Tuesday, March 16, 2010

கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 10

நாம் சென்ற பதிவுகளில் கடவுள் என்பது ஒரு அளப்பதற்கரிய ஆற்றலை உடைய சக்திமூலம் எனவும், இந்த சக்திமூலம் நம் உடலிலும் உள்ளது என்பதையும் பார்த்தோம். இவ்வாறாக நமது உடலும்,பிரபஞ்ச ஆற்றலும் ஒத்த இயல்புடையதும்,ஒரே சக்தி மூலங்களைக் கொண்டது என்பதும் நிருபணம் ஆகின்றது. ஒவ்வெரு சக்திக்கும், ஒரு ஆக்க வினையும், எதிர் வினையும் உண்டு.இதில் ஆக்க வினை சக்தி தனது கட்டமைப்பை மீறும் போது,அல்லது தனது இயல்பில் இருந்து திரியும் போது எதிர் வினையாக மாறுகின்றது. உதரானமாக கோள்களின் ஈர்ப்பு சக்திதான் அவை நிலை பெற உதவுகின்றது, அதே சமயம் இந்த ஈர்ப்பு சக்திதான் கோள்களின் மோதலுக்கும் காரணமாய் அமைகின்றது. இப்படி வெளிச்சமும்,நிழலும் போல எந்தக் காரியங்களிலும், நல்லதும்,கெட்டதும் கலர்ந்து இருக்கின்றன. இதில் நமது பகுப்பாய்வுதான் முக்கிய பங்கு வகிக்கின்றன. சக்தி மூலங்களை நாம் முறையாக கையாளும் போது, அவை மிக்க பயனைத் தருகின்றன. அதே சமயம் தவறான பழக்க வழக்கங்களினால் நாம் நமது சக்தியை விரயம் செய்யும் போது, அது சக்திக் குறைபாட்டை ஏற்ப்படுத்தி உடல் நலனைக் கெடுக்கின்றது அல்லது நோயை உருவாக்குகின்றது. இந்த சக்தி கட்டுப்பாடு அற்றுப் பெருகும் போது கூட நோய்கள் உருவாகின்றது. அபரிதமாக பெருகும் சக்தி கூட திசுக்களின் வளர்ச்சியை அதிகப் படுத்தி கான்சரைக் கொடுக்கும். ஆக ஆற்றல் அல்லது சக்தி குறைந்தாலும், மிகையானலும் நமக்குக் கொடுதலே. ஆக சக்தி மூலங்களைச் சமன் நிலையில் வைத்து இருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

இப்படி சம நிலையில் வைத்து இருப்பது எப்படி? கட்டுப்படுத்துவது எப்படி? குறைந்தால் அதிகப்படுத்துவதும், அதிகம் ஆனால் கட்டுப்படுத்துவதும் எப்படி என்று அறிந்தால் மட்டும்தான் நம்மால் முறையான வாழ்வை நடத்த முடியும். அந்தக் கால முனிவர்கள் இடையுறாது தவம் செய்தாலும்,ஆன்மீக வாழ்வை வாழ்ந்தாலும், யோகேப்புகள்,அப்போஸ்தலர்கள், இமாம்கள்,நபிகள்,ஜென் துறவிகள்,சனகாதி முனிவர்கள்,கட்டில் தவம் செய்த முனி ரிசிகள்,சித்தர்கள் என அனைவரும் எப்போதும் இறை நிலையில் இருந்து தங்களது சக்தி மூலங்களை அதிகப்படுத்தினாலும்,இவர்கள் கேன்சர் போன்ற நோயால் பாதிக்கப் படவில்லை, அதே சமயம் இவர்கள்
தங்களது சக்திமூலங்களைக் கொண்டு மக்களை நல் வழிப்படுத்தினார்கள். அனால் நமது சமகாலத்தில் வாழ்ந்த ஞானிகள் பலரும் கான்சர் நோயால் இறந்து போனார்கள். உதாரனமாக இரமணர்,சீரடி சாய்பாபா,விவேகானந்தர்,இராமகிருஷ்ன பரம்மஹம்சர், யோகி,இராம் சுரத்குமார் போன்றேர், இதுபோல சிலரும் நோய்வாய்ப் பட்டுதான் இறந்தார்கள். இதுஏன்? சிந்தியுங்கள்.இது பற்றிய எனது சிந்தனைகளை நான் பின்னால் தெரிவிக்கின்றேன்.இப்போது நாம் சக்தி மூலங்களை எப்படி பெறுவது,எப்படி அதிகரிப்பது மற்றும் அதன் காரணிகளைப் பற்றிப் பார்ப்போம்.

