா தீர்ந்து விட்டதாகவும், பேனா கொடுக்கச் சொல்லி சைகையில் கேட்டான். நான் உடனே என் பேனாவை ஜன்னல் வழியாக அவனிடம் வீசினேன். அவ்வளே நட்புங்க. பேனா டேபிள் மேலே பட்டு, எகிறி, பக்கத்து பெஞ்சில் படிக்கும் பெண்ணின் மீது விழுந்து விட்டது. அவள் எங்க குடும்ப நண்பி மற்றும் எங்க அக்காவின் ஸ்டண்ட், ஆதலால் திரும்பிப் பார்த்தவளிடம், ஆனந்தனின் இடம் கொடுக்குமாறு கூற, அவளும் கொடுத்து விட்டாள். ஆனால் இதைப் பார்த்த தாஸ் மாஸ்டருக்கு கோபம் வந்து விட்டது. அவர் வகுப்பில் இருந்து கோபமாக கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்து விட்டார். அவர் சாதாரனமாக கடிந்து கொண்டியிருந்தால், நான் சாரி கேட்டுப் போயிருப்பேன். அனால் எனது நண்பர்கள் மத்தியிலும், நண்பிகள் மத்தியிலும் அவர் கையை ஓங்கிக் கொண்டு வந்தது கொஞ்சம் அவமானமாகப் போனதில் கோபம் வந்து விட்டது. அவரிடம் சண்டைக்குப் போயி விட்டேன். தவறு செய்தது நான் என்றாலும், சூழ் நிலை காரணமாக சண்டை போட்டேன்.

