வித்தியாசமான சமையல் பதிவுகளைப் போட்டு நிறைய நாள் ஆகிவிட்டது. ஆதலால் இன்று ஒரு வித்தியாசமான பதிவு போடலாம் என்று முடிவு செய்தேன். ஆனா காலை அலுவலகம் வந்து இறங்கும் போது, கார் கதவில் இடது கை விரல்கள் மாட்டிக் கொண்டு, அட்காட்டி விரலும், நடுவிரலும் வீங்கி விட்டது. இதுக்கு எல்லாம் அசந்தா நம்ம எப்பிடி பதிவர் ஆகின்றதுன்னு சொல்லி, வலியுடன் சுருக்கமாகப் பதிவினைப் போடுகின்றேன். இது ஆராஞ்சுப் பழத்தோலில் வத்தக்குழம்பு செய்வது குறித்த பதிவு. எல்லாம் தோல் இருக்க சுளை முழுங்கின்னு சொல்வாங்க, நாமதான் வித்தியாசமான ஆள் ஆச்சே, தோலையும் சேர்த்து முழுங்குவேம். வாங்க.
ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பு :-
தேவையான பொருட்கள் :
1.பிரஷ்னான மூன்று ஆரஞ்சுப் பழத்தோல்.
2.புளி ஒரு உருண்டை.
3.கடலைப்பருப்பு - ஒரு கரண்டி.
4.வெள்ளுத்தம் பருப்பு - ஒரு கரண்டி.
5. கொத்தமல்லி (தனியா)- ஒரு பிடி
6.தோங்காய்த் துருவல் - ஒரு பிடி
7.மஞ்சள் பொடி - ஒரு ஸ்பூன்.
8.பெருங்காயத்தூள் - ஒரு ஸ்பூன்.
9.நெய் - மூன்று கரண்டி.
10. வெல்லம் அல்லது சக்கரை.
11. தாளிக்கும் பொருட்கள்.
12.கறிவேப்பிலை கொஞ்சம்.
13.உப்பு தேவையான அளவு.
14. மிளகாய்ப் பொடி - காரம் தேவையான அளவு அல்லது மூன்று ஸ்பூன்.
செய்முறை :
முதலில் கொதிக்கும் வெந்னீரில் புளியைப் போட்டு, அடுப்பை அனைத்து ஆற விடுங்கள். இது ஆறுவதுக்குள். ஆரஞ்சு பழத்தை உரித்து சுளைகளை எடுத்து ஜீஸ் போட்டு, எனக்குக் கொடுத்து விட்டுப்(இது ரொம்ப முக்கியமான கண்டிசன்), பின்னர் தோலைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் மூன்று கரண்டி (சிறு) நெய்யை விட்டு, அதில் இந்த பழத்தோல் துண்டுகளைக் கொஞ்சம் வேகும் வண்ணம் வதக்குங்கள். வதக்கிய பின்னர் ஒரு தட்டில் கொட்டி விட்டு. வாணலில் எண்ணெய் விட்டுக் கடலைப் பருப்பு,கொத்தமல்லி(தனியா),வெள்ளுத்தம் பருப்பு ஆகியவற்றை வறுத்து ஆற வைக்கவும், இது ஆறுவதுக்குள் புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டுக், கடுகு, சிறிது கடலைப் பருப்பு,கறிவேப்பிலை, வெள்ளுத்தம் பருப்பு,ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.இதில் புளித்தண்ணீர்க் கரசலை விட்டு,அதில் உப்பு மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி,பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க விடவும். புளி பச்சை வாசம் போகக் கொதித்தவுடன்,அதில் வதக்கிய ஆரஞ்சுப்பழத் தோல் துண்டுகளைப் போட்டுக் கொதிக்க விடவும். இது கொதிப்பதுக்குள் நாம் வறுத்தவற்றை அரைத்துக் கொள்ளலாம்.
