Thursday, March 18, 2010

பாகற்க்காய் பிட்ல















முஸ்கி : இது என் 150ஆவது பதிவுங்க, நானும் தப்பும் தவறுமாக இத்தனைப் பதிவுகளைப் போட்டுவிட்டேன். நீங்களும் பெரிய மனசேட ஆதரவு கொடுத்து வர்றீங்க. மிக்க நன்றி. நம்ம ஜலில்லா சகோதரி 16.09.2009 ல் நான் பாகற்க்காய்ப் பொரியல் பற்றிப் பதிவு போட்ட போது, பாகற்க்காய் பிட்ல பத்திக் கேட்டாங்க. ஆதலால் இவ்வளவு சீக்கிரமா அந்தப் பதிவைப் போடுகின்றேன். சக்கரை வியாதி மருந்தான பாகற்க்காய், மறைந்த என் தந்தைக்கும்,எனக்கும் மிகவும் பிடிக்கும், பாகற்க்காயும், உருளைக்கிழங்கும் எந்த விதத்தில் கொடுத்தாலும் அப்படியே சாப்பிடுவேன். சரிங்க பதிவுக்குப் போவேமா.

தேவையான பொருட்கள் :-

1.பாகற்க்காய் - 10
2. கடலைப் பருப்பு- ஒரு கைப்பிடி.
3.துவரம் பருப்பு - கால் கைப்பிடி,
4.புளிக்கரைசல் ஒரு டம்ளர்.
5.பச்ச மிளகாய் இரண்டு


அரைக்க :-

6.கடலைப்பருப்பு - 1ஸ்பூன்.
7.வெந்தயம் -1/2 ஸ்பூன்.
8.மிளகு - 1ஸ்பூன்
9.தனியா அல்லது கொத்தமல்லி- 2 ஸ்பூன்
10.தோங்காய்த்துருவல் - 3 ஸ்பூன்.

தாளிக்க -

11. தோங்காய் எண்ணெய் - 3ஸ்பூன்
12.கடுகு.
13.கறிவேப்பிலை

அப்புறம் ஒன்னு மறந்துருச்சே, என்ன அது? ........ ஆ ஞாபகம் வந்துருச்சு,,,,, அது அது

சிலிண்டர்ல கேஸ் இருக்கனும். (யாருப்பா அது கையில விளக்குமாறு எல்லாம் எடுக்குறது.... ஓ கூட்டப் போறிங்களா, பார்த்துப்பா! பயப்படுத்துறிங்களே).இதுவரைக்கும் இந்த மாதிரி யாராது சொல்லியிருக்காங்களா?, கேஸ் இல்லைன்னா சமைக்க கரண்டாவது இருக்கனும்.

அண்ணே! அண்ணே!!! இப்பவாது என்னை அறிவாளின்னு ஒத்துக்கேங்க, அண்ணே!!!

செய்முறை : -

















முதலில் பாகற்காயை படத்தில் காட்டியபடி சிறு சிறு துண்டுகளாக வெட்டி,கொஞ்சூண்டு உப்பு,மஞ்சள் பொடி எல்லாம் போட்டு, அரைடம்ளர் தண்ணீர் விடலாம் அல்லது தண்ணீர் தெளித்த மாதிரி விட்டு,குக்கரில் ஒரு அடுக்கில் வைக்கவும், மறு அடுக்கில் துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பைத் மூழ்கும் அளவுத் தண்ணீர் இட்டு வேக வைக்கவும்.(பாகற்க்காய் குழையாத அளவுக்கு தண்ணீரும், விசிலும் விடவும்)

ஒரு பெரிய வாணலில் ஒரு டம்ளர் புளிக்கரைசலில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, அதில் உப்பு(தேவையான அளவு, காயில் உப்புப் போட்டுருப்பதால் பார்த்துப் போடவும்),மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் போட்டு கொதிவிடவும். பச்ச மிளகாயை இரண்டாக கீறிப் போடவும்.

புளித்தண்ணீர் கொதிப்பதுக்குள் வெந்தயம்,சிறிது கடலைப்பருப்பு,தனியா,மிளகு ஆகியவற்றை வறுத்து, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து, துவையல் போல அரைத்துக் கொள்ளவும்.