அவர் "நீ எப்படி?, நான் வகுப்பில் இருக்கும் போது, பேனாவைப் போடலாம்?", நான் "அவந்தான் கேட்டான். கொடுத்தேன். இதில் என்ன தப்பு". நீங்க வேனா கேட்ட உங்க டிபார்ட்மெண்ட் பையனைக் கேளுங்க.என்னைக் கேக்க வேண்டுமானால் என் டிபார்ட்மெண்டில் புகார் செய்யுங்கள், அதை விட்டு விட்டு கையை ஓங்கறிங்க. அடிப்பீர்களா,எங்க அடிங்க பார்க்கலாம்",என்று வீராய்ப்பாக பேசினேன். அவர் ஒரு நிமிடம் மெலிந்த நேஞ்சான் குச்சியான என்னிடம் இப்படி எதிர்பார்க்காமல் பின் வாங்கிவிட்டார். பின்னர் உன்னை உன் டிபார்ட்மெண்டில் சொல்லி பேசிக்கிறேன் என்று வகுப்பினுள் போய் விட்டார், பின்னர் அந்தப் பெண்ணிடம் தன் மீது பேனாவை எறிந்ததாக புகார் மனு கேட்டுள்ளார். அந்தப் பெண், எங்கள் நட்பு முறையும்,எங்கள் குடும்ப பின்னனியும் கூறி மறுத்து விட்டாள். "ஆனந்தனே அவன் தான் வீசினான் அவனிடம் பேசிக்கொள்" என்று கூறி அவரை முறைத்து விட்டான்.அவர் என்னைப் பற்றி டிபார்ட்மெண்டில் கம்பளைண்ட் செய்து உள்ளார். ஆனால் எங்க டிபார்ட்மெண்டில் என்னிடம் ஒன்றும் கேக்கவில்லை. இவர் நல்லவர்தான், ஆனால் எல்லா விஷயத்திலும் தான் முன்னால் இருக்க வேண்டும். தன்னால் காரியங்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புவார். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் இவருக்குத் திறமை மற்றும் அறிவு இருப்பது போல, மாணவர்களை அடக்கி ஆளும் தன்மை கிடையாது. எல்லா விழாக்களிலும், பிரச்சனைகளிலும் இவர் பிரிசின்பாலுடன் ஒட்டிக் கொள்வார்.இது மற்ற விரிவுரையாளர்களுக்கு கடுப்பைக் கொடுத்தது. ஆதலால் தாஸ் பத்திக் கம்பளைண்ட் வந்தால் கண்டுக்காமல் விட்டு விடுவார்கள். இது நடந்து இரண்டு நாள் கழித்து நான் வழக்கம் போல தமிழ் கிளாசுக்கு கட் அடித்து விட்டு மரத்தடியில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது இவர் எதிர் கிளாசுக்கு வகுப்பு எடுக்க வந்தவர். என்னைப் பார்த்ததும் ஒரு மாதிரி பார்த்து, "என்ன வெளியில நிக்குற சஸ்பெண்டா" என்றார். இளக்காரமாக. அவர் கண்டிப்பாக என்னை சஸ்பெண்ட் பண்ணிருப்பார்கள் என்று நம்பினார். நானும் அதே இளக்காரமாக "இல்லை, நான் கிளாசைக் கட் பண்ணிட்டு நிற்க்கின்றேன்," என்றேன். அவர் மிகவும் ஆச்சரியப்பட்டு " என்ன டிபார்ட்மெண்டில் ஒன்றும் சொல்லவில்லையா என்றார். நான் ஒன்னும் சொல்லவில்லை என்றேன். தலையைக் கீழ போட்டுட்டுப் போய் விட்டார். பின்னர் அன்று மாலை கடைசி வகுப்புக்கு வந்த என் அண்ணாவைப் போன்ற விரிவுரையாளர் ஸ்டான்லி ஸோவியர் இளங்கோ அவர்கள், என்னிடம் " என்ன சுதா, தாசுடன் என்ன பிரச்சனை: என்றார். நான் நடந்தைச் சொல்ல, அவர் "சரி சரி தேவையில்லாமல் அவருடம் பிரச்சனை பண்ணாதே. நீ அவரிடம் சாரி கேட்டு விட்டு ஒழுங்கா படிப்பதைப் பார்"என்றார். நானும் "சரி அண்ணா" என்று சொல்லிவிட்டேன். அடுத்த நாள் காலையும் நான் தமிழ் கிளாசைக் கட் பண்ணி நிற்கும் போது, மறுபடியும் அவர் என்ன சஸ்பெண்டா என்றார்,. வழக்கம் போல கட்டடிச்சுட்டு நிற்க்கின்றேன் என்றேன். அவர் டிபார்ட்மெண்டில் ஒன்றும் சொல்ல வில்லையா என்றார். நான் உங்களைப் பார்த்தா மன்னிப்பு கேக்கச் சொன்னார்கள் என்றேன். அவர் அப்பவாது பேசாம பேயிருக்கலாம், ஆனால் நல்லவரான அவர் விகல்ப்பம் இல்லாமல் என்னிடம் என்ன மன்னிப்பு கேக்கவில்லையா என்று அப்பாவியாக கேட்டார். நானும் அவரைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவம் இல்லாததால் ஆணவமாக அதுக்கு அவசியம் இல்லை என்றேன். அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் போய்விட்டார். இதுக்கு அப்புறம் நான் அவரைக் கிண்டல் செய்வது வாடிக்கை ஆயிற்று.