ஆறிய பருப்புக்களுடன் தோங்காய்த்துருவல்களைப் போட்டுக் கெட்டியாகத் துவையல் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கொதிக்கும் புளிக்கரசலில் உள்ள ஆரஞ்சுப் பழத்தோல் வெந்து விட்டதா என மசித்துப் பார்க்கவும். தோல் மசிந்தால், இதில் இந்தக் துவையலைப் போட்டு, நுரை கட்டும் வரை கொதிக்க விடவும். நுரை கட்டியவுடன் கொஞ்சம் வெல்லம் பொடித்துப் போட்டுக் கலக்கவும், வெல்லம் இல்லை என்றால் இரண்டு ஸ்பூன் சக்கரை சேர்க்கவும்.(வெல்லம் தான் பெஸ்ட்). நல்லா நுரை கட்டி வாசம் வந்தவுடன் இறக்கி வைக்கவும். தோலில் குழம்பா என யோசிக்க வேண்டாம் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் அதன் ருசி உங்களுக்குக் கண்டிப்பாக பிடிக்கும்.
ஆரஞ்ச்சுப் பழத்தோல் பச்சடி :-
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு,வெள்ளுத்தம் பருப்பு சிறிது போட்டுத் தாளித்து,அதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள்,இரண்டு பச்சை மிளகாய்த் துண்டுகள் மற்றும் உப்பு சிறிதளவு போட்டு, கறிவேப்பிலை சேர்த்து,அதில் நல்லா நெய்யில் வதக்கிய ஆரஞ்சுப் பழத்தோல் துண்டுகளைப் போட்டுப் பொடித்த வெல்லமும் சேர்த்து மசிய வேக விட வேண்டும். இனிப்பு,கசப்பு,காரம் நிறைந்த பச்சடி ரெடி. இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். நன்றி.
நளபாக குறிப்புக்கு நன்றி.
ReplyDeleteநல்லா இருக்குதுங்க. என் கனவுல பூதம் வராது:-)
ReplyDeleteசெய்திருக்கேன் ரொம்ப நாள் முன்னாடி. மறுபடியும் செய்து பாக்கறேன்.
ReplyDelete//
ReplyDeleteஇதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
//
சூப்பர்.. கடைசியா சிலவற்றை மறந்துட்டீங்க..
1. சாதத்தில் பிசைந்து , யார் சாப்பிடலாமுனு?
2. எந்தக் கையில் , தொடுவது?
3. கை கழுவியபின் தொடனுமா..இல்லை..அதற்கு முன்னால?
.
சும்மா டமாசு பண்ணினேன் சார்..
.
இது சாப்பிட்டா, ஒரு வேளை போகுமா?..
இல்லை.. மூணு வேளை நிற்க்காமல் போகுமா என்பதையும்
எங்களுக்கு தெரிவிக்குமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
.
.
மேலும், எங்களைப்போன்ற, தற்குறிகளுக்கு, அண்ணன் செய்து,
ஸ்பீட் போஸ்டில் அனுப்பி வத்தால் , வருங்கால சந்ததியினர் உங்கள்
போற்றி..கவிதை எழுதவும் வாய்புள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன..
கடைசியாக.... முக்கியமாக...
கார் கதவை மூடும் பொழுது , அக்கம் பக்கம் பார்க்காமல் ,
கதவை மூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
சீனப் பெரு நாளுக்கு,
ReplyDeleteஅதிகமான, ஆரஞ்சுப்பழங்களை கொடுத்துட்டார்களோ? ,
// இது சாப்பிட்டா, ஒரு வேளை போகுமா?..
ReplyDeleteஇல்லை.. மூணு வேளை நிற்க்காமல் போகுமா என்பதையும்
எங்களுக்கு தெரிவிக்குமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். //
இது நீங்கள் சாப்பிடும் அளவைப் பொறுத்துப் போகும்.
// கடைசியாக.... முக்கியமாக...