இயற்கையாக சக்தி மூலம் நமது உடலைப் பொறுத்தவரை இரண்டு வகையாக,நமது புரிந்துணர்தலுக்காக பிரிக்கலாம்.1 ஆன்ம சக்தி அல்லது உயிர்ச்சக்தி(பிராண சக்தி).2. உடல் இயக்க சக்தி. இங்கு எல்லா சக்தியும் ஒன்னுதான். ஆனால் ஒரு விளக்கத்துக்காக இரண்டாக பிரிக்கலாம். நமது ஆன்ம சக்தி தாய் தந்தையரிடம் இருந்து வந்தது. அது தாயின் கர்ப்பத்தில் இருந்து உருவாகிப் பின்னர் அவரின் சக்தி மூலத்தை ஆதராமாகக் கொண்டு வளர்ந்து, பின்னர் ஜனனத்தின் மூலம் தனி சக்தி ஆகின்றது. பின்னர் உணவு, நீர் போன்றவற்றால் தனது சக்தியினை அதிகம் செய்து கொள்கின்றது. இது இயக்கச் சக்தி மூலத்தினைக் குறிக்கும். இந்த இயக்கச் சக்தி மூலம் உடலை மேம்படுத்தி, பிராண சக்தியினை, நமது உடலில் நிலை கொள்ளச் செய்கின்றது. இந்த இயக்க சக்தி நமது செயல்கள் என்னும் கர்த்தாவின் மூலம் எரிக்கப் படுகின்றது. இப்படி சக்தி விரயம் ஆகும் போது, சரியான உணவின் மூலம் சக்தி மீண்டும் பெறப்படுகின்றது.இப்படி மீண்டும் மீண்டும் இயக்கம் நடைபெறும் போது உடல் தளர்வடைகின்றது. இதை நாம் வயது அல்லது மூப்பு என்று சொல்கின்றேம். இப்படி தளர்வுறுதல் முடியும் போது ஆன்ம சக்தி உடலை விட்டுப் பிரிகின்றது.இதை நாம் மரணம் என்று சொல்கின்றேம். இப்படி சக்திமூலங்களின் சுழற்ச்சிதான் வாழ்க்கை என்று சொல்லப்படுகின்றது. தொடரும் நன்றி.

டிஸ்கி : நான் இப்படி கடவுள்,ஆன்மீகம் என்பது போன்ற பதிவுகளை எழுதுவதால் என்னை யாரும் உயர்வாக நினைக்க வேண்டாம்.
நான் சராசரி உணர்வுகளுக்கு உட்ப்பட்ட ஒரு சாதாரனமானவன் அல்லது அவனையும் வீட கீழே என்பதை உணர்த்த ஒரு வாய்ப்பாகத்தான் எனது எண்ணங்களை அல்லது ஆசைகளை இத்தொடரை நிறுத்தி பதின்மம்,தொப்பையானந்தா மற்றும் பிடித்தவர்கள் பற்றிய பதிவுகளைப் போட்டேன்.

குரங்கு கிளைக்குக் கிளை தாவுற மாதிரி நானும் பதிவுக்குப் பதிவு மாத்தி மாத்திப் போடுகின்றேன். அதை கையில் ஒரு குச்சி வைச்சுக் கட்டுப்படுத்துவது போல, உங்களின் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்துங்கள். தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி.

வாத்தியார் பாசையில் சொன்னா " ஜயம் எ காமன்மென் " நன்றி.

21 comments:

  1. அரிய தகவல்களுடன் ஒரு அருமையான பதிவு!

    ReplyDelete
  2. ;நான் இப்படி கடவுள்,ஆன்மீகம் என்பது போன்ற பதிவுகளை எழுதுவதால் என்னை யாரும் உயர்வாக நினைக்க வேண்டாம்." இப்பொழுது உங்களை பயங்கர உயர்வாக நினைக்க தோன்றுகிற்து

    ReplyDelete
  3. இந்த தொடரை எங்கே மறந்துட்டீங்களோன்னு நெனச்சேன்.

    ReplyDelete
  4. //கையில் ஒரு குச்சி வைச்சுக் கட்டுப்படுத்துவது போல, உங்களின் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்துங்கள்.//

    எப்ப சார் கல்யாண சாப்பாடு போடப்போறீங்க ???

    ReplyDelete
  5. அருமையான பதிவு.

    ReplyDelete
  6. பித்தனானந்த வாழ்க வாழ்க

    ReplyDelete
  7. //ஒவ்வெரு சக்திக்கும், ஒரு ஆக்க வினையும், எதிர் வினையும் உண்டு.இதில் ஆக்க வினை சக்தி தனது கட்டமைப்பை மீறும் போது,அல்லது தனது இயல்பில் இருந்து திரியும் போது எதிர் வினையாக மாறுகின்றது. உதரானமாக கோள்களின் ஈர்ப்பு சக்திதான் அவை நிலை பெற உதவுகின்றது, அதே சமயம் இந்த ஈர்ப்பு சக்திதான் கோள்களின் மோதலுக்கும் காரணமாய் அமைகின்றது.//

    நான் அன்னைக்கே சொன்னேன் நித்திக்கு..
    கோள்களின் அமைப்பு சரியில்ல..
    90 டிகிரி( சத்தியமா 0 டிகிரி அல்ல..) திரும்பி படுனு..
    கேட்கமாட்டாங்களே..