அவர் கொஞ்சம் கறுப்பாக குட்டையாக இருப்பார், தலை முன் பாதி முடியில்லாமல் வழுக்கையாக இருக்கும். ஒரு சமயம் சீனியர்கள் பிரேயர் நடக்கும் போது மொக்க வெயிலில் அவர் தலையில் எண்ணெய் பூசி நின்றுருந்தார். எவனே ஒருவன் தலையில் ஆம்லேட் போட்டுச் சாப்பிடலாம் என்று கிண்டல் செய்ததால், அவர் பட்டப்பெயர் ஆம்லேட் ஆகிற்று. அதுமுதல் அவர் கிரவுண்டில் போகும் சமயம், வகுப்பில் கிளாஸ் எடுக்கும் சமயம் எல்லாம் ஆம்லேட் என்று கத்துவார்கள். பாடம் எடுக்கும் சமயம்,வெள்யில் இருந்து கத்தினால், சில வினாடிகள் ஸ்தம்பித்து பின்னர் கிளாஸ் எடுப்பது வழக்கம். இதுனால நாங்க எல்லாம் அவரைக் கிண்டல் செய்வது வழக்கம். விரிவுரையாளர்களுக்குள் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர் செல்வாக்கு யாருக்கு என்பதைக் காட்டுவதுதில் போட்டி ஆதலால் மற்ற டிபார்ட்மெண்ட் ஆசியர்களும் இந்த மாணவர்களைக் கண்டு கொள்வது இல்லை. நானும் இந்தக் கேவலமான செயலில், இந்தப் பிரச்சனை காரணமாக ஈடுபட்டு இருந்தேன். மூன்றாம் ஆண்டு வந்தது. கல்லூரி நாளின் போது,கல்லூரித் திடலில் மாணவர்களுக்குள் ஒரு பிரச்சனை வந்தது. பிரச்சனையில் ஈடுபட்ட மாணவர்களில் பலர் குடித்து இருந்ததால்,எந்த விரிவுரையாளரும் வரவில்லை. ஆனால் இது எதுவும் புரியாமல் முந்திரிக் கொட்டை மாதிரி, இவர் கிரண்டில் வந்து சத்தம் போட்டார். தள்ளி நின்று இருந்தால் கூடப் பரவாயில்லை,மாணவகள் மத்தியில் வந்து நின்று கட்டுப்படுத்தத் தொடங்கினார். ஆனால் இளவயது மற்றும் ஆர்வக் கோளாறில் கனகராஜ் என்னும் என் சக மாணவன்(கல்யாணமாம் கல்யாணம் பதிவு) அவரை கூட்டத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு உதைத்து விட்டான். உதைக்கும் போது அவர் அவன் பேண்டைப் பார்த்து விட்டு, நிர்வாகத்திடம் கூறிவிட்டார். நிர்வாகம் கனகராஜ் மற்றும் சக்திவடிவேலை ஒரு மாத சஸ்பெண்ட் செய்தது. கல்லூரி ஸ்டிரைக்கால் ஒரு வாரம் மூடப்பட்டது. எங்கள் மூன்றாம் அண்டு தேர்வுகள் நெருங்கும் சமயம் இந்தக் வேலை நிறுத்தம் எங்கள் படிப்பைப் பாதித்தது. கல்லூரி விரைவுரையாளரைக் காலால் உதைத்த காரணத்தினால் மிகவும் பிடிவாதமாக இருந்தது. பின்னர் இந்த நிலை கண்ட தாஸ் அவர்கள், என்னால் மற்ற அனைவரும் பாதிக்கக் கூடாது. பசங்களின் படிப்பும் கெட்டு விடும். இவர்கள் இருவரின் மூன்று ஆண்டு படிப்பு, பெற்றேரின் உழைப்பு வீணாகி விடும் என்று கூறித் தன் புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார். பின்னர் பிரேயர் ஹாலில், மாணவர்களிடம் அவரின் பெருந்தன்மையைக் கூறிப் பிரின்ஸிப்பால் வாபஸ் வாங்கினார். இது எனக்கு தாஸ் அவர்கள் மீது மிக மரியாததைக் கொடுத்தது. நான் அவரிடம் கேவலமாக நடந்து கொண்டது குறித்து வருந்தினாலும்,நான் அவரிடம் மன்னிப்போ அல்லது வருத்தமே தெரிவிக்க வில்லை.

டிஸ்கி : ஆனால் நான் அவரிடம் மிக வருந்தி மன்னிப்புக் கேட்ட சம்பவம் என் படிப்பு முடிந்தவுடன் நடந்தது. அது குறித்தும், நான் உணர்ந்து கொண்டது குறித்தும் நாளைப் பதிவில் எழுதுகின்றேன். பதிவை விரிவாகக் கூறியதால் வழக்கம் போல தொடரும் போட வேண்டியது ஆகிற்று மன்னிக்கவும்.நன்றி. தொடரும்.

26 comments:

  1. படிக்கிற காலத்தில இதெல்லாம் சகஜம்தானே சார்.

    ReplyDelete
  2. சகஜம்தான் ஜெய்லானி, ஆனால் அது தனிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டு, வலிக்கின்ற மாதிரி இருக்கக் கூடாது என்றுதான் இந்தப் பதிவு.