கார் கதவை மூடும் பொழுது , அக்கம் பக்கம் பார்க்காமல் ,
கதவை மூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.. //
கார் கதவைச் சாத்தியது நான் அல்ல, எனக்குத் தினமும் கார் ஓட்டி அழைத்துப் போகும் சீனப் பெண். அழகான பெண் ஆதலால் திட்டவும்,கத்தவும் முடியாமல் அவஸ்த்தைப் பட்டேன். வலியிலும் லைட்டா சிரித்து சிவாஜி கனேசன் ஆகிட்டேன். என்ன பண்ண?
சீனக்கடைகளில் ஆரஞ்சு சிக்கன் சாப்பிட்டிருக்கேன். இது புதுசா இருக்கு. நீங்க செய்து பாத்துட்டு சொன்னதா இல்லை எங்களை வச்சு பகடி எதும் பண்ணறீங்களான்னு தெரியலை. நாளைக்கு தங்கமணி இந்த வத்தக்குழம்பு செய்யறாங்களாம். உயிரோடிருந்தால் வருகிறேன்.
ReplyDelete,-------------.
/ \
/ __ __ \
| /,--. ,--.\ |
| \ | __ | / |
| `-' / \`-/ |
\__ |_/\_| __/
/_ _\
| |,-.,-.,-.| |
`-'| || || |`-'
,-.`-'`-'`-',-.
\_|_,-.,-.,-|_/
| |_|_||_||_| hjw
`--______--' `97
//கார் கதவைச் சாத்தியது நான் அல்ல, எனக்குத் தினமும் கார் ஓட்டி அழைத்துப் போகும். சீனப் பெண். அழகான பெண் ஆதலால் திட்டவும்,கத்தவும் முடியாமல் அவஸ்த்தைப் பட்டேன். வலியிலும் லைட்டா சிரித்து சிவாஜி கனேசன் ஆகிட்டேன். என்ன பண்ண?
ReplyDelete//
சார்.. கண்டிப்பா உங்களை பார்க்கனும் சார்..
உங்க பதிவு சூப்பர் சார்..
எப்ப சார் பார்க்கலாம்..
டைம்மா?
கரெக்டா , கார் வரும் டைமுக்கு வந்துவிடுகிறேன் சார்..
சத்தியமா.. உங்களைப் பார்க்கத்தான் என தமிழ் கூறும் நல்லுலகம் மேல்
சத்தியம் செய்கிறேன்..
பட்டாபட்டி, காலை ஏழு அம்பதுக்கு எல்லாம் (நீங்க தூங்கி எந்திருச்சால்) பூன்லே எம் ஆர் டிக்கு வந்துடுங்க. நான் என்னைப் பார்க்கத்தான் கூப்பிட்டேன். மாலை 5.45க்கு பயணியர்க்கு வந்துருங்க.
ReplyDeleteஇந்த பிடிங்க ஜீஸ்.... நான் வத்தக் கொழம்பும் பச்சடியும் பண்ணப்போறேன்...தமிழ் எஸ்கேப்..........................
ReplyDelete//13.உப்பு தேவையான அளவு.//
ReplyDeleteநீங்க சொன்னது போல பண்ணிப் பார்த்ததில், உப்பு
கொஞ்சம் அதிகமாகிவிட்டது..
அடுத்த முறை, சிங்கை மக்களுக்கு , எத்தனை ஸ்பூன் உப்பு?
மற்றவர்களுக்கு எத்தனை ஸ்பூன் உப்பு?
என தெளிவாக குறிப்பிடவும்..
.
.
.
குறிப்பு..
நான் சிங்கை நியூ வாட்டரை, யூஸ் செய்கிறேன் என
இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்..
( புரியாதவர்கள் , புத்தர் போல, பித்தனிடம் அறிவுரை பெற்றுக்கொள்ள
வேண்டுகிறேன்)
ஆகா பட்டாபட்டி உப்பு தேவையான அளவுன்னா என்னன்னு முதல்ல தெரிந்து கொள்ளுங்கள், முதலில் சமைக்கும் போது உப்பு குறைவாக போட்டு சமைக்க வேண்டும். ஒரு கொதி வரும் போது விரலில் தொட்டுச் சுவைத்துப் பார்த்தால், தேவையான அளவு தெரியும். இது இல்லாமல் நமது வயது, பீபி மற்ற நேய்கள் பொருத்து தேவையான அளவு வைத்துக் கொள்ளலாம். உப்பும், காரமும் கொஞ்சமாய்ப் போட்டுச் சமைப்பது உடலுக்கு நல்லது.
