Friday, March 5, 2010

ஒப்புதல் வாக்குமூலம் - பதின்ம வயது தொடர்


எங்க ஊடு ரொம்ப சிறிசு ஆனாலும், எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க. நாலு அண்ணா, மூன்று அக்கா, என நாந்தான் எல்லாருக்கும் ரொம்ப பிரியமான கடைக்குட்டிங்க. எனக்குத் தம்பி, தங்கைகள் கிடையாது. ஆனா நான் பழகிய வெளிவுலகில் எனக்கு ஏகப்பட்ட தம்பிகளும்,அதைவீட அதிகமா தங்கைகளும் இருக்காங்க.அனு,லாவன்யா, தமிழ்ச் செல்வி,கவிதா,ஜாய்க்கவிதா,காஞ்சனா,லதா,அலம்ஸ் என்னும் அலமேலு, மகி, பால சித்ரா,பாரதி என இந்த லிஸ்ட் ரொம்ப நீளமானது. சமிபத்தில் வந்த தங்கைகள்(பதிவர்கள்), சுசி,சித்ரா,திவ்யாஹரி என முடிவில்லாத அன்புப் பயணமிது. என்னை சுசி இரண்டு தொடர்களில்(பிடித்தது,பிடிக்க்காதது மற்றும் போக்குவரத்து)மாட்டி விட்டு, என் செல்லத் தங்கை என நிருபித்தார். நான் மட்டும் என்ன அன்பில் கொறைச்சலான்னு கேட்டுத் திவ்யாத் தங்கையும் என்னை ஏடாகூடமான பதின்ம தொடரில் மாட்டி விட்டார். என்ன பண்றது தங்கை சொல் தட்டா அண்ணனாக, வழக்கம் போல நம்ம பாஷையில் பதிவைப் போட்டறலாம்னு முடிவு பண்ணீட்டேன்.

ஆனா பாருங்க அதுல ஒரு சிக்கல் என்னன்னா இது பதின்ம வயது, உண்மையைச் சொன்னா ரெண்டும் கெட்டான் வயசு, இதுல எல்லாருக்கும் குட் டச், பேட் டச் இருக்கும். ஆனா நம்ம பதிவர்கள் எல்லார் பதின்ம வயதுப் பதிவுகளைப் பேய்ப் பாருங்க, மாம்பழம் பறிச்சேன், கொடுக்காய்ப் புளியங்காய் சாப்பிட்டேன்னு பூசி மொழுகி இருப்பார்கள். ஏன்னா அவங்க எல்லாம் உத்தம புத்திரர்கள் வழி வந்தவர்கள். நாமளும் அதுபோல போடலான்னு பார்த்தா நிறைய அனுவப் பதிவுகளைப் போட்டு,நிறைய விஷயங்களைச் சொல்லி விட்டேன். இரண்டாவது,பெரிசா உண்மைகளைச் சொல்பவன் பித்தன்னு சொல்லி ஒரு கேப்சன் வேற தலைப்புல போட்டு இருக்கேன். அதுனால அதுல சொல்லாத சில விஷயங்களை(உண்மைகளை), இங்கன போட்டு உடைக்கலான்னு முடிவு பண்ணிட்டேன். இலைமறைகாயாய் இருந்தாலும் புரிஞ்சுக்கிறதுல நீங்கதான் கில்லாடி ஆச்சே.எனது இளம் வயதுக் கதைகள் எல்லாம் இன்பமும், நல்ல உறவுகளும் கலர்ந்தவை.சோகம் என்றால் படிப்பும்,மார்க்கும்தான்.இந்த கதைகளைச் சொல்ல ஒரு பதிவு பத்தாது.பல பதிவுகளைப் போட வேண்டும்.அதில் சுவாஸ்யமானது மட்டும் சொல்லி, எதுக்கும் ஒரு ரெண்டு பதிவுல முடிக்க முயச்சிக்கின்றேன்.