    ReplyDelete
  8. நீங்கள் மொக்கையிலும் இருப்பீர்கள் - காவியிலும் இருப்பீர்கள்......... வாழ்த்துக்கள்!
    இரண்டு பதிவுகளையும் எழுதுவது ஒரே ஆள்தானா? இல்லை நீங்கள் இரட்டை பிறவிகளா? ஹா,ஹா,ஹா,.....

    ReplyDelete
  9. வணக்கம், சார் கொரங்கு எப்ப அதுத்த மரத்துக்கு போகும் ?

    ReplyDelete
  10. சார் உங்களுக்காக ஒரு வூரே காத்துகிட்டு இருக்கு , உடனே அந்த சைனீஸ் லேடி டிரைவர வண்டி எடுக்க சொல்லி நேரா நம்ம பட்டாப்பட்டி வீட்டுக்கு வாங்க (அந்த சைனீஸ் லேடி டிரைவர கூடவே இருக்கலாம் பரவல்ல )

    ReplyDelete
  11. ஆகா கிளம்பிட்டாங்கைய்யா, கிளம்பிட்டாங்க. இனி கார்ல தனியாத்தான் போகனும் போல.........

    ReplyDelete
  12. குரங்கு கிளைக்குக் கிளை தாவுற மாதிரி நானும் பதிவுக்குப் பதிவு மாத்தி மாத்திப் போடுகின்றேன். அதை கையில் ஒரு குச்சி வைச்சுக் கட்டுப்படுத்துவது போல, உங்களின் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்துங்கள்"//

    நல்லாதாங்க இருக்கு...ஏன் அபபடி சொல்றீங்க?

    ReplyDelete
  13. நல்லாவே ஆராய்ச்சி பண்றீங்க.நல்லாயிருக்கு...

    ReplyDelete
  14. நல்லா போய்க்கிட்டு இருக்கு..

    நன்றி..

    ReplyDelete
  15. நல்ல பதிவு அண்ணா..

    இப்டி மாத்தி மாத்தி எழுதுங்க.. உங்களுக்கு எழுதவும் எங்களுக்கு படிக்கவும் சேஞ்சா இருக்கும் :)))

    ReplyDelete
  16. நல்ல பகிர்வு நன்றி பித்தன்

    ReplyDelete
  17. நன்றி சேட்டைக்காரன்,
    நன்றி மாப்பு,
    நன்றி ஜெய்லானி, கல்யாண சாப்பாடா, அறுபதில் சேர்த்துப் போட்டுரலாம்.
    வணக்கம், சைவ கொத்துபுரோட்டா,
    வாங்க அம்மு மது, என் எல்லா சமையல் பதிவுகளையும் படித்தமைக்கு நன்றி.
    நன்றி ஜீவன் சிவம், ஒரு சிஷ்யன் ரெடி ஆகிட்டாரு,(ஆசிரமம் வச்சுரவேண்டியதுதான்)
    நன்றி பட்டாபட்டி,
    நன்றி சித்ரா, நல்ல காமெடி.
    வணக்கம் மங்குனி, அது இஷ்டத்திற்கு தாவும்.
    நன்றி ஸ்ரீராம், மாத்தி மாத்திப் போட்டா கண்டினுயூட்டி கட் ஆகுதான்னு தெரிஞ்சிக்க கேட்டேன், ஆனால் பலரும் இதைத்தான் விரும்புகின்றார்கள்.
    நன்றி மேனகாசத்தியா, ஆராய்ச்சிக்குப் பரிசா தூத் பேடா கிடையாதா?.
    நன்றி பிரகாஷ்,
    நன்றி சுசி, நீங்க சொல்லிட்டிங்க இல்லை, இனி மாத்தி மாத்தி எழுத வேண்டியதுதான்.
    நன்றி, தேன்மயில்லஷ்மணனன்.
    பின்னூட்டமும் ஓட்டும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  18. பார்த்தீங்களா.. ஒரு நன்றிய போட்டுட்டு கடை ஷட்டரை மூடறீங்க..
    ப்ளீஸ் சார்.. அந்த ஆரஞ்சு நச்சடிய. சே..கிச்ச்டியா.. சே. சே.. பச்சிடிய
    கொடுத்து நன்றி சொல்லுஙக சார்..

    ReplyDelete
  19. சாய் பாபா போன்ற இறைவனோடு ஒன்றர கலந்த அன்மாக்கள் பிறருடையா கஷ்டங்களையும், நோய்களையும் (நீ குறிப்பிட்டது போன்ற கேன்சர்...) தான் ஏற்றுக்கோண்டுதான் வாழ்ந்ததே உண்மை.....

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.