ReplyDeleteநான் ரெகுலரா வந்துகிட்டு தான் இருக்கேன் , தமிழ் பாண்ட் அடிக்கடி மக்கர் பண்ணுரதுனால கமெண்ட்ஸ எழுதாம போயிடுறேன். நீங்கள் என்னை தொடர் பதிவுக்கு அழைத்து இருந்ததை பார்த்தேன் , கொஞ்சம் வேலை காரணமாக எழுதமுடியவில்லை கூடிய விரைவில் எழுதுகிறேன்,
ReplyDeleteகுழம்பு புது மாதிரியாக இருக்கு செய்து பார்கிறேன், ஜுஸ் போட எல்லாம் எங்க சுளைகள் இருக்கும் , அது தான் எல்லாம் உள்ளார போய்விடுகிறதே உரிக்கும் போதே, குரங்கு அப்பம் தின்ன கதை தான் . ஹி ஹி ஹி
சார் ஏதோ அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்டுன்னு கேள்வி பட்டேன், சரி சரி உங்களுக்கு வெங்காய தோல் பிரியாணி பண்ண தெரியுமா ? தெரிந்தால் உண்டனே அடுத்த பதிப்பில் போடவும்.
ReplyDeleteபன்னாட பட்டா தக்காளி நா உனக்காக உன்வூட்ல காத்துக்கிட்டுருக்கேன் , தக்காளி நீ இங்க குமியாடிசுகிட்டு இருக்கியா, பித்தன் சார் இந்த பட்டாவுக்கு ஒரு கொசு கால் சூப் ஒன்ன குடுத்து தொரத்திவிடுங்க
@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஆகா பட்டாபட்டி உப்பு தேவையான அளவுன்னா என்னன்னு முதல்ல தெரிந்து கொள்ளுங்கள், முதலில் சமைக்கும் போது உப்பு குறைவாக போட்டு சமைக்க வேண்டும். ஒரு கொதி வரும் போது விரலில் தொட்டுச் சுவைத்துப் பார்த்தால், தேவையான அளவு தெரியும். இது இல்லாமல் நமது வயது, பீபி மற்ற நேய்கள் பொருத்து தேவையான அளவு வைத்துக் கொள்ளலாம். உப்பும், காரமும் கொஞ்சமாய்ப் போட்டுச் சமைப்பது உடலுக்கு நல்லது.
//
சார்.. பிட்டு படம் போல சொல்லக்கூடாது..
படக்கு..படக்குனு புரியற௧மாறி சொல்லுங்க..
எந்த விரல்?..
////ஆனா காலை அலுவலகம் வந்து இறங்கும் போது, கார் கதவில் இடது கை விரல்கள் மாட்டிக் கொண்டு, அட்காட்டி விரலும், நடுவிரலும் வீங்கி விட்டது////
ReplyDelete.............அண்ணாச்சி, ஆரஞ்சு பழ தோல் இரண்டு. அதை எடுத்து, கொஞ்சம் கஸ்துரி மஞ்சள் சேர்த்து அரைத்து அடிப்பட்ட விரல்களில் வைத்து பத்து போட்டு வர இரண்டு நாட்களில் வலி நீங்கி குணமாகும். பத்து போடும் முன், தோல் எடுக்கப்பட்ட ஆரஞ்சு பழங்களின் ஜூஸ் எடுத்து அடி பட்ட விரல்களை கழுவி கொள்ளுதல் நல்லது.
நீங்க வித்தியாசமா சமையல் குறிப்பு கொடுத்தா, நாங்க வித்தியாசமா மருந்து குறிப்பு கொடுக்க மாட்டோமா?