புளித்தண்ணீர் பச்சை வாசம் போனவுடன் அதில் பாகற்க்காய் மற்றும் வெந்த பருப்புக்களையும் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் அரைத்த விழுதினைப் போட்டுக் கொதிக்க விடவும். நுரைக் கட்டி, கெட்டியாகி சாம்பார் வாசம் வரும் போது, இறக்கி வைத்து, அதில் கடுகு,கறிவேப்பிலையைத் தேங்காய் எண்ணெய்யில் தாளித்துக் கொட்டவும். சுவையான பாகற்காய் பிட்ல ரெடி. இதுக்கு மேட்சா உருளை அல்லது கத்திரிக்காய் காரக் கறி பண்ணினால் நல்லா இருக்கும்.

டிஸ்கி: உப்பு இரண்டு முறை போடுவதால் கவனம் தேவை. இதுக்கு இரண்டு முறையும் குறைவாகப் போட்டு,சமைத்து முடித்த பின்னர் டேஸ்ட் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
இது சாம்பார் போல கெட்டியாக இருக்க வேண்டும். ஆதலால் பருப்புக்களை அதிகம் சேர்க்கவும். புளியில் தண்ணீர் பார்த்து விடவும்.

டிஸ்கில டிஸ்கி : கமெண்ட்ஸ பதிவுக்கு பின்னாடிப் போட்டா டிஸ்கி, முன்னாடிப் போட்டா முஸ்கின்னு, நம்ம மங்குனி அமைச்சர் தான் சொன்னாருங்க. அதுனால கடுப்பா இருந்தா ஆட்டோவை அவருக்கு......

நன்றி.

38 comments:

  1. உங்களுக்கு ஏதாவது டெலிபதி உண்டா? நேத்துத் தான் அலுவலகத்தில் சக ஊழியர் பாகற்காய் பிட்ல கொண்டு வந்திருந்தார்; ருசித்துச் சாப்பிட்டேன்! ஆஹா!!! சுவாரசியமான பதிவு!!!

    ReplyDelete
  2. சேட்டைக்காரன் said...

    உங்களுக்கு ஏதாவது டெலிபதி உண்டா? நேத்துத் தான் அலுவலகத்தில் சக ஊழியர் பாகற்காய் பிட்ல கொண்டு வந்திருந்தார்; ருசித்துச் சாப்பிட்டேன்! ஆஹா!!! சுவாரசியமான பதிவு!!!
    //

    ஏன் சார்.. மருத்துவ விடுப்பிலா இருக்கீஙக.. சொல்லவேயில்ல

    ReplyDelete
  3. சார்.. கொட நாட்ல இருந்து ஒரு ஆபர் வந்திருக்கு.. போறீங்களா?
    http://rettaivals.blogspot.com/2010/03/blog-post_18.html

    ReplyDelete
  4. பாவக்காயா...........ஐயோ...........எஸ்கேப்

    ReplyDelete
  5. //எந்த விதத்தில் கொடுத்தாலும் அப்படியே சாப்பிடுவேன்//

    இதுதான் வாழ்கை தத்துவம் (அனுபவம் )ங்கிறது.

    ReplyDelete
  6. என்ன ஒன்னு அதுல சீனி நிறைய போட்டு குடுத்தா முயற்சி பண்ணலாம்.

    ReplyDelete
  7. 150 பதிவுக்கு வாழ்த்துக்கள் .,

    ReplyDelete
  8. 150ku வாழ்த்துகள் . ஆனால் பாருங்க இந்த பாகற்காய் நமக்கு பிடிக்காத ஐட்டம்,. அதனால பதிவ பாத்தி நோ கமெண்ட்ஸ்

    http://vezham.co.cc

    ReplyDelete
  9. பாகற்காய் எனக்கு மிக பிடித்ததில் ஒன்று, களத்துல இறங்கி பாத்துர வேண்டியதுதான்.

    ReplyDelete
  10. சார்.. பாருங்க .. மறந்துட்டேன்..
    வாழ்த்துக்கள் சார் 150வது பதிவுக்கு..

    மறக்காம, கொய்யா காயில, கொத்து புரோட்டா போடுவதை பற்றி
    வீடியோ பதிவாக வெளியிடுவீர்கள் என் நம்புகிறோம்..

    (நித்தியை பற்றி மனதில் தோன்றினால், பட்டாபட்டி பொறுப்பில்லை..)

