Tuesday, March 2, 2010

சிந்து சமவெளியில் இருவர் - 3

காலம் ஓடிக்கொண்டு இருந்தாலும், இரண்டு தினங்கள் போவது மோரிஸுக்கு இரண்டு யுகங்கள் கழிவது போல வெறுப்பைத் தந்தது. இறுதியாக மரக்கலமும் நதியின் முகத்துவாரத்தை வந்து அடைந்தது. அன்று காலை முழுதும் மோரிஸ் மிகப் பரபரப்பாக இருந்தான். சரக்குப் பொட்டகங்கள், பாரவண்டியில் ஏற்றிக் கொண்டு வணிக வளாகம் அடையவும், நவரத்தினம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் பொட்டகங்களில் பாதுகாக்கப் பட்டு, அவனது வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகளைப் பண்ணினான். காலை கப்பலில் இருந்து இறங்கியவன் தனக்காக காத்திருந்த தந்தையை ஆரத் தழுவி வணங்கிணான். பின்னர் பணியாளர்களுக்கும், யவண அடிமை வீரர்களுக்கும் கட்டளைகளைப் பணித்துக் கொண்டே இருந்தான். அவன் கண்கள் மட்டும் கரையில் மொளனிகாவைத் தேடிக் கொண்டே இருந்தது. அந்தி மயங்கும் மாலையில் சிவந்த சூரியன் தகிக்காமல் சிவந்து விளங்குவதைப் போல, அழகிய வெட்கத்தால் சிவந்த முகத்துடன் மொளனிகாவும் வந்து கொண்டு இருந்தாள்.











சற்று தூரத்தில் நின்று இருந்த மொளனிகாவைப் பார்த்தவுடன், மோரிஸின் முகம் மலர்ந்தது. இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. பூரண சந்திரனை மேகம் மறைப்பது போல, வெட்கத்தால் கண் தாழ்ந்த மொளனிகாவின் விழிகளை இமைகள் மறைத்தன. மீண்டும் ஆர்வத்தால் மேகம் விலகிய சந்திரனைப் போல, விழிகளைப் பெரிதாக்கிப் பார்த்தாள். மோரிஸின் கண்கள் சற்று மேலே ஏறிப், பின்னர் கண்ஜாடை காட்டுவது போல ஓரமாக சுழன்றது. எதே புரிந்து கொண்டவள் போல சிறிது வெட்கத்துடன் புன்னகை செய்தாள். பின்னர் தலை குனிந்து நின்றாள். மோரிஸின் பணியாள் வந்து ஏற்பாடுகள் யாவும் தயார் என்று சொல்ல, மோரிஸும் தன் வெள்ளைக் குதிரையில் ஏறிப் பொட்டகங்களுடன் இல்லத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். சென்றவன் மெல்லத் திரும்பிப் பார்த்தான். அவன் திரும்பிப் பார்ப்பான் எனவும், திரும்பிப் பார்க்க மாட்டானா எனவும் ஆவலுடன்,காதலுடன் பார்த்துக் கொண்டுருந்த மொளனிகாவும், மெல்ல புன்னகைத்து நடக்கத் தொடங்கினாள்.

வீட்டில் தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டு, உணவருந்தி விட்டு, நண்பர்களைப் பார்ப்பதற்க்காக வெளியில் கிளம்பினான். நண்பர்களிடம் காலத்தைச் செலவிட்டுப் பின்னர் அந்தி மாலையில் சோலைப் பக்கம் சென்றான். அங்கு காலையில் கொடுத்த குறிப்பின்படி அவர்கள் சந்திக்கும் சோலையில் அவனுக்குக் காத்துருந்தாள் மொளனிகா. மோரிஸ் வர காலதாமம் ஆகிவிட்டதால் கொஞ்சம் ஊடலும் கொண்டாள். அவளிடம் தன்மையாக நடந்து கொண்ட மோரிஸ் அவளின் ஊடலைக் களைந்து, பின்னர் தான் சென்ற பயண யாத்திரையைப் பற்றிக் கூறினான். அவள் அவனுடன் இல்லாத கவலையைக் கூறியவன். "அன்பே நமது திருமணத்திற்க்குப் பிறகு, நாம் இருவரும் ஒன்றாக, கிரேக்கம்,சுமேரியா போன்ற இடங்களுக்குச் செல்வேம்" என்றான் ஆசையுடன். அவன் கூறியது அவளுக்கு மிக்க மகிழ்வைக் கொடுத்தாலும்,திருமணம் என்றதும் அவள் மனம் வேதனையடைந்தது. நீங்கள் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். நானே ஏழைப் பெண் நம் காதல் நிறைவேறுமா? அல்லது வசதிக்கு ஒருவள், ஆசைக்கு ஒருவள் என்று மாறிவிடுவீர்களா? என்ற அவளுடைய ஆதாங்கத்தைத் தெரிவித்தாள். அவள் மொழிகளைக் கேட்ட மோரிஸ் துடித்துப் போனான். மொளனிகா என் கண்ணே என்ன வார்த்தை சொன்னாய், என் மார்பில் ஆயிரம் ஆயிரம் ஈட்டிகளைக் குத்திவிட்டாய், முழுனிலவு பக்கம் இருக்க, மின்மினியை விரும்புவார் உண்டோ?. உன் அன்பும், காதலும் என்னுடன் இருக்க, நான் மற்று ஒரு பெண்ணை மனதாலும் நினைப்பேனா?. நான் இந்த கடல் அன்னை மீதும், பஞ்ச பூதங்களின் மீதும் ஆணையாகக் கூறுகின்றேன், " இப்பிறவில் மணந்தால் உன்னை மட்டுமே மணப்பேன்,அத்தில்லாமல் போனால் உயிர் துறப்பேன் என்று கூறி முடித்தான். தன் காதல் கண்ணாளனின் அன்பால் திக்கு முக்காடிய மொளனிகா, என் நிலையும் அதுதான் அன்பே, நீங்கள் இல்லா ஒரு வாழ்க்கை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்றாள்.













( படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)

மோரிஸ் அவளை பக்கத்தில் இழுத்து அனைத்து, அன்பே கவலைப்படாதே, நாம் இருவரும் இணைந்து இல்வாழ்வை நடத்துவேம், நாம் கடல் கடந்து பிரயாணங்கள் மேற்க் கொள்வேம். நான் உன்னை அடைவதுக்கு யார் தடையாக வந்தாலும், அதனை தகர்த்து எறிவேம் என்றான். மொளனிகாவும் நம் பெற்றவர்கள் முழு சம்மதத்துடன் நடைபெறுவதுதான் என் விருப்பம் என்று கூறியவள், தன் காதலனின் கை விரல்கள் தன் குறுகிய இடையில் செய்த விஷமங்கள் தாளமால் கூச்சத்தால் நாணிச் சிரித்தாள். அவள் நாணிச் சிரிப்பதைக் கண்ட மோரிஸ், சபதமிட்ட தன்னை பரிகாசம் செய்கின்றான் என்ற நினைப்பில், "அன்பே என் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாது சிரிக்கும், உனக்கு என்ன தண்டனை தரலாம் என்றான். அவளோ "பிரபு தங்களின் வார்த்தைகளில் பூரண நம்பிக்கை இல்லாமலா நான் என் மனதைக் கொடுத்தேன். இது பரிகாசச் சிரிப்பு அல்ல, உங்கள் கைகள் செய்த விஷமத்தால் வந்த நாணச் சிரிப்பு, தண்டனை உங்கள் கைகளுக்த்தான் கொடுக்க வேண்டும்" என்றாள். அவனும் "அப்படியா, சரி ஒன்று செய்யலாம் என் கைகளுக்குத் தண்டனையாக, உன் உடலுடன் சேர்த்துக் கட்டி விடாலம்" என்று கூறிக் கொண்டே அவளை இறுக்கித் தழுவிக் கொண்டான். அவள் உடனே "இதுக்குப் பேரு தண்டனையா,விடுங்கள், பெல்லாத கைகள், விடுங்கள்" எனக் கூறிக் கொண்டே விடுபாடாமல் நின்றாள். அவனும்,என் கைகளுக்குத் தண்டனை கொடுத்தால் மட்டும் போதாது, வர வர அதிகம் பேசும் உன் உதடுகளுக்கும் தண்டனை தரவேண்டும் என்று குனிந்தான். நாணிச் சிவந்து தலையைத் மறுபக்கம் திருப்ப முயற்ச்சித்தவள், அதற்க்குள் அவனது அதரங்கள், அவளின் அதரங்களேடு கவ்விக் கொண்டதால், காற்றில் அசைந்தாடும் முல்லைக் கொடி, பற்றுவதற்க்கு கிடைத்த கொழுவைப் போல அவனது முதுகைச் சுற்றி வளைத்துப் பற்றிக் கொண்டன அவள் கைகள். காதலர் இருவரின் சரஸத்தைப் பார்த்த ஆதவன் வெட்கத்தால் கடலினுள் மறையத் தொடங்கினான். மெல்ல நாணம் வந்த தென்றலும், மலர்களின் மணத்துடன் வீசத் தொடங்கியது.காதலர் இருவரும் கண்கள் மூடி அனைத்து இருந்தனர். ஆனால் ஒரு ஜோடி விழிகள் மட்டும் மூடாமல் தங்களின் சரசத்தைப் பார்ப்பது தெரியாமல் ஆனந்ததில் இருந்தனர். ஆத்திரத்துடன் கன்றிச் சிவந்த அந்த ஒரு ஜோடி விழிகள் டைரிஸிக்குச் சொந்தமானது. தொடரும். நன்றி.