நீங்க சொன்னபடி சமைச்சா, கொஞ்சம் புளிப்பு சுவை வராதா?
ReplyDeleteசூப்பர் பச்சடி கேள்விப்பட்டதேயில்லை பித்தன் செய்து சாப்பிட்டு சொல்றேன்
ReplyDeleteஅண்ணே எப்படி அண்ணே, கீழே போடும் தோலை வைத்து ஒரு சமையலையே செஞ்சு முடிசிடீங்க என்னால நம்மவே முடியல
ReplyDeleteஆரஞ்சுப்பழத்தோலை உணவாக உட்கொண்டால் சொட்டை மட்டுமல்ல தொப்பையும் குறையும் என்று ஏதாவது நெட்டில்,பத்திரிகையில் பார்த்தீர்களா சார்?ஆரஞ்சு பழத்தை மூன்று வடிவில் படம் போட்டவர் சமைத்ததும் அதையும் படம் எடுத்து போட்டு இருந்தால் நாங்களும் தைரியமாக சமைத்துப்பார்ப்போம் அல்லவா?
ReplyDeleteஅண்ணா.. இன்னைக்கு இத செய்து பாக்க முடியாது.
ReplyDeleteதொப்பையானந்தாவுக்கு இன்னமும் சிரிச்சுட்டு இருக்கேன்.
அடுத்தது கத்திரித் தோல் சாம்பார் குறிப்பு எதிர் பார்க்கிறேன்
ReplyDelete//காலை அலுவலகம் வந்து இறங்கும் போது, கார் கதவில் இடது கை விரல்கள் மாட்டிக் கொண்டு, அட்காட்டி விரலும், நடுவிரலும் வீங்கி விட்டது. இதுக்கு எல்லாம் அசந்தா நம்ம எப்பிடி பதிவர் ஆகின்றதுன்னு சொல்லி, வலியுடன் சுருக்கமாகப் பதிவினைப் போடுகின்றேன்.//
ReplyDeleteவலியோட ஏன் அண்ணா எழுதுறீங்க? அதுவும் வித்தியாசம்னு சொன்னதும், ஹரி வேற செய்து தர சொல்றாங்க.. அடி பட்டதும் சகுனம் சரி இல்லைன்னு விட்டிருக்கலாம்ல.. போங்க அண்ணா.. மாட்டி விடுறீங்க..
விலைவாசி ஏறக்கூடிய இக்கால கட்டத்தில் இப்படியான சமையல் குறிப்புகள் நமக்கு மிகவும் தேவைதான் .பழத்துக்கு பழம் , அப்புறம் குழம்புக்கு குழம்பும் ஆச்சு. இதுபோல் அடிக்கடி போடுங்க
ReplyDeleteஅப்படியே வாழை தோலுல எதுவும் ஆகுமான்னு சொன்னா தேவலை. ஏன்னா வாழை பழம் விலை குறைவு பாருங்க!!!!!!!!!!!!!
ReplyDeleteபதில் இடுகை; ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பு
ReplyDeleteதல,புது போஸ்ட் போட்டு இருக்கேன்.இந்த முறையும் உமக்கு அந்தப் பொண்ண புடிக்கும்.ஹி ஹி ....
ReplyDeleteஆகா நல்ல குறிப்பாக இருக்கே!
ReplyDeleteஅப்படியே
இங்க வாங்க உங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன்.
http://niroodai.blogspot.com/2010/03/blog-post_14.html
ஆஹா ஆரஞ்சு பழ வத்த குழம்பு இங்கு வரை வாசம் மூக்கத்துளைக்குது.
ReplyDeleteகர்பிணி பெண்கள் மசக்கையில் போது ஏற்படும் வாய் கசப்பிற்கு சூப்பரா இருக்கும்.