    ReplyDelete
  3. சரிதான் ஒருவித தாழ்வுமணப்பாண்மையை அது உருவாக்கி விடும்.

    ReplyDelete
  4. பித்தன் வாக்கு சார் , என் கமெண்டை டெலிட் பண்ணும் அளவுக்கு உங்களை மனவேதனை படுத்தியதற்கு ரொம்ப சாரி சார் .........................

    ReplyDelete
  5. சார் நான் காலேஜ் படிக்கும் போதும் குட்டையா , குள்ளமா , கருப்பா , சோடாபுட்டி காண்ணாடி போட்டு ஒரு லெக்சரர் இருந்தார் , அவர நாங்க பயன்கரம்மா கலைப்போம். இது அவருக்கும் நல்லா தெரியும் . (உருவத்த வச்சு இல்ல , அவர் பாடம் எடுக்கு ஸ்டைலை வச்சு ) எங்க காலேஜ் ஸ்ட்ரைக் ( ஸ்ட்ரைக் 40 நாள் நடந்தது ) அப்போ எங்களுக்கு பயங்கர சப்போட் பண்ணினார் , எங்களுக்கு செலவுக்கு எல்லாம் பணம் தந்தார் , அந்த ஸ்ட்ரைக்கு அப்புறம் எங்கள்ளுக்கு அவர் தான் ரோல்மாடல் ஆகிட்டார்

    ReplyDelete
  6. எல்லாக் கல்லூரிகளிலும் இவர் போல இருப்பார்கள்.இது போல சம்பவங்களும் இருக்கும். ஆனால் அவற்றில் இருந்து நாம் பெறும் படிப்பினைகள் தான் நம் வாழ்வின் தரம் உயர்த்தும். நன்றி மங்குனி அமைச்சரே.

    ReplyDelete
  7. அண்ணேன்...வெளியூர்காரன் ரொம்ப நல்லவன்...பழகி பார்த்தா தெரியும்..உங்க உணர்வுகள புண்படுதிருந்தா மன்னிசுகங்க...! (இன்றிலிருந்து உங்கள் வலைப்பூவின் பாதுகாப்பு வெளியூர்காரனின் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் வருது..இங்க வந்து பசங்க யாராச்சும் உங்கள கலாசுனா ஒரு ஸ்மைலிய வந்து வெளியூர்காரன்ல போட்டுட்டு போங்க...வெளியூர்காரன் அடுத்த நிமிஷம் இங்க ஸ்பாட்ல நிப்பான்..!! ) அண்ணேன்..கடைசியா ஒரு வார்த்தை...எங்கள எல்லாம் மனுசனா இல்ல...ஒரு ஹேரா கூட மதிக்காதீங்க..ஜாலியா சிரிச்சிட்டு விட்ருங்க..!! எங்களுக்கு சிரிக்க புடிச்சிருக்கு..நாங்களும் திருந்துவோம்..ஒரு கட்டத்துல...! ஆனா அதுக்கு நீங்க ஆப்பிள்ள ஆப்பம் செய்யறது எப்டீன்னு சொல்லி தரனும்...!

    ReplyDelete
  8. ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம் தானே? :-)) வாங்க, ஜாலியா இருப்போம்!
    சின்ன வருத்தத்தையும் சிறப்பாக, பொறுமையாக அதுவும் சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. எந்த கல்லூரியில் படிச்சீங்க சார் ?

    ReplyDelete
  10. பதிவு சூப்பர் தல!
    அப்படின்னு சொல்லலாம்னு இருந்தேன்.
    இதனால எதாவது பிரச்சினை வந்துடுமோன்னு வேற ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன். :)

    ReplyDelete
  11. அப்படி எல்லாம் இல்லை. நான் தாராபுரம் பிஷப் தார்ப் கலைக்கல்லூரியில் படித்தேன். இது திருச்சு பிஷ்ப் கீபர் கல்லூரியின் கட்டுப்பாட்டில் வருகின்றது. தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. யூர்கன் க்ருகியர்.