எனக்கு நிறைய பெண் தோழிகள்தான்,விளையாட்டுத் தோழிகள். நாலாப்பு படிக்கும் போதே நாலு தோழிகள், கருணா, வெங்கி,மகி மற்றும் சித்ராதான் என் விளையாட்டுத் தோழிகள். இன்னமும் இவர்களில் இருவர் என் தோழிகள்தான். ஒரு முறை நான் இவர்களுடன் தெருவில் சிறுனீர் கழிக்கும் போது, "அய்யோ, நீங்க எல்லாம் சிலோட்டுக் குச்சியைத் தொலைத்து விட்டீர்கள் என கூறியது போது முழித்தார்கள். சும்மா இருப்பனா போய் மிஸ்ஸிடமும் புகார் செய்தபோது,தர்ம சங்கடமாய் எஸ் ஆனார்கள்.இப்படி நான் சின்ன வயதிலேயே ரொம்ப விவரமான ஆளு.அது எல்லாம் ஒன்னும் இல்லைங்க,எனக்கு மனதில் என்ன தோணுதோ,அல்லது என்ன நினைக்கின்றேனோ அதை பட்டு பட்டுன்னு,கிள்ளை மொழியில் கேக்கற ஆளு.இந்த படுக்கு படுக்குன்னு நான் பேசுற அழகுக்கே எங்க தெருவில் பெண் இரசிகர்கள் அதிகம்.அதிலும் குறிப்பாகத் திருமணம் ஆன பெண்கள் இருவர்,மூவராகச் சேர்ந்துகொண்டு என்னைக் கூப்பிட்டு அருகில் அமர வைத்து அடிக்கும் கும்மி இருக்கே, சொல்லி மாளாது, தெரிந்தே தெரியாமலோ, நானும் சரிக்குச் சரி பேசுவேன். விவரம் புரிந்த காலத்தில் இது எல்லாம் நினைவுக்கு வந்த போது வெட்கப்பட்டுச் சிரிப்புத்தான் வருது. தொலைக்காட்சி பொட்டிகள் இல்லாத காலத்தில் நாந்தான் அவர்களுக்கு பொழுது போக்கு.சமிபத்தில் ஒருமுறை நான் கருணாவை, அவள் கணவருடன் சந்தித்த போது, அவள் சிரித்துக் கொண்டு கேட்டாள், "என்ன சுதா சிலோட்டுக் குச்சி எல்லாம் பத்திரமான்னு?". நான் நெளிய,அவளும்,அவள் கணவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்(நல்ல ஜோடி)

நான் பிறக்கும் போது எனக்கு கேது திசை, ஏழாவது வயதில் எல்லாம் எனக்கு சுக்கிர திசை ஆரம்பம் ஆகிவிட்டது. 27 வயது வரை சுக்கிர திசைதான் இருந்தது. குட்டிச் சுக்கிரன் என்ன பண்ணுவார்ன்னு, நீங்க போய் வகுப்பறை வாத்தியார் பதிவில் படித்துக் கொள்ளுங்கள். அதிலும் களத்திரத்தில், பகை வீட்டில் இருக்கும் சுக்கிரன் என்ன,என்ன பண்ணுவார்ன்னு எழுதினா,அப்புறம் ஸ்ரீலஸ்ரீ.பித்தானந்தா போய்ப்,பித்தலாட்டனந்தாவா மாறிவிடுவார். இதுக்கு எல்லாம் பயப்படாதிங்க.இது மாதிரி எல்லாம் நடக்காம எங்க வீட்டுல எங்களைப் பொத்திப் பொத்தி வளர்த்தார்கள்.அதுனால தப்பித்தேன்.நான் நாலப்பு படிக்கும் போது முதலில் வாங்கிய தர்ம அடின்னு ஒரு பதிவு ஏற்கனவே போட்டுட்டேன்.அதுனாலா நான் எங்க வீட்டுல பெரியஅண்ணா கிட்ட இரண்டாவதா வாங்குன தர்ம அடிக் கதையைச் சொல்கின்றேன்.


