அன்பான வாசாகர்கள் இது எனது முதல் பதிவு, படித்து ஆதரவு தருமாறு வேண்டுகின்றன்.
எனது சொந்த ஊர் தாராபுரம், ஈரொடு மாவட்டம்.
தாராபுரத்தில் உள்ள ஸ்ரீ காடு அனுமந்தராய ஸ்வாமி திருக்கோவிலில் உள்ள ஹனுமன் எனது விருப்ப தெய்வம் ஆகும்.இவர்தான் எனது வழிகாட்டியும் ஆவார்.
இந்த ஹனுமான் சிலை பூமியை ஏர் கொண்டு உழவு செய்யும் போது கிடைத்தது. இந்த விக்ரகம் முன் உள்ள இராமர் சீதா சிலை தாஞ்சாவுர் அருகில் மணல் மேட்டில் கிடைத்தது.ஒருமுறை எங்கள் ஊரில் உள்ள கோயில் தக்கார் ஒருவருக்கும்,இந்த அனுமார் சிலை பூஜை செய்பவருக்கும், தாசில்தாருக்கும் ஒரே சமயத்தில் ஒரு கனவு வந்து, அதில் இந்த மணல் மேடு அடையாளம் காட்டி அந்த சிலைகளை இங்கு கொணர்ந்து பிரதிஸ்டை செய்யுமாறு பணித்தார்.
இந்த ஹனுமான் சிலை ஸ்ரீ வியாசராஜ ஸ்வமிகள் ப்ரதிஸ்டை செய்தது.
ஒரு குட்டி கதை ( சினிமா பானில சொன்னா ப்லாஸ்பேக்)
ஸ்ரீ வியாசராஜ ஸ்வமிகள் மத்வ மத பீடாதிபதியா இருந்தப்ப அவருக்கு ஒரு மனக்குறை இருந்தது.
இனம்புரியாத வருத்தம் இருந்தது. அது ஏன் என்று பார்த்த பொழுது அவர் முன் ஜன்மத்தில் ப்ரகலாதனாக அவாதரம் செய்ததாலும், அசுர ஜென்ம பாவம் காரணமாக அவர் மனதில் நிம்மதி இல்லய். எனவே அவர் 1008 இடங்களில் ஹுனுமார் சிலை நிருவ வெண்டும் எனக் கண்டுபிடித்தார்.அவர் இந்தியக் கண்டம் முழுவதும் 1008 இடங்களில் சிலை நிறுவினார், அதில் ஒன்றுதான் ஸ்ரீ காடு ஹுனுமந்தராய ஸ்வாமி திருக்கொவில்.
மிகவும் சக்தி வாய்ந்த அஞ்சிநேயர் இவர், நின்ற திருக்கோலம், பார்க்க பரவசம் தரும்,
ஒரு கையில் பாரிஜாத மலரும், மறுகையில் அபயஹஸ்தம் வழங்கும் திருக்கோலம்.
கிழக்கு பார்த்த முகம் இடையில் கத்தி, வாலில் முன்று மணிகள் கட்டி இருக்கும்..
ஒரு சமயம் அங்கிலயர்கள் காலம் அப்போது அங்கில தாசில்தார் ஒருவருக்கு முதுகில் ராஜா பிளவை என்கின்ற வியாதி வந்து மிகவும் சிரமப்பட்டார். அப்போது அவரிடம் நீங்கள் இங்கு உள்ள அமராவதியாற்றில் நீராடி பின் இந்த கோவிலுக்குப் போய் வாருங்கள் உங்களின் வியாதி தீரும் என்று சொன்னார் அவரின் துனைத்தாசில்தார். அவரும் தினமும் இந்த கோவில் வந்து துளசி தீர்த்தம் வங்கி பருகினார். ஒரு நாள் கனவின் போது ஒரு குரங்கு வந்து அவர் முதுகை தடவு தந்தது போல் கண்டு எழுந்தார். அடுத்த சில நாள்களில் அவர் வியாதி முழுவதும் குணம் ஆகியது. அவர் இந்த கோவிலுக்கு முன் மண்டபம் கட்டிக் கொடுத்தார். இவர் நடத்தும் அற்புதங்கள் ஏராளம்.
பீ. வீ நரசிம்ம ரொவ் மகன் கோவில் பின் மண்டபம் கட்டி கொடுத்து உள்ளார்.மிகவும் சக்தி வாய்ந்த இந்த திருகோவிலுக்கு நீங்களூம் ஒரு முறை வாருங்கள், அவன் அருள் பெறுங்கள்.