    மங்குனி மற்றும் வெளியூர்காரன் எனக்கு இது எல்லாம் பழகிய ஒன்று, அனால் இது போல மற்றவரிடம் செய்து விடாதீர்கள். நன்றி.

    ReplyDelete
  12. கவிதைகள் அருமை..
    ஒவ்வொரு வரியையும் படித்து சிலிர்த்தேன்..
    நல்ல நடை..தொடருங்கள்..


    ( பட்டாபட்டி.. அடங்கு...எல்லா பய புள்ளைகளும் வந்துபோகும் இடம்..)

    ReplyDelete
  13. ரொம்ப உணர்ச்சி பூர்வமா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  14. தேவை கருதி எழுதி இருக்கீங்க.. தேவையான பதிவும் கூட.

    ReplyDelete
  15. அண்ணா.. நல்லா எழுதி இருக்கீங்க.

    அடுத்தவங்கள காயப்படுத்தாத வரைக்கும்தான் அது கிண்டலும் கேலியும் :(((

    ReplyDelete
  16. கல்லூரியில நாங்களும் இப்படி ஏடாகூடம் பண்ணிட்டு, காலேஜ் முடிக்கும் போது, எல்லாத்துக்கும் ஸாரி கேட்டு வந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருது.

    ம்ம்ம்... வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. பழைய நினைவுகளை நேர்மையாக சுவாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள். நாளைப் பதிவையும் படிக்க ஆவலாக உள்ளேன்..

    ReplyDelete
  18. அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ஒருவர் நினைப்பது போல் மற்றொருவர் நினைக்க மாட்டார் ஆகையால் யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவர் இந்த அளவிற்கு எழுதியுள்ளார் என்றால் அவர் மனம் எந்த அளவிற்கு வருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஆகையால் இனிமேல் கருத்துக்களை பார்த்து கூறவும்.

    ReplyDelete
  19. @@@@பித்தனின் வாக்கு said...
    மங்குனி மற்றும் வெளியூர்காரன் எனக்கு இது எல்லாம் பழகிய ஒன்று, அனால் இது போல மற்றவரிடம் செய்து விடாதீர்கள்.///

    அண்ணேன்..அதான் ஒரு தடவ சொல்லிட்டீங்கல்ல.அதுக்கு மன்னிப்பும் கேட்டுடோம்ல...அப்பறம் எதுக்கு மறுபடியும் மறுபடியும்...!..விடுங்க நான் இனிமே உங்க ப்ளாகுக்கே வரல...!! (யோவ் பட்டபட்டி இந்த டயலாக் சும்ம்மா உள்ளளாயீக்கு.....நான் வரமாட்டேன்னு சொன்னது இன்னிக்கு மட்டும்தான்..நாளைக்கு மறுபடியும் வேற பேர்ல அனானி நாயா வருவோம்...) :)

    ReplyDelete
  20. @@@சசிகுமார் said...
    இவர் இந்த அளவிற்கு எழுதியுள்ளார் என்றால் அவர் மனம் எந்த அளவிற்கு வருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஆகையால் இனிமேல் கருத்துக்களை பார்த்து கூறவும்.///

    இந்த அண்ணனோட கருத்த படிச்சிட்டு வெளியூர்க்காரன் ரொம்ப பீல் ஆய்ட்டான்..பித்தனின் வாக்கு அண்ணன்கிட்ட எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்டுகறான்..அண்ணேன் வெளியூர்க்காரன மன்னிச்சிருங்க..!!..இனிமே நெஜமாவே உங்க வலைபூவுக்கு நான் வரல..!!

    ReplyDelete
  21. @Veliyoorkaran said...
    @@@சசிகுமார் said...
    இவர் இந்த அளவிற்கு எழுதியுள்ளார் என்றால் அவர் மனம் எந்த அளவிற்கு வருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஆகையால் இனிமேல் கருத்துக்களை பார்த்து கூறவும்.///

    இந்த அண்ணனோட கருத்த படிச்சிட்டு வெளியூர்க்காரன் ரொம்ப பீல் ஆய்ட்டான்..பித்தனின் வாக்கு அண்ணன்கிட்ட எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்டுகறான்..அண்ணேன் வெளியூர்க்காரன மன்னிச்சிருங்க..!!..இனிமே நெஜமாவே உங்க வலைபூவுக்கு நான் வரல..!!
    //

    மீ Too..
    சசிகுமார் அண்ணே.. கண்ண திறந்துவிட்டதுக்கு நன்றினே..