சீக்கிரமா மங்குனி அமைச்சருக்கு வெங்காய தோலில் பிரியாணி செய்து கொடுங்கள். ஜெய்லாணி கேட்ட வாழைபழ தோலை சொறி சிரங்குக்கு தான் தேய்க்க முடியும், பரவாயில்ல அதில் ஏதும் குருமா வைக்க முடியுமான்னு பாருங்கள்.
பச்சடியும்,குழம்பும் புதுசா இருக்கு.நிச்சயம் சூப்பராயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.....
ReplyDeleteநன்றி சைவ கொத்து பரோட்டா,
ReplyDeleteநன்றி தெய்வசுகந்தி, புது இடமும்,வீடும் எப்படி உள்ளது?. எங்க ஊரு மாப்பிள்ளை எப்படி இருக்கார்?.
நன்றி சின்ன அம்மினி,செய்து பாருங்கள்.
நன்றி பட்டாபட்டி,
நன்றி, குலவுசனப் பிரியன்,படித்து சமைத்துப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றி தமிழரசி, என்னங்க ஜீஸ் கொடுத்துட்டு எஸ் ஆகிட்டிங்க, சமைத்து சாப்பிடக் கூப்பிடுங்கன்னு நினைச்சேன்.
மிக்க நன்றி சாருஸ்ரீராஜ்,எப்படியோ சமைப்பதுக்குள் பாதி காய் காலியாவது எப்படின்னு ஒரு பதிவு போட்டுருலாம்.
வாங்க மங்குனி, வெங்காயத்தோலை பிரியானி பண்ண முடியாது. ஆனா வெங்காயத்தோலை ஒரு கவரில் போட்டு மக்க வைத்து ரோஜா செடிகளுக்கு உரமாக போட முடியும். நன்றி.
நன்றி சித்ரா, தோலை அரைத்தும், ஜீஸ்ஸும் நீங்களே கொடுத்தால் இன்னமும் நல்லது அப்படின்னு சித்தர்கள் சொன்னாங்க.
நன்றி ஆடுமாடு, இது புளிக்குழம்புதான். கொஞ்சம் புளிப்பு, காரம்,இனிப்பு சேர்த்து சாப்பிடலாம்.
நன்றி தேன்மயில் லஷ்மணனன், செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.
நன்றி சசிகுமார், இது எங்க அம்மா மற்றும் அண்ணியின் சமையல்.
நன்றி ஸாதிகா, நான் சிங்கப்பூரில் இருக்கின்றேன். இங்க மூன்று வேளையும் கடை சாப்பாடுத்தான். ஆதலால் படம் போட இயலவில்லை.
நன்றி சுசி பொறுமையாக சமைத்துப் பாருங்கள், நல்லா சிரிச்சா ரொம்ப நல்லது.
நன்றி ஸ்ரீராம் ஏற்கனவே எங்க வீட்டில் கத்திரித் தோலுடன் தான் சாம்பார் வைப்பார்கள்.
மிக்க நன்றி,திவ்யாஹரி, இப்ப வலி பரவாயில்லை, என் சமையல் பதிவுகள் எல்லாமே வித்தியாசமான ஒன்னுதான்.அனைத்தும் படித்து ஹரிக்கு செய்துதாருங்கள்.
நன்றி ஜெய்லானி. வாழைப் பழ தோல் என்ன பண்றதுன்னு தெரியலை, யோசிப்போம்.
நன்றி இலுமினாட்டி, பொண்ணு படம் நல்லாத்தான் இருக்கு.ஹி,ஹி,
நன்றி மலிக்கா, விரைவில் தொடர் எழுதுகின்றேன்.
நன்றி ஜலில்லா.
பின்னூட்டமும்,வேட்டுக்கள் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி மேனகாசத்தியா, நீண்ட நாள்களுக்குப் பின்னர் வருகின்றீர்கள். மிக்க நன்றி. செய்து பாருங்கள். புது வீடும் இடமும் எப்படி உள்ளது.?
ReplyDeletei love orange zest.will try this tonight.wonderful.
ReplyDeleteதோல்லையுமா !!!
ReplyDeleteஅசத்துங்க!!!