டிஸ்கி : இது இருவரின் காதல் கதை ஆதலால் சிந்து சமவெளியில் ஒருவன் என்ற தலைப்பு, காலத்தால் பிரிக்க முடியாத அந்தக் காதலர்களைப் பிரிப்பது போல ஆகிவிடும். ஆதலால் இந்தப் பதிவில் இருந்து, அனைத்த அந்தக் காதலர்களைப் பிரிக்காமல் சிந்து சமவெளியில் இருவர் ஆக்கிவிட்டேன். மன்னித்து ஆதரவு தாருங்கள். நன்றி.

11 comments:

  1. காதலை கவிதையை போல அழகாக இதில் எழுதி இருக்கிறீர்கள். நீங்க பேச்சுலர் என்பதுதான் நம்பமுடியலை.( எங்கயோ இடிக்குதே ).

    ReplyDelete
  2. அண்ணாச்சி, நல்லா கதை விடுறீங்க..... சாரி..... கதை சொல்றீங்க.....

    ReplyDelete
  3. அய்யோ ஜெய்லானி அண்ணா பேச்சிலருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.

    இது நான் பத்தாம் கிளாஸில் இருந்து கடல்புறா,யவனராணி, ஜலதீபம்,ஜலமோகினி, மாடப்புறா, கன்னிமாடம் போன்ற கதைகள் படித்த விளைவுதான்.

    ReplyDelete
  4. ஓ.. வில்லன் வந்துட்டாரா??

    பாவம் அந்த இருவரும்..

    ReplyDelete
  5. கடைசியில் தொடரும் என்று போடவே இல்லையே.

    ReplyDelete
  6. ஓ டிஸ்கிக்கு முன்பே தொடரும் என்று இருக்கிறதா ?

    :)

    நன்றி

    ReplyDelete
  7. டிஸ்கி : இது இருவரின் காதல் கதை ஆதலால் சிந்து சமவெளியில் ஒருவன் என்ற தலைப்பு, காலத்தால் பிரிக்க முடியாத அந்தக் காதலர்களைப் பிரிப்பது போல ஆகிவிடும். ஆதலால் இந்தப் பதிவில் இருந்து, அனைத்த அந்தக் காதலர்களைப் பிரிக்காமல் சிந்து சமவெளியில் இருவர் ஆக்கிவிட்டேன்.//

    என்னா ஒரு நல்லமனசு.. ம்ம்ம்ம் கதைதானே, இல்லல்லலலலல,,,,

    கதையும் அதன் நேர்த்தியும் மிக அருமை சார் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    ReplyDelete
  8. //KarthigaVasudevan said...
    தொடர் கதையா?!//

    //Chitra said...
    அண்ணாச்சி, நல்லா கதை விடுறீங்க..... சாரி..... கதை சொல்றீங்க.....//

    //ஜெய்லானி said...
    .( எங்கயோ இடிக்குதே ).//

    //susi said...
    ஓ.. வில்லன் வந்துட்டாரா??//


    //கோவி.கண்ணன் said...
    கடைசியில் தொடரும் என்று போடவே இல்லையே//

    எனகென்னவோ இவுக செயல ( சொல்றத) பாத்தா ஆட்ட குளுப்பாட்டி , மாலைபோட்டு , குங்குமம் வச்சு, சந்தனம் பூசி , எங்கயோ கூப்டு போறது போல இருக்கு

    ReplyDelete
  9. மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் சுவாரஸ்யமான பதிவு, பிரமாதம் உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நன்றி கார்த்திகாவாசுதேவன்,
    நன்றி ஜெய்லானி,
    நன்றி சித்ரா,
    நன்றி சுசி,
    நன்றி கோவி அண்ணா,
    நன்றி மலிக்கா,
    வாங்க மங்குனி, கைப்புள்ள வடிவேலு மாதிரிதான் புலம்பனும்' " இப்படி உசுப்பேத்தியே நம்மள ஒரு வழியா ஆக்கிப்புட்டாங்களே"
    சும்மா சொன்னேன். மங்குனி இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் தான் நாம் தொடர்ந்து எழுத வைக்கும் டானிக் அல்லது ஊக்க மருந்து.
    நன்றி மங்குனி

    நன்றி சசிகுமார்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.