    ReplyDelete
  22. பதிவு சூப்பர்!!

    ReplyDelete
  23. அண்ணாச்சி, சீரியஸா ஒரு பதிவு போட்டு இருக்கீங்க............. ம்ம்ம்ம்.........

    ReplyDelete
  24. நன்றி ஜெய்லானி,
    நன்றி மங்குனி அமைச்சர்,வெளியூரான் மற்றும் பட்டாபட்டி, நீங்கள் கும்மியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் அப்போது எங்கள் தாஸ் மாஸ்டர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார் என்ற எண்ணத்திலும், இதை பகிர்ந்து கொள்ளும் எண்ணத்திலும் தான் இதை எழுதுகின்றேன். மற்றபடி எனக்கு தனிப்பட்ட எந்த வருத்தமும் இல்லை. இது போன்ற கும்மிகளை நான் நிறையப் பார்த்து விட்டதால் எனக்கு பழக்கமும் இருக்கின்றது. நானே என்னை தொப்பையானந்தா மற்றும் சொட்டையானந்தா என்றும் குறிப்பிட்டதை இங்கு நினைவு கூறுகின்றேன். உங்களின் நட்பை நாடுகின்றேன்.

    // வெளியூர்காரன் ரொம்ப நல்லவன்...பழகி பார்த்தா தெரியும்..உங்க உணர்வுகள புண்படுதிருந்தா மன்னிசுகங்க...! ///
    // ..பித்தனின் வாக்கு அண்ணன்கிட்ட எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்டுகறான்..அண்ணேன் வெளியூர்க்காரன மன்னிச்சிருங்க //
    மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு, மன்னிப்பு கேக்கும் அளவுக்கு நீங்கள் எந்த தவறும் செய்ய வில்லை. மன்னிக்கும் அளவுக்கு எனக்கு தகுதியும் இல்லை. இது நண்பர்களுக்கு இடையில் நடக்கும் விவாதம் அவ்வளவுதான்.
    // ..!!..இனிமே நெஜமாவே உங்க வலைபூவுக்கு நான் வரல..!! //
    இது குறித்து நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும், ஆனால் உங்கள் முடிவு எனக்கு வருத்தம்தான். என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் வருத்தப் படுகின்றேன்.
    நன்றி சேட்டைக்காரன்,
    வருகைக்கு நன்றி யூர்கன்,
    // கவிதைகள் அருமை..
    ஒவ்வொரு வரியையும் படித்து சிலிர்த்தேன்..
    நல்ல நடை..தொடருங்கள்.. //
    ஹா ஹா மறுபடியும் கும்மியா தலை, என் பழைய பதிவுகளின் பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்கள். அல்லது மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன். என் எழுத்துக்களில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், அப்போதுதான் நான் வளர முடியும். எல்லாத்தையும், உங்களுக்கு பிடிக்காதைக் கூட பாராட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    நன்றி சைவ கொத்து புரோட்டா,
    நன்றி நாடோடி,
    நன்றி சுசி,
    நன்றி ஆடுமாடு,
    நன்றி ஸ்ரீராம்,
    நன்றி சசிகுமார், நல்ல ஜாலியான பசங்க இவர்கள், எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை.
    நன்றி மேனகா சத்தியா,
    நன்றி தேன்மயில் லஷ்மணன்,
    நன்றி சித்ரா,
    பின்னூட்டமும், ஓட்டுக்களும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  25. ஆம்லேட்டு என்றதும் ஓடி வந்தேன் ஆனா ரொம்ப பெருசா இருக்கு பிற்கு தான் படிக்கனும். ஓ இது தொடர் வேறயா?

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.