Monday, March 1, 2010
சிந்து சமவெளியில் ஒருவன் - 2
லோதல் நகரின் கனவுக்கன்னியான மொளனிகாவிடம், மோரிஸ் தன் உள்ளத்தைப் பறி கொடுத்து இருந்தான். மொளனிகாவை நினைக்கும் போது எல்லாம் அவனின் மனது ஒருவிதமான சந்தோசம் அடைந்தது. இன்னமும் இரு தினங்களில் அந்தக் கட்டழகியைக் காணப் போகின்றேம் என்ற எண்ணம் கூட அவனுக்கு அளவில்லா ஆனந்தம் அளித்தது. முதன் முதலில் அவளைப் பார்த்தது,அவளுடன் பழகியது,பேசியது, அவளின் மடியில் ஆனந்தமாகத் தலை வைத்துப் படுத்து இருந்தது என நினைவலைகள், கடலைலகளுடன் போட்டிப் போட்டது. அவன் மெல்லச் சொருகிய கண்களுடன், காதலியின் நினைவுகளுடன் சல்லாபம் செய்து கொண்டுருந்தான்.
இப்படி மோரிஸைக் கலங்கடித்த மொளனிகா லோதல் நகரத்தின் அற்புதமான அழகி. மருண்ட மானின் பார்வை, சுருண்ட கூந்தல், குழி விழும் கன்னங்கள், குழந்தை போன்ற முகம், அன்று அலர்ந்த ரோஜா மலரின் நிறம். யானையின் நீண்ட தந்தங்களைப் போல நிண்ட கைகளும், செந்தாமரை தண்டு போன்ற, பஞ்சினை ஒத்த அவள் விரல்கள். செம்மாங்கனி அவயங்கள். உடுக்கை போல இருக்கும் இடை என அவள் கவிஞர்கள் வர்ணிக்கும் பேரழகி. மொளனிகாவைப் பார்க்கும் யாரும் அவளுடன் பேசப் பிரியப் படுவார்கள். இனிய யாழின் இசை போன்ற அவளின், குரலில் பாடினால் மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. கொள்ளை அழகுச் செல்வங்கள் யாவற்றையும் இறைவன் அவளுக்கு அள்ளிக் கொடுத்து இருந்தான். இத்தனை அழகும் படைத்த இறைவன் எல்லாருக்கும் ஒரு குறையை வைப்பது போல அவளுக்கும் ஒரு குறையைக் கொடுத்தான்.அவளை ஏழ்மையில் பிறக்க வைத்தான். கடலில் மீன் பிடித்து, அதனை சந்தையில் விற்கும் குடும்பத்தில் பிறந்தவள்.. வறுமை என்பது அவர்களுக்குச் செந்தம். ஆனாலும் தன் ஒரே மகளை அது பாதிக்காமல்தான் அவளின் தந்தை வளர்த்து வந்தார். தந்தை பிடிக்கும் மீன்களைச் கடல்கரையில் விற்பது அவளின் தொழில். அனாலும் கண்ணியத்தையும், ஊரில் மிக நல்ல மரியாதையும், அவள் தந்தையின் செத்தாக இருந்தது. இப்படிப் பட்ட அழகியை மோரிஸ் கடல்கரையில்தான் சந்தித்தான். அவனுக்கும், இவளுக்கும் கடல்தான் வாழ்வு. சந்திக்கும் பொழுதுகள் அதிகம். அது காதலாகி,கனிந்து இருந்தது. மோரிஸும் தன் மனதைப் பறி கொடுத்து இருந்தான். மோரிஸைப் போலவே இன்னெருவனும் அவளின் அழகில் மயங்கி இருந்தான். அவன் தான் டைரிஸ். ஊர்க்காவல் தலைவன் அவன். அந்த லோதல் நகரத் தலைவரின் மகனும் கூட.