    ReplyDelete
  11. 150 பதிவு - அண்ணாச்சி !!!!
    அடுக்களையில் இருந்து ஆன்மிகம் வரை கலக்குறீங்க.....!!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. 150 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் .காயை ஒரே சீரா கட் பண்ணியிருக்கிங்க (நீங்க கட் பண்ணது தானே இல்லை நெட்ல இருந்து எடுத்த படமா) , ரொம்ப நல்லா இருக்கு , நான் வெறும் கடலைபருப்பு மட்டும் தான் சேர்ப்பேன் ,அடுத்த முறை செய்யும் போது இந்த முரையில் டிரை செய்கிறேன்

    ReplyDelete
  13. //ஏம்பா பொய் சொல்ற, புட்டி பத்தி தெரியாதுன்னு சொன்ன நாங்க நம்பனுமாக்கும். மங்குனி இந்த அக்கிரமத்தைக் கேக்க ஆளில்லையா?//

    பாஸ்,உண்மையிலேயே தான்.நான் நல்லவனுங்க.நீங்க யார வேணா கெட்டுப் பாருங்க.(ஆனா இந்த ரெட்டயோட ராஜங்கத்துல மட்டும் கேட்டுராதிங்க.எல்லாம் பொறாம புடிச்ச பிராடு பசங்க).
    அதிலயும் முக்கியமா,இந்த சட்டி பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்க.நீங்க தான் நள பாகம்,நாற பாகம்னு என்னென்னமோ சொல்றிங்க.....
    By the by,congrats for your 150th post......

    ReplyDelete
  14. இந்த பிட்லைல ஒரு தாத்பரியம் இருக்கு தெரியுமோ
    கசப்பு-பாகல்
    புளிப்பு-புளி
    உவர்ப்பு-உப்பு
    துவர்ப்பு-பருப்பு
    கார்ப்பு-காரம்
    இனிப்பு [நீங்க கொஞ்சம் போலசீனி அல்லது வெல்லம் சேர்க்கலை ]ஆகிய அறுசுவையும் இருக்குங்க.

    ReplyDelete
  15. நமக்கும் பாகற்காய்க்கும் ரெம்ப தூரம்...150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. பித்தன் இதுல மிளகாய் பொடி அல்லது வர மிளகாயே வல்லையே மேலும் நாங்க தட்டைப் பயிறை (காராமணி) வேகவைத்துச் சேர்ப்போம் அடுத்த முறை சேர்த்துப் பாருங்க ருசியா இருக்கும்

    ReplyDelete
  17. முதல்ல வாழ்த்துக்கள் அண்ணா..

    முஸ்கியா?? ஆட்டோ அவருக்கு.. லாரி உங்களுக்கு :))

    அப்டியே ரெண்டு பாகற்காயும் பறிச்சுக்கிறேன்..

    ReplyDelete
  18. // கேஸ் இல்லைன்னா சமைக்க கரண்டாவது இருக்கனும். அண்ணே! அண்ணே!!! இப்பவாது என்னை அறிவாளின்னு ஒத்துக்கேங்க, அண்ணே!!!///

    அண்ணே எங்கள் வீட்டில் மேற்கண்ட அடுப்புகள் மற்றும் சோலார் அடுப்பும் கிடையாது.குமுட்டி அடுப்புதான்.இதில் கூட உங்கள் பாகற்காய்பிடலை சமைக்கலாமில்லியா?அவசரமா பதில் தேவை.பாகற்காய் வாங்கி வைத்துஇருக்கேன்.

    ReplyDelete
  19. அண்ணே 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!150பதிவாச்சே பகற்காய்பிட்லை போட்டதற்கு பதிலாக ஏதாவது ஒரு ஸ்வீட் போட்டு இருக்கலாமில்லையா?அடுத்து 200 வது பதிவுக்காவது வாழைக்காய்த்தோல் பாயசம்,பூசணித்தோல் அல்வா,கத்தரிக்காய்காம்பு பர்பி இப்படி ஏதாவது போட்டு எங்கள் சமையலறையை மணக்கச்செய்யுங்கள்.

    ReplyDelete
  20. சார் கல்யான் பண்ணனும்னா டைரக்டா கேளுங்க , அத விட்டுட்டு .....................