நான் பதினென்னாம் முடிஞ்சு பன்னிரண்டாம் கிளாஸ் போறேன். அப்ப ஒரு நண்பன் சரோஜா தேவி(ஆபாச புத்தகம்)புஸ்தகம் ஒன்னு கொடுத்து, டேய் எங்க வீட்டுல வைச்சா மாட்டிக்குவேன், அதுனால உங்க வீட்டுல மறைச்சு வைச்சுறான்னு சொல்லிக் கொடுத்தான். எனக்கு முழுசா ஒன்னும் புரியல்லைன்னாலும், எதே படிக்கக் கூடாத புஸ்தகம் அதுன்னு புரிஞ்சுது, அப்படின்னா நம்ம ஆர்வம் கூடும் இல்லையா? அதுன்னால சரின்னு வாங்கி வைச்சேன். இருந்தாலும் பயம், மாட்டிக்குவேன்னு. அதுனால கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை புஸ்தகம் பத்திரமா இருக்கான்னு செக் பண்ணிக்குவேன். நான் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துறதைப் பார்த்த என் நாலாவது அண்ணா,துப்பறியும் ஷெர்லாக் கணக்கா கண்டுபுச்சு, நாரதர் கணக்கா,பெரிய அண்ணாவிடம் போட்டுக் கொடுத்தான்.அப்பத்தாங்க நம்ம மாரோடேன்னா அண்ணா புட்பால் வேர்ல்டு கப்புல நிறைய கோல் எல்லாம் போட்டு தங்க சூ வாங்குனாரு. இந்த போட்டி எல்லாம் நான் பெரிய அண்ணா கூட உக்காந்து பார்த்தேன். அதுனால அதுல வர்ற சந்தோகம் எல்லாம் கேப்பேன். ஆனா இந்த நாரதர் அண்ணன், எங்கிட்ட புக் மாட்டுன விஷயத்தைச் சொல்லவில்லை. அடுத்த நாள் சாப்பிடும் போது போட்டார் பாருங்க ஒரு கோல் என் வயிற்றில், அம்மாஆஆஅ, எனக்கு பின்னால் இருந்த நூதன் ஸ்டவ் என் முதுகைக் காயப்படுத்தி இரத்தம் வந்தது. தொடர்ந்து மேன் ஆப் மேட்ச் அவார்டா தர்ம அடியும் கிடைத்தது. இதுல கொடுமை என்னன்னா கடைசி வரைக்கும் அந்த புஸ்தகத்தை நான் படிக்கவே இல்லை(என்ன கொடுமை சரவணா). எங்க வீட்டில் இருப்பவர்க்கு எதுக்கு அடி விழுதுன்னு புரியல்லை, ஆனா எதே தப்புப் பண்ணிவிட்டேன்னு புரிஞ்சுட்டாங்க. நான் பொய் சொன்னதுக்கு அடிச்சதா எங்க அண்ணா சொல்லி,வீட்டில் மானத்தைக் காப்பத்தினார். அப்ப வாங்கின உதைதான் இதுவரைக்கும் அது மாதிரி புத்தகத்தைப் பார்த்தா போது ஓடிப் போயிடுவேன்.(ஏண்டா ஏமாத்திறே அதுதான் சி.டி வந்துருச்சேன்னு, எல்லாம் கேக்கக்கூடாது). இதுதாங்க நான் இரண்டாவதா வாங்கின தர்ம அடி. இதுக்கு அப்புறம் நான் ஒரு தடவைதான் அடி வாங்கினேன். அதுக்கும் அப்புறம் நான் ரொம்ப சமர்த்தாயிட்டேன், அதுனால அடி வாங்க வில்லை.












நான் படித்த பள்ளி- தாராபுரம் அரசினர் மேல்னிலைப் பள்ளியின் முகப்புப் படம்.

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, எங்க ஸ்கூலில் ஒரு இலக்கிய மன்றக் கூட்டம் நடந்தது. பொதுவா இந்தக் கூட்டங்கள் எல்லாம் மாலை நாலு மணிக்கு ஆரம்பித்து ஆறு மணிக்கு முடியும், ஆனா அப்ப கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற வந்த பேராசிரியர். சிலம்பொலி.செல்லப்பா அவர்கள் சென்னை செல்ல வேண்டி இருப்பதால், மதியம் மூணு மணிக்கு ஆரம்பம்ன்னு சொல்லி,இரண்டரைக்கே வகுப்பில் இருந்து கிரவுண்டுக்கு போகச் சொல்லிவிட்டார்கள். எனக்கு எல்லாத் தப்பையும் சொல்லிக் கொடுக்கும் முரளி, (ஜயப்ப சாமி பதிவிலும், வெள்ளையங்கிரி பதிவிலும் இவன் போட்டா இருக்கும்) வாடா சினிமாக்குப் போகலாம் என்றான். நான் அதுவரை கிளாசுக்கு கட் அடித்துப் படத்திற்க்கு போனது இல்லை. நான் கட் அடிச்சுப் போகக்கூடாது என்று சொல்ல, அவனோ டேய் கிளாஸா போகுது, கூட்டம் தானே, அறுப்பானுக வாட என்றான். நானும் இரசினி இரசிகன் ஆனதால் அவர் பட ஆசையில் போய்விட்டேன். எங்க ஸ்கூலு மூலையில் இருக்குற கக்கூஸ் ரூமில் காம்பவுண்ட் சுவரில் ஒரு ஓட்டைஇருக்கும். அதனை முள்ளைப் போட்டு மூடி வைத்து இருப்பார்கள். அதை விலக்கி விட்டு,ஏஸ் ஆனேம். எனக்கும் ஏன் இந்த சுவர் மட்டும் உடைந்துள்ளது என்ற ரொம்ப நாள் சந்தோகம் விலகியது.டவுசரின் ஒரு பாக்கெட்டில் கம்பர்கட்டும்,ஜவ்வு முட்டாயும் போட்டு,இன்னேரு பாக்கெட்டில் மாங்காயும் வைச்சுக்கிட்டு படத்துக்குப் போனேம்.படம்: அலாவுதீனும் அற்புத விளக்கும். அங்கன போயி,,,,,,,,, இதன் தொடர்ச்சி வரும் திங்களன்று போடுகின்றேன். (வார விடுமுறைக்கு வாழ்த்துக்கள் ) நன்றி.