கட்டுமஸ்தான உடலும், முரட்டு முகமும்,செந்நிற விழிகளும் கொண்டவன் டைரிஸ், பெண்களும்,சண்டைகளும் அவனுக்குப் பொழுது போக்கும் சாதனங்கள். ஊர்த் தலைவரின் மகனான டைரிஸ்க்கு யவன அடிமைப் பெண்கள் அதிகம் என்றாலும், அவனுக்கு மொளனிகாவின் மீது தீராத மோகம் இருந்தது. அது அவன் மனதில் வன்மமாக மாறியது. அதிலும் மொளனிகா மோரிஸை விரும்புகின்றாள் என அறிந்ததும், அவன் இரத்த நாளங்களில் கோபம் கொப்பளித்தது. தனக்குக் கிடைக்காமல் போனாலும்,அவள் மோரிஸிக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். ஏற்கனவே கடல் அன்னைத் திருவிழாவில் நடை பெற்ற வீரப் போட்டிகளில் அவன் மோரிஸிடம் தேற்ற அனுபவம் இருந்ததால், நேரடியாக மோதப் பயந்து, சந்தர்ப்பத்திற்க்காகக் காத்துருந்தான்.
மரக்கலத்தின் மீது இருந்த மோரிஸ் தன் மொளனிக்காவிற்க்கு வாங்கிய மாலையைப் பார்த்த வண்ணம் இருந்தான். கிரேக்கத்தில் செய்த மாலை. தங்க சரிகைகளால் ஆன மாலை அது. இந்த மாலையை அணியும் மொளனிகாவின் அழகு எவ்வாறு இருக்கும் என்ற கற்பனையில் இருந்தான். அதே சமயத்தில் மொளனிகாவும் மோரிஸின் வருகையை எண்ணித் தூக்கத்தைத் தொலைத்து இருந்தாள். இவர்கள் இருவரும் காதலில் திளைத்த சிந்தனைகளுடன் இருக்ககையில் மோரிஸின் தந்தையோ, ஹராப்பாவின் பெரு வணிகரான யாஹுவின் மகளை மணமுடித்துத் தன் வியாபாரத்தைப் பெருக்கும் சிந்தனையில் இருந்தார். வணிகப் பயணம் முடித்து வரும் தன் மகனிடம் இது குறித்துப்பேச வேண்டும் என அவரும்,மொளனிகாவைப் பற்றிக் கூற வேண்டும் என்ற சிந்தனையில் மோரிஸும் இருந்தார்கள். அனால் காலம் வேறு சிந்தனைகளில் அவன் இருந்த மரக்கலம் போலவே அசைந்தாடிக் கொண்டு ஓடியது. தொடரும். நன்றி.
டிஸ்கி: அது என்னமோ தெரியலை, பதிவு போடலைன்னா பைத்தியம் பிடித்தது போல ஆகிவிடுகின்றது. இது பத்தி சிந்தித்துக் கொண்டு எழுதாமல் இருப்பதை வீட, எழுதிவிட்டு வேலையைப் பார்ப்பது பெஸ்ட் என்று தோன்றியதால், விடுப்பை நாலு நாளில் முடித்துக் கொண்டு வந்து விட்டேன். இனி என் பதிவு அவஸ்த்தைகள் உங்களுக்குத் தொடரும். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
///இனி என் பதிவு அவஸ்த்தைகள் உங்களுக்குத் தொடரும்///
ReplyDeleteசுதாகர் சார் நீங்க தொடராட்டிதான் அவஸ்தை.
/////இருந்த மோரிஸ் தன் மொளனிக்காவிற்க்கு வாங்கிய மாலையைப் பார்த்த வண்ணம் இருந்தான். கிரேக்கத்தில் செய்த மாலை. தங்க சரிகைகளால் ஆன மாலை அது. //////
ReplyDelete..........படத்துக்கு ஏற்ற மாதிரி கதை எழுதுறீங்களா இல்லை கதைகேற்ற படம் தேடி கண்டு பிடிக்கிறீங்களா? நல்லா இருக்குங்க.