    யாருப்பா அங்க , டேய் பட்டா , ஜெய்லானி பஸ்ட்டு இந்தாளுக்கு கல்யாணம் பண்ணிவைகப்பா இம்ச தாங்கல, சார் இந்த கொசு கருவாடு ரத்த போரியல் பத்தி கொஞ்சம் எழுதுங்களேன்

    ReplyDelete
  21. 150 பத்துக்கு வா......ழ்ழ்ழ்ழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  22. ஏன் சார் பாவக்கயிக்கு எல்லாம் இந்த ""கொனை""ல கல்ல கட்டி தொங்க விட மாட்டாங்களா?

    ReplyDelete
  23. //டிஸ்கில டிஸ்கி : கமெண்ட்ஸ பதிவுக்கு பின்னாடிப் போட்டா டிஸ்கி, முன்னாடிப் போட்டா முஸ்கின்னு, நம்ம மங்குனி அமைச்சர் தான் சொன்னாருங்க. அதுனால கடுப்பா இருந்தா ஆட்டோவை அவருக்கு......
    //

    ஆட்டோ தயார்.. விலாசம் கொடுங்க

    ReplyDelete
  24. சூப்பராயிருக்கு சகோ!! நிச்சயம் செய்து பார்க்கிறேன்...

    ReplyDelete
  25. நன்றி சேட்டைக்காரன்,
    நன்றி பட்டாபட்டி, என்னது இவ்வளவு பின்னூட்டங்கள்,உங்களுக்கும் ஜெய்லானிக்கும் எதாவது போட்டியா?
    நன்றி ஜெய்லானி, இப்படி சீனி சாப்பிட்டா கடைசியில பாகற்க்காய்க்குத்தான் வரனும்.
    நன்றி எல்கே, பாகற்க்காய் ஒரு அருமையான காய் மற்றும் மருந்து,பழகிக்கொள்ளுங்கள்.
    நன்றி சைவகொத்துபுரோட்டா,
    நன்றி பட்டாபட்டி,விரைவில் வீடியோ சிங்கப்பூர் கடைகளில் கிடைக்கும்.
    நன்றி சித்ரா,
    நன்றி சாருஸ்ரீராஜ், இது இணையத்தில் எடுத்தது, ஆனாலும் நான் காய்களை அழகாக நறுக்குவேன். இது போல நறுக்குவது எனது கை வந்த கலை.
    நன்றி இலுமினாட்டி,
    நன்றி கண்மணி, இது முதல் வருகையா? மிக்க நன்றி. நாங்க பொறியல் மற்றும் வத்தக்குழம்பில் சக்கரை போடுவேம். ஆனா இதில் போட்டாலும் நல்லா இருக்கும்.
    நன்றி நாடோடி. அப்ப உங்களுக்கும் சக்கரை சத்துக்கும் ரொம்ப பக்கமுன்னு சொல்லுங்க.
    நன்றி தேன்மயில், புளித்தண்ணீர் கொதிக்கும் போது இரண்டு மிளகாயை நீளவாக்கில் கீறிப் போடவேண்டும். பச்ச மிளகாயைக் கீறிப் போடவும் என்று சொல்லியிருக்கேன். அரைக்கும் வகைகளில் மிளகு சேர்த்துருப்பதால் காரம் குறைவாகப் போட்டால் போதும். கொண்டைக்கடலை,காராமணி,மொச்சை போன்றவற்றையும் சேர்க்கலாம். நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கின்றேன்.மிக்க நன்றி.
    கசப்பு கம்மியாதான் இருக்கும்,ஆனா சுவை சூப்பராக இருக்கும், கசப்பும் ஒரு சுவைதான் பாஸ்.
    நன்றி சுசி, லாரியா, ஆகா, விட்டா கப்பலே அனுப்புவ போலிருக்கு. ரெண்டு என்ன மொத்தமும் பறிச்சுக்கே.
    கும்முட்டி அடுப்பா? உங்க ஊரு என்ன கொட்டாம்பட்டியா? எங்க வீட்டில் ஒரு கும்முட்டி அடுப்பு இருக்கும், ஆனா அது பின்னாளில் துருப்பிடித்து வீணாகி விட்டது.கும்மிட்டியில் செய்தால் இன்னமும் சுவையாக இருக்கும்.நன்றி சாருஸ்ரீராஜ்.
    சாருஸ்ரீராஜ்,உண்மையில் நான் வேப்பம்பூ பச்சடிதான் போடலாம் என்று இருந்தேன். ஜலில்லாவிற்க்காக 150ஜ பாகற்க்காய்க்குக் கொடுத்து விட்டேன்.
    மங்குனி நான் எப்பவே டைரக்டா கேட்டுவிட்டேன். பொண்ணுகதான் என்னைப் பார்த்ததும் அலறி அடிச்சுட்டு ஓடறாங்க.
    நன்றி மங்குனி, புடலங்காய்க்கு மட்டும்தான் கல்லு.
    நசரேயன் மங்குனி பாவம் அட்டோ எல்லாம் வேண்டாம். ஏரோப்பிளைன் அனுப்புங்க.
    நன்றி மேனகாசத்தியா.
    பின்னூட்டமும்,ஓட்டுக்கள் இட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்....பருப்பும், பாவக்காய் காம்பினேசன் எனக்குப் புதுசு.. செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்...