22 comments:

  1. நீங்க ரொம்ப நல்லவரு......காத்திருக்கேன்..திங்கள் கிழமைக்கு..... :))

    ReplyDelete
  2. // நீங்க ரொம்ப நல்லவரு //
    உஷ்ஷ்ஸ் நீங்களுமா?
    இப்படிச் சொல்லி சொல்லியே வெறுப்பு ஏத்துறாங்க. சாமி. நான் நல்லவன் இல்லைன்னு பதிவு போட்டாக்கூட நம்ப மாட்டிங்கறாங்க அப்பு.

    ReplyDelete
  3. //இந்த கதைகளைச் சொல்ல ஒரு பதிவு பத்தாது.பல பதிவுகளைப் போட வேண்டும்.அதில் சுவாஸ்யமானது மட்டும் சொல்லி, எதுக்கும் ஒரு ரெண்டு பதிவுல முடிக்க முயச்சிக்கின்றேன்//

    இதுவும் தொடர் தானா அண்ணா..?

    என்னை சுசி இரண்டு தொடர்களில்(பிடித்தது,பிடிக்க்காதது மற்றும் போக்குவரத்து)மாட்டி விட்டு, என் செல்லத் தங்கை என நிருபித்தார். நான் மட்டும் என்ன அன்பில் கொறைச்சலான்னு கேட்டுத் திவ்யாத் தங்கையும் என்னை ஏடாகூடமான பதின்ம தொடரில் மாட்டி விட்டார்.

    ஏதோ எங்களால முடிஞ்சிது.. நல்லா சுவாரசியமா இருக்கு அண்ணா உங்க பதின்மம்.. சிரிச்சி முடியல.. நன்றி அண்ணா..

    ReplyDelete
  4. சுவாரஸ்யமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. சார் தொடர்ன்னு சொல்லி ரெண்டோ ,மூனோட நிறுத்தக் கூடாது. ஆமா.

    ReplyDelete
  6. என்ன சார் இதுவும் தொடர்தானா? ......

    ReplyDelete
  7. சார் மண்டேவும் படிச்சிட்டு அப்புறம் பாத்துகிறேன் (அந்த புக் இப்ப எங்க இருக்கு )

    ReplyDelete
  8. இந்த படுக்கு படுக்குன்னு நான் பேசுற அழகுக்கே எங்க தெருவில் பெண் இரசிகர்கள் அதிகம்.அதிலும் குறிப்பாகத் திருமணம் ஆன பெண்கள் இருவர்,மூவராகச் சேர்ந்துகொண்டு என்னைக் கூப்பிட்டு அருகில் அமர வைத்து அடிக்கும் கும்மி இருக்கே, சொல்லி மாளாது,

    .............அண்ணாச்சி, இப்படி படுக்கு படுக்குனு பேசுரவுக, இரண்டு பதிவோட இந்த தொடரை நிறுத்த கூடாது. எழுதுங்க. நல்லா கதை சொல்றீகளே........

    ReplyDelete
  9. //நானும் இரசினி இரசிகன் //

    அடடா., தலைக்கு கா”ரணம்” இப்ப தான் புரியுது...

    ReplyDelete
  10. //எங்க ஊடு ரொம்ப சிறிசு ஆனாலும், எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க.//
    மெகா சீரியல் போல.......நேரம் கிடைக்கும் போது தான் படிக்க முயற்சிக்கனும்.