லீவ் எப்படி போச்சு? ப்லாக் எழுதுறதும் ரிலாக்ஸ் பண்றதுக்கு தானே?
என்ஜாய்......!!!
//டிஸ்கி: அது என்னமோ தெரியலை, பதிவு போடலைன்னா பைத்தியம் பிடித்தது போல ஆகிவிடுகின்றது. இது பத்தி சிந்தித்துக் கொண்டு எழுதாமல் இருப்பதை வீட, எழுதிவிட்டு வேலையைப் பார்ப்பது பெஸ்ட் என்று தோன்றியதால், விடுப்பை நாலு நாளில் முடித்துக் கொண்டு வந்து விட்டேன். இனி என் பதிவு அவஸ்த்தைகள் உங்களுக்குத் தொடரும்.//
ReplyDeleteசார் சும்மா பொய் பேசாதிங்க. கூட வந்த கேர்ள் பிரண்டு வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு அதுதான் நாலு நாள்ல வந்துட்டிங்க , சார் அப்புறம் கப்பல் அருமையாக சென்றுகொண்டுள்ளது
ஆகா மங்குனி அமைச்சரே, விட்டா நாலு நாளில் கல்யாணம் முடிஞ்சு,குழந்தை வந்ததுன்னு கதை சொல்வீர் போலும். உம்மைப் போல நாட்டுல நாலு பேரு, வேண்டாம் நீர் ஒருவரே போறும் அய்யா, நாடு உருப்படும் என்று திருவிளையாடல் நாகேஷ் மாதிரி புலம்ப வைத்து விடுவீர் போலும். அய்யாஆஆஆஆஆஆ எனக்கு இன்னமும் கல்யாணம் கூட ஆகவில்லை, குடும்பத்துக்குள் குழப்பம் பண்ணீராதீங்க சாமீயீயீயீயீயீ. ஹா ஹா ஹா நன்றி.
ReplyDeleteசித்ரா, துளசி டீச்சரின் குஜராத் பயணக் கட்டுரையில் பார்த்த ஒரு வினேதமான படம்தான் இந்த காதல் கதை எழுத தூண்டியது. அந்தக் கட்டுரைகளில் வந்த மாலையைக் கதையில் நுழைத்து விட்டேன். அவ்வளவுதான். இப்படி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த படம் எல்லாம் கதையில் வரும். நன்றி. என்னைக் கதை எழுத தூண்டிய படம் இறுதிப் பகுதியில் வரும்.
ReplyDeleteநன்றி ஜெய்லானி, தங்களின் ஆதரவுக்கு நன்றிகள்.
//அனால் காலம் வேறு சிந்தனைகளில் அவன் இருந்த மரக்கலம் போலவே அசைந்தாடிக் கொண்டு ஓடியது.//
ReplyDeleteஅதேதான் அண்ணா.. நாம ஒண்ணு நினைப்போம் காலம் ஒண்ணு நினைக்கும்.
எழுதுங்க எழுதுங்க..
பித்தனின் வாக்கு said...
ReplyDelete//அய்யாஆஆஆஆஆஆ எனக்கு இன்னமும் கல்யாணம் கூட ஆகவில்லை,//
கல்யாணம் ஆஹாதால்தான் தான் கேர்ள் பிரண்டு இல்லாட்டி வைபுல்ல
//குடும்பத்துக்குள் குழப்பம் பண்ணீராதீங்க சாமீயீயீயீயீயீ. ஹா ஹா ஹா நன்றி.//
யாரு குடும்பத்தில் ??(கல்யாணம் ஆஹைலன்னு கேள்விபட்டேன் )
"சிந்து சமவெளியில் ஒருவன் - 2" படித்துவிட்டேன்.
ReplyDeleteநன்றி சுசி,
ReplyDeleteஅய்யா மங்குனி, இந்தக் குடும்பம் நான் பிறந்த குடும்பத்தைச் சொன்னேன். நன்றி
நன்றி மாதேவி.