    தினம் வீட்டில் நீங்க்தான் சமயலோ...

    ReplyDelete
  27. congrats.

    I like pitla. But why don't put some sweets for 150.

    Nice dish.

    ReplyDelete
  28. ஒரு டம்ளர் புளிக்காய்ச்சலா? என்னங்க. அப்பிடி சாப்பிட்ட ஏதாவது வியாதி தான் வரும். ஒரு மாபிள் அளவு அல்லது 2 செ.மீ டயமீட்டர் உள்ள புளி உருண்டை அப்பிடினு சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  29. முதலில் 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    போட்டு இரண்டு நாள் தானே ஆச்சு அதற்கு வரவில்லை என்று சொன்னால் எபப்டி? நேரம் காலம்முன்னு ஒன்று இருக்கோ இல்லையோ? ஹி ஹி ரொம்ப யோசிக்கப்படாது.. சும்மா ஒரு லுலுலாயிக்கு தான்...



    பிட்லை அருமை , நான் கேட்டதற்கு இவ்வளவு சீக்கிரம் போட்டதற்கு ரொம்ப சந்தோஷம்.


    அழகாக ஒரே சீராக அரிந்து வைத்துள்ள முறை அருமை.
    செய்து பார்த்து உஙக்ள மாதிரியே ரொம்ப சீக்கிரம் சொல்வேன்.
    இன்னும் ஒன்று ( தனியாத்தூள் என்றால் கொத்துமல்லி தூள் என்போம்

    நீங்கள் தனியா (அ) கொத்து மல்லி என்று போட்டு இருக்கீங்களே.

    ReplyDelete
  30. நன்றி கன்னகி, நான் சமையலில் அண்ணிக்கு எடுபுடியாக இருந்து கத்துக்கிட்டது.
    நன்றி விஜி, காரம், அதிலும் பாகற்க்காய் ஒரு மருந்து ஆதலாலும், எனது பதிவுகளை விடாமல் படிக்கும் ஜலில்லா அவர்களுக்காவும் 150 ஜ எழுதினேன்.
    நன்றி அனாமிகாதுவாரகன். ஒரு டம்ளர் புளிக்காய்ச்சல் இல்லை புளிக் கரைசல். எழுமிச்சை உருண்டைப் புளியைக் கரைத்தால் ஒரு டம்பளர் புளிக் கரைசல் கிடைக்கும். தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் எனது நன்றி.
    நன்றி ஜெலில்லா, பாகற்க்காய் படம் இணையத்தில் எடுத்தது. ஆனா நானும் இதுபோல அழகாய் நறுக்குவேன். ஒரு சிலருக்கு தனியாதான் கொத்தமல்லி என்று தெரியாது, ஆதலால் தான் தனியா அல்லது கொத்தமல்லி என்று போட்டேன். நான் சென்னை சென்ற புதிதில் எங்க சித்தி என்னிடம் சில சாமன் வாங்கி வரச்சொன்னார். பின்னர் தனியா ஒரு கால் கிலோ வாங்கச் சொன்னார். நான் ஒரு மூன்று தடவை தனியா என்ன கால் கிலோ வாங்குவது எனக் கேக்க அவரும் மூன்று தடவையும் தனியா ஒரு கால் கிலோ என்று சொன்னார். பின்னர் என் சித்தப்பாதான் தனியா என்றால் கொத்தமல்லி என்று விளக்கினார்.

    ReplyDelete
  31. http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_23.html

    இதை பார்க்க‌லையா இதில் உங்க‌ள் பிட்லை இட‌ம் பெற்றுள்ள‌து

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.