    ReplyDelete
  11. //அதைவீட அதிகமா தங்கைகளும் இருக்காங்க.//

    இப்படியெல்லாம் புகைப்படம் போட்டால் அப்பறம் உங்களை எல்லோருமே அண்ணன் ஆக்கிவிடுவார்கள்.

    :)

    புகைப்படத்தில் கண்ணைச் சுற்றி கருவளையம் மாதிரி விழுந்திருக்கு. பங்கசம் மாமியைப் பார்த்திருந்தால் ப்ராஞ்ச் ஆயில் ரெகமெண்ட் செய்திருப்பார்.

    ReplyDelete
  12. இக்கட்தையும் தொடரா , நல்லா இருக்கு

    ReplyDelete
  13. /நான் பிறக்கும் போது எனக்கு கேது திசை,//

    கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு இவைகள் பள்ளியில் சொல்லிகொடுத்த திசைகள், இது என்ன புதுசா கேது திசை!

    கவுட்டுகுள்ளகீது இருக்குமோ!?

    ReplyDelete
  14. //இந்த படுக்கு படுக்குன்னு நான் பேசுற அழகுக்கே எங்க தெருவில் பெண் இரசிகர்கள் அதிகம்.//

    அண்ணா இதெல்லாம் ரெம்ப ஓவர் சொல்லிட்டேன்.

    உங்களுக்கும் வார இறுதி வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  15. அப்ப சின்ன வயிசிலேயே நல்ல கும்மியடிச்சாச்சு..

    பதின்ம வயது எத்தனை தொடர்,,, அதை சொல்ல சொல்ல சொல்லி கொன்டே போகலாம் இல்லையா?

    ReplyDelete
  16. இந்த வாரம் கமென்ஸ் வாரம்..

    @மங்குனி அமைச்சர் said...
    சார் மண்டேவும் படிச்சிட்டு அப்புறம் பாத்துகிறேன் (அந்த புக் இப்ப எங்க இருக்கு )
    //

    பதிவ புல்லா படிய்யா.. அவ்ருதான் கடைசியில , கக்கூஸ் ஓட்டை வழினு
    டிப்ஸ் கொடுத்திருக்காரே..எதுக்கும் அங்க போயி பாரு.?
    அப்புறம் சொல்ல மறந்துட்டேனே..மறக்காம.. டார்ச் எடுத்துட்டு போ...


    @அப்பாவி முரு said...
    //நானும் இரசினி இரசிகன் //
    அடடா., தலைக்கு கா”ரணம்” இப்ப தான் புரியுது...
    //

    சிரிக்க வெச்சிட்டீங்க முரு சார்..

    @வால்பையன் said...
    /நான் பிறக்கும் போது எனக்கு கேது திசை,//
    கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு இவைகள் பள்ளியில் சொல்லிகொடுத்த திசைகள், இது என்ன புதுசா கேது திசை!
    கவுட்டுகுள்ளகீது இருக்குமோ!?
    //

    சார்.. யாரு கவுட்டுனு கொஞ்சம் சொல்லிப்போடுங்க..


    @சுசி said...
    //இந்த படுக்கு படுக்குன்னு நான் பேசுற அழகுக்கே எங்க தெருவில் பெண் இரசிகர்கள் அதிகம்.//
    அண்ணா இதெல்லாம் ரெம்ப ஓவர் சொல்லிட்டேன்.
    உங்களுக்கும் வார இறுதி வாழ்த்துக்கள் அண்ணா.
    //

    அக்கோ..
    "உங்களுக்கும் வார, இறுதி வாழ்த்துக்கள் அண்ணா.".... பயப்படுத்திட்டீங்க..
    ஒரு கமா இல்ல புள்ளிய, வைச்சி சொல்லுங்க,,..

    ReplyDelete
  17. //
    எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி
    //

    சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நிசமாவா?

    //
    சமிபத்தில் ஒருமுறை நான் கருணாவை, அவள் கணவருடன் சந்தித்த போது, அவள் சிரித்துக் கொண்டு கேட்டாள், "என்ன சுதா சிலோட்டுக் குச்சி எல்லாம் பத்திரமான்னு?". நான் நெளிய,அவளும்,அவள் கணவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்(நல்ல ஜோடி
    //

    சரி சார்.சின்ன வயசுல என்னானு தெரியாம முழிச்சீங்க..
    ஒத்துகிடறோம்..
    சமீபத்தில கேட்டதுக்கு ஏன் நெளிஞ்சிங்க.. அப்பவும் பதில் தெரியலையா?

    ReplyDelete
  18. சும்மா ஒரு வாரத்தோடு முடிச்சா எப்புடி? மெகா குடும்பம், மெகா சீரியல் மாதிரி எழுதுங்க அண்ணாச்சி.

    அந்த ச.தே புக் பத்திரமா இருக்கா?

    ReplyDelete
  19. சார் மூணு முதுநிலைப் பட்டமா...? கல்யாணம் பண்ணிகாதவங்களால் தான் இந்த சாதனையைச் செய்ய முடியும்..

    நன்றி...

    ReplyDelete
  20. அப்ப வாங்கின உதைதான் இதுவரைக்கும் அது மாதிரி புத்தகத்தைப் பார்த்தா போது ஓடிப் போயிடுவேன்.(ஏண்டா ஏமாத்திறே அதுதான் சி.டி வந்துருச்சேன்னு, எல்லாம் கேக்கக்கூடாது). இதுதாங்க நான் இரண்டாவதா வாங்கின தர்ம அடி. இதுக்கு அப்புறம் நான் ஒரு தடவைதான் அடி வாங்கினேன்.

    //
    முதல் முதலா வீடியோ சிடி தமிழகத்துல உலவியே ஏறத்தாழ பத்து ஆண்டுகள் தான் இருக்கும். அப்போது உங்களுக்கு 30 வயது இருக்கும். அப்பவுமா அடிவாங்குனீங்க!? அட பாவத்தே! 30 வயது நடுத்தர இளைஞரயும் இதுக்கெல்லாம் அடிக்கிறாங்களா! காலம் கெட்டு போச்சுப்பா!

    ReplyDelete
  21. நன்றி சைவ கொத்துபரோட்டா,
    நன்றி திவ்யாஹரி,
    நன்றி மாதேவி,
    நன்றி ஜெய்லானி,
    நன்றி தேவன்,
    நன்றி மங்குனி அமைச்சரே,
    நன்றி அப்பாவி முருகு, இது தலை கெடுத்த தலை அல்ல, பரம்பரை கெடுத்த தலை.
    நன்றி கோவி அண்ணா,தங்கைகள் கிடைத்தால் சந்தோசம்தானே அண்ணா, நான் ஒப்பனைக்கு அதிகம் முக்கியத்துவம் கெடுப்பது இல்லை. இந்த புகைப்படம் அலுவலத்தில் இருக்கும் போது பட்டப்பகல் 12 மணிக்கு மொட்டைமாடியில் எடுத்தது.
    நன்றி சாருஸ்ரீராஜ்,
    நன்றி வால்பையன், இது எங்கன இருக்குன்னு உங்க ஊரு ஜோசியர் கிட்ட கேளுங்க, அவருதான் சொன்னாரு.
    நன்றி சுசி, பெண் ரசிகைகள் என்றால் அழகின் ரசிகைகள் இல்லை, என்னை வைத்து கும்மியடித்து பொழுது போக்கியவர்கள்.
    நன்றி ஜெலில்லா,
    நன்றி பட்டாபட்டி, என்னைப் புட்டுப்புட்டு வைச்சுட்டிங்க,சூழ்னிலை மற்றும் என்னை உயர்த்திக் கொள்ள படித்த பட்டங்கள். இதை நான் அய்யப்பன் தொடரில் சொல்லியிருக்கேன்.
    நன்றி ஆடுமாடு, வழக்கமா இது மாதிரி மாட்டுற புக் எல்லாம் எங்கன போகும்?. வெந்நீர் அடுப்புக்குத்தான்.
    நன்றி சாமக்கேடாங்கி, கல்யாணம் ஒரு பிரச்சனை இல்லை. திறந்த வெளி பல்கழைக்கழகம் போய்ப் பார்த்தால் கைக்குழந்தையுடன் பல பெண்கள் வருவார்கள். ஆர்வமும், தேவையும்தான் முக்கியம்.
    வாங்க ஜோதி, அதுக்கு அப்புறம் அடிவாங்கியது சி.டிக்கு அல்ல, இது அடுத்து வரும். நன்றி
    நன்றி தியாவின் பேனா